Showing posts with label author_vanaja. Show all posts
Showing posts with label author_vanaja. Show all posts

Thursday, October 27, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 31 இறைவனின் படைப்பு எவ்வாறு (லீலை)விளையாட்டாகும்? (Iraivanin padaippu evvaaru {lilai}vilaiyaattaagum?)

 மூலம்: வரததேசிகாசார்யார்

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)  

               



ஆசார்யபாதராயணர் பிரம்ம ஞானிகளில் முதன்மையானவர். சிறந்த பக்தர். மற்றும் மேதாவியான சிறந்த ஆசான். அவருடைய  சமயோசிதமான உபதேசங்களால் சீடர்களில் சிறந்தவரான ஜைமினி முனிவரின் உள்ளத்திருந்த அநேக ஐயங்கள் நீங்கியிருந்தன. அதிலும் 'இறைவன் எல்லோரிடத்தும் சமமானவன், பாகுபாடற்றவன், கருணையே  உருவானவன்' என்பது குறித்த ஐயம் நீங்கி மிகவும் அமைதி பெற்றார். இறைவன் உயிர்களுக்கு உடலை அளித்து அவைகளை காத்து முடிவில்  தன்னுடன் ஐக்கியப்படுத்தி கொள்வதும்கூட அவனின் கருணையின் விரிவாக்கமே என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். ஆயின் படைப்பை பற்றிய ஒரு பெரிய வினா அவரது மனதை அரித்துக்கொண்டிருந்தது. அதனை அவர் தம் குருவின் முன்னிட்டார்.

 

ஜைமினி: படைத்தல், காத்தல், அழித்தல் என்பது இறைவனின் பொம்மையாட்டம் போன்றது  என கற்றறிந்த சிலர் கூறுகின்றனர். இதுசரியா? சரியென்றால் "பூனைக்கு கொண்டாட்டம், எலிக்கு திண்டாட்டம்" என்பது போன்ற  இத்தகைய விளையாட்டை அவன் ஏன் ஆட வேண்டும்? இவ்வாறு செய்பவன் இரக்கமற்றவன் மட்டுமன்றி அச்சமூட்டும் ப்ரபுவுமல்லவா? இத்தகையவனை கருணை உள்ளவன் என்று எவ்வாறு  அழைப்பது?

 

பாதராயணர்: படைப்பு முதலானவை அவனது விளையாட்டு என்று சான்றோர் உரைக்கின்றனர். இங்கு விளையாட்டென்றால் அனைவரையும் துன்புறுத்தும் விளையாட்டல்ல. எல்லாம் அடைந்துள்ள இறைவனுக்கு விளையாடும் ஒரு ஆசை மட்டும் மீதமுள்ளதோ? அவ்வாறு ஆடுவதாயினும்  உயிரினங்களை  துன்புறுத்தும் விளையாட்டையா இரக்கம்மிக்க  இறைவன் ஆடுவான்? 


அவ்வாறெனில் அவன் விளையாட்டென்பது என்ன? உலகில் விளையாட்டென்பது கடினமானதல்ல. மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரமமின்றி மக்கள் உலகில் விளையாடுகின்றனர். அவ்வாறே படைப்பு முதலியவற்றை  அவன் எந்த சிரமமுமின்றி  எளிதாக,  தான் நினைத்த மாத்திரத்தில்  நிறைவேற்றுகிறான்.  இதுவே அவன் இயல்பாகவும் உள்ளது. இதையே அவன் (லீலை)விளையாட்டென்று அழைக்கிறோம்.

 

                        


Thursday, October 20, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் - 30 திறந்த மனம் இருக்கட்டும் (Tiranda manam irukkattum)


