Showing posts with label author_janaki. Show all posts
Showing posts with label author_janaki. Show all posts

Friday, November 18, 2022

ஸ்ரீகுருவின் கண்ணோட்டம் - 29 சிற்பத்தை காண தேவையான கண்ணோட்டம் (Chirpattai kaana tevaiyaana kannottam)

 மூலம்: திரு சாயாபதி

தமிழாக்கம்: திருமதி ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



 ஓர் சிற்பத்தை மக்கள் வெவ்வேறு விதமாக காண்பதுண்டு. அதை காணவேண்டிய சரியான கண்ணோட்டத்தை  எடுத்துக்காட்டுவதற்காக ஶ்ரீரங்க மஹாகுரு அளித்த விளக்கமிது.

              மைசூர் நகரத்தில் கிருஷ்ணராஜ வ்ருத்தம் எனும் ஓர் நாற்சந்தியில்  நால்வடி கிருஷ்ணராஜ ஒடயர் எனும் ஒரு புகழ்பெற்ற அரசரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பளிங்கு சிலையில் செதுக்கபட்ட அச்சிற்பத்தை காணும்போது அவ்வரசனை நேரில் காணும் அனுபவத்தை அளிக்கும் வகையில் மிகவும் அழகுடன் கூடியதாக விளங்குகிறது.

              'அங்கு செதுக்க பட்ட மீசை எத்துணை அழகு?",  'அதில் காணப்படும் ராஜ கம்பீரத்தை பார்" என்பவர் சிலர்.  ஒவ்வொரு அவயவத்தின் அழகையும் கண்டு ரசிக்கும் மக்கள் சிலர்.

அங்கே அரசருக்கே உரிய உடை,  அவர் கத்தியை பிடித்துள்ள தோரணை முதலியனவற்றை ரசிப்பவர் பலர். இவ்வாறு அனைவரும் சிற்பத்தின் அழகை புகழ்ந்துபேசுபவர்களே.

              ஆனால் அந்த அரசனுடன் சேர்ந்து வாழ்ந்த  அரசி அச்சிற்பத்தை கண்டவுடன் தான் அவனுடன் வாழ்ந்த  இனிய நாட்களுக்கே சென்று விடுகிறாள். அந்த இனிய நினைவுகளின்பால் மட்டுமே மனம் செல்கிறது. வெளியே காணப்படும் சிற்பத்தின் அழகு,தோரணை, அவயங்களின் மெருகு, உடையலங்காரம் முதலியவைகளை மனம் நாடுவதில்லை.  இனிய நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டு வெளிஉணர்வின்றி  சிற்பத்தை அணைத்துக் கொள்கிறாள். உள்ளம் கரைகிறது. அவளுக்கு அது சிற்பமல்ல. உயிருள்ள உருவம்.

                அவ்வாறே ஓர் தெய்வசிற்பத்தை காணும் போது அதன் உள்ளழகை அறியாதவர் மனம் அதன்  ஆபரணங்களின் மெருகு, உடையலங்காரம், தோரணை முதலானவற்றில் மட்டுமே அலைகிறது.

                  ஆனால் தெய்வச்சிலை  எந்த உள்உறையும் சக்தியின் ப்ரதிநிதியாக உள்ளதோ அவ்வுள்அனுபவத்தை அடைந்த ஞானிகள் அதை கண்டவுடனே இதயத்தில் கண்ட சத்தியத்தின் பால் அவர்கள் மனம் தாவுகிறது. வெளிப்பார்வைக்கு காணப்படும் எந்த அழகிலும் மனம் செல்லாது தாம் அனுபவித்த  இறைஉணர்வில் மனம்ஒன்றி பரமானந்தத்தில் லயிக்கிறார்கள். ஆனந்த கண்ணீர் சொறிந்து, உடல் சிலிர்த்து நிற்கிறார்கள். அந்த மெய்பொருளின்பால் ஈர்ப்பதற்கே இந்த சிற்பம். தன் உள்உரையும் இறைவனிடம் இணைந்து அதற்கு வழிகாட்டும் ஞானிகள்தான் சிற்பங்களின் உண்மையை உணர்த்த முடியும். அவர்களுக்கு விக்ரகமென்பது உள் ஈர்க்கும் ஓர் கைகாட்டி மட்டுமே. அவர்களே இறைஉணர்வில் ஒன்றாய்திளைக்கும் பக்தர்கள்.

Thursday, September 29, 2022

ஸ்ரீகுருவின் கண்ணோட்டம் - 27 போய்வருகிறேன் (Poivarugiren)

மூலம்: திரு  சாயாபதி

தமிழாக்கம்: திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



  போய் வருகிறேன், வருகிறேன்___வீட்டிலிருந்து வெளியில் செல்பவர் கூறும் வார்த்தை இது. தினமும் செய்யும் வேலையாக இருக்கலாம், வேறு வேலைகளாக இருக்கலாம் அன்றி வேலை நிமித்தமாக வெளியூர் பயணமாகவும் இருக்கலாம். ஆனால் வீட்டை விட்டு  வெளியே செல்பவர் "போகிறேன்," எனகூற வேண்டுமே தவிர வருகிறேன், போய் வருகிறேன் என்பது எவ்வாறு பொருந்தும்?  எனும் வினா மனதில் தோன்றுவது  ஆச்சரியமல்ல. முதன்முதலில் இவ்வாறு தோன்றிய போதும் பல தடவை கேட்டு பழகிவிட்டால் இது ஒரு வழக்கம் என விட்டு விடலாம்.


              எவ்வாறு வந்தது இவ்வழக்கம? இதில் ஏதாவது அர்த்தமுள்ளதா என மனதில் தோன்றுவதில் தவறேதுமில்லை.

           வீடு என்பது தன்னுடைய நிம்மதி மற்றும் சுகத்திற்காக ஏற்படுத்திக் கொண்ட ஓர் இடம். அங்கிருந்து வெளியில் கிளம்பும் போது எங்கு சென்றாலும் மீண்டும் வீட்டிற்கு திரும்ப வேண்டும் எனும் நினைவுடன் இந்த வழக்கம் வந்துள்ளது. வெளியே செல்வதே தன்னுடைய நோக்கமல்ல. வேலை நிமித்தமாக விதியின்றி வெளியே சென்றாலும் மீண்டும் தன் இருப்பிடம் வந்தடைவதே முக்கிய குறிக்கோளாகும். வெளியில் செல்வது மீண்டும் திரும்புவதற்கே. ஆகையினால் போய் வருகிறேன் என கூறுவது தகும். அவ்வாறே மீண்டும் வருவதற்கே போகிறேன் என்பதில் வருவதை அழுத்தமாக சொல்வதற்காக "வருகிறேன்" என கூறுவது வழக்கமாக உள்ளது.


