Showing posts with label youtube_available. Show all posts
Showing posts with label youtube_available. Show all posts

Thursday, July 28, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 18 இறைவன் ஒருவன், பெயர்கள் பல (Iraivan oruvan, peyargal pala)

 மூலம்:  திரு. வரததேசிகாசார்யார்

தமிழாக்கம் : திருமதி வனஜா) 

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




 "இறைவன் ஒருவன் பெயர்கள் பல." இக்கருத்தை கன்னட நாட்டின் மகான்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெளிவான முறையில்  எடுத்துரைத்தார்கள். அதற்கும் முன்பே பற்பல நூற்றாண்டுகளுக்கும் முன்னரே  பூவுலகில் பழமையான நூல் என்று எல்லா அறிஞர்களும் ஆமோதிக்கும் "ரிக் வேதம்" "நிலையான உண்மைப் பொருள் ஒன்றே.  அதனையே ஆன்றோர்கள் பல பெயர்களில் அழைக்கிறார்கள்" என இதே கருத்தை  முழங்குகிறார்கள். "பல விதமான பெயர்களால் அழைக்கப்படும் அந்த இறைவன் ஒருவனே" என்கிறது யஜுர் வேதம். அவனை சிலர் ப்ரம்மா என்றும், சிலர் மனு என்றும், சிலர் அக்னி எனறும்,  வேறு சிலர் பரமாத்மாவே என்றும் கூறுவதாக மனுஸ்ம்ருதி  கூறுகிறது.


         சமய நூல்கள் இவ்வாறு அறிவுரை வழங்கினும் அவைகளை பொருட்படுத்தாமல் 'அந்த கடவுள் பெரியவன், இந்த கடவுள் சிறியவ'னென்று கடவுளின் பெயரை முன்னிட்டே சமரிடுகின்றனர். "நம் கடவுளுக்கும் உங்கள் கடவுளுக்கும் தொலைதூரம். நம் கடவுள் பேரரசர் உங்கள் கடவுள் மாவட்ட அதிகாரி. உங்கள் கடவுள் உயர்ந்தவனாக இருக்கலாம். ஆயினும் எங்கள் கடவுளைக்காட்டிலும் சிறிது குறைந்தவரே" இவ்வாறான வாதங்களால் மனதை குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.  ஒருவர் மீது ஒருவர் புழுதி இறைத்திருக்கின்றனர். அடிதடிகள் அனேகம் நடந்துள்ளன. இப்போதும் நடக்கின்றன.


             இவற்றை தவிர்க்க சிலர் "எல்லா மதங்களையும் பிடுங்கி எறிந்து விடலாம்" என்கின்றனர். ஆனால் இதன் மூலம் ப்ரச்னை அதிகமேயாகும். இருக்கும் மதபிரிவுகளுடன்  'எம்மதமும் தேவையில்ல' என்ற பிரிவும் சேர்ந்து கொள்ளும்! அவ்வளவுதான். அப்புதுமதம்  எவ்வாறு இருக்க வேண்டும் என்பதிலும் பிரிவினை ஏற்படும். இதுவேயன்றி ஆன்மீக பெரியோர் சைவம் வைணவம் முதலிய வெவ்வேறு பிரிவுகளை  ஏன்  ஏற்படுத்தினார்கள் என்பதை ஆராயாமல் கண்ணிற்கு பட்டி கட்டிக்கொண்டு நடந்தது போலாகும்." 'இப்பிரிவுகளை ஏற்படுத்தினவர்கள் ஞானிகளே அல்ல' என்றால் 'அவ்வாறு கூறும் நீ ஞானியோ?' என்ற எதிர்ப்பு எழும்.' சத்தியத்தை கண்டறிந்த ஞானிகள் மட்டுமே இதைபற்றி  விளக்கமளிக்க வல்லவர்கள்.


        ஒரே இறைவனை பக்தர்கள் வெவ்வேறு பெயர்களில் ஏன் அழைக்கவேண்டும் என்றால்  பொருத்தமும் தேவையும் இருந்தால் அவ்வாறே அழைக்க வேண்டி உள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள ஒருவரை ஒருவர் அண்ணன் என்றும், மற்றொருவர் தம்பி என்றும், ஒருவர் மகனென்றும்,  வேறு சிலர் வைத்தியர், ஆசிரியர் என்றும் அழைக்கின்றனர். ஒருவனுக்கு ஏன் வெவ்வேறு பெயர்கள் எனில் அவரவர்களின் உறவு முறை, தொழில், மற்றும் உலக வழக்கத்தை பொருத்து அமைகிறது. இறைவனின் விஷயத்திலும் அவ்வாறே.

Thursday, July 21, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 17 குழந்தை – தங்கம் - மிட்டாய் (Kuzhandai - tangam - mittai)

மூலம்:  திரு. சாயாபதி
தமிழாக்கம் : திருமதி ஜானகி 



தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு  மகிழ்ச்சிக்காகவும், அலங்காரத்திற்காகவும்  தங்க நகைகளை அணிவிப்பது வழக்கம். மோதிரம், வளையல், தோடு முதலியவைகளை சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அணிவிப்பது அழகு. ஆனால் விளையாட்டு பருவ குழந்தைகள் அணிந்திருப்பதை கண்டு அதை அபகரிக்கும் வஞ்சகர்களும் உண்டு. சிலர் கொடூரமான முறைகளை கைகொண்டால் பலர் அன்பாக வஞ்சிக்கிறார்கள். 


       சிறுவர்கள் விரும்பும் விளையாட்டு பொருட்கள், மிட்டாய் முதலிய இனிப்புகளை கொடுத்து அணிகலன்களை அபகரிக்கும் கதைகளை கேட்கிறோம். அவ்வாறு தங்கள் தோடு, மோதிரங்களை கொடுத்து மிட்டாய் போன்ற இனிப்புகளை பெற்ற குழந்தைகள் தாம் அதிக லாபத்தை அடைந்தோம் என உற்சாகமாக கூறுவதும் உண்டு.


       தங்கத்தின் விலை மதிப்பறியாத மழலைகள். மிட்டாயின் சுவையே அவர்களுக்கு தங்கத்தை விட இனியது. தங்கத்தின் விலை அறியமுடியாமல் மோசம் போய் மிட்டாயின் விலையே அதிகமென மகிழ்கின்றன அக்குழந்தைகள்.


            அவ்வாறே இந்திரியங்களின் ஈர்ப்புக்கு உட்பட்ட  ஜீவன் அதை காட்டிலும் மேலான இன்சுவையை அறிவதில்லை. அதையும் மீறிய சுகம், மனநிறைவு உண்டென்று ஆன்றோர் உரைத்திடினும் மனம் அதை நாடுவதில்லை.


             இந்திரியங்கள் எனும் திருடர்கள் தங்கள் கீழ்தரமான சுவையை காட்டி ஜீவன் அச்சுவைகளுக்கும்  மூலமான, தங்கமயமான ஆத்மனிடம் செல்லாமல் தடுத்து விடுகின்றன. ஜீவன் இந்திரியங்களின் சுவைக்கு தோற்காமல் மனம் பின்நோக்கி மூலத்தில் லயித்து சுவர்ண(தங்க) மயமான ஜோதியை கண்டதும்  இந்த்திரியசுவை  அற்பமானது என அறிகிறது. அப்போது அச்சுவைக்கு ஆளாகி தன் வாழ்வின் தங்கத்தை பறிகொடுப்பதில்லை.


         குழந்தை மிட்டாய்க்கு மயங்கி  தங்கத்தை  இழப்பதுபோல்  புலன்களின் வயப்பட்ட மனிதன் தன் வாழ்வின் இணையற்ற செல்வத்தை இழக்கிறான்.  வாழ்கையின் உண்மையான மதிப்பை உணரும் பொழுது தான் இந்திரியங்களின் கீழ்த்தரமான சுவைகளுக்கு ஜீவன் ஆளாக மாட்டான்.


Thursday, July 14, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 16 பெரியவனுக்கு சிறிய உறைவிடம் ஏன்? (Periyavanukku shiriya uraividam En?)

மூலம்:  திரு. சாயாபதி

தமிழாக்கம் : திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)

 இறைவனுக்கென்றே உருவாக்கப்பட்ட ஆலயத்தில் மற்றெல்லா  இடங்களும்  விரிந்து பரந்திருந்தாலும், ஆண்டவன்  உறையும் கருவறையே மிகவும் சிறிது. அங்கு ஒளிர்விடும் சிறிய தீபத்தை தவிர வேறு வெளிச்சத்திற்கு வழியில்லை. தற்போதைய மின்சார விளக்குகளை பயன்படுத்துவதற்கு  பாரம்பர்யத்தில் ஊறியவர்கள் விரோதம் தெரிவிப்பதையும் கேள்விப்படுகிறோம்.


         அனைவரும் இறைவனை காண ஆவலுடன் ஓடிவரும் அறையே ஏன் சிறியது? அது விசாலமாகவும் இருந்து அதிகஒளியும் புகுந்தால் நலந்தானே? ஏன் இருட்டு குகையில் மிளிரும் தீபத்தைப்போன்றதோர்  சிறிய தீபம்  ஒளிரவேண்டும்? அதற்கு 'கருவறை' எனும் பெயர்தான் ஏன்? எனும் வினாக்கள் எழுவது இயல்பு.