மூலம்: . சாயாபதி

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



  இறைவன் இல்லை என்பவன் நாத்திகன். எதற்காக அவ்வாறு கூறுகிறான்? அவனுடைய  அறிவிற்கு புலப்படாமையால் அவ்வாறு கூறுகிறான்.  "அறிவிற்கு புலப்படாத ஒன்றை உள்ளது என்று நம்புவது எவ்வாறு? அவ்வாறு நம்புவதால்தான் என்ன பயன்? புரியாததை உண்மை என்று நம்பி  குழம்புவதைவிடவும்  அறிவிற்கு எட்டியதை மகிழ்ச்சியாக அனுபவிப்போம்."  "உலகில் இன்பம் தரும் கணக்கற்ற பொருட்கள் நிறைந்துள்ளன. அவற்றை அனுபவிக்கும் திறனும் நமக்கு உண்டு. ஆகவே சிந்தனை ஏன்? கடன்வாங்கு, நெய் உண். புதரில் உள்ள இரண்டு பறவைகளைக் காட்டிலும் கையில் உள்ள ஒரு பறவை உயர்ந்ததல்லவா? அறியாத ஒன்றிற்காக ஏங்கி தவித்து அறிந்ததையும்  கைவிட்டால் வாழ்வு வீணாகுமன்றோ?  எனவே நாளைக்காக இன்றைய நாளை வீணாக்க வேண்டாம்."


      இத்தகைய விவாதம் யாரைத்தான் மகிழ்விக்காது? கண்ணிற்கு காண்பதை நம்பி கொண்டாடுவதில் என்ன தவறு? உலக விஷயங்களில் நம் அறிவிற்கு தாமாகவே எட்டும் பாகம் எத்துணை? ஆராய்ந்து அறிய வேண்டியவை  எத்துணை? என ஆராயும்போது ஆய்வினால் அறிவிற்கு எட்டுபவையே  அதிகம் என்பதை அறிவியல் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வாறிருக்கையில்  "காண்பது  மட்டுமே உண்மை, காணாதது  இல்லவே இல்லை என்னும் மனநிலை ஆராயும்இயல்பையே தடைசெய்யுமல்லவா? அறிவிற்கு எட்டாத உண்மை வெளிப்படும் போதும் அதனை ஏற்காத எதிர்ப்பு மனப்பான்மை உண்டாகுமல்லவா? இது மனித குலத்திற்கு உரிய இயல்பான மகிழ்ச்சியையும்,, இயற்கையில் மறைந்துள்ள  உண்மைகளை ஆய்ந்தறிவதையும்  தடுக்கும்  செயலல்லவா? எனவே அறிந்ததை மட்டுமே நம்புகிறேன், அவ்வளவிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் என்பது புதிய பார்வையின் வாயிலை  அடைக்கின்றதல்லவா! இத்தகு மனநிலை சரியன்று.


அவ்வாறின்றி 'அறிந்ததை நம்புவோம், ஆராய்ந்து உணர்ந்ததை மட்டும் வரவேற்போம். திறந்தமனம் இருக்கட்டும். அறிவிற்கு புலப்படாதவைபற்றிய ஐயங்களை வைத்துக்கொள்வோம். அறிந்தபோது ஒப்புக்கொள்வோம்' - என்னும் எண்ணத்தினால் கேடில்லை. உண்மையை அறிய சரியான பாதையில்  முயலும்போது  உண்மை தன் நிலையை தானே வெளிப்படுத்தும். அத்தகைய உண்மையை ஏற்கதயாராகி, ஐயங்களை  போக்கிக்கொள்ளும்  நாத்திகத்தால் தீதில்லை. அதைவிடுத்து புத்தியில்  எதிர்ப்பு தன்மையே இருப்பின்  அங்கு புதிய வளர்ச்சிக்கு இடமில்லை.



Sunday, October 9, 2022

ஸ்ரீகுருவின் கண்ணோட்டம் - 28 கலைபடைபிற்கு மேலும் மெருகேற்றுதல் தேவையா? (Kalaipadaippirku melum merugetrudal tevaiya?)

 மூலம்: ஸ்ரீ வரத தேசிகாசார்யார்

தமிழாக்கம் : திருமதி வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in) 



"சிற்பி செதுக்கும் இறைவடிவமே ரசிகனின் மனதை கொள்ளை கொள்கிறது. அவனில் மகிழ்ச்சியை நிரப்புகிறது. இவ்வாறிருக்கையில் புரோகிதர்கள் அதற்கு மந்திர-தந்திர சடங்குகள் செய்வது ஏன்? இச்சடங்குகள் இல்லை எனினும் மக்கள் அதன் இயற்கை அழகை ரசிக்கலாமல்லவா?"