        உடலை வைத்துக் கொள்ள ஒரு வீடு உள்ளது போன்று , உடலே ஓர் ஜீவன் வாசம் புரியும் வீடாக உள்ளது. அவ்வாறே ஜீவனுக்கு தன் நிலையான, தன் நிஜ ரூபத்தின் சௌந்தர்யத்தை அனுபவிக்கும் ஓர் வீடு உள்ளது. அது சாந்தி, பரமானந்ததின் இருப்பிடம். ஜீவன் தன் உலக வாழ்க்கைக்காக தன் ஐம்புலன்களுடன் தொடர்பு கொள்வதே வெளியே செல்வதாகும். மற்றும் புலன்களிடமிருந்து பின்னோக்கி தன் நிலை அடைவதே மீண்டும் வருவது. இது அந்த உள்ளிருக்கும் ஆனந்தநிலை என்னும் வீட்டை அறிந்த ஞானிகளின் வாழ்க்கை முறை. ஆகையினால் இந்திரியங்களின் தொடர்பு கொள்ளும்  ஜீவன் தான் மீண்டும் தன் நிலைக்கு செல்ல வேண்டும் என்பதை மறவாமல் வெளியே வரவேண்டும். இந்திரியங்களால் தான் அனுபவிக்க வேண்டியதை அடைந்த பிறகு மீண்டும் தன் நிலைக்கே திரும்ப வேண்டும். வீட்டிலிருந்து புறப்பட்டவன் மறந்து தெருவிலேயே அலைபவனாக கூடாது. அவ்வாறே ஜீவனும் தன்நிலையை மறந்து புலன் இன்பங்களில் அலைந்து திரிவது தகாது எனும் எச்சரிக்கை வார்த்தை இது. தன்னுடைய நிம்மதிக்காக திரும்பி வரவேண்டிய அமைதியான இல்லமொன்று உண்டு  என்பதை நினைவுறுத்தும்  அறிவுறை இது. அவ்வாறு தன்னிலையை, சாந்தியின் இருப்பிடத்தை அடைந்த போதுதானே இவ்வார்த்தையின் உட்பொருளை அறிய இயலும்!

     


Thursday, September 1, 2022

ஸ்ரீகுருவின் கண்ணோட்டம் - 23 நம் வாழ்க்கையின் வேர் (Nam Vaazhkaiyin Ver)

  

மூலம்: வரததேசிகாசார்யர்
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


கடவுளை நம்பியவர்க்கும் நம்பாதவர்க்கும் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கைக்கு தேவையான உணவு, நீர் சுக போகங்கள் இருவருக்கும் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் இருக்கலாம். இவ்வாறிருக்க கடவுளை நாம் ஏன் நம்ப வேண்டும் என விமர்சகர் ஒருவர் மஹா குருவை வினவினார்.

ஶ்ரீகுரு: நாம் நம்பினாலும் நம்பாவிடினும் இறைவன் உள்ளான். நம் நம்பிக்கை அல்லது அவநம்பிக்கையால் அவனுடைய  இருப்பில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆயினும் இறைவன் இருப்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் நம் வாழ்க்கை இருப்பின் நமக்கு அதனால் மிகப்பெரிய லாபமுண்டு. அவ்வாறு இல்லாவிடில் பெருங்கேடு.

விமர்சகர்: அவநம்பிக்கையால் என்ன கேடு விளையும்?

ஶ்ரீகுரு: இறைவன் நம் அனைவருக்கும் முதன்மையானவன். வாழ்வெனும் மரத்திற்கே மூலமானவன். அனைத்து விதமான சுகம், சாந்தி மற்றும் பிரகாசத்திற்கும் மூலமானவன். இவ்வாறு அனைத்திற்கும் மூலமாக திகழும் அப்பொருளையே சாஸ்திரங்கள் இறைவன் என்றழைக்கின்றன. அம்மூலத்தை அறியாவிடில் என்றாவது ஓர்நாள் நாம் அபாயத்திற்கு ஆளாக நேரிடும்.

விமர்சகர்:  அது எவ்வாறு? மூலத்தை அறியாவிடில் என்ன அபாயம்?

ஶ்ரீகுரு:  ஒரு மரத்தின் மூலத்தை(வேர்) தெளிவாக அறியாது அதன் கிளைகளுக்கு மட்டும் நீர் ஊற்றி வந்தால் ஓரிரு நாட்கள் பசுமையாக கண்டு பின் அம்மரம் வாடிவிடுமல்லவா?அவ்வாறே வாழ்க்கை எனும் மரத்தின் வேரை, பரமாத்மனை உணராத அஞ்ஞானியின் ஜீவனமும் சுகம், சாந்தி, பிரகாசமற்று ஒளியிழந்து காணப்படும்.

விமர்சகர்: அவ்வாறாயின் அம்மூலம் எனும் பரமாத்மனை அறிவதால் ஏற்படும் ஆதாயம் என்ன?

ஶ்ரீகுரு: அதன் விடை மிகவும் தெளிவாகவே உள்ளது. வேரை அறிந்து அதற்கு தேவையான நீரை ஊற்றி வந்தால் மரம் என்றென்றும் பசுமையாகவே விளங்குவது போன்று நம் வாழ்க்கையின் வேரை, இறைவனை அறிந்து நம் பக்தி எனும் நீரை அர்பணித்தால் வாழ்க்கை நித்யமான சுகம், சாந்தியுடன் கூடி ஒளிமயமாக விளங்கும்.  


Thursday, August 11, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 20 கல்லையும் மண்ணையும் பூஜிக்கலாமா? (Kallaiyum mannaiyum poojikkalaama?)

மூலம்:  திரு. வரததேசிகாசார்யார் 
தமிழாக்கம் : திருமதி ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)

 

 "நம் நாட்டில் மிக பழமையான தர்மம், கலாச்சாரம், நல்வழக்கங்களின் பரம்பரையை காண்கிறோம். இது மிகவும் மேன்மையான ஓர் விஷயமே ஆயினும் இங்கு கல்லையும் மண்ணையும்  பூஜிக்கும் வழக்கமும் வளர்ந்து வருகிறது. இது ஒன்று மட்டுமே தலை குனிவை ஏற்படுத்துவதாக உள்ளது."


         "கல்லையும் மண்ணையும் இங்கு யார் பூஜிக்கிறார்கள்?"


          "இவ்வாறான பழக்கம் உள்ளவர்களே அதிகமாக காணப்படுகிறார்கள். அறிவாளிகளும்,  விவேகிகளும்  கூட அவற்றை கை கூப்பி வணங்குகின்றனர். பழம் பூ முதலியவற்றை அதன் முன்னிட்டு பூஜிக்கின்றனர்.


       "அப்பூஜை நிறைவுற்றதும் 'கல், மண்ணுக்கு  பூஜை ஆயிற்று. அவை நம்மை காக்க வேண்டு'மென்று கூறுகிறார்களா?"


             "இல்லை, 'இறைவனின் பூஜை ஆயிற்று, அவர் நம்மை காத்தருள வேண்டும்' என கூறுகின்றனர்."

               "அவ்வாறாயின் அது இறைவனின் பூஜையே அன்றி கல் அல்லது மண்ணின் பூஜையன்று. அவர்களும் அவ்வாறு உரைப்பதில்லை. இவ்வாறிருக்க  நீ ஏன் அவர்களை  இவ்வண்ணம் குற்றம் கூறுகிறாய்?"

                "என் கண்களுக்கு அது நன்றாக புலப்படுவதால் கூறுகிறேன்"


                  "அவர்கள் ஏதோ ஓர் கல்லிற்கும் மண்ணிற்கும் மனம் போனவாறு பூஜிப்பதில்லை.  விசேஷ பொருட்களில் தெய்வசக்தியை பூரணமாக  நிறைத்து  ப்ராண ப்ரதிஷ்டையும், சக்தியையும் உண்டாக்கிய பிறகே பூஜிக்கிறார்கள். அவ்வுணர்வு அற்றவர்களுக்கு அது கல் மற்றும் மண்ணாக காணப்படுகிறது. ஆனால் விதிப்படி பூஜிப்பவரை நிந்திப்பதும் முறையன்று. கொஞ்சினால் குழந்தை, பூஜித்தால் இறைவன் என்ற ஆன்றோர்  வாக்கை அறியவில்லையா?"


               தேசிய கொடிக்கு அனைவரும் வணக்கம் செலுத்துகிறார்கள். அது ஓர் சாதாரண துணி தானே? துணிக்கு வணங்குவது மூடத்தனமல்லவா என்றால் அங்கே துணிக்கு மரியாதை அல்ல. அதன் பிண்ணனியில்   உள்ள தேசப்பற்றிற்கு  தான்  எனும் உதாரணத்தை ஶ்ரீரங்க மஹாகுருவானவர் இந்த சந்தர்ப்பத்தில் தெளிவு படுத்தினார்.