          ஓர் ஜீவனின் உற்பத்தி ஏற்படுவது தாயின் கருவறையில் என்பதை நாம் மறக்கக்கூடாது. "தாயின் கர்ப்பத்தில் இருக்கும்பொழுது குழந்தை தன் எட்டாவது மாதத்தில் இறைவனை தரிசிக்கிறது.  அக்காட்சியை கண்டு பேரானந்தத்தில் திளைக்கும் அந்த ஜீவன் தான் கர்ப்பத்திலிருந்து வெளியே வந்த பிறகு அஜ்ஜோதியை மறவாமல் வாழ்வதாக உறுதி கொள்கிறது" என்று ஞானிகள் கூறுகின்றனர். ஆயினும் தாயின் கருவறையிலிருந்து வெளிவந்த பிறகு சிசு வெளி உலகத்தின் ஈர்ப்புக்கு உட்பட்டு தன் உறுதி மொழியை மறந்துவிடுகிறது.

 மீண்டும் அந்த ஜீவனுக்கு கருவறையில் கண்ட அச்சோதியை நினைவூட்டி அதன் வாழ்வில் பேரானந்தத்தையும், பரம சாந்தியையும் வழங்குவதே ஆலய நிர்மாணத்தின் பின் அடங்கியுள்ள  திட்டம். ஆகவேதான் ஆண்டவனை நிலைநிறுத்தும் இடத்திற்கும் 'கருவறை' எனும் பெயர் வழங்கிவருகிறது. ஜீவன் முதன்முதலில் இறைவனை கண்ட இடம். அங்கு வெளியிலிருந்து எந்த ஒளியும் நுழைய முடியாததால் அது வெளி ஒளியிலிருந்து தனிப்படுத்தி  அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்ட ஜோதியின் நினைவிற்காக சிறு தீபம்; மற்றும் அந்த ஞானத்தினிடம் நம்மை ஈர்க்கும் அடையாளங்களை கொண்ட  இறைஉருவம். அவ்வாறே கருப்பை சிறிதாகவும், மறைந்தும் இருப்பதால் கருவறையும் சிறியது. ஜீவன் முதன் முதலில் ஜோதியை கண்ட இடம் கருப்பை என்பதால் ஜீவனை அச்சூழ்நிலைக்கே கொண்டு சென்று மீண்டும் அத்தரிசனத்தை  காட்டுவதற்காகவே  ஆலயத்திலும் ஒரு கருவறை அல்லது கர்ப்பக்ருஹம்.


Wednesday, July 13, 2022

ಆತ್ಮನ ಎಣಿಕೆ ತಪ್ಪದಿರಲಿ (Atmana Enike Tappadirali)

ಲೇಖಕರು; ಡಾ. ರಾಮಮೂರ್ತಿ ಟಿ. ವಿ

(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ lekhana@ayvm.in)


 

ಜೀವನದ ಜಟಿಲ  ಪ್ರಶ್ನೆಗಳಿಗೆ ಉತ್ತರವೋ ಎಂಬಂತೆ ಉಪನಿಷತ್ತುಗಳಿಂದ ಸ್ಫೂರ್ತಿಗೊಂಡ ಕಥೆಯೊಂದು ಹೀಗಿದೆ- ಒಂದು ಆಶ್ರಮದ ಆಚಾರ್ಯರು ತಮ್ಮ ಹತ್ತು ಶಿಷ್ಯರನ್ನು ಹತ್ತಿರದ ಮಾಯಾಪುರಿ ಎಂಬ ಗ್ರಾಮಕ್ಕೆ ಕಳುಹಿಸಿದರು.ಶಿಷ್ಯರು  ಹೊರಡುವಾಗ ನದಿಯೊಂದನ್ನು ಸುರಕ್ಷಿತವಾಗಿ ದಾಟಿದರು. ಹಿಂದಿರುಗುವಾಗ ಹವಾಮಾನ ಕೆಟ್ಟು ಪ್ರವಾಹ ಬಂತು. ಕಡೆಗೆ ಶಿಷ್ಯರು ಬಹಳ ಕಷ್ಟಪಟ್ಟು ದಡ ಸೇರಿದರು. ನಂತರ ಶಿಷ್ಯರ ಗುಂಪಿನ ನಾಯಕ, ಹೊರಟ ಹತ್ತು ಮಂದಿಯೂ ಸುರಕ್ಷಿತವಾಗಿರುವುದನ್ನು ಖಚಿತಪಡಿಸಿಕೊಳ್ಳಲು ಗುಂಪಿನವರನ್ನೆಲ್ಲ ಎಣಿಸಿದ- ಒಂದು, ಎರಡು, ಮೂರು  ....ಒಂಬತ್ತು. ಹತ್ತನೆಯವ ಇಲ್ಲ. ಎಂದು ಕಿರುಚಿದ. ಮತ್ತೊಮ್ಮೆ ಎಣಿಸಿದರೂ ನಾಯಕನಿಗೆ ಹತ್ತನೆಯವ ಸಿಗದೇ  ಗಾಬರಿಗೊಂಡ. ಉಪನಾಯಕ ತಾನೂ ಎಣಿಸಿವುದಾಗಿ ಹೇಳಿ  ಎಣಿಸಿದರೂ ಹತ್ತನೆಯವ ಸಿಗದಾಗ ಎಲ್ಲರೂ ಜೋರಾಗಿ ಅಳತೊಡಗಿದರು.

ಅದೇ ಮಾರ್ಗದಲ್ಲಿ ಹೋಗುತ್ತಿದ್ದ ಸಂನ್ಯಾಸಿಯೊಬ್ಬನು ಅವರನ್ನು ವಿಚಾರಿಸಿದ. ಶಿಷ್ಯರು ಅವನಲ್ಲಿ ತಮ್ಮ ಹತ್ತು ಮಂದಿಯಲ್ಲೊಬ್ಬ ನದಿಯಲ್ಲಿ ಮುಳುಗಿಹೋದ ಕಾರಣ ಅಳುತ್ತಿದ್ದೇವೆ ಎಂದರು. ಅವರ  ಅಜ್ಞಾನವನ್ನು ನೋಡಿ, ಬುದ್ಧಿವಂತನಾದ ಸಂನ್ಯಾಸಿಯು "ಚಿಂತಿಸಬೇಡಿ. ಹತ್ತನೆಯವ ಎಲ್ಲೂ ಹೋಗಿಲ್ಲ" ಎನ್ನಲು, ಶಿಷ್ಯರಿಗೆ ಸಂತೋಷವಾಗಿ, "ಎಲ್ಲಿ  ದಯಮಾಡಿ ತೋರಿಸಿ "ಎಂದು ಪ್ರಾರ್ಥಿಸಿದರು.

ಸಂನ್ಯಾಸಿಯು ಎಲ್ಲರನ್ನೂ ಸಾಲಾಗಿ ನಿಲ್ಲಿಸಿ, ನಾಯಕನನ್ನು ಕರೆದು "ಬಾ ಇಲ್ಲಿ, ಈಗ ಎಣಿಸು" ಎಂದ. ನಾಯಕನು ಎಣಿಸುತ್ತಾ ಒಂದು, ಎರಡು, ಮೂರು  ...ಒಂಬತ್ತು ಎಂದು ನಿಲ್ಲಿಸಿದ. ಆಗ ಸಂನ್ಯಾಸಿಯು ನಾಯಕನ ಬೆರಳನ್ನು ಹಿಡಿದು "ನೀನೇ ಹತ್ತನೆಯವ" "ತತ್ ತ್ವಂ ಅಸಿ" ಎಂದ. ಆಗ ಪ್ರತಿ ಶಿಷ್ಯನಿಗೂ ತನ್ನನ್ನು ತಾನೇ ಎಣಿಸಿಕೊಳ್ಳದಿರುವುದು ಅರಿವಾಯಿತು.  ಎಲ್ಲರಿಗೂ ಆನಂದವುಂಟಾಗಿ ಸಂನ್ಯಾಸಿಗೆ ಕೃತಜ್ಞತೆಯನ್ನು ವ್ಯಕ್ತಪಡಿಸಿದರು. 

