முனிவர்கள் இறைவனை கருணைக்கடல் எனகொண்டாடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது.ஸ்ரீரங்க மஹாகுரு அதனை இவ்வாறு விவரித்திருந்தார்.
உலக மாயையில் அகப்பட்டுக்கொண்டு உயிரினங்கள்உழல்கின்றன. அந்த வலையிலிருந்து மீள்வது மிகவும் கடினம்.ஆயின் அவ்வலையை பிணைந்த இறைவன் அதில் ஜீவன்கள் கட்டுகளை அவிழ்த்து கொண்டு விடுபடவும் இயலும் வண்ணம்சில முக்கிய மையங்களை அமைத்திருக்கிறார்.அவ்வாறில்லாவிடில் ஜீவன்களுக்கு என்றுமே முக்திகிடைத்திராது. அவ்வாறு ஆகாதிருக்கும் பொருட்டு விடுபடதேவையான மையங்களை இறைவன் அவ்வலையில்இணைத்திருக்கிறான். அவைகளை இணைத்ததல்லாமல்அவைகளை தக்க தருணத்தில் அடையாளம் காட்டுகிறான்.அவைகளை சில நேரங்களில் உள்ளுணர்வின் மூலமும் சிலநேரங்களில் புனித நூல்களின் மூலமும் தெரியவைக்கிறான்.மற்றும் சில நேரங்களில் இறைவன் அவதாரங்களின் மூலமும்ஞானிகளின் சொல், நடைமுறையினாலும், கட்டளைகள்,உபதேசங்கள், வழிகாட்டுதல் வாயிலாகவும் உணரசெய்கிறான். அவர்கள் காட்டும் வழியில் தம்மை நடத்திகாத்தருள வேண்டுமென இறையன்புடன் வேண்டுவோரை தன்அபய கரத்தால் காக்கின்றான். இதுதானே இறைவனின்வியத்தகு பரிவு., எதிர்நோக்குதல் இல்லாத கருணை.
துயரங்களை களைந்து கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டுமென சில பக்தர்கள் அவனை வேண்டுகின்றனர்.இவர்களுக்கு ஆர்த்தர்கள், அர்த்தார்த்திகள் என்று பெயர்.இத்தகையோரின் வேண்டுதலையும் இறைவன்நிறைவேற்றுகிறான். இதுவும் அவன் கருணையே. ஆயின் இதுஅவ்வடியார்களின் வழிபாடு மற்றும் வினைப்பயனுக்கேற்றவாறேஅருளப்படும்.
இக்கருணை மட்டும் இல்லாவிடில் இறைவனின் ஞானம்,பலம், செல்வம், வீரம், ஆற்றல், தேஜஸ் என்ற ஆறுகுணங்களும் உலகிற்கு அச்சத்தையே அளித்திருக்கும்.அவ்வாறன்றி அது உயிரினங்களின் நலனுக்கே ஆகும்படிசெய்யும் கருணைக்கு நம் அனைவரின் வணக்கங்கள்என்கிறார் ஆசார்யரான வேங்கடநாதர்.