 

Thursday, July 21, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 17 குழந்தை – தங்கம் - மிட்டாய் (Kuzhandai - tangam - mittai)

மூலம்:  திரு. சாயாபதி
தமிழாக்கம் : திருமதி ஜானகி 



தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு  மகிழ்ச்சிக்காகவும், அலங்காரத்திற்காகவும்  தங்க நகைகளை அணிவிப்பது வழக்கம். மோதிரம், வளையல், தோடு முதலியவைகளை சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அணிவிப்பது அழகு. ஆனால் விளையாட்டு பருவ குழந்தைகள் அணிந்திருப்பதை கண்டு அதை அபகரிக்கும் வஞ்சகர்களும் உண்டு. சிலர் கொடூரமான முறைகளை கைகொண்டால் பலர் அன்பாக வஞ்சிக்கிறார்கள். 


       சிறுவர்கள் விரும்பும் விளையாட்டு பொருட்கள், மிட்டாய் முதலிய இனிப்புகளை கொடுத்து அணிகலன்களை அபகரிக்கும் கதைகளை கேட்கிறோம். அவ்வாறு தங்கள் தோடு, மோதிரங்களை கொடுத்து மிட்டாய் போன்ற இனிப்புகளை பெற்ற குழந்தைகள் தாம் அதிக லாபத்தை அடைந்தோம் என உற்சாகமாக கூறுவதும் உண்டு.


       தங்கத்தின் விலை மதிப்பறியாத மழலைகள். மிட்டாயின் சுவையே அவர்களுக்கு தங்கத்தை விட இனியது. தங்கத்தின் விலை அறியமுடியாமல் மோசம் போய் மிட்டாயின் விலையே அதிகமென மகிழ்கின்றன அக்குழந்தைகள்.


            அவ்வாறே இந்திரியங்களின் ஈர்ப்புக்கு உட்பட்ட  ஜீவன் அதை காட்டிலும் மேலான இன்சுவையை அறிவதில்லை. அதையும் மீறிய சுகம், மனநிறைவு உண்டென்று ஆன்றோர் உரைத்திடினும் மனம் அதை நாடுவதில்லை.


             இந்திரியங்கள் எனும் திருடர்கள் தங்கள் கீழ்தரமான சுவையை காட்டி ஜீவன் அச்சுவைகளுக்கும்  மூலமான, தங்கமயமான ஆத்மனிடம் செல்லாமல் தடுத்து விடுகின்றன. ஜீவன் இந்திரியங்களின் சுவைக்கு தோற்காமல் மனம் பின்நோக்கி மூலத்தில் லயித்து சுவர்ண(தங்க) மயமான ஜோதியை கண்டதும்  இந்த்திரியசுவை  அற்பமானது என அறிகிறது. அப்போது அச்சுவைக்கு ஆளாகி தன் வாழ்வின் தங்கத்தை பறிகொடுப்பதில்லை.


         குழந்தை மிட்டாய்க்கு மயங்கி  தங்கத்தை  இழப்பதுபோல்  புலன்களின் வயப்பட்ட மனிதன் தன் வாழ்வின் இணையற்ற செல்வத்தை இழக்கிறான்.  வாழ்கையின் உண்மையான மதிப்பை உணரும் பொழுது தான் இந்திரியங்களின் கீழ்த்தரமான சுவைகளுக்கு ஜீவன் ஆளாக மாட்டான்.


Thursday, July 14, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 16 பெரியவனுக்கு சிறிய உறைவிடம் ஏன்? (Periyavanukku shiriya uraividam En?)

மூலம்:  திரு. சாயாபதி

தமிழாக்கம் : திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)

 இறைவனுக்கென்றே உருவாக்கப்பட்ட ஆலயத்தில் மற்றெல்லா  இடங்களும்  விரிந்து பரந்திருந்தாலும், ஆண்டவன்  உறையும் கருவறையே மிகவும் சிறிது. அங்கு ஒளிர்விடும் சிறிய தீபத்தை தவிர வேறு வெளிச்சத்திற்கு வழியில்லை. தற்போதைய மின்சார விளக்குகளை பயன்படுத்துவதற்கு  பாரம்பர்யத்தில் ஊறியவர்கள் விரோதம் தெரிவிப்பதையும் கேள்விப்படுகிறோம்.


         அனைவரும் இறைவனை காண ஆவலுடன் ஓடிவரும் அறையே ஏன் சிறியது? அது விசாலமாகவும் இருந்து அதிகஒளியும் புகுந்தால் நலந்தானே? ஏன் இருட்டு குகையில் மிளிரும் தீபத்தைப்போன்றதோர்  சிறிய தீபம்  ஒளிரவேண்டும்? அதற்கு 'கருவறை' எனும் பெயர்தான் ஏன்? எனும் வினாக்கள் எழுவது இயல்பு.

          ஓர் ஜீவனின் உற்பத்தி ஏற்படுவது தாயின் கருவறையில் என்பதை நாம் மறக்கக்கூடாது. "தாயின் கர்ப்பத்தில் இருக்கும்பொழுது குழந்தை தன் எட்டாவது மாதத்தில் இறைவனை தரிசிக்கிறது.  அக்காட்சியை கண்டு பேரானந்தத்தில் திளைக்கும் அந்த ஜீவன் தான் கர்ப்பத்திலிருந்து வெளியே வந்த பிறகு அஜ்ஜோதியை மறவாமல் வாழ்வதாக உறுதி கொள்கிறது" என்று ஞானிகள் கூறுகின்றனர். ஆயினும் தாயின் கருவறையிலிருந்து வெளிவந்த பிறகு சிசு வெளி உலகத்தின் ஈர்ப்புக்கு உட்பட்டு தன் உறுதி மொழியை மறந்துவிடுகிறது.

 மீண்டும் அந்த ஜீவனுக்கு கருவறையில் கண்ட அச்சோதியை நினைவூட்டி அதன் வாழ்வில் பேரானந்தத்தையும், பரம சாந்தியையும் வழங்குவதே ஆலய நிர்மாணத்தின் பின் அடங்கியுள்ள  திட்டம். ஆகவேதான் ஆண்டவனை நிலைநிறுத்தும் இடத்திற்கும் 'கருவறை' எனும் பெயர் வழங்கிவருகிறது. ஜீவன் முதன்முதலில் இறைவனை கண்ட இடம். அங்கு வெளியிலிருந்து எந்த ஒளியும் நுழைய முடியாததால் அது வெளி ஒளியிலிருந்து தனிப்படுத்தி  அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்ட ஜோதியின் நினைவிற்காக சிறு தீபம்; மற்றும் அந்த ஞானத்தினிடம் நம்மை ஈர்க்கும் அடையாளங்களை கொண்ட  இறைஉருவம். அவ்வாறே கருப்பை சிறிதாகவும், மறைந்தும் இருப்பதால் கருவறையும் சிறியது. ஜீவன் முதன் முதலில் ஜோதியை கண்ட இடம் கருப்பை என்பதால் ஜீவனை அச்சூழ்நிலைக்கே கொண்டு சென்று மீண்டும் அத்தரிசனத்தை  காட்டுவதற்காகவே  ஆலயத்திலும் ஒரு கருவறை அல்லது கர்ப்பக்ருஹம்.