ಜನರು ಮಾಯಾಪುರಿಯಲ್ಲಿ, ಅಷ್ಟಪಾಶಗಳಿಂದ ಉಂಟಾದ "ಅಜ್ಞಾನ"ದಿಂದಾಗಿ ಆತ್ಮಸ್ವರೂಪವನ್ನು  ಸಂಪೂರ್ಣ ಮರೆತುಬಿಡುತ್ತಾರೆ. ಇದರಿಂದಾಗಿ ಎಣಿಕೆ ತಪ್ಪಾಗಿ, ಒಳಗಿರುವ "ಆತ್ಮ" ಕಾಣಿಸುವುದಿಲ್ಲ. ಇದು "ಆವರಣ"ದಿಂದಾಗಿ. ಹತ್ತನೆಯವ ನದಿಯಲ್ಲಿ ಮುಳುಗಿಹೋದನೆಂಬ ದುಃಖ, ಚಿಂತೆಗಳು ತಪ್ಪಾದ ನೋಟ. ಶ್ರೀರಂಗಮಹಾಗುರುಗಳ ವಾಣೀ ಎಚ್ಚರಿಸುತ್ತದೆ "ಸ್ವರೂಪ ಅರಿತರೆ ಬಾಳಾಟ ಅರಿಯದಿದ್ದರೆ ಗೋಳಾಟ.  ಪ್ರಕೃತಿ ಕೆಟ್ಟಾಗ ಮನುಷ್ಯನು ಸಹಜವಾದ ನಿದ್ರೆಯನ್ನೇ ಕಳೆದುಕೊಳ್ಳುತ್ತಾನೆ. ಅಂತೆಯೇ ತುರೀಯದೆಶೆಯಲ್ಲಿರುವ ಸತ್ಯವನ್ನು, ಪ್ರಕೃತಿಯ ಕಂಡೀಷನ್ ಕೆಟ್ಟಾಗ, ಕಳೆದುಕೊಳ್ಳುತ್ತಾನೆ. ಅದಕ್ಕೆ ತಕ್ಕ ಡಾಕ್ಟರಿಂದ ಔಷಧಿ ತೆಗೆದುಕೊಳ್ಳಬೇಕು". ಈ ಕಥೆಯಲ್ಲಿ ಹತ್ತನೇಯನವನಿಗಾಗಿ ಪರಿತಪಿಸುವಾಗ, ದಾರಿ ತೋರಿಸುವವನು ಬಂದಂತೆ, ನಮ್ಮ ಜೀವನದಲ್ಲಿ ದಾರಿದೀಪ  ತೋರಿಸುವನೇ ಗುರು. ಅಭಯವನ್ನು ನೀಡಿ ನಮ್ಮ ಬುದ್ಧಿಯನ್ನು ಪ್ರಚೋದಿಸಿ, ಪರೋಕ್ಷ ಜ್ಞಾನವನ್ನು  ದಯಪಾಲಿಸುತ್ತಾನೆ. ಮುಂದೆ, ಕಾಲ ಪಕ್ವವಾದಾಗ, ಜಾಗ್ರತ್, ಸ್ವಪ್ನ, ಸುಷುಪ್ತಿಗಳೆಂಬ ಮೂರು ಸ್ಥಿತಿಗಳನ್ನು ಮೀರಿದ ತುರೀಯ(ನಾಲ್ಕನೆಯ)ವೆಂಬ  ಸ್ಥಿತಿಯನ್ನು ಹೊಂದುವಂತೆ ಮಾಡುತ್ತಾನೆ. ಭುವಿಯಲ್ಲಿದ್ದರೂ ಎಲ್ಲಾ ಭವ ಬಂಧನದಿಂದ  ಬಿಡುಗಡೆಯಾಗಿ ದುಃಖ ನಿವೃತ್ತಿಯಾಗಿ ಕಡೆಗೆ ಸಚ್ಚಿದಾನಂದ ದೊರಕುವಂತಾಗಲಿ; ಎಲ್ಲರೂ ಸಾಧನೆ ಮಾಡಿ ಅಂತಹ "ಆನಂದ ಸ್ಥಿತಿ" ಯನ್ನು ಹೊಂದೋಣವೆಂದು ಪ್ರಾರ್ಥಿಸೋಣ.

ಸೂಚನೆ: 12/07/2022 ರಂದು ಈ ಲೇಖನವು ವಿಜಯ ವಾಣಿ ಯಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.  

Saturday, July 9, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 12 உபநிடதம் கூறும் உப்பின் பரிசோதனை (Upanidadam kurum uppin parishodanai)

  மூலம்:  திரு. வரததேசிகாசார்யார் 

தமிழாக்கம் : திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



 'இறைவனிடம் ஈடுபாடு வை. பக்தியுடன் அவனை வழிபடு' என்று ஆசிரியரான உத்தாலகர்  பொங்கி வரும் அன்புடன் தம் ப்ரியமாணவன் சிறுவன் ச்வேதகேதுவிற்கு உபதேசித்தார்.  
ச்வேதகேதுவிற்கு ஆசிரியரிடம் அளவற்ற பக்தி இருந்தது.
அவருடைய அன்பு அவன் இதயத்தை கவர்ந்திருந்தது. அவர் மிகவும் நேர்மையானவர் என்று அவன் உள்மனம் கூறும். ஆயினும் மிக்க அறிவாளியான சீடன் ஆராயாது எதனையும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. 
"இறைவன் கண்ணிற்கு புலப்படுவதில்லையே, அவனிடம் எவ்வாறு பற்று வைப்பது?" என்று பணிவுடன் வினவினான். 
குரு சிறிது நேர அமைதிக்குப்பின் அவன் கையில் ஒரு பிடி உப்பை அளித்து 'நீர் நிரம்பிய  கிண்ணத்தில் போட்டு நாளை காலையில் கொண்டு வா' என்று பணித்தார். சீடன் பணிவுடன் அவ்வாறே செய்தான்.
ஆசிரியர்: நேற்று மாலை இதில் சேர்த்த உப்பை எடுத்து கொடு. 
சீடன் நீரை   தொட்டு பார்த்தபோது உப்பு கைக்கு கிடைக்கவில்லை. கண்ணிற்கும் புலப்படவில்லை.      
ச்வேதகேது: அந்த உப்பு  இங்கு கிடைக்கவில்லை. ஆசிரியர்: இல்லையா? அப்படியாயின் அந்த நீரின்  இந்த பக்கத்திலிருந்து சிறிதளவு பருகு.  
     
சீடன்: பருகினேன்.                    
ஆசிரியர்: எவ்வாறு உள்ளது? 
சீடன்: மிகவும் உப்பு கரிக்கிறது.             
ஆசிரியர்: நீரின் நடு பாகத்திலிருந்து பருகு.                         
சீடன்: பருகினேன். மிகவும் உப்பாக உள்ளது.                      
ஆசிரியர்: கடைசி பாகத்திலிருந்து பருகு.                       
சீடன்: பருகினேன்! அதுவும் அவ்வாறே உப்பாக உள்ளது.  

ஆசிரியர்: அந்த உப்பு கண்ணிற்கு புலப்படவில்லை. கைக்கு கிடைக்கவில்லை. ஆயினும் அது இந்த நீரில் முழுமையாக  கலந்திருப்பது உன் நாவிற்கு  உரைக்கிறதல்லவா? அவ்வாறே இறைவன் கண்ணிற்கு புலப்படாவிடினும் உண்மையாகவே இருக்கின்றான். எங்கும் நிறைந்திருக்கின்றான். அகக்கண்ணிற்கு தெளிவாக புலப்படுவான். அந்த  மெய்யுணர்வை அடைய தவம் செய்ய வேண்டும்.

இந்த சிறிய பரிசோதனை  சிறுவனான ச்வேதகேதுவின் மனதில் ஆழமாக பதிந்தது. குருவை வணங்கி அவன் அன்றிலிருந்தே  அதற்கான முயற்சியை தொடங்கினான்.

Thursday, June 30, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 14 அதர்மம் அநியாயத்திற்காக வேண்டுதலா?(Adharmam aniyayattirkaga vendudalA?)

மூலம்:  திரு.  வரததேசிகாசார்யார்

தமிழாக்கம் : திருமதி வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)

    மிகவும் விமரிசையாக பூஜை தொடங்கியது. மந்திரங்களின் முழக்கமும், சங்கு, மணி, தாள வாத்யங்களின் ஒலியும்  மிகுந்திருந்தது.  வீட்டின் தலைவர் வழக்கத்தைவிட  அதிக தூய்மையான(மடியான) ஆடை அணிந்து மேடையில் அமர்ந்தார். கூடை நிறைய பூக்களாலும், (துளசி முதலான) தளங்களாலும்அர்ச்சனை நடந்தது. தூப, தீப, நைவேத்யம்,ஹோமம் மற்றும் ராமாயண பாராயணமும் நிறைவுற்றது.

"என்கோரிக்கைய  நிறைவேற்றும்படி  இறைவனை  வேண்டுங்கள் " என்று பூஜை செய்தவரிடம் எஜமானர் கட்டளை இடும் குரலில் கேட்டுக்கொண்டார். "உங்கள் விருப்பம் என்ன?" என்று வினவியபோது  "இந்த எல்லா சொத்தும் எனக்கே வந்து சேர வேண்டும்.  என் தம்பிக்கு சிறிதளவும்  கிடைக்க கூடாதென்று நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும்படி இறைவனிடம் வேண்டுங்கள் "என்றார்.

        பூஜை செய்தவருக்கு குழப்பம் ஏற்பட்டது.  அப்போதுதான் அனைவரும் ராமாயண கதையை கேட்டிருந்தனர். 'தந்தையார் அளித்த வாக்கின்படி அரசுரிமை தம்பி பரதனுக்கே சேர வேண்டும். இதுவே அறம். நான் அரசுரிமை ஏற்றால் அறம் கெடும். அதுவுமன்றி பரதன் அரசாள தகுந்தவன்.  அவன் என் அன்பிற்குரிய தம்பி. எனவே அவனே அரசனாகட்டும்' என்று தன் கைக்கு எட்டிய அரசுரிமையை  தம்பிக்கே விட்டு கொடுத்த தர்மவான், தியாகி  ஸ்ரீராமசந்திரன்.  ஆனால் இங்கோ தம்பிக்கு சட்டப்படி கிடைக்கவேண்டிய சொத்தும் இந்த அண்ணனுக்கே  சேர வேண்டும்' என்று  அதர்மத்திற்கு துணை போகும்படி அந்த தர்ம ப்ரபுவை கோரவேண்டுமாம்! எத்தகைய நெருக்கடி.

முடிவில் பூஜை செய்தவர் தன் கட்சிகாரன் தவறானவனாயினும் அவனுக்காக வாதாடும் வக்கீலை போலவே நடந்து கொண்டு விட்டார். தன் எஜமானனின் கோரிக்கையை உரத்த குரலில் முறையிட்டார். இத்தகைய பூஜையை ஏற்றுக்கொள்பவனை  இறைவன் என்று எந்த அறநூலும் ஒப்புவதில்லை.