 "சிற்பியும் கல்லை செதுக்கி அதற்கு இறைவடிவை ஏன் அளிக்க வேண்டும்? கல் கல்லாகவே  இருந்தாலும் அதன் இயல்பான நிறம் மற்றும் உருவத்தில் மக்கள் அதனை ரசிக்க இயலாதா?"

 "அவ்வாறில்லை.  சிற்பி அதை சிறப்பாக செதுக்கி அதனில் கலை அழகை ஏற்படுத்துகிறான். அதனை காண்கையில் மக்களின் மனது மகிழ்ச்சியில் புல்லரிக்கின்றது. எனவே சிற்பியை அவன் படைப்பிற்காக பாராட்டுகிறோம்"

  "அவ்வாறே ஞானிகளும் தங்கள் தவத்தின் பலனால் கல்லினால் உண்டான அந்த  உருவத்திற்கு  இறைதன்மையை அளிக்கின்றனர். அதற்கு உயிரூட்டுகின்றனர். இறைஅழகு நிரம்பும்படி செய்கின்றனர். அதனை தரிசித்து பூஜிக்கையில் மக்களின் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கின்றது. எனவே தவத்தில் சிறந்த ஞானிகளை நாம் நன்றியுடன் கௌரவிக்கின்றோம்.

  "இறைவனின் சிற்பத்தை காணும் அனைவருக்குமே இறைவனுடன் ஒன்றிடும் மகிழ்ச்சி ஏற்படுவதில்லையே?"

 "இறையுருவில் உள்ள கலையழகை ரசித்துமகிழாத மக்களும் இருக்கின்றார்கள் அல்லவா?"

 "அவர்கள் ரசிக தன்மையற்ற அறிவிலிகள். எனவே சிற்பகலை அவர்களில் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்துவதில்லை".

   "அவ்வாறே இறையுருவை கண்டு மகிழாதவர் பக்தி உணர்வற்ற பாமரர்கள் என்று அறிந்தவர்கள் கூறுவர். ஈடுபாடும், பக்தியும் கலையின்பால் உள்ள விருப்பத்தை போன்றே சிறப்பானது. இவ்விரண்டிற்கும் தூய்மையான மனமும் ரசிக்கும் தன்மையும் தேவை.

ஸ்ரீகுருவின் கண்ணோட்டம் - 22 கருணாளன் பின்னிய வலை (Karunaalan Pinniya Valai)

 மூலம்: ஸ்ரீ வரததேசிகாசார்யர் 
தமிழாக்கம்: திருமதி வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


முனிவர்கள் இறைவனை கருணைக்கடல் எனகொண்டாடுவதற்கு  ஒரு முக்கியமான காரணம் உள்ளது.ஸ்ரீரங்க மஹாகுரு அதனை இவ்வாறு விவரித்திருந்தார்.  
 
    உலக மாயையில் அகப்பட்டுக்கொண்டு உயிரினங்கள்உழல்கின்றன. அந்த வலையிலிருந்து மீள்வது மிகவும் கடினம்.ஆயின் அவ்வலையை பிணைந்த  இறைவன் அதில் ஜீவன்கள்  கட்டுகளை அவிழ்த்து கொண்டு  விடுபடவும் இயலும் வண்ணம்சில முக்கிய மையங்களை அமைத்திருக்கிறார்.அவ்வாறில்லாவிடில் ஜீவன்களுக்கு என்றுமே முக்திகிடைத்திராது. அவ்வாறு ஆகாதிருக்கும் பொருட்டு விடுபடதேவையான மையங்களை இறைவன் அவ்வலையில்இணைத்திருக்கிறான். அவைகளை இணைத்ததல்லாமல்அவைகளை தக்க தருணத்தில் அடையாளம் காட்டுகிறான்.அவைகளை சில நேரங்களில் உள்ளுணர்வின் மூலமும் சிலநேரங்களில் புனித நூல்களின் மூலமும் தெரியவைக்கிறான்.மற்றும் சில நேரங்களில் இறைவன் அவதாரங்களின் மூலமும்ஞானிகளின் சொல், நடைமுறையினாலும், கட்டளைகள்,உபதேசங்கள், வழிகாட்டுதல்  வாயிலாகவும் உணரசெய்கிறான். அவர்கள் காட்டும் வழியில் தம்மை  நடத்திகாத்தருள வேண்டுமென இறையன்புடன் வேண்டுவோரை தன்அபய கரத்தால் காக்கின்றான். இதுதானே இறைவனின்வியத்தகு  பரிவு., எதிர்நோக்குதல் இல்லாத கருணை.