Saturday, July 9, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 13 ஒளி(ஜோதி (Oli - Jyoti)

  மூலம்:  திரு. வரததேசிகாசார்யார் 

தமிழாக்கம் : திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



"நீ எத்தனை விதமான ஒளிகளை காண்கிறாய் குழந்தாய்?" மஹா குரு சீடனை வினவினார்.
"பகலில் சூரியனையும், இரவில் விளக்கின் ஒளி, வானில் நிலவு மற்றும் நட்சத்திர ஒளியை காண்கிறோம். இத்தகைய ஒளிகள்தானே உள்ளன?" சீடன் சுலபமாக பதிலுரைத்தான்.
      ஶ்ரீகுரு: "சூரிய-சந்திர-நட்சத்திர ஒளிகளை காண மீண்டும் எந்த வெளிச்சம் தேவை?"   அறிவாளியான சீடன் சிறிது யோசித்து "கண்களின் ஒளி இன்றி அவைகளை காண இயலாது" என பதிலளித்தான்.
"கண்களுக்கு ஒளி எங்கிருந்து வருகிறது?" என்றார் ஶ்ரீகுரு.

உடனே பதில் அளிக்க தோன்றாத சீடனுக்கு உதவும் வகையில் ஶ்ரீகுருவே மற்றொரு கேள்வியை கேட்டார்.
 "தூங்கும் போது சில நேரம் நீ கனவுகளை காண்கிறாய். அப்போது கண்களை மூடியிருந்தும் சில காட்சிகளை காண்கிறாய். அச்சமயம் அவைகளை எவ்வாறு காண்கிறாய்?"
 "அது மனதிற்கு காண்கிறது" என சீடன் உரைத்தான்.
 "அவ்வாறாயின் கண்ணிற்கு ஒளி எது?"
 "மனம்தான்"
 "அம்மனதிற்கும் ஒளி எங்கிருந்து வருகிறது?"
 "அது தெரியாது"
       
.ஶ்ரீகுரு:  "மனது மற்றும் புத்திக்கு ஒளி உண்டாவது பரம்பொருளிடமிருந்துதான். அவைகளை இயக்கும் அச்சோதியை   உன்னதமான காயத்திரி மந்திரம் துதிக்கிறது. அனைத்து ஒளிகளுக்கும் முதன்மையான ஜோதி. பரம்சுடர். பரமாத்ம ஜோதி. அது நம் ஸ்வரூபம் என ஆதி சங்கரர் கொண்டாடுகிறார். அதையே நம் அனைவரின் தலைவன் என ஆழ்வார்கள், அடியார்கள், பக்தர்கள் மற்றும் ஶ்ரீராமானுஜர், ஶ்ரீமத்வாசார்யர்  முதலிய பக்தி மார்க ஆசார்யர்கள் வழிபடுகின்றனர்" என ஶ்ரீகுரு விளக்கமளித்தார்.

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 12 உபநிடதம் கூறும் உப்பின் பரிசோதனை (Upanidadam kurum uppin parishodanai)

  மூலம்:  திரு. வரததேசிகாசார்யார் 

தமிழாக்கம் : திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



 'இறைவனிடம் ஈடுபாடு வை. பக்தியுடன் அவனை வழிபடு' என்று ஆசிரியரான உத்தாலகர்  பொங்கி வரும் அன்புடன் தம் ப்ரியமாணவன் சிறுவன் ச்வேதகேதுவிற்கு உபதேசித்தார்.  
ச்வேதகேதுவிற்கு ஆசிரியரிடம் அளவற்ற பக்தி இருந்தது.
அவருடைய அன்பு அவன் இதயத்தை கவர்ந்திருந்தது. அவர் மிகவும் நேர்மையானவர் என்று அவன் உள்மனம் கூறும். ஆயினும் மிக்க அறிவாளியான சீடன் ஆராயாது எதனையும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. 
"இறைவன் கண்ணிற்கு புலப்படுவதில்லையே, அவனிடம் எவ்வாறு பற்று வைப்பது?" என்று பணிவுடன் வினவினான். 
குரு சிறிது நேர அமைதிக்குப்பின் அவன் கையில் ஒரு பிடி உப்பை அளித்து 'நீர் நிரம்பிய  கிண்ணத்தில் போட்டு நாளை காலையில் கொண்டு வா' என்று பணித்தார். சீடன் பணிவுடன் அவ்வாறே செய்தான்.
ஆசிரியர்: நேற்று மாலை இதில் சேர்த்த உப்பை எடுத்து கொடு. 
சீடன் நீரை   தொட்டு பார்த்தபோது உப்பு கைக்கு கிடைக்கவில்லை. கண்ணிற்கும் புலப்படவில்லை.      
ச்வேதகேது: அந்த உப்பு  இங்கு கிடைக்கவில்லை. ஆசிரியர்: இல்லையா? அப்படியாயின் அந்த நீரின்  இந்த பக்கத்திலிருந்து சிறிதளவு பருகு.  
     
சீடன்: பருகினேன்.                    
ஆசிரியர்: எவ்வாறு உள்ளது? 
சீடன்: மிகவும் உப்பு கரிக்கிறது.             
ஆசிரியர்: நீரின் நடு பாகத்திலிருந்து பருகு.                         
சீடன்: பருகினேன். மிகவும் உப்பாக உள்ளது.                      
ஆசிரியர்: கடைசி பாகத்திலிருந்து பருகு.                       
சீடன்: பருகினேன்! அதுவும் அவ்வாறே உப்பாக உள்ளது.  

ஆசிரியர்: அந்த உப்பு கண்ணிற்கு புலப்படவில்லை. கைக்கு கிடைக்கவில்லை. ஆயினும் அது இந்த நீரில் முழுமையாக  கலந்திருப்பது உன் நாவிற்கு  உரைக்கிறதல்லவா? அவ்வாறே இறைவன் கண்ணிற்கு புலப்படாவிடினும் உண்மையாகவே இருக்கின்றான். எங்கும் நிறைந்திருக்கின்றான். அகக்கண்ணிற்கு தெளிவாக புலப்படுவான். அந்த  மெய்யுணர்வை அடைய தவம் செய்ய வேண்டும்.

இந்த சிறிய பரிசோதனை  சிறுவனான ச்வேதகேதுவின் மனதில் ஆழமாக பதிந்தது. குருவை வணங்கி அவன் அன்றிலிருந்தே  அதற்கான முயற்சியை தொடங்கினான்.

Thursday, July 7, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 15 இறைவனின் முன் தீபம் ஏன்? (Iraivanin mun dipam en?)

மூலம்:  திரு.  வரததேசிகாசார்யார்

தமிழாக்கம் : திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)  

 
 

             கடவுளின் சன்னிதானத்தில்  காலை, மாலை நெய் அல்லது எண்ணெய் தீபமேற்றுவது பாரதத்தில் அனைவரின் இல்லத்திலும்   வழக்கமாக உள்ளது. அணையாத நந்தா தீபமேற்றும் வழக்கமும் உண்டு.


             ஏன் இத்தீபம்? மலை, குகைகளில் வாழும் அநாகரீக ஜன சமுதாயத்தை சார்ந்த மக்கள் இருட்டை போக்குவதற்கென நெய் எண்ணெய் தீபங்களை ஏற்றுவதில் பொருளுள்ளது. மின்விளக்குகளால் இரவையும் பகலாக்கும் நவநாகரீக சமுதாயத்தில் ஏன் இந்த பழக்கமோ?  ஒவ்வொரு இல்லத்திலும் இதற்கு எவ்வளவு செலவு? நாட்டில் வீண் செலவு அல்லவா? இறைவனே  சூர்ய சந்திரர்களுக்கும் ஒளி வழங்குகிறான் என்பது ஒருபுறம்; அகல் விளக்கு ஏற்றுவது ஒருபுறம். ஏன் இந்த முரண்பாடு ? சூர்யனைக்  காண மின்கல விளக்கு தேவையா?