Wednesday, June 22, 2022

ವಿದ್ಯೆ ಮಾತ್ರವೇ ಇದ್ದರೆ ಸಾಲದು (Vidye Matrave Iddare Saladu)

 ಲೇಖಕಿ ; ಮೈಥಿಲೀ ರಾಘವನ್

(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ lekhana@ayvm.in)


ಬೃಹದ್ಯುಮ್ನನೆಂಬ ಅರಸನು ಪರಾವಸು, ಅರ್ವಾವಸುವೆಂಬ ವಿದ್ವಾಂಸರಾದ ಋಷಿಪುತ್ರರನ್ನು ಯಜ್ಞವನ್ನು ನಡೆಸಿಕೊಡಬೇಕೆಂದು ಪ್ರಾರ್ಥಿಸಿದನು. ಯಜ್ಞಕಾಲದ ಮಧ್ಯದಲ್ಲಿ ಕಾರಣಾಂತರದಿಂದ ಪರಾವಸುವಿಗೆ ಮನೆಗೆ ಹೋಗಿಬರುವ ಮನಸ್ಸಾಯಿತು. ಸಂಜೆಯವೇಳೆಗೆ ಆಶ್ರಮವನ್ನು ತಲುಪಿದ ಆತನಿಗೆ ಆಶ್ರಮದ ಬಾಗಿಲಲ್ಲಿ ಪ್ರಾಣಿಯೊಂದು ಹಾರಲು ಸಿದ್ಧವಾಗಿರುವಂತೆ ಕಂಡಿತು. ಗಾಬರಿಗೊಂಡ ಪರಾವಸುವು ಕೂಡಲೇ ಅದನ್ನು ಸಂಹರಿಸಲು ಕೈಯಲ್ಲಿದ್ದ ಆಯುಧವನ್ನೆಸೆದ. ಆದರೆ ಆಯುಧದಿಂದ ಹತವಾದದ್ದು ಪ್ರಾಣಿಯಾಗಿರಲಿಲ್ಲ, ಅವನ ತಂದೆಯಾದ ರೈಭ್ಯಮಹರ್ಷಿ! ಅನಿರೀಕ್ಷಿತ ಘಟನೆಯಿಂದ ದುಃಖಾಕ್ರಾಂತನಾದ ಆತನು ತಪ್ಪಿಗಾಗಿ ಪರಿತಪಿಸುತ್ತ, ಅಂತ್ಯಕ್ರಿಯೆಗಳನ್ನು ಮಾಡಿ ಮುಗಿಸಿದ. ಯಜ್ಞಕಾರ್ಯಕ್ಕೆ ತಡೆಯಾಗಬಾರದೆಂದೆಣಿಸಿದ ಆತನು ಸಹೋದರನ ಬಳಿಸಾರಿ "ನಾನು ಯಜ್ಞಕಾರ್ಯವನ್ನು ಮುಂದುವರಿಸುತ್ತೇನೆ. ಅರಿಯದೆ ಮಾಡಿದ ತಪ್ಪಿಗೆ ಪ್ರಾಯಶ್ಚಿತ್ತವನ್ನು ನನ್ನ ಪರವಾಗಿ ನೀನು ಮಾಡಿ ಬಾ" ಎಂದ. ಅರ್ವಾವಸುವು ಸಹೋದರನಿಗಾಗಿ ದೈಹಿಕ-ಮಾನಸಿಕ ಪ್ರಯಾಸಗಳಿಂದ ಕಠಿಣ ಪ್ರಾಯಶ್ಚಿತ್ತವನ್ನಾಚರಿಸಿ ಯಜ್ಞಶಾಲೆಗೆ ಹಿಂತಿರುಗಿದ. ಆದರೆ ಪ್ರಾಯಶ್ಚಿತ್ತವನ್ನು ತಾನೇ ಆಚರಿಸಲಿಲ್ಲವಾದ್ದರಿಂದ ಪರಾವಸುವು ಪಾಪಭಾಗಿಯಾದ. ತತ್ಪರಿಣಾಮವಾಗಿ ಅರ್ವಾವಸುವನ್ನು ನೋಡಿದೊಡನೆಯೇ ಪರಾವಸುವಿನಲ್ಲಿ ದುಷ್ಟಪ್ರವೃತ್ತಿ ತಲೆದೋರಿ ಅಲ್ಲಿದ್ದವರನ್ನು ಕುರಿತು "ಈತನು ತಂದೆಯನ್ನೇ ಕೊಂದ ಮಹಾಪಾಪಿ. ಇವನ ಉಪಸ್ಥಿತಿಯು ಯಜ್ಞಶಾಲೆಯ ಪಾವಿತ್ರ್ಯಕ್ಕೆ ಭಂಗವನ್ನುಂಟುಮಾಡುತ್ತದೆ" ಎಂದ! ನಿಜವನ್ನು ತಿಳಿಸಲು ಅರ್ವಾವಸುವು ಎಷ್ಟೇ ಪ್ರಯತ್ನಿಸಿದರೂ ಸಫಲವಾಗಲಿಲ್ಲ. ಬೇಸರಗೊಂಡಾತನು ವನಕ್ಕೆ ತೆರಳಿ ತಪೋಮಗ್ನನಾದ.  ದೇವತೆಗಳು ಪ್ರತ್ಯಕ್ಷವಾಗಿ ವರ ನೀಡುತ್ತೇವೆಂದಾಗ ಅವನು "ನನ್ನ ತಂದೆಯು ಜೀವಂತನಾಗಲಿ ಮತ್ತು ನನ್ನ ಸಹೋದರನಿಗೆ ಸದ್ಬುದ್ಧಿಯುಂಟಾಗಲಿ" ಎಂದು ಪ್ರಾರ್ಥಿಸಿದ!  ತನಗೆ ಕೇಡು ಬಯಸಿದವನಲ್ಲಿ ಕ್ಷಮೆತೋರುವುದಲ್ಲದೆ ಆತನ ಒಳಿತಿಗಾಗಿ ಪ್ರಾರ್ಥನೆ!  ಅದೆಷ್ಟು ಕ್ಷಮೆ! ದಯೆ!


ದಯೆ(ಸರ್ವಭೂತಗಳಲ್ಲೂ ಕರುಣೆ), ಕ್ಷಮೆ(ದೇಹ-ಮನಸ್ಸುಗಳಿಗೆ ದುಃಖವನ್ನುಂಟುಮಾಡಿದರೂ ಸಮಾಧಾನವಾಗಿಯೇ ವರ್ತಿಸುವುದು)-ಇವೆರಡೂ ಆತ್ಮನಿಗೆ ಸ್ವಭಾವವಾದ-ಸಹಜಗುಣಗಳ ಪಟ್ಟಿಯಲ್ಲಿ ಪ್ರಥಮಸ್ಥಾನ ವಹಿಸುವುವು. ಯೋಗಿಗಳಿಗೆ ಸಹಜವೂ, ಸಾಮಾನ್ಯರಿಗೆ ಅಭ್ಯಾಸದಿಂದ ಮಾತ್ರವೇ ಲಭ್ಯವೂ ಆದ ಆತ್ಮಗುಣಗಳ ಫಲ ಶಾಂತಿಸಮೃದ್ಧಿ-ಸಮಾಧಾನ; ಅನಾತ್ಮಗುಣಗಳ ಫಲ ಮನಃಪತನ.


ಶ್ರೀರಂಗಮಹಾಗುರುಗಳು ವಿದ್ಯೆಗೆ ಕೊಟ್ಟಿರುವ ವಿವರಣೆಯನ್ನು ಸ್ಮರಿಸುವುದಾದರೆ-ಜ್ಞಾನಕ್ಕೆ(ಭಗವಂತನೆಡೆಗೆ) ಒಯ್ಯುವುದೇ ವಿದ್ಯೆ. ಈ ನೇರದಲ್ಲಿ ವಿದ್ಯೆಯೆನಿಸುವ ವೇದ-ಶಾಸ್ತ್ರಾದಿಗಳ ಅಭ್ಯಾಸವು ಬುದ್ಧಿಯ  ಮಟ್ಟಕ್ಕೇ ಸೀಮಿತವಾಗದೆ ಮನಸ್ಸನ್ನೂ ಸಂಸ್ಕರಿಸುವಂತಾಗಬೇಕು. ಹಾಗಾದಾಗ ನಮ್ಮೊಳಗಿನ ಆತ್ಮಗುಣಗಳನ್ನರಳಿಸಿ ಭಗವಂತನೆಡೆ ಸಾಗಲು ಸಹಕರಿಸುವುದರಿಂದ ವಿದ್ಯಾಭ್ಯಾಸವು ಅರ್ಥವತ್ತಾಗುವುದು. ಜೀವನದಲ್ಲಿ ಯಶಸ್ವಿಯಾಗಲು ವಿದ್ಯೆ ಮಾತ್ರವೇ ಸಾಲದು, ಆತ್ಮಗುಣಗಳೂ ಅಗತ್ಯವಾದ್ದರಿಂದ ಅವುಗಳನ್ನೂ ಗಳಿಸಿ ಶಾಂತಿ-ಸಮೃದ್ಧವಾದ  ಬಾಳಾಟ ನಡೆಸೋಣ.


ಸೂಚನೆ: 22/07/2020 ರಂದು ಈ ಲೇಖನ ಉದಯವಾಣಿ ಯಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.     