        துயரங்களை களைந்து கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டுமென சில பக்தர்கள் அவனை வேண்டுகின்றனர்.இவர்களுக்கு ஆர்த்தர்கள், அர்த்தார்த்திகள் என்று பெயர்.இத்தகையோரின் வேண்டுதலையும் இறைவன்நிறைவேற்றுகிறான். இதுவும் அவன் கருணையே. ஆயின் இதுஅவ்வடியார்களின் வழிபாடு மற்றும் வினைப்பயனுக்கேற்றவாறேஅருளப்படும்.

      இக்கருணை மட்டும் இல்லாவிடில் இறைவனின் ஞானம்,பலம், செல்வம், வீரம், ஆற்றல், தேஜஸ் என்ற ஆறுகுணங்களும் உலகிற்கு அச்சத்தையே அளித்திருக்கும்.அவ்வாறன்றி அது உயிரினங்களின்  நலனுக்கே ஆகும்படிசெய்யும் கருணைக்கு நம் அனைவரின் வணக்கங்கள்என்கிறார் ஆசார்யரான  வேங்கடநாதர்.    

Thursday, September 22, 2022

ஸ்ரீகுருவின் கண்ணோட்டம் - 26 ஏன் இந்த முணுமுணுப்பு? (En inda munumunuppu?)

 மூலம்: வரததேசிகாசார்யார்

தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



"வியாதி குணமாக நல்ல மருந்தை உட்கொள்ள வேண்டும்.  பத்தியமும் கடைபிடிக்க தேவையாகும். ஆனால் இவ்விரண்டிற்கும் இடையே ஒரு பயனற்ற மூட வழக்கத்தையும் கடைபிடிக்கிறார்களே"
"என்ன வழக்கமப்பா அது"?


"மருந்து, மாத்திரை மற்றும் லேகியம் போன்றவற்றை உட்கொள்ளும்போது ஏதோ மந்திரத்தை வேறு முணுமுணுக்கின்றனர்."
"அந்த மந்திரத்தை கவனித்தருக்கிறாயா"


"நன்றாக கவனித்திருக்கிறேன். முன்காலத்தின் மூட நம்பிக்கையின் அடையாளம் என்று அதனை பதிவு செய்திருக்கின்றேன் "
"நான் அதனை கேட்கலாமா?"
"கேளுங்கள்- 


                       சரீரே ஜர்ஜரீ பூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே|
                      ஔஷதம் ஜாஹ்னவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி:" 
"அதன் பொருள் என்ன தெரியுமா?"

"உடல்நலம் குன்றி, நோய்வாய்படும்போது கங்கை நீரே மருந்தாகும், இறைவனே வைத்தியன் என்பது கருத்து."
"மருந்து உட்கொள்ளும்போது இதனை உச்சரிப்பதில் ஏதாவது இடைஞ்சல் உள்ளதா? அல்லது தவறா?"
"தவறேதும் இல்லை. ஆனால் பயனும் ஏதுமில்லை. அதனை உச்சரிப்பவனுக்கு இறைவனிடத்தோ, மருந்து, மற்றும் வைத்தியனிடத்தோ முழு நம்பிக்கை இருப்பதில்லை."

"அவ்வளவு விரைவில் முடிவு செய்யக்கூடாதப்பா.உண்மையில் இறைவனை நினைக்காவிடில் நோய்முற்றிலும்  குணமாவதே இல்லை "

"அது எவ்வாறு"?
"இறைவன் நிம்மதி, மகிழ்ச்சி, சமாதானம், தைர்யம், வீரம் இவற்றின் முழு உருவம். அவன் நினைவுடன் மருந்து உட்கொள்கையில் மனதின் குற்றமும் குறையும் நீங்கி உடல் நோயும் நீங்குகிறது. மருந்தை மட்டுமே  உட்கொண்டால்  உடலின் வெளியில் காணும் நோய் மடடும் குணமாகலாம். ஆனால் மனதில் உள்ள நோய்(ஆதி) மற்றும் உடலில் உள்ள நோய்(வியாதி) இரண்டும்  நீங்குவதே உண்மையான நலம். ஆதி, வியாதிகளிரண்டும் நீங்க வேண்டுமெனில் மருந்து உட்கொள்கையில் இறைவனை நினைவதும் மிக முக்கியமாகும்."

