Tuesday, March 1, 2022

ஒப்பற்றமஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு - பாகம் - 10 (Oppatra Mahaapurushar Srirangamahaa Guru - Part - 10)

 தமிழாக்கம்:  ஶ்ரீமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




தமிழாக்கம்  : திருமதி ஜானகி


கலாச்சாரம் - நாகரீகம்:

               வித்யையின் உருவமான புத்தி எனும் நதி தொன்றுதொட்டு பெருக்கெடுத்தோடி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு தேசங்களில் மனித வாழ்கைக்கு பலவிதமான உருவங்களை கொடுத்திருக்கிறது. இதுதான் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் என கூறப்படுகிறது.

கலாசாரம் மற்றும் நாகரீகம் எனும் சொற்கள் சில நேரங்களில் ஒரே பொருளுள்ளவைகளாகவும் வேறு சில நேரங்களில் வெவ்வேறு பொருளுள்ளவைகளாகவும் உபயோகப்பட்டுவருகின்றன. மஹாகுரு இச்சொற்களின் பொருளை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.


ஶ்ரீரங்கமஹாகுரு உண்மையான அர்த்தத்தில் கலாச்சாரத்தின் பொருளை உணர்ந்த மகானாக விளங்கினார்.


          பூரணஞானம் நிறைந்த நிலையில் வாழ்க்கையின்  உள்ளும் புறமும் பற்றின அவரது கண்ணோட்டம் பழமையான பாரத மஹரிஷிகளின் கண்ணோட்டத்திற்கு சமமானதாக விளங்கியது. நெடுந்தவத்திற்கு பின் அவர்கள் வாழ்கையின் உன்னதமான மதிப்பை பற்றி எந்த தீர்மானம் கொண்டிருந்தனரோ அதுவே மஹா தபஸ்வியான ஶ்ரீரங்க குருவின் தீர்மானமும் ஆகியிருந்தது.


மஹாகுரு வழங்கிய கலாசாரம் மற்றும் நாகரீகத்தின் அடிப்படை:

             கலாச்சாரம் என்பது உயிரோடு ஒன்றி இருக்கும் தர்மமாகும்(தன்மை). அதுவே  நடைமுறையில்  வெளிப்படும்பொழுது நாகரீகம் எனப்படுகிறது. பரிபூர்ண ஞானத்தை அடைந்தபொழுது ஏற்படும் உள்நோட்டம், உள்உருவம், உள்செயல்கள், உள்உணர்வுகளை பாரதத்தின் கலாச்சாரம் என்று கூறினால் அவைகளின் இனிய நினைவுகளை கொடுக்கும் வெளிப்பார்வை, வெளிஉருவம், வெளிச்செயல்கள், வெளி உணர்வுகளை நாகரீகம் என கூறலாம். ஒன்று வெளிக்