 

              இதற்கு தகுந்த பதில் என்ன? மலை குகைகளில் வாழும் அநாகரீக மக்கள் ஏற்படுத்திய பழக்கம் இது என்பது சிலரின் எண்ணம். ஆனால் உண்மையில் தம் இதயகுகையில் அஞ்ஞானமெனும் இருளை அகற்றும் தீபம் ஒன்றினை கண்டு களித்து வாழ்ந்தவர்கள் தந்தளித்த பழக்கம் இது.


          ஒவ்வொரு ஜீவனின் இதயகுகையிலும் ஒளிர்விடும் தீபம் ஒன்று உண்டு. அத்தீபம் தான் வாழ்க்கைக்கு ஒளி. வாழ்வெல்லாம் நிறைந்து ஒளி வீசினும் வாழ்க்கையின் எந்த விபத்து, விகாரத்திற்கும் உட்படாமல் மறைந்திருக்கும்  தீபம் அது. அவ்வொளியின் பாதையில் உள்நோக்கி தேடி தன்னிடம்


             ஏன் இத்தீபம்? மலை, குகைகளில் வாழும் அநாகரீக ஜன சமுதாயத்தை சார்ந்த மக்கள் இருட்டை போக்குவதற்கென நெய் எண்ணெய் தீபங்களை ஏற்றுவதில் பொருளுள்ளது. மின்விளக்குகளால் இரவையும் பகலாக்கும் நவநாகரீக சமுதாயத்தில் ஏன் இந்த பழக்கமோ?  ஒவ்வொரு இல்லத்திலும் இதற்கு எவ்வளவு செலவு? நாட்டில் வீண் செலவு அல்லவா? இறைவனே  சூர்ய சந்திரர்களுக்கும் ஒளி வழங்குகிறான் என்பது ஒருபுறம்; அகல் விளக்கு ஏற்றுவது ஒருபுறம். ஏன் இந்த முரண்பாடு ? சூர்யனைக்  காண மின்கல விளக்கு தேவையா? 


              இதற்கு தகுந்த பதில் என்ன? மலை குகைகளில் வாழும் அநாகரீக மக்கள் ஏற்படுத்திய பழக்கம் இது என்பது சிலரின் எண்ணம். ஆனால் உண்மையில் தம் இதயகுகையில் அஞ்ஞானமெனும் இருளை அகற்றும் தீபம் ஒன்றினை கண்டு களித்து வாழ்ந்தவர்கள் தந்தளித்த பழக்கம் இது.


          ஒவ்வொரு ஜீவனின் இதயகுகையிலும் ஒளிர்விடும் தீபம் ஒன்று உண்டு. அத்தீபம் தான் வாழ்க்கைக்கு ஒளி. வாழ்வெல்லாம் நிறைந்து ஒளி வீசினும் வாழ்க்கையின் எந்த விபத்து, விகாரத்திற்கும் உட்படாமல் மறைந்திருக்கும்  தீபம் அது. அவ்வொளியின் பாதையில் உள்நோக்கி தேடி தன்னிடம் உகந்து வருபவர்க்கு  வேறெங்கும் காணக்கிடைக்காத வெளிச்சத்தையும், பரமானந்தத்தையும் நிறைக்கும் தீபம் அது. அவ்வாறான தீபமே இறைவன், பரம்ஜோதி.

          வாழ்க்கையில் மறைந்திருக்கும் அஜ்ஜோதியிடம் வழிகாட்டி, பரமானந்தத்தில் திளைக்கச் செய்யும் ஒரு திட்டம் தான் காலை, மாலை தீபமேற்றும் வழக்கம்.


             காலை, மாலை  இருவேளைகளும் இயற்கையிலேயே சாந்தியையும், நிச்சலத்தன்மையையும் அருளும் இடைக்காலங்கள். அவ்வாறே இவற்றை மனதிற்கும் தானாகவே அளிக்கும் காலம் அது என்பது ஆன்றோர்களின் அனுபவம். மனம் தானே அமைதி, சலனமற்ற தன்மை அடையும் காலத்தில் மனதிற்கு மூலமாக உள்ள ஜோதியை நோக்கி பயணிக்கச் செய்வதற்கானதொரு   திட்டமே அவ்வேளைகளில் தீபமேற்றுவதின் மர்மம்.  அப்பரம்ஜோதியே  நம் வாழ்விலும், மனையிலும்  நிறைந்து ஒளிர்கிறது என  அறிவிக்கும் கலாச்சாரம் இத்தீபமேற்றும் வழக்கத்தில்  காண்கிறது. என்றும் அணையாத அந்த ஆனந்த தீபத்தின் இனிய நினைவுதான் நந்தா தீபம்.


Thursday, June 30, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 14 அதர்மம் அநியாயத்திற்காக வேண்டுதலா?(Adharmam aniyayattirkaga vendudalA?)

மூலம்:  திரு.  வரததேசிகாசார்யார்

தமிழாக்கம் : திருமதி வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)

    மிகவும் விமரிசையாக பூஜை தொடங்கியது. மந்திரங்களின் முழக்கமும், சங்கு, மணி, தாள வாத்யங்களின் ஒலியும்  மிகுந்திருந்தது.  வீட்டின் தலைவர் வழக்கத்தைவிட  அதிக தூய்மையான(மடியான) ஆடை அணிந்து மேடையில் அமர்ந்தார். கூடை நிறைய பூக்களாலும், (துளசி முதலான) தளங்களாலும்அர்ச்சனை நடந்தது. தூப, தீப, நைவேத்யம்,ஹோமம் மற்றும் ராமாயண பாராயணமும் நிறைவுற்றது.

"என்கோரிக்கைய  நிறைவேற்றும்படி  இறைவனை  வேண்டுங்கள் " என்று பூஜை செய்தவரிடம் எஜமானர் கட்டளை இடும் குரலில் கேட்டுக்கொண்டார். "உங்கள் விருப்பம் என்ன?" என்று வினவியபோது  "இந்த எல்லா சொத்தும் எனக்கே வந்து சேர வேண்டும்.  என் தம்பிக்கு சிறிதளவும்  கிடைக்க கூடாதென்று நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும்படி இறைவனிடம் வேண்டுங்கள் "என்றார்.

        பூஜை செய்தவருக்கு குழப்பம் ஏற்பட்டது.  அப்போதுதான் அனைவரும் ராமாயண கதையை கேட்டிருந்தனர். 'தந்தையார் அளித்த வாக்கின்படி அரசுரிமை தம்பி பரதனுக்கே சேர வேண்டும். இதுவே அறம். நான் அரசுரிமை ஏற்றால் அறம் கெடும். அதுவுமன்றி பரதன் அரசாள தகுந்தவன்.  அவன் என் அன்பிற்குரிய தம்பி. எனவே அவனே அரசனாகட்டும்' என்று தன் கைக்கு எட்டிய அரசுரிமையை  தம்பிக்கே விட்டு கொடுத்த தர்மவான், தியாகி  ஸ்ரீராமசந்திரன்.  ஆனால் இங்கோ தம்பிக்கு சட்டப்படி கிடைக்கவேண்டிய சொத்தும் இந்த அண்ணனுக்கே  சேர வேண்டும்' என்று  அதர்மத்திற்கு துணை போகும்படி அந்த தர்ம ப்ரபுவை கோரவேண்டுமாம்! எத்தகைய நெருக்கடி.

முடிவில் பூஜை செய்தவர் தன் கட்சிகாரன் தவறானவனாயினும் அவனுக்காக வாதாடும் வக்கீலை போலவே நடந்து கொண்டு விட்டார். தன் எஜமானனின் கோரிக்கையை உரத்த குரலில் முறையிட்டார். இத்தகைய பூஜையை ஏற்றுக்கொள்பவனை  இறைவன் என்று எந்த அறநூலும் ஒப்புவதில்லை.

Thursday, June 9, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 11தீயை பூஜிப்பதா?(Theeyai poojippada?)