Thursday, September 15, 2022

ஸ்ரீகுருவின் கண்ணோட்டம் - 25 இஷ்டதெய்வம் (Ishtadeyvam)

மூலம்: வரத தேசிகாசார்யார்

தமிழாக்கம்: திருமதி வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


 

  

          "சைவம், வைணவம், சாக்தம்_போன்ற வெவ்வேறு பிரிவுகளினால் ஆகமங்கள்(ஆகமசாஸ்திரங்கள்)  பலவாறாக உள்ளன. ஆயின் கங்கா நதியின் கிளைகளனைத்தும் கடலையே சென்றடைவது போல் அனைத்து ஆகமங்களும் உன்னையே வந்தடைகின்றன. ஆதிமூலமே! ,அச்சுதா" என்கிறான் சிறந்த கவிஞனும், பக்தனுமாகிய காளிதாஸன்.  இந்த ஆகமங்கள் சிவன், திருமால், அம்பாள்,முருகன், ஆதவன் முதலிய வெவ்வேறு தேவதைகளின் வழிபாடுகளைப்பற்றி சிறப்பித்து கூறுகின்றன.


            சிவன்,  திருமால்    போன்றவை அனைத்தும் ஒரே இறைவனின் வெவ்வேறு தோற்றங்கள். ஆயினும் பக்தன்  தனக்கு எது உகந்ததோ அவ்வுருவையே சிறப்பாக வழிபடுகிறான். இதற்கு  ஒரே தெய்வத்தின். அல்லது தனக்கு விருப்பமான தெய்வத்தின்/இஷ்டதெய்வத்தின் வழிபாடு என்று பெயர். சைவ, வைணவ ,சாக்த, சூரிய முதலிய  அனைத்து பக்திமார்கத்தின் மதங்களும்  இப்பிரிவில் அடங்கும். இவ்வாறு வழிபடுபவன் தனக்கு விருப்பமான தெய்வத்தை முழு மனதுடன் வழிபட வேண்டும். எவ்வாறெனில் கற்புகரசியானவள் தன் கணவனிடம் மட்டுமே ஈடுபாடு கொள்வதுபோல் இந்த அடியவரும் தன் விருப்பத்திற்குரிய தெய்வத்திடம் மட்டுமே ஈடுபாடு கொள்ள வேண்டுமென்கின்றன ஆகமங்கள்.                   

           

ஆயின் இக்கூற்றை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் விருப்ப தெய்வத்தை  வழிபடுவதன்றி அதே தெய்வத்தின் வெவ்வேறு தோற்றங்களை நிராகரிக்கிறார்கள். இது கற்புக்கரசிகளுக்கு ஒவ்வாத செயல். கற்புடைய மாதர் தன் கணவனின் சுற்றத்தார் மற்றும் நண்பர்களை விலக்குவதில்லை. அன்பு, மரியாதையுடன் உபசரிக்கின்றனர். ஒரே தெய்வத்தை வழிபடுபவர்களுக்கும் இதுவே மேற்கோளாகும்.

 

             ஸ்ரீரங்கமஹாகுரு  இறைவனின் மும்மூர்த்தி  வழிபாடு குறித்து  இவ்வாறு கூறியுள்ளார்- "ஒருவனே தன் உலகளாவிய நாடக மேடையில்  பிரம்மா, விஷ்ணு சிவன் என்ற மூன்று வேடங்களை ஏற்கிறான். ரசிகரான  அடியவர் இவற்றில் தமக்கு விருப்பமானவற்றை வழிபடட்டும். ஆயின் மற்ற வேடங்களை ஏற்றவனும் அவ்வொருவனே என்பதை  நினைவுகொள்ளுதல் வேண்டும். ஒரு நாய் தன் முதலாளி எந்த வேடம் தரித்து  வந்தாலும் அடையாளம் கண்டு மகிழ்கிறது. மானுடனாக பிறந்த அடியவன்  நாயைக்காட்டிலும் கீழானவனோ?"