Friday, June 10, 2022

ಒಂದು ವೃಕ್ಷ-ಎರಡು ಹಕ್ಕಿಗಳು (Ondu Vrksha-Eradu Hakkigalu)

ಲೇಖಕರುಶ್ರೀ ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ ಸೋಮಯಾಜಿ

(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ lekhana@ayvm.in)



"ಒಂದೇ ವೃಕ್ಷದಲ್ಲಿ ಸುಂದರವಾದ ರೆಕ್ಕೆಗಳಿರುವ ಎರಡು ಪರಮ ಸ್ನೇಹಿತರಾದ ಹಕ್ಕಿಗಳು ವಾಸಿಸುತ್ತಿವೆ. ಒಂದು ಹಕ್ಕಿ ಆ ವೃಕ್ಷದ ಫಲಗಳನ್ನು ತಿನ್ನುತ್ತಿದೆ. ಇನ್ನೊಂದು ಏನನ್ನೂ ತಿನ್ನದೇ ನಿರಂಜನವಾಗಿ ಕುಳಿತು ಆ ಸ್ನೇಹಿತ ಹಕ್ಕಿಯನ್ನು ನೋಡುತ್ತಿದೆ" ಇದು ಮುಂಡಕೋಪನಿಷತ್ತಿನ ಒಂದು ಪ್ರಸಿದ್ಧವಾದ ವಾಕ್ಯದ ಭಾವಾರ್ಥ. ಆ ವೃಕ್ಷವೇ ನಮ್ಮ ಶರೀರ. ಇದರಲ್ಲಿ ಪರಮಾತ್ಮ-ಜೀವ ಎಂಬ ಎರಡು ಪಕ್ಷಿಗಳು. ಇಬ್ಬರೂ ಒಬ್ಬರನ್ನು ಬಿಟ್ಟು ಇನ್ನೊಬ್ಬರು ಇರದ ಸ್ನೇಹಿತರು. ಇದರಲ್ಲಿ ಜೀವ ಎಂಬ ಪಕ್ಷಿಯು ಕರ್ಮ ಫಲವನ್ನು ತಿನ್ನುತ್ತಿದೆ. ಪರಮಾತ್ಮ ಎಂಬ ಪಕ್ಷಿ ಯಾವುದನ್ನೂ ತಿನ್ನದೇ ನಿರಂಜನವಾಗಿ ಬೆಳಗುತ್ತಿದೆ. ಹೀಗೆ ಪರಮಾತ್ಮ ಸ್ವರೂಪವನ್ನು ನಮ್ಮ ಮೇಲಿರಿಸಿ ಈ ಬಗೆಯ ರೂಪಕದ ಮೂಲಕ ಅರ್ಥಮಾಡಿಸುವ ಸುಂದರವಾದ ಉಪನಿಷತ್ತಿನ ಶೈಲಿ ಇದು. 

ಪರಮಾತ್ಮನು ನಮ್ಮೊಳಗೇ ಬೆಳಗುತ್ತಿದ್ದರೂ ಅವನ ಸಂಗಸುಖವನ್ನು ಅನುಭವಿಸಲು ಜೀವಿಗಳಾದ ನಮಗೆ ಕರ್ಮಭಾರ ಕಡಿಮೆಯಾಗಬೇಕು. ಕರ್ಮಫಲಗಳನ್ನು ತಿನ್ನುತ್ತಾ ಇರುವವರೆಗೆ ನಮ್ಮ ಪರಮ ಸ್ನೇಹಿತನಾದ ಪರಮಾತ್ಮನನ್ನು ಹತ್ತಿರವಿದ್ದರೂ ಕಾಣಲಾಗದು. ಆದರೆ ಜೀವನ ಆರಂಭವಾದೊಡನೆಯೇ ಕರ್ಮಪರಂಪರೆಗಳೂ ಆರಂಭವಾಗುತ್ತವೆ. ಇದರಿಂದ ಮುಕ್ತರಾಗುವುದು ಹೇಗೆ ಎಂಬ ಪ್ರಶ್ನೆ ಸಹಜ. ಇದಕ್ಕೆ ನಮ್ಮ ಹಿರಿಯರು ಕರ್ಮಗಳನ್ನು ಭಗವದರ್ಪಣ ಬುದ್ಧಿಯಿಂದ, ನಮಗೆ ಅಂಟಿಸಿಕೊಳ್ಳದೇ ಮಾಡಬೇಕು ಎಂಬ ಉಪಾಯವನ್ನು ಸೂಚಿಸಿದ್ದಾರೆ. ಹಾಗೆಂದರೇನು? ಶ್ರೀರಂಗ ಮಹಾ ಗುರುಗಳು ಒಂದು ಉದಾಹರಣೆ ಕೊಡುತ್ತಿದ್ದರು. ಒಬ್ಬ ಆಫೀಸಿನ ಗುಮಾಸ್ತನನ್ನು ಬ್ಯಾಂಕಿನಿಂದ ಹಣ ತೆಗೆದುಕೊಂಡು ಬರಲು ಯಜಮಾನನು ರುಜು ಹಾಕಿದ  ಚೆಕ್  ಕೊಡುತ್ತಾನೆ. ಅವನು ಅದನ್ನು ಕೊಟ್ಟು ಟೋಕನ್ ತೆಗೆದುಕೊಂಡು ತನ್ನ ಸರದಿಗಾಗಿ ಕಾಯುತ್ತಿರುತ್ತಾನೆ. ಈ ಮಧ್ಯೆ ಆ ಗುಮಾಸ್ತನ ಸ್ನೇಹಿತನೊಬ್ಬನು ಬಂದು ಬಹಳ ಕಷ್ಟದಲ್ಲಿದ್ದೇನೆ, ಒಂದು ಸಾವಿರ ರೂಪಾಯಿಗಳ ಸಾಲ ಕೊಟ್ಟಿರು ಎಂದು ಕೇಳುತ್ತಾನೆ. ಈ ಗುಮಾಸ್ತ –ನಾನು ನಿನಗಿಂತ ಕಷ್ಟದಲ್ಲಿದ್ದೇನೆ, ನನ್ನಲ್ಲಿ ವಿಷ ಕೊಂಡುಕೊಳ್ಳಲೂ ಹಣವಿಲ್ಲ ಎನ್ನುತ್ತಾನೆ. ಆಗ ಇವನ ಟೋಕನ್  ಸರದಿ ಬಂದು ಒಂದು ಲಕ್ಷ ರೂಪಾಯಿಗಳು ಯಾರದ್ದು ಎಂದು ಕೇಳಿದಾಗ ಗುಮಾಸ್ತನು ನನ್ನದು ಎಂದು ಆ ಹಣವನ್ನು ತೆಗೆದುಕೊಳ್ಳುತ್ತಾನೆ. ಈಗಿನ್ನೂ ನನ್ನ ಬಳಿ ಏನೂ ಹಣವಿಲ್ಲ ಎಂದು ಒಂದು ಲಕ್ಷ ಹಣ ನನ್ನದು ಎನ್ನುತ್ತಾನಲ್ಲ ಎಂದು ಆ ಸ್ನೇಹಿತ ಅಂದುಕೊಳ್ಳಬಹುದೇ? ಆ ಹಣವನ್ನು ತನ್ನ ಹಣ ಎಂದು ಸ್ನೇಹಿತನಿಗೆ ಕೊಟ್ಟುಬಿಡುವುದು ನ್ಯಾಯವಾದ ವ್ಯವಹಾರವಾಗುವುದೇ? ಅಲ್ಲಿ ಆ ಹಣ "ನನ್ನದು" ಎಂಬ ಮಾತಿಗೆ ಯಜಮಾನರಿಗೆ ತಲುಪಿಸುವವರೆಗೆ ನನ್ನದು ಎಂದರ್ಥವಷ್ಟೇ. ಈ ಸೃಷ್ಟಿಯೆಲ್ಲವೂ ನಿನ್ನದು, ನಾನು ಸ್ವೀಕರಿಸುವ ಆಹಾರ, ಉಡುವ ಬಟ್ಟೆ ,ಇರುವ ಮನೆ ಎಲ್ಲವೂ ನಿನ್ನ ಸೃಷ್ಟಿಯಲ್ಲಿ ಬಂದುದೇ. ನನ್ನ ಪುರ್ವಾರ್ಜಿತ ಕರ್ಮ ವಿಶೇಷದಿಂದ ನನ್ನ ಪಾಲಿಗೆ ಹರಿದುಬಂದ ಇವೆಲ್ಲವನ್ನೂ ನಿನ್ನ ಪ್ರಸಾದವಾಗಿ ಉಪಯೋಗಿಸುತ್ತೇನೆ ಎಂಬ ಸಂಕಲ್ಪಮಾಡಿ ಕರ್ಮ ಮಾಡಬೇಕು. ಎಲ್ಲಾ ಕರ್ಮಗಳನ್ನೂ ಅವನ ಪ್ರೀತಿಗಾಗಿ ಮಾಡುವ ಮನಸ್ಸನ್ನು ಬೆಳೆಸಿಕೊಂಡಾಗ ಅವನಿಗೆ ಹತ್ತಿರವಾಗುತ್ತೇವೆ. ಹಾಗಾದಾಗ ಮೇಲಿನ ಉಪನಿಷದ್ವಾಣಿಯಲ್ಲಿ ಸೂಚಿಸಿರುವ ಪರಮಸ್ನೇಹಿತನಾದ ಪರಮಾತ್ಮನನ್ನು ಹೊಂದಿ ಆನಂದಿಸಬಹುದು ಎಂಬುದು ಅನುಭವಿಗಳ ಮಾತು.

ಸೂಚನೆ:  10/06/2022 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಜಯವಾಣಿಯ ಮನೋಲ್ಲಾಸ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.  

Thursday, June 9, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 11தீயை பூஜிப்பதா?(Theeyai poojippada?)