 மூலம்:  திரு. வரததேசிகாசார்யார் 

தமிழாக்கம் : திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



         "எங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஓர் ஆசிரியர் மிகவும் சிறந்த பண்டிதர், விவேகி, நற்குணமுள்ளவர். அவரை அனைவரும் கௌரவிக்கின்றனர். எனக்கும் அவரிடம் மிக்க கௌரவமுள்ளது . ஆனால் அவரது இல்லத்தில் ஓர் மூடவழக்கம் உள்ளது."
                "என்ன வழக்கம்?"
            'அவர் தீயை வணங்கி பூஜிக்கிறார். நெய், அன்னம் முதலியவற்றை அதில் சொரிந்து அதன் சாம்பலையும்  நெற்றியில் அணிகிறார்"
          "அவ்வாறு பண்டிதரும் விவேகியுமானவரே இதுபோன்று செய்கிறார் என்றால் ஏதாவது முக்கிய காரணம் இருக்க வேண்டுமல்லவா?"
          "வேறென்ன காரணம் இருக்க முடியும்? தொன்மையான  மூடநம்பிக்கை அவ்வளவே "    
        "பழங்காலத்திலாயினும் எவ்வாறு இப்பழக்கம் வந்திருக்கலாம்?"
                  "எங்கள் சரித்திர புத்தகத்தில் இதன் காரணத்தை எழுதியுள்ளார்கள். ஆதிமனிதன்  தீ, காற்று, மழை முதலிய இயற்கை செயல்களை கண்டு ஆச்சரியமடைந்து அவற்றையே உபாசிக்க தொடங்கினான்."
                  "அவற்றில் தீயை ஏன் பூஜித்தான்?"
          "காரணம் நன்றாக அறிந்ததே. தீயின்றி உணவு பொருட்கள் வேகாது. குளிர் காய்வதற்கும் தீ தேவை. சுட்டெரிக்கும் குணமும் தீக்கு உண்டு. ஆதலால் ஊக்கமும், பயமும் கொண்டு அதை பூஜிக்க தொடங்கினான். நம் பாரத நாட்டின் மக்கள் இன்னமும் அதையே பின்பற்றி வருகின்றனர்.'

                "தீ என்பது ஓர் ஜடப்பொருள். நாம் பூஜிக்காவிடினும் பொருட்களை வேகவைக்கும், கதகதப்பை அளிக்கும், சுட்டெரிக்கும். பின் அதை ஏன் ஆராதிக்க வேண்டும்? "   
அதுசரி  அவர் அப்பூஜையை பற்றி என்ன கூறுகிறார்?  'நெருப்பு பூஜை ஆயிற்று'   என்கிறார்களா?"
                  "இல்லை.  'யக்ஞதேவனின் ஆராதனை,   அக்னி தேவனின் பூஜை, ஔபாசனம் ஆயிற்று' என்கிரார்."
        ஆதலால் அவர்கள் ஆராதிப்பது தீயை அல்ல. யக்ஞேச்வரனை,  இறைவனைதான்."
                  "தீயின் ஆராதனையை தானே காண்கிறோம்?".
"கண்ணால் காண்பதை எல்லாம் ஆராய்ந்து அறியாமல் நம்புவது மூட நம்பிக்கை. ஆராயாமல் அவர்களின் பழக்க வழக்கங்களை ஏளனம் செய்யக்கூடாது. தீயின் பூஜை ஆயிற்றென்று அவர்கள் கூறுவதே இல்லை. அவர்கள் ஆராதிப்பது பூஜைக்குரிய இறைவனையே. அப்பூஜைக்கு தீ ஓர் சாதனம்.

Thursday, May 12, 2022

ஸ்ரீரங்கமஹாகுருவின் கண்ணோட்டம் – 8 அது அவன் இயற்கை குணமே (Adu avan iyarkai guname)

மூலம் : ஶ்ரீ வரததேசிகாச்சார்ய ரங்கப்ரியர்

தமிழாக்கம் : திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



(மூலம் : ஸ்ரீரங்கப்ரியர் தமிழாக்கம் : திருமதி வனஜா)

"அம்மா இனி உங்கள் பிள்ளைக்கு நீங்களே புத்தி புகட்ட வேண்டும். அவனுடைய குறும்புகளை தடுக்க இனி எங்களுக்கு சக்தி இல்லை. நாங்கள் சொல்வதை அவன் கேட்பதே இல்லை." கோகுலத்தில் பாலக்ருஷ்ணனின் தாயிடம் கோபிகைகள் புகார் அளித்தனர்.


"செய்த குறும்புகளை விவரமாக கூறினால் அன்றோ ஆராய்ந்து தண்டனை வழங்கலாம்" என யசோதை ந்யாய மூர்த்தியின் கம்பீரத்தோடு பகர்ந்தாள்.

"கூறாமல் கொள்ளாமல் வீட்டிற்குள் நுழைந்து அவேளைகளில் பசுக்களின் கயிற்றை அவிழ்த்து விடுகிறான். அவை பாலனைத்தையும் கன்றுகளுக்கு ஊட்டிவிடுகின்றன. பால் கறக்கச்செல்லும் எங்களுக்கு கிடைப்பது உதைதான்." கோபிகைகள் விவரித்தனர்.


தாய் மிகுந்த கோபம்கொண்டு அத்தருணத்தில் அங்கு வந்த கண்ணனை அதட்டி "குறும்பு பயலே!

நம் வீட்டு மானம் போகிறது. உன் இச்சைப்படி இவர்கள் வீட்டில் புகுந்து மாடுகளின் கயிற்றை அவிழ்க்கிறாயா?" என கேட்டாள்.


"ஆம் அம்மா நான் அவ்வாறு செய்வதுண்டு" தயங்காமல் பதில் அளித்தான். மகன் தவறே செய்தாலும் உண்மையையே உரைத்ததினால் தாய் பெருமிதம் அடைந்தாள்.


அவள் கோபமும் சிறிது தணிந்தது. "ஏனப்பா இவ்வாறு செய்கிறாய்" என வினவ "அதுவே என் இயற்கை குணம் அம்மா, நான் என்ன செய்ய" பாலக்ருஷ்ணன் புன்னகையுடன் பதிலளித்து அன்னையின் முகத்தையே உற்று நோக்கினான்.

அப்பார்வையின் பொற்கிரணங்கள் யசோதையின் அகக்கண்களைத் திறந்து அவனுடைய சொற்களின் உட்பொருளையும் உணர்த்தின. கண்களுக்கு விருந்தான ஆனந்தமூர்த்தியில் தன்மயமாகி தியானசமாதியில் மெய்மறந்தாள்.


நாம் அனைவருமே (ஜீவன்)பசுக்களே. இறைவன் நம் உலகவாழ்வின் பாசங்களை(கயிற்றை) அவிழ்த்து பேருதவிபுரிகிறான். புண்யம்-புருஷார்த்தம்-கீர்த்தி எதையும் வேண்டாதவன். ஆத்ம த்ருப்தன். எந்த லாபமும் இதனால் அவனுக்கு இல்லை. ஆயினும் ஏன் இந்த பரமோபகாரத்தை செய்கிறானெனில் அவன் குணமே அவ்வாறானது என இத்தத்துவத்தை குருவாதிராஜர் விவரிக்கிறார்.


இக்கருணையையே ஓர் ஹரிதாசர் "பக்தப்ரியனான உனக்கு கால வரையறை உண்டோ?" என போற்றுகிறார்.

Thursday, April 28, 2022

ஸ்ரீரங்கமஹாகுருவின் கண்ணோட்டம் – 6தேவர்களுக்குள் போட்டியா? விரோதமா?(Devargalukkul Pottiya? Virodama?)