         


Thursday, September 8, 2022

ஸ்ரீகுருவின் கண்ணோட்டம் - 24 குற்றமற்ற,பாரபட்சமற்ற இறைவன் (Kutramatra, Paarapatchamatra Iraivan)

மூலம்: வரததேசிகாசார்யர்

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



இறைவன்  அனைவரிடத்திலும் பாரபட்சமற்றவன். ஏழை-பணக்காரன்  என்ற வித்தியாசமின்றி எல்லோர்மேலும்  சமமாக ஒளியைவீசும் ஆதவனைப்போன்றவன். அவனுக்கு யாரிடத்தும் பேதமில்லை என தாங்கள் உபதேசித்தீர்கள். அவ்வாறாயின் அவன் படைப்பில் வினோதமான வித்தியாசங்கள்  ஏன் உள்ளன? சிலர் சுகம் எனும்  மென்மையான பஞ்சணையில்  துயில்கின்றனர். சிலர் கஷ்ட நஷ்டங்களெனும் முள்படுக்கையில்  படுக்கின்றனர். வேறு சிலரோ இத்தகு இன்ப துன்பங்களிடையில்  நடுத்தரவர்க்கத்தில் உள்ளனர். இவ்வாறு வித்தியாசங்கள் நிறைந்தபடைப்பை செய்தவன் எவ்வாறு சமபுத்தி உள்ளவனாகிறான்? அவனிடமும் விருப்பு-வெறுப்பு  இருக்கவேண்டுமல்லவா?--இவ்வாறு மஹரிஷி ஜைமினி குரு பாதராயணரிடம் கேள்வி எழுப்பினார்.


பாதராயணர்: ஆமப்பா நல்ல கேள்விதான். இறைவன் வேறு எந்த காரணமுமின்றி தன் விருப்பத்தின்படி இவ்வாறு படைத்திருந்தால் உன் குற்றச்சாட்டு அவனுக்கு பொருந்தும்.

ஜைமினி: இத்தகு சமத்துவமின்மைக்கு வேறு என்ன காரணம்?

பாதராயணர்: ஜீவிகளிலுள்ள தர்ம-அதர்மங்களுக்கு தக்கவாறு இத்தகு வேறுபட்டபடைப்பை ஏற்படுத்துகிறான். வேறுபாடுகளுக்கு  காரணம் உயிரினங்களின்  வினைப்பயன்கள். இறைவனோ  அனைவரிடத்தும் சமமானவன்.

ஜைமினி: தக்க உதாரணங்களுடன்  விளக்கவேண்டும் குருவே.

பாதராயணர்: மரங்களில் மா-வேம்பு  முதலிய வேறுபாடுகளை காண்கிறோம். தானியங்களில் நெல்-கோதுமை போன்றும் கொடிகளில் ஜாஜி-முல்லை போன்றும் பலவகையான  வேறுபாடுகள் உள்ளன. இவற்றில் சில நீண்ட நாட்கள் இருக்கும். சில வெகு விரைவில் வாடிவிடும். இவற்றின் இயல்பு ,மணம், உருவு, சுவை முதலியவையும் வெவ்வேறு. இவ்வேறுபாட்டிற்கு அம்மரம்-செடி-கொடிகளின் விதைகளின்  இயல்பே காரணம். மழை மட்டும் இவ்வெல்லாவற்றின் மீதும் சமமாகவே பொழிகிறது. அதற்கு எந்த வேறுபாடும் இல்லை. அது பேதமற்றது. அதைப்போன்றவனே இறைவனும். உயிரினங்கள் மரம்-செடி-கொடி போன்றவை

ஜைமினி: உயிரினங்களே  தம் வினைபடி   வெவ்வேறு விதமாக பிறந்து  வாழ்ந்து அழிகின்றன. இதில் இறைவனின் பங்கு யாது?

பாதராயணர்: உவமையிலேயே  அதனை விளக்கி இருக்கிறேன். வேறுபாடுடைய மரம்-செடி-கொடிகளின் வளர்ச்சியில் மழையின் பங்கு  எத்துணையோ  உயிரினங்களின் படைப்பில் இறைவனின்  நிலையும் அவ்வாறே ஆகும். அது அனைத்திற்கும் ஜீவாதாரம்,  குற்றமற்றது, சமமானது, அமுதம்.