 மூலம்:  திரு. வரததேசிகாசார்யார் 

தமிழாக்கம் : திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



         "எங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஓர் ஆசிரியர் மிகவும் சிறந்த பண்டிதர், விவேகி, நற்குணமுள்ளவர். அவரை அனைவரும் கௌரவிக்கின்றனர். எனக்கும் அவரிடம் மிக்க கௌரவமுள்ளது . ஆனால் அவரது இல்லத்தில் ஓர் மூடவழக்கம் உள்ளது."
                "என்ன வழக்கம்?"
            'அவர் தீயை வணங்கி பூஜிக்கிறார். நெய், அன்னம் முதலியவற்றை அதில் சொரிந்து அதன் சாம்பலையும்  நெற்றியில் அணிகிறார்"
          "அவ்வாறு பண்டிதரும் விவேகியுமானவரே இதுபோன்று செய்கிறார் என்றால் ஏதாவது முக்கிய காரணம் இருக்க வேண்டுமல்லவா?"
          "வேறென்ன காரணம் இருக்க முடியும்? தொன்மையான  மூடநம்பிக்கை அவ்வளவே "    
        "பழங்காலத்திலாயினும் எவ்வாறு இப்பழக்கம் வந்திருக்கலாம்?"
                  "எங்கள் சரித்திர புத்தகத்தில் இதன் காரணத்தை எழுதியுள்ளார்கள். ஆதிமனிதன்  தீ, காற்று, மழை முதலிய இயற்கை செயல்களை கண்டு ஆச்சரியமடைந்து அவற்றையே உபாசிக்க தொடங்கினான்."
                  "அவற்றில் தீயை ஏன் பூஜித்தான்?"
          "காரணம் நன்றாக அறிந்ததே. தீயின்றி உணவு பொருட்கள் வேகாது. குளிர் காய்வதற்கும் தீ தேவை. சுட்டெரிக்கும் குணமும் தீக்கு உண்டு. ஆதலால் ஊக்கமும், பயமும் கொண்டு அதை பூஜிக்க தொடங்கினான். நம் பாரத நாட்டின் மக்கள் இன்னமும் அதையே பின்பற்றி வருகின்றனர்.'

                "தீ என்பது ஓர் ஜடப்பொருள். நாம் பூஜிக்காவிடினும் பொருட்களை வேகவைக்கும், கதகதப்பை அளிக்கும், சுட்டெரிக்கும். பின் அதை ஏன் ஆராதிக்க வேண்டும்? "   
அதுசரி  அவர் அப்பூஜையை பற்றி என்ன கூறுகிறார்?  'நெருப்பு பூஜை ஆயிற்று'   என்கிறார்களா?"
                  "இல்லை.  'யக்ஞதேவனின் ஆராதனை,   அக்னி தேவனின் பூஜை, ஔபாசனம் ஆயிற்று' என்கிரார்."
        ஆதலால் அவர்கள் ஆராதிப்பது தீயை அல்ல. யக்ஞேச்வரனை,  இறைவனைதான்."
                  "தீயின் ஆராதனையை தானே காண்கிறோம்?".
"கண்ணால் காண்பதை எல்லாம் ஆராய்ந்து அறியாமல் நம்புவது மூட நம்பிக்கை. ஆராயாமல் அவர்களின் பழக்க வழக்கங்களை ஏளனம் செய்யக்கூடாது. தீயின் பூஜை ஆயிற்றென்று அவர்கள் கூறுவதே இல்லை. அவர்கள் ஆராதிப்பது பூஜைக்குரிய இறைவனையே. அப்பூஜைக்கு தீ ஓர் சாதனம்.

Thursday, June 2, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 10 துன்புறுத்தல் - துன்புறுத்தாமை (ஹிம்ஸை - அஹிம்ஸை)(Tunburuttudal - tunburuttmaiHimsai - Ahimsai)

மூலம்:  திரு.  வரததேசிகாசார்யார்

தமிழாக்கம் : திருமதி  வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


         

துன்புறுத்தல் மிகக்கொடிய தவறு. துன்புறுத்தாமை உயரிய அறம் என்று எல்லா அற நூல்களும் கூறுகின்றன. இது உயர்ந்த அறிவுரை என்பதில் ஐயமில்லை. ஆனால் அறிவுரை இருப்பது நடைமுறைக்காயினும் செயல்பாட்டிற்கு இல்லாமல்   அறிவுரையாகவே நின்றால் அதனால் எவ்வித  நற்பலனும் இல்லை. இந்த துன்புறுத்தாமையை முழுவதுமாக கடைபிடிப்பது இயலுமா? எனபதை அறிவுடன் ஆராய வேண்டும்.


        துன்புறுத்தாமை என்றால் எவ்வுயிரையும் மனம், மொழி, மெய்யால் துன்புறுத்தாது இருத்தல். ஆனால் இவ்வாறு எவருக்கும் எவ்வகையிலும் துன்பம் விளைவிக்காமல்  வாழ்வதென்பது இயலாது. ஏனெனில் நாம் கூறும் துன்புறுத்தாமை அறிவுரையே துன்பம் செய்வதையே வலியுறுத்தி, துன்புறுத்துவதையே வழக்கமாகக் கொண்ட  சில தீயவர்கள் மனதிற்கு துன்பமளிக்கும். எனவே ஒருவருக்குமே  துன்பமளிக்காமல் இருப்பது இயலாது. ஒரு வேலைக்கு நூற்றுகணக்கானோர் விண்ணப்பிக்கிறார்கள். அதில் ஒருவருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. அப்போது மற்றவர்களுக்கு  மனத்துன்பம் ஏற்படுவது இயற்கை. எனவே முழுமையாக ஒருவருக்கும் தீது செய்யாமல் வாழ இயலாவிடினும் முடிந்த வரை குறைந்த அளவு  துன்பமளித்து வாழும்படி ஆன்றோர்கள்  அறிவுருத்துகின்றனர். 'அத்ரோஹேணைவ பூதானாம் அல்ப த்ரோஹேண வாபுன'


       நாம் சைவஉணவையோ அல்லது மற்றெந்த வகை உணவையோ ஏற்றுக்கொண்டாலும் அதனால் துன்பம் ஏற்படும். எனவே உணவையே ஏற்காமல் தவிர்த்தால் நம்  உயிருக்கே¸ மிக்க கேடு. எனவே உணவிற்காக தவிர்க்க இயலாமல் குறைந்த அளவே துன்பம் தரலாம். தவிர்க்க இயலாமல் அளித்த துன்பத்தால் விளையும் பாவத்தை இறைவனை பூஜித்தல், விருந்தோம்பல் போன்ற நற்செயல்களால் போக்கி கொள்ளலாம். ஆராய்ந்து பார்க்கையில் அனைவருக்கும் உண்மையான  தேவை இன்பமும் மன அமைதியும்தான். அவற்றை அளிக்கவல்லவன் இறைவன். அவனை அடையும் முயற்சியில்  தடையாக உள்ளதே மிகப்பெரிய துன்பமாகும். இறைவனை அடைவதில் உறுதுணையாக உள்ளதே துன்புறுத்தாமை என்று  ஞான விஞானத்தில் உயரிய நிலை அடைந்த  ஸ்ரீரங்கமஹாகுரு உபதேசித்தருளினார். 

Thursday, May 26, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 9 மனித நேயம்(Manida neyam)


  மூலம்:  திரு.  சாயாபதி

தமிழாக்கம் : திருமதி  வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



         அவனுக்கு 'மனிதநேயமே இல்லை. மனித தன்மையே அற்ற மிருகம் அவன்' எனும் பேச்சுக்களை நாம் தினந்தோறும் கேட்கிறோம். நம்மை சூழ்ந்துள்ள சமூகத்தை கெடுக்கும் வகையில் செயல்படுவதை காணும்போது கடுங்கோபத்தில்  உதிர்க்கும் சொற்கள் இவை. மனிதனிடம் இயற்கையாக உள்ள கருணை, பாசம், கொடை  முதலியவற்றை மனிததன்மை என்று தீர்மானிக்கிறோம். ஆனால் ஆராய்ந்து பார்க்கையில் இன்பதுன்பங்களில் பங்கேற்பதும்,  பகிர்தலும் மனிதனுக்கு மட்டுமே உரியதல்ல. காகம் ஒன்று வலியால் துடிக்கும்போது உதவிக்காக அதை சுற்றியும் கூடி துயரத்தில் பங்கேற்கும் காக்கை கூட்டத்தையே காண்கிறோம். உயிரை பணயமிட்டு   தன் இனத்தை காக்கும் யானையின் தியாகம், நாய், குதிரை முதலிய வளர்ப்பு பிராணிகள் தன் எஜமானனிடம் காட்டும் மனபூர்வமான 

நெருக்கம் முதலியவை சாமானிய மனிதனிடமும் காணுவது அரிதாக உள்ளது.


நாம் சிறப்பானது என்று கருதும் குணங்களை மிருகங்களிடமும் இயல்பாக காணும்போது அதனை 'மனிதநேயம்'-மனிதனின் சிறப்புகுணம் என்று எவ்வாறு கூற இயலும்?


அவ்வாறெனில் மிருகங்களிலிருந்து வேறுபட்டு மனிதனிடம் மட்டுமே உள்ள சிறப்புதான் என்ன?

இயற்கையோடு இணைந்து உணவு, இருப்பிடம், இனப்பெருக்கம்  என்று வாழும் கலை மனிதனைப்போல் விலங்குகளுக்கும் உள்ளது.

ஆனால், வாழ்க்கையில் மறைந்து உள்நின்று வழிநடத்தும் ஒளியின் அறிவை அடையும் மனம் மிருகங்களிடம் காணக்கிடைப்பதில்லை. அதை தவிர மற்ற எல்லா கலைகளும், விசித்திரங்களும் விலங்குகளின் வாழ்வில் ஆச்சர்யமூட்டும் வகையில் உள்ளன.