மூலம்: ஶ்ரீ வரததேசிகாச்சார்ய ரங்கப்ரியர்

தமிழாக்கம்: திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




புராண-இதிகாசங்களில் பக்தர்களின் கதைகள் பல காண்கிறோம். இறைவனால் தண்டிக்கப்பட்ட தெய்வவிரோதிகளின் கதைகளையும் காண்கிறோம். அவைகளில் சில கதைகள் பாமரர்களுக்கு புரியாத குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.


உதாரணத்திற்கு ராவணன் சிறந்த சிவபக்தன். சிவனை ஆராதித்து அற்புதமான சித்திகளை பெற்றவன். ஹிரண்யகசிபுவும் சிறந்த பக்தன். பிரம்மதேவரை மகிழ்வித்து கிடைத்தற்கரிய வரங்களை அடைந்தான். ஆயினும் மகாவிஷ்ணு ஶ்ரீராமன் மற்றும் நரசிம்ம அவதாரங்களை எடுத்து இவர்களை அழித்துவிட்டார். அவ்வாறே ருத்ரபகவானும் மகாவிஷ்ணுவின் அம்சமான மன்மதனை சுட்டெரித்த கதை அனைவரும் அறிந்ததே. அம்மூவரும் சிறந்த கடவுள் பக்தர்கள். பக்தர்கள் இறைவனுக்கு மிகவும் ப்ரியமானவர்கள். அவ்வாறாயினும் இறைவடிவமான விஷ்ணு-ருத்ர்களால் ஏன் அழிக்கப்பட்டார்கள்? சிவபக்தனை விஷ்ணுவும், விஷ்ணுஅம்சமான மன்மதனை சிவனும் அழித்தனர். ஆதலால் அத்தேவர்களுக்குள் விரோதமா? போட்டியா? சகிப்பு தன்மை இல்லாமையா? என்ற கேள்வி எழுகிறது.


இதற்கு சிலர் "இவை அனைத்தும் காக்காய்-குருவி கதை அல்லது வெவ்வேறு காலங்களில் மனிதர்கள் தங்கள் கற்பனைதெய்வங்களின் பெருமையை நிலைநாட்ட புனைந்த கதைகள் என சுலபமாக தீர்வு காண முயல்கிறார்கள்.

ஆனால் இது பொருத்தமான பதிலல்ல. அவர்கள் கதையின் அனைத்து பாகங்களையும் மனதில் கொள்ளவில்லை.

ராவணன், ஹிரண்யன், மன்மதன் மூவரும் இறைவனிடம் ஞானத்தை வேண்டவில்லை. மாறாக சரீர- புத்தி-அஸ்திரபலம் மற்றும் சரீரஅழகு முதலிய சித்திகளை வேண்டினர். அந்த சித்திகளை உலகநன்மைக்காக அல்லாது அதர்ம-அநியாய செயல்களுக்கு உபயோகித்தனர். ஆதலால் இவர்கள் விஷ்ணு, ருத்ரரால் அழிக்கப்பட்டனர். ராவணனை சிவபக்தன் என்ற காரணத்தால் விஷ்ணு அழிக்கவில்லை. உலகிற்கே கேடு விளைவிப்பவன் என்பதால் கொன்றார். அதேபோல் மன்மதனை விஷ்ணுவின் அம்சம் எனபதால் அல்லாது தன் சமாதிநிலையை குலைப்பவன் என்பதால் ருத்ரன் சுட்டெரித்தார். இத்தண்டனையினால் அவர்கள் பாவம் நீங்கி நற்கதி அடைந்தனர். இத்தண்டனை மும்மூர்த்திகளுக்கும் சம்மதமே. அதனால் தேவர்களுக்குள் விரோதம், போட்டி எனும் கேள்விக்கே இடமில்லை.


Tuesday, March 29, 2022

ஸ்ரீரங்கமஹாகுருவின் கண்ணோட்டம் - 2 சித்ரகுப்தரின் ரகசியம் (Chitraguptarin Ragasiyam)

 மூலம்:தமிழாக்கம்: ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


 "புண்யம் பாவமென்பதெல்லாம் வீண் வெட்டி பேச்சு. எங்கே உள்ளது பாவமும் புண்யமும்? மாடு, புலி வருகிறதென்றால் கண்ணுக்கு புலப்படும். பாவ புண்யங்களை பார்த்தவர் யார்? இந்த எண்ணங்களை எல்லாம் விட்டு மனதிற்கு தோன்றியபடி நடக்க வேண்டும்" என ஓர் இளைஞன் தன் பாட்டிக்கு உபதேசித்தான்.


     "பாவம் புண்யம் இல்லாமல் போகாது. நமக்கு காண கிடைக்காவிடினும் சித்ரகுப்தர் எல்லாவற்றையும் ரகசியமாக எழுதிக் கொள்வாரென உன் தாத்தா சொல்வார்" பாட்டி அனாயாசமாக பதில் கூறினாள்.


             இளைஞன் சிரித்து சித்ரகுப்தர் யாரென வினவ "அவர் யமதர்ம ராஜனின் குமாஸ்தா" என பதிலுரைத்தாள். "யார் கண்ணுக்கும் காணாதவர் தாத்தா கண்ணுக்கு மட்டும் தென்பட்டாரா என்ன? எப்படி நம்புவது?" என்று வினவினான் இளைஞன்.


           இந்த உரையாடலை  வித்வாம்சரும், மனம் சார்ந்த சாஸ்திரத்தில் பெரும் பண்டிதரும், நல்ல விமர்சகருமான ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தார். ஆன்மீகத் துறையிலும் பரிசோதனை செய்து ப்ரஹ்மஞானியான மஹா குருவிடம் சேவை செய்தவருமாவார். அவர் அந்த இளைஞனை குறித்து "`நாம் நம்பினாலும் நம்பாவிடினும் பாவ புண்யங்கள் உண்டப்பா. சித்ரகுப்தர் எழுதிக் கொள்வதும் உண்மை. சாதாரண மனிதர்கள் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவ்வளவுதான்." என்றார்.


           மேலும் "நீ யாரும் அறியாமல் ஏதாவது தீய செயல் அல்லது நல்ல செயல் செய்தால் உனக்கு அது தெரிகிறதா இல்லையா?" என வினவினார். இளைஞன் "தெரிகிறது சார்" என பதிலுரைக்க "அச்செயல்களின் அடையாளம் உன் மனதில் ஏற்படுகின்றதா இல்லையா? அதாவது அச்செயல்கள் தம்முடைய முத்திரையை உன் மனதில் சித்திரிகின்றனவா?" என வினவினார். "ஏற்படுகிறது சார்" என இளைஞன் கூற "அவ்வாறு அடுத்தவர் அறியாமல் நம் மனதில் ரகசியமாக(குப்தமாக) சித்தரிக்கும் சக்தியே சித்ரகுப்தர். அவரை நம்பாமல் இருக்க முடியுமா?அவர் எழுதிக்கொள்வதில் நல்ல செயல்களின் கணக்கே புண்ணியம் எனவும் தீயவையின் கணக்கு பாவம் எனவும் அறிய வேண்டுமப்பா" என்றார்.


       நன்றாக புரியும் மொழியில், நம்பிக்கை உண்டாகும் விதமாக உண்மையை விளக்கிய அந்த ஆசானுக்கு நன்றியுடன் தன் வணக்கங்களையும் தெரிவித்தான் அவ்விளைஞன்.