 


Thursday, August 18, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 21 கொல்வது கருணையா ?(Kolvadu karunaiya?)

மூலம்: திரு. வரததேசிகாசார்யர்

தமிழாக்கம்: திருமதி வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



இறைவனுக்கு யாரிடத்தும் பேதமில்லை, எப்போதும் நடுநிலை வகிப்பவன், கருணைக்கடல் என்பது குறித்து குருபாதராயணரிடமிருந்து ஜைமினி முனிவர் அநேக விவரங்களை கேட்டறிந்தார். குரு அருளிய அமுதினை ஒத்த சாஸ்திர சம்மதமானசொற்கள் அவர் அறிவு-,மனம்-இதயத்தில் ஒளியூட்டின. ஆயினும்புதிதாக தோன்றிய சில ஐயங்களை குருவிடம்விண்ணப்பித்துக்கொண்டார்.                     

      

"குருவே! இந்த படைப்பின் துவக்கத்திலும், காக்கும்நிலையில்  எல்லா உயிரினங்களையும்  காப்பாற்றுவதிலும் அவன்கருணையை  காண்கிறோம். துயரங்களையும் களைந்து நிலையானமெய்யறிவு இன்பம், இறையனுபவம் முதலியவற்றை அருளுவதுஅவனது கருணையின் உச்சமேயாகும். ஆனால் அவனது அழிக்கும்தொழில் எவ்வாறு கருணையாகிறது? இன்னும் உயிர்வாழவேண்டுமென்பதே எல்லா உயிரினங்களின் வேட்கையாகும்.துன்புறுத்தாமையே உயரிய அறம். அவ்வாறிருக்கையில்அனைத்தையும் அழிக்கும், துன்புறுத்தும் ருத்ரன் எவ்வாறுகருணையுள்ளவனாகிறான்?

 

பாதராயணர்: இறைவனின் திருவடிகளை அடைந்த புண்ணியஜீவன்களுக்கு என்றும் அழிவில்லை அல்லவா?

         

ஜைமினி: அத்தகையவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.படைத்தல் காத்தலுக்குப்பின் அழித்தலுக்கு உட்படுபவரே எண்ணில் அடங்காதவரல்லவே? அவர்களை இறைவன் ஏன் அழிக்கவேண்டும்? 

          

குரு: இறைவன் தூக்கத்தை அளித்திருப்பது  நன்மையா, தீமையா?அதனை அளித்தவன் இரக்கமுள்ளவனா? கொடியவனா?

 

ஜைமினி: அதனை அளித்தவன் மிகவும் கருணையுடையவன்.அவ்வாறு இல்லாவிடின் அமைதியே இருந்திராது.

 

குரு: உறக்கத்தில் உணவு இசை, பானம் முதலிய எந்த நன்மையும்கிட்டுவதில்லையன்றோ! எல்லா புலன்களும் ஒடுங்கி மரணத்தைப்போன்று சலனமற்றிருக்கும் அந்நிலையை ஏன் விரும்புகிறாய்?

ஜைமினி: அந்நிலையில்  அனைத்து புலன்களும்ஓய்வடைகின்றன. விழித்திருக்கையில் உழைத்து களைத்தஉறுப்புகளனைத்துக்கும் ஓய்வு கிட்டுகிறது. விழித்தெழும்போதுமுன்பைவிடவும் அதிகமாக உழைக்க இயலும். அது இறைவன்அளித்துள்ள வரமாகும். அவனின் கருணையின் பெரிய அடையாளம்.

 

குரு: உலகத்தை அழித்தலும் அவ்வாறேயப்பா. காலம்காலமாகவினைபயனை அனுபவித்து வரும் உயிரினங்கள் மிகவும்களைத்திருக்கும். ப்ரளயத்தால்  அழியும்போது அவற்றிற்கு  நிரந்தரஓய்வு கிடைக்கும். மீண்டும் படைப்பு தொடங்கும் போது தங்களின் மீதமுள்ள வினைப்பயனை அனுபவிக்கும்வலிமை  அவற்றிற்கு கிட்டும். இதற்கு காரணமான அழித்தல் தொழில் புரியும் இறைவனும் கருணை உள்ளவனல்லவா?.