கல்வியில் தேர்ச்சி பெறுதல், நல்ல வேலைவாய்ப்பு கிட்டுதல், மக்கட்பேறு போன்ற நல்ல சந்தர்ப்பங்களில் இனிப்பு பதார்த்தங்களை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வழக்கம் பொதுவாக கடைபிடிக்கப் படுகிறது. இனிப்பு என்றவுடனே நாவில் இனிய ரசம் உற்பத்தி ஆகிறது. குழந்தைகளுக்கு் மிகவும் பிரியமானது. இனிப்பு இல்லாத நல்லநாள், கிழமை, பண்டிகை போன்ற பேச்சுக்கே இடம் இல்லை. சந்தோஷத்துக்கும் இனிப்பு பதார்த்தங்களும் இப்படி ஒரு பலமான இணைப்பு என்?
சரியான அளவில் உட்கொண்டால் இனிப்பு மனதின் சந்தோஷத்தை அதிகரிக்க செய்கிறது. பொதுவாகவே சத்வ குணம் படைத்தவரகள் இனிப்பு பிரியர்கள் என்ற ரு பேச்சு உள்ளது. இந்த சத்வகுணமானது திருப்தி, நிம்மதி அளிக்கும் வல்லமை கொண்டது. அதனாலேயே இனிப்பும் சந்தோஷமும் ஒரே கூட்டு பறவைகள். நமக்குள் இறைவனின் தரிசனம் இணையில்லாத மகிழ்ச்சியை தரவல்லது என்பது ரிஷிகளின் வாக்கு. இனிப்பு நம் உடலில் உள்ள இறைமயங்களை திறக்கும் சக்தி பெற்றதுஎன்பதும் அவர்களின் அனுபவம். பகவத் தரிசனத்தால் உண்டாகும் ஆனந்தரஸாநுபாவத்திற்கு இனிப்பு பதார்த்தங்களின் நுகரச்சி மிக சமீபத்தில் உள்ளதை அறிந்தனர். ஆதலால் அன்றாட வாழ்க்கையில் சர்க்கரை, வெல்லம் மற்றும் தேன் போன்ற இனிப்பு பதார்த்தங்களை உபயோகிக்கும் செயல்முறையை தந்தருளினார்கள்.
இனிப்பு பதார்த்தங்களை நுகரவதால் உண்டாகும் ஆனந்தத்தைப் பன்று பலகோடி மடங்கு ஆனந்தம் பவத் ஸ்மரணம் மற்றும் தரிசனத்தல் உண்டாகும் என்பது நம் மஹர்ஷிகளின் அனுபவவாக்கு. இதை நினைவு படுத்தும் வகையில் பொங்கல்பண்டிகை(சங்கராந்தி) சமயத்தில் கர்நாடகம் முதலிய மாநிலங்களில் எள்ளுடன் சர்க்கரை அச்சில் செய்யப்பட்ட வெவ்வேறு வடிவங்களுடன் கூடிய பொம்மைகளை கொடுக்கும் வழக்கம் உள்ளது. குழந்தைகளும் தமக்கு குதிரை வேண்டும், யானை வேண்டும், புலி வேண்டும் என்று சொல்வது உண்டு. எனினும், கண்களை மூடிக்கொண்டு எந்த பொம்மையை சுவைத்தாலும், இனிப்பே உணரப்படும். அவ்வாறே பெயர் மற்றும் வடிவவேற்றுமை இருந்தபோதிலும் எல்லோருடைய உண்மை ஸ்வரூபம் அந்த இனிமையான பரமாத்மா மட்டுமே என்பதை
ஸ்ரீரங்கமஹாகுரு நினைவு படுத்தியுள்ளார். எனவே நாம் இனிப்பு பதார்த்தங்களை நுகரும் போது அந்த நிஜமான இனிப்பான பரமாத்மாவின் நினைவுடன் சுவைப்போமாக என்று பிரார்த்திப்போம்.
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.