வாழ்க்கையில் வெளியில் தெரியாமல் மறைந்திருந்து புலன்கள், மனம், புத்தி இவற்றை வழிநடத்தும் அந்தராத்மாவை அறிவதே மனிதனை விலங்குகளைவிட மேல்நிலைக்கு உயர்த்திய சாதனை. அதுவே மனிதனுக்கு மனிதநேயத்தை  தரும். அந்த உள்ளுணர்வை புரிந்துகொண்டால் அதன் மூலம் மனம், புத்தி, புலன்கள் பக்குவமடைந்து நற்குணங்களை உடையவனாவான். ஸத்ய தரிசனத்தினால் மலரும் அந்த நற்குணங்களின் மணமே  மனிதநேயத்தின்  சாரமாகும்.

Thursday, May 12, 2022

ஸ்ரீரங்கமஹாகுருவின் கண்ணோட்டம் – 8 அது அவன் இயற்கை குணமே (Adu avan iyarkai guname)

மூலம் : ஶ்ரீ வரததேசிகாச்சார்ய ரங்கப்ரியர்

தமிழாக்கம் : திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



(மூலம் : ஸ்ரீரங்கப்ரியர் தமிழாக்கம் : திருமதி வனஜா)

"அம்மா இனி உங்கள் பிள்ளைக்கு நீங்களே புத்தி புகட்ட வேண்டும். அவனுடைய குறும்புகளை தடுக்க இனி எங்களுக்கு சக்தி இல்லை. நாங்கள் சொல்வதை அவன் கேட்பதே இல்லை." கோகுலத்தில் பாலக்ருஷ்ணனின் தாயிடம் கோபிகைகள் புகார் அளித்தனர்.


"செய்த குறும்புகளை விவரமாக கூறினால் அன்றோ ஆராய்ந்து தண்டனை வழங்கலாம்" என யசோதை ந்யாய மூர்த்தியின் கம்பீரத்தோடு பகர்ந்தாள்.

"கூறாமல் கொள்ளாமல் வீட்டிற்குள் நுழைந்து அவேளைகளில் பசுக்களின் கயிற்றை அவிழ்த்து விடுகிறான். அவை பாலனைத்தையும் கன்றுகளுக்கு ஊட்டிவிடுகின்றன. பால் கறக்கச்செல்லும் எங்களுக்கு கிடைப்பது உதைதான்." கோபிகைகள் விவரித்தனர்.


தாய் மிகுந்த கோபம்கொண்டு அத்தருணத்தில் அங்கு வந்த கண்ணனை அதட்டி "குறும்பு பயலே!

நம் வீட்டு மானம் போகிறது. உன் இச்சைப்படி இவர்கள் வீட்டில் புகுந்து மாடுகளின் கயிற்றை அவிழ்க்கிறாயா?" என கேட்டாள்.


"ஆம் அம்மா நான் அவ்வாறு செய்வதுண்டு" தயங்காமல் பதில் அளித்தான். மகன் தவறே செய்தாலும் உண்மையையே உரைத்ததினால் தாய் பெருமிதம் அடைந்தாள்.


அவள் கோபமும் சிறிது தணிந்தது. "ஏனப்பா இவ்வாறு செய்கிறாய்" என வினவ "அதுவே என் இயற்கை குணம் அம்மா, நான் என்ன செய்ய" பாலக்ருஷ்ணன் புன்னகையுடன் பதிலளித்து அன்னையின் முகத்தையே உற்று நோக்கினான்.

அப்பார்வையின் பொற்கிரணங்கள் யசோதையின் அகக்கண்களைத் திறந்து அவனுடைய சொற்களின் உட்பொருளையும் உணர்த்தின. கண்களுக்கு விருந்தான ஆனந்தமூர்த்தியில் தன்மயமாகி தியானசமாதியில் மெய்மறந்தாள்.


நாம் அனைவருமே (ஜீவன்)பசுக்களே. இறைவன் நம் உலகவாழ்வின் பாசங்களை(கயிற்றை) அவிழ்த்து பேருதவிபுரிகிறான். புண்யம்-புருஷார்த்தம்-கீர்த்தி எதையும் வேண்டாதவன். ஆத்ம த்ருப்தன். எந்த லாபமும் இதனால் அவனுக்கு இல்லை. ஆயினும் ஏன் இந்த பரமோபகாரத்தை செய்கிறானெனில் அவன் குணமே அவ்வாறானது என இத்தத்துவத்தை குருவாதிராஜர் விவரிக்கிறார்.


இக்கருணையையே ஓர் ஹரிதாசர் "பக்தப்ரியனான உனக்கு கால வரையறை உண்டோ?" என போற்றுகிறார்.

Thursday, May 5, 2022

ஸ்ரீரங்கமஹாகுருவின் கண்ணோட்டம் – 7 உணவு ஒருவருக்கு, மனநிறைவு மற்றொருவருக்கோ?


மூலம் : ஸ்ரீ வரததேசிகாச்சார்ய ரங்கப்ரியர்

 தமிழாக்கம் : திருமதி வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




கேள்வி: ச்ராத்தத்தில்(தெவசம்) உணவருந்த தகுதியுள்ள ஞானிகளை அழைத்து உணவளிப்பது தவறில்லை. உண்டவர் த்ருப்தி ஆயிற்றென்று தன்வாயால் கூறுகிறார். இதனை நம்பலாம். ஆனால் உடலை விட்டு பிரிந்து சென்றுள்ள ஏதோ ஒரு உயிரை குறித்து திதி செய்கிறோம். அந்த ஜீவனுக்கு இதனால் எப்படி நிறைவுண்டாகும்?

ஸ்ரீகுரு: பக்தியுடன் மனம்ஒன்றி ஆன்றோருக்கு முறைபடி உணவளித்தால் அவரால் அதனை அந்த ஜீவனிடம் சேர்பிக்க முடியும்.

கேள்வி: அது எப்படி இயலும்?அந்த ஜீவன் தெய்வபிறவி அடைந்திருக்கலாம், வேறு உலகங்களிலிருக்கலாம். கழுதையாகவோ, புலியாகவோ, மீன்-முதலையாகவோ பிறந்து வெளிநாடுகளிலோ, கடலிலோ இருக்கலாம். நாம் உணவளிப்பது இங்கு. அந்த ஜீவன் இருப்பது வேறெங்கோ. இங்கு பரிமாறுவது வடை, ரவை உருண்டை போன்றவை. தேவதைகளின் உணவு அமுதம். மற்ற உயிரினங்களின் உணவோ இவ்விரண்டுமன்றி வேறொன்று. எவ்வுருவத்திலோ எங்கோ

இருக்கும் ஜீவனுக்கு இங்கு அளிக்கப்படும் உணவு எப்படித்தான் சேரும்?

ஸ்ரீகுரு: இங்கு வானொலியில் பேசுவது 1000மைல்களுக்கு அப்பால் இருப்பவருக்கு எப்படி கேட்கிறது?

கேள்வி: அது முடியும். அறிவியல் உள்ளது. இங்கு எழுப்பும் ஒலி அலைகளை சக்தி வாய்ந்த மின்காந்த அலைகளென்னும்(electro magnetic waves) வாகனத்தின் மூலமாக அங்கு அனுப்புகிறோம். அது எவ்வளவு தொலைவிற்கும் செல்ல முடியும். அங்குள்ள அலைபேசி கருவி மின்காந்த அலைகளை மாற்றி ஒலி அலைகளை ஈர்த்து ஒலிபரப்புகிறது.

ஸ்ரீகுரு: அவ்வாறே இங்கு நாம் அளிக்கும் உணவை ஆன்றோர்கள் தம் தெய்வீகமான மனோதர்மமெனும் வாகனத்தின் மூலம் தொலைவிலிருக்கும் ஜீவனுக்கும் அளிக்க இயலும். 

கேள்வி: ஆன்றோரே ஆயினும் இங்கு படைக்கப்படும் உணவை அதே வடிவில் தன் மனோதர்மத்தால் அங்கு கொண்டு செல்ல இயலுமா?

ஸ்ரீகுரு: அதே உருவில் ஆன்றோர் எடுத்து செல்வதில்லை. அமுதமயமாக்கி பரம்பொருளுக்கும் தேவதைகளுக்கும் அர்ப்பணிக்கின்றனர். எந்த ஜீவனை குறித்து திதி செய்யப்படுகின்றதோ அவருக்கு உகந்த நிறைவையும் மகிழ்ச்சியையும் தேவதைகள் அளிக்கின்றனர். அவர்களுக்கு அத்திறமை உண்டு. அவர்கள் எங்கும் நிறைந்தவர்கள், வலிமை உடையவர்கள்.


Tuesday, May 3, 2022

வாழ்க்கை என்னும் சறுக்கு மரம் (Vazhkai ennum sharukku maram)

மூலம்: சுப்ரமணிய சோமாயாஜி

தமிழாக்கம்: ஸி ஆர் ஸ்ரீதர்

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




          அது ஒரு மென்மையான சறுக்கு மரம். மற்றும், அதன் மேலிருந்து அடிவரை எண்ணை தடவியுள்ளனர். அதன் மேல் பாகத்தில் ஒரு பொன்முடிப்பு. போட்டியாளர்கள் அந்த சறுக்கு மரத்தின் கீழிருந்து மேல் ஏறி அந்த பொன் முடிப்பை தமதாக்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏறும்பொழுது மரத்தில் வழுக்கிக்கொண்டு இருப்பது மட்டுமன்றி, கீழே உள்ள மக்கள் அவன் மீது தண்ணீர் இரைப்பார்கள். இவ்வனைத்து எதிர்ப்பு சூழ்நிலைகளையும் மீறி அந்த பொன் முடிப்பை தமதாக்கிக்கொள்வதே போட்டி. அனைவர் சேர்ந்து  ஒரு குழுவாக முயல்கின்றார்கள். ஒருவர் உச்சியை அடைந்து வெற்றியடைகின்றார். இத்தகைய போட்டி கோகுலாஷ்டமிக்கு மறுநாள் நடைப்பெற்றுவது வழக்கம். 


       இது பாரதீயமான  ஒரு விளையாட்டு. வெளிப்பார்வைக்கு ஒரு போட்டி, மனமகிழ்ச்சி அளிப்பது. ஆனால் இதற்குள் வாழ்க்கையின் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது என்பதை ஸ்ரீரங்கமகாகுரு விளக்கியுள்ளார் -  இவ்வாழ்க்கை ஒரு சறுக்கு மரம். இவ்வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் நம்மை எக்காலமும் கீழே இழுத்துக்கொண்டே இருக்கும். நம் இந்திரியங்கள் நம்மை நம் வாழ்வின் மிக உன்னதமான நிலையில் உள்ள அப்பொன்முடிப்பென்னும் உயரிய இன்பத்தின் மட்டத்திற்கு ஏற விடுவதில்லை. இவ்விளையாட்டு நம் வாழ்வின் குறிக்கோளை நினைவூட்டுவதாகவே உள்ளது. ஒவ்வொரு வினாடியும் வழுக்கிக்கொண்டிருக்கும்  இந்த வாழ்க்கை என்னும் சறுக்கு மரத்தை லாகவமாக ஏறி, அதன் நுனியில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் இறைப்பொக்கிஷம் என்னும்  ஆனந்தத்தை அடைந்து மகிழ்வடைய வேண்டும். இத்கைய ஒரு கடினமான சாகசத்திற்கு நம்மை தயார் செய்வதற்காகவே நம் பண்டைய மகரிஷிகள், பாரதீயத்திற்கே உரிய சில வித்யைகள், கலைகள் ஆசார விசாரங்கள் முதலியவற்றை கருணையுடன் நமக்கு வழங்கியுள்ளார்கள். வாழ்க்கையின் தளைகளிலிருந்து விடுபடுவதற்காக சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியுள்ளது. 


சங்கரபகவத்பாதர் தம் லக்ஷ்மீந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தில் உரைத்தபடி :


அந்தஸ்ய மே ஹ்ருதவிவேக மஹா தனஸ்ய 

சோரைர்மஹாபலிபிரிந்த்ரிய நாமதேயை:

மோகாந்தகாரகுஹரே வினிபாதிதஸ்ய  

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மமதேஹி கராவலம்பம் ||


      "லக்ஷ்மீந்ருஸிம்ஹனே! மிக்க பலசாலிகளாகிய இந்திரியங்களென்னும் திருடர்களால், என் அறிவாற்றல் கொள்ளையடிக்கப்பட்டதால் குருடனாகி, ஆசையென்னும் இருள் சூழ்ந்த கிணற்றில் விழுந்துள்ள என்னை, உன் உதவிக்கரத்தை அளித்து காப்பாற்றுவாயாக" என்று வேண்டுகின்றார்.


          சறுக்குமரத்தில் நாம் வழுக்கிவிழாமல் மேலேறும்படி உதவ நம் வாழ்க்கை அமைப்பில் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி உள்ளார்கள். ஸ்ரீரங்கமஹாகுரு அவர்களின் கூற்று - "நதி குளம் முதலியவற்றிலிருந்து நீர் நிறைந்த பாத்திரங்களை தலைமேல் சுமந்துவரும் பெண்கள், அப்பாத்திரங்களை சுமப்பது மட்டுமன்றி வேறு பல விஷயங்களையும் பேசிக்கொண்டு வருவதுண்டு. ஆனால் தலைமேல்  உள்ள நீர் நிறைந்த குடத்தை மறப்பதில்லை. அதற்கு பாதிப்பு இல்லாமல் அவர்கள் பேச்சும் உடல் அசைவும் இருக்கும். அதே போல நம் தலை மீது வீற்றிருக்கும் பூரணமான இறைவனை மறவாமல், அதற்கு பாதிப்பு ஏற்படாமல் மற்ற வெவ்வேறு வேலைகளை செய்ய வேண்டும்". அவ்வாறே மற்றொரு மர்மமான விஷயத்தையும் ஸ்ரீரங்கமஹாகுரு  கூறியுள்ளார்: "சந்தை வியாபாரத்திற்கு வந்திருப்பது சரிதான். வியாபாரத்தில்  உற்சாகமிழக்க தேவையில்லை. ஆனால் வியாபாரத்தின் உற்சாகத்தில்,  தான் வீட்டை சென்று அடைவதை மாத்திரம் மறக்கக்கூடாது". இந்திரிய வாழ்க்கையை புறக்கணிக்குமாறு ரிஷிகள் எங்கும் கூறவில்லை. ஆனால்  ஆன்மீகஜீவனத்திற்கு உதவும்படி இந்திரிய வாழ்க்கையை நடத்தும் உபாயத்தை காட்டிதந்துள்ளனர். நாம் அவர்களின் பாதையை பின்பற்றி நடந்தால் இந்திரியங்களோடு கூடிய வாழ்வும், இறைநிலையோடு கூடிய வாழ்வும் இன்பமயமாக விளங்கும்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம். 

Thursday, April 28, 2022

ஸ்ரீரங்கமஹாகுருவின் கண்ணோட்டம் – 6தேவர்களுக்குள் போட்டியா? விரோதமா?(Devargalukkul Pottiya? Virodama?)


மூலம்: ஶ்ரீ வரததேசிகாச்சார்ய ரங்கப்ரியர்

தமிழாக்கம்: திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




புராண-இதிகாசங்களில் பக்தர்களின் கதைகள் பல காண்கிறோம். இறைவனால் தண்டிக்கப்பட்ட தெய்வவிரோதிகளின் கதைகளையும் காண்கிறோம். அவைகளில் சில கதைகள் பாமரர்களுக்கு புரியாத குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.


உதாரணத்திற்கு ராவணன் சிறந்த சிவபக்தன். சிவனை ஆராதித்து அற்புதமான சித்திகளை பெற்றவன். ஹிரண்யகசிபுவும் சிறந்த பக்தன். பிரம்மதேவரை மகிழ்வித்து கிடைத்தற்கரிய வரங்களை அடைந்தான். ஆயினும் மகாவிஷ்ணு ஶ்ரீராமன் மற்றும் நரசிம்ம அவதாரங்களை எடுத்து இவர்களை அழித்துவிட்டார். அவ்வாறே ருத்ரபகவானும் மகாவிஷ்ணுவின் அம்சமான மன்மதனை சுட்டெரித்த கதை அனைவரும் அறிந்ததே. அம்மூவரும் சிறந்த கடவுள் பக்தர்கள். பக்தர்கள் இறைவனுக்கு மிகவும் ப்ரியமானவர்கள். அவ்வாறாயினும் இறைவடிவமான விஷ்ணு-ருத்ர்களால் ஏன் அழிக்கப்பட்டார்கள்? சிவபக்தனை விஷ்ணுவும், விஷ்ணுஅம்சமான மன்மதனை சிவனும் அழித்தனர். ஆதலால் அத்தேவர்களுக்குள் விரோதமா? போட்டியா? சகிப்பு தன்மை இல்லாமையா? என்ற கேள்வி எழுகிறது.


இதற்கு சிலர் "இவை அனைத்தும் காக்காய்-குருவி கதை அல்லது வெவ்வேறு காலங்களில் மனிதர்கள் தங்கள் கற்பனைதெய்வங்களின் பெருமையை நிலைநாட்ட புனைந்த கதைகள் என சுலபமாக தீர்வு காண முயல்கிறார்கள்.

ஆனால் இது பொருத்தமான பதிலல்ல. அவர்கள் கதையின் அனைத்து பாகங்களையும் மனதில் கொள்ளவில்லை.

ராவணன், ஹிரண்யன், மன்மதன் மூவரும் இறைவனிடம் ஞானத்தை வேண்டவில்லை. மாறாக சரீர- புத்தி-அஸ்திரபலம் மற்றும் சரீரஅழகு முதலிய சித்திகளை வேண்டினர். அந்த சித்திகளை உலகநன்மைக்காக அல்லாது அதர்ம-அநியாய செயல்களுக்கு உபயோகித்தனர். ஆதலால் இவர்கள் விஷ்ணு, ருத்ரரால் அழிக்கப்பட்டனர். ராவணனை சிவபக்தன் என்ற காரணத்தால் விஷ்ணு அழிக்கவில்லை. உலகிற்கே கேடு விளைவிப்பவன் என்பதால் கொன்றார். அதேபோல் மன்மதனை விஷ்ணுவின் அம்சம் எனபதால் அல்லாது தன் சமாதிநிலையை குலைப்பவன் என்பதால் ருத்ரன் சுட்டெரித்தார். இத்தண்டனையினால் அவர்கள் பாவம் நீங்கி நற்கதி அடைந்தனர். இத்தண்டனை மும்மூர்த்திகளுக்கும் சம்மதமே. அதனால் தேவர்களுக்குள் விரோதம், போட்டி எனும் கேள்விக்கே இடமில்லை.