Thursday, 23 July 2020

ஆசார்யனுக்கு(குருவிற்கு) ஏன் அடிமையாக வேண்டும்? (Acaryanukku (Kuruvirku) En Atimaiyaka Ventum?)மூலம்: சுமேதா எம்.எ

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
ஸ்ரீ நாரதர் இறை பக்திக்கு புகழ்பெற்றவர். பக்தி சாஸ்திரத்தை வழங்கியவர். ஸ்ரீபாகவத புராணத்தில் அவரின் முற்பிறவி பற்றிய விளக்கங்களை காண்கிறோம். அவர் தாய் முனிவர்களின் தபோவனத்தில்  பணிபுரிந்து வந்தாள். ஐந்து வயதிலேயே அவருக்கு விளையாட்டில் நாட்டமில்லை. ஆனால் மறைநூல்கள், அவற்றின் விளக்கங்களில் மனதை செலுத்தி  இறையுணர்வில் திளைத்திருந்தான். ஒரு முறை சில தவசிகள் மழைகாலத்தில் ஒரே இடத்தில் தங்கும் பொருட்டு(சாதுர் மாஸ்யம்) அத்தபோவனத்தில் தங்கினர். அவர்களின் உதவிக்காக நாரதர் நியமிக்கப்பட்டார். துறவிகளின்பால் ஈர்ப்பும் மரியாதையும் வளர்ந்தது. அவர்களின் தீவிரமான பக்தியையும், தெய்வீக பாடல்களின் மூலம் செய்யும் இறை வழிபாட்டையும் கண்டு மேன்மேலும் அவர்களால் கவரப்பட்டு அவர்களை போலவே வாழ தலைபட்டான். அவனின் முந்தைய பிறவிகளின்  வினைப்பயன் அவர்களுக்கு ஆற்றிய  சீரிய தொண்டின் பயனாக தீர்ந்தது.


நான்கு மாதங்களுக்கு பிறகு அவர்கள் அவ்விடத்தினின்று  வேறிடம் சென்றனர். ஆனால் நாரதர் அவர்கள் மூலம் கற்றதை  தவறாமல் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தான். துரதிருஷ்டவசமாக அரவம் தீண்டி தாயை இழக்க நேர்ந்தது. ஆனால் அவன் மனமுடைந்து  போகாமல்  உறுதியுடன் அந்நிகழ்வை விதியின் பயனாக ஏற்றுக்கொண்டான். அதனை குடும்ப தளையிலிருந்து விலக கிடைத்த வாய்ப்பாக கருதினான். தெளிந்த பண்பட்ட மனதுடன்  குருவின் அறிவுரைப்படி  நடந்தான்.  ஒரு அடர்ந்த கானகத்தில்  தவத்தில் அமர்ந்து  நீண்ட நாட்களுக்குப்பின்  ஸ்ரீஹரியை தியானத்தில் கண்டுணர்ந்தான்


தியான மார்க்கத்தில் செல்பவர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கையும், குரு பக்தியும்


மிகவும் தேவை என்பதை ஸ்ரீரங்கமஹாகுரு வலியுறுத்துவார். அனைவருக்கும் குருவின் வழிகாட்டுதல் அவசியமானது. தவத்தின் பயனும், தேவைப்படும் காலமும் ஒருவருக்கு  குருவின்மேல் உள்ள ஆழ்ந்த நம்பிக்கையை பொறுத்தே அமையும்.


நாரதர் தவசிகளுடன் கழித்தது சொற்ப காலமே ஆயினும் அவர்களின் அறிவுரையை  ஆயுள் முழுமையும் பின்பற்றினார். எத்தனை இடர்கள் நேர்ந்த போதும்  தவத்தை விடாது தொடர்ந்தார்.  ஸ்ரீ புரந்தர தாஸரின் பகழ்பெற்ற பாடலான "குருவின குலாமனாகுவ தனகா தொரெயதண்ண முகுதி"(குருவின் அடிமையாகும்வரையில் முக்தி கிடைக்காது) நம்  மனநிலையை தெளிவாக உணர்த்துகிறது. இங்கு குருவின் சேவகனாவதென்பது அடிமைதனமல்ல. அது நம் புலன்களை கட்டுபடுத்தி  நிலையான மனதுடன் வாழ்வில் வெற்றிபெற உதவும். அப்பேற்பட்ட அடிமைத்தனம் அனைவருக்கும் கிட்ட  இறைவனை பிரார்த்திப்போமாக.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.     To know more about Astanga Yoga Vijnana Mandiram (AYVM) please visit our Official Website, Facebook and Twitter pages