Tuesday, March 22, 2022

ஸ்ரீரங்கமஹாகுருவின் கண்ணோட்டம் - 1 ஆயுள் காப்பீடு (Life Insurance - Ayul Kaappidu)

மூலம்: ஸ்ரீ சாயாபதி 

தமிழாக்கம் -- திருமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



ஆயுள் காப்பீடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பல விபத்துகள் நிறைந்த இவ்வாழ்க்கையில் யாருக்கு எப்போது மரணம் நிகழும் என்பதை அறிபவர் யார்? நிச்சயமற்ற இச்சூழ்நிலையில் சிறிதளவாவது ஆறுதல் அளிப்பது ஆயுள் காப்பீடு. எதிர்பாராது மரணத்தை தழுவும் நபரின் குடும்பத்திற்கு ஓரளவு நிதியுதவி வழங்கும் திட்டம் இது.


            இது சிறந்ததாலும் உயிர் துறந்த அந்த ஜீவனுக்கு இதனால் ஏற்படும்  லாபம் தான் என்ன? அந்த ஜீவன் இதனால் எவ்வாறு நிம்மதி அடைய முடியும்? அதன் நிம்மதிக்கும் சுகத்திற்கும் எவ்விதத்திலும் உபயோகமற்ற இத்திட்டம் ஆயுள் காப்பீடு எவ்வாறாகும்?


            அந்த ஜீவனுக்கு உயிருடனோ அல்லது உயிர் நீத்த பிறகோ நிம்மதியை தரும் காப்பீடு ஏதாவது உள்ளதா?  ஜீவத்திற்கு நிம்மதி அளிக்கும் இத்தகைய  காப்பீடு எவ்வாறு சாத்தியம்? ஆயுள் காப்பீடு எனும் சொல்லின் ரகசியத்தை உணர்ந்து இப்புதிருக்கு பொருத்தமான விளக்கத்தை அளித்தவர் ஶ்ரீரங்கமஹாகுரு.


             உலகவழக்கிலுள்ள காப்பீடு தேகத்தையும் குடும்பத்தையும் காப்பதற்கு உதவுகிறது. ஆனால் ஜீவனுக்கு உடலில் உள்ள போது நிம்மதியை அளிப்பது மட்டுமின்றி,  உடலிலிருந்து பிறிந்த பிறகும் தன்னுடைய உதவியினால் நிம்மதியளிக்கும் ஒரு செல்வம் உண்டு. அதுவே ஞானம் எனும் செல்வம். தேகத்தினுள் ஒரு மையத்தில் விளங்கும் ஓர் பேரொளி. அங்கே அதை காண்பவர்க்கு பேரானந்த அமுதமளிக்கும் ஆனந்த நிலை. உயிர் உள்ள போதே அதை அடையும் வழிமுறைகளை அறிந்த ஞானிகளின்  வழிகாட்டுதலினால் அச்செல்வத்தை  அடையலாம். அவ்வாறு அதை ஒறுமுறை அடைந்த பின் உயிர் பிரிந்தாலும் ஜீவன் அப்பேரொளியின் மடியிலேயே நிம்மதி காணுமாறு தன்னிடம் கவர்ந்திழுக்கும் பெரும் செல்வம் அது.


அச்செல்வத்தை பெறுவதற்கென்றே காப்பீடு செய்வதானால் அதுவே உண்மையான அர்த்தத்தில் காப்பீடாகும். அப்பெரும் செல்வத்தை தான் அடைந்து பிறர்க்கும் அந்நிலையை காண்பிக்கவல்ல நேர்மையான ஓர் சத்குருவினிடம் அடைக்கலம் பெற்றால்தான் அது ஜீவனுக்கு உண்மையான காப்பீடாகும்.


Tuesday, March 15, 2022

ஒப்பற்றமஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு - பாகம் - 12(Oppatra Mahaapurushar Srirangamahaa Guru - Part - 12)

தமிழாக்கம்:  ஶ்ரீமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)





தமிழாக்கம்: திருமதி வனஜா


மஹாகுரு பரிசோதனையின் மூலம் நிரூபித்த பேருண்மை:


 ஒருமுறை அவருடைய கிராமத்திற்கு வந்த  உறவினர்களை தம் தோட்டத்திற்கு அழைத்து சென்றார். மூலிகைகளின் பெருமையை  உணராத  ஒரு உறவினர் வழியில்  மூலிகைகளை பற்றி ஏளனம் செய்து வந்தாராம். இதை கண்டு ஸ்ரீகுருவின் நெருங்கிய உறவினரான ஸ்ரீதாதாசார்யார் அவருக்கு  தக்க பாடம் புகட்டவேண்டுமென குருவை கேட்டுக்கொண்டார்.  வழியில் கண்ட ஒரு மூலிகையை  சுட்டி காட்டி  ஸ்ரீகுரு 'இது கிடைத்தற்கரியது நன்றாக மென்று சுவையுங்கள்'  என்று  தாதாசாரையும் மற்றொறுருவரையும் தவிர அனைவருக்கும் கொடுத்தார். மூலிகையை பழித்த அந்த நபருக்கும் கொடுத்தார். பிறகு  தென்னந்தோப்பில் நுழைந்து  இளநீர்காய்களை பறிக்க செய்து  அனைவருக்கும் கொடுத்தார். மிகவும் இனிப்பானது என்று அனைவரும் அறிந்திருந்த அந்த இளநீர் அன்று எந்த சுவையும் இன்றி சப்பென்று  இருந்ததாம்.அதை  பருக முடியாமல் அனைவரும் உமிழ்ந்து  விட்டனர்.  தாதாசார் மட்டும் மகிழ்ச்சியுடன் சுவைத்தார். மற்றொருமுறை  வழங்கிய  போதும் சப்பென்றிறுந்ததை அறிந்து  அனைவரும் திடுக்கிட்டு தடுமாறினராம். இது அந்த மூலிகையின் மகிமையாக இருக்கலாம் என்று தாதாசார் கூறிய கருத்தை அந்த நபர் மட்டும்  ஒப்புக்கொள்ள தயங்கினார்.

  'கும்பலோடு கோவிந்தா' என்று கூறும் இயல்புடையவராக இருந்த மூலிகையை சுவைக்காத நபர் தன்னுடைய உண்மையான அநுபவத்தை கூற பயந்து மற்றவர்கள் உமிழ்வதை கண்டு தானும் துப்பினார். ஸ்ரீகுரு நகைசுவையுடன்  'என் கணக்கு  சரியாகிவிட்டதப்பா' என்று கூறினார். 

 பிறகு ஸ்ரீகுரு எல்லோரும் வீடு திரும்புமுன் மறுபடியும் இளநீரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.  காலம்கடக்க நாவின் சுவை மாறி இனிப்பை உணரும்படி செய்து எல்லோருக்கும் மகிழ்ச்சியை அருளினார். மதுவிநாசினி மூலிகை நாவின் இனிப்பை உணரும் சுவைமொட்டுக்களை தற்காலிகமாக உணர்விழக்க செய்கிறதென்பதையும் விளக்கினார்.


இந்த பரிசோதனையின் மூலம் வெளிப்படுத்திய உண்மை:

 மதுவிநாசினிமூலிகையை போல் நம் மனதில் இறைவனைப் பற்றிய இனிமையான அநுபவங்களை மறைக்கும் தீயகர்மாக்களை நாம் பல பிறவிகளிலிருந்து சேமித்து வந்திருப்பதால்தான்  இறையனுபவம் நமக்கு ஏற்படுவதில்லை. ஆன்றோர்கள் எடுத்துரைத்தாலும் புரிவதில்லை.  இந்த மூலிகையின் பயனால் இனிப்புசுவை மறைந்தாலும் மற்ற சுவைகளையெல்லாம் நாவால் உணர இயலுவதுபோல் ஒருவன் உலக விஷயங்கள் அனைத்தையும்  அநுபவிக்கும்தன்மை பெற்றிருந்தாலும்  கர்மகதியினால் இறையனுபவத்தை மட்டும் உணர இயலாதவனாகிறான் எனும்பாடத்தை  உறுதிபடுத்தினார்.

(தொடரும்)