மூலம்: Dr. கே.எஸ். கண்ணன்த
மிழாக்கம்: வனஜா
நம் புராணங்களிலும், உபநிடதங்களிலும் நிரம்பியுள்ளது அமரர்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையேயான போரின் கதைதான்.
ஒருமுறை போரில் அரக்கர்கள் தோல்வியுற்றனர். அமரர்கள் வென்றனர். உண்மை என்னவெனில் அமரர்காக பரப்ரம்மமே வென்றது என கேனோபநிஷத்து கூறுகிறது..
அக்கதை பின்வருமாறு : ரகசியமான விஷயங்கள் எளிதில் விளங்காது.அமரர்க்கும் இவ்வாறே. அவர்கள் இது தங்களின் வெற்றியே (நாமே வெற்றியடைந்தோம்) என்று எண்ணினர். ப்ரம்மம் இதை அறியாதா? ஆயின் இதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமன்றோ! எனவே அவர்களின்முன் தோன்றியது. ஆயின் தன் சுய உருவம் தெளிவாக அறியும்படி அல்ல. வினோதமான உருவில். (உபநிடதத்தின் கூற்றுப்படி ஒரு யக்ஷனைப்போல்) அப்போது அமரர்கள் 'இது என்னவென்று அறிந்துவ' என்று அக்னி தேவனை அனுப்பினர். அவன் சென்ற போது "நீ யாரென்று" யக்ஷன் வினவ "நான் அக்னிதேவன். இப்பூவுலகிலுள்ள அனைத்தையும் எரிக்க வல்லேன்" என்றான். "இதனை சுட்டெறி" என ஒரு புல்லை முன்னி்ட்டான் யக்ஷன். தன் முழு வலிமையுடன் முயன்றும் அப்புல்லை சுட்டெறிக்க இயலவில்லை.
தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பின அக்னிதேவன் "யாரந்த யக்ஷனென்று. அறிய இயலவில்லை" என்று அமரர்களிடம் கூறினான். எல்லாவற்றையும் கவர்ந்து விடுவேனென்ற வாயு(காற்று)விற்கும் தோல்வியே கிட்டியது. பின்னர் இந்திரனே செல்ல வேண்டியதாயிற்று அப்பொழுதுஅந்த யக்ஷனே மறைந்து விட்டது. ஆயின் அதே வானத்தில் மிக்க ஒளியுடன் தேவி உமாஹைமவதி தோன்றினாள். அவளையே இந்திரன் வினவினான் யாரந்த யக்ஷன் என்று. "அதுவே ப்ரம்மம். ப்ரம்மத்தின் வெற்றியாலேயே நீங்கள் பெருமை அடைந்தீர்களென்று" உரைத்தாள். இதன்பிறகே இந்திரனுக்கு மெய்யறிவுண்டாயிற்று. அப்போதே அதனை ப்ரம்மமென்று அறிந்து கொண்டான்.
"மின்னல் வெட்டியது" போன்ற என்னும் உவமையை உபநிடதம் கூறுகின்றது. ஸ்ரீ ஸ்ரீ ரங்கப்ரியஸ்வாமிகள் "வித்யுல்லேகேவ பாஸ்வரா" என்னும் மறைபொருளை இக்கட்டத்தை விவரிக்கையில் நினைவு கூர்ந்தார்.
தேவர்களே ஆயினும் அகங்காரம் இருப்பின் வெற்றி இல்லை. அகங்காரமற்ற பரிசுத்த மனம் மட்டுமே இறைவனை உணர வல்லது என்ற அடிப்படை கருத்தை தேவதைகளுக்கு உணர்த்தியது பரப்பிரம்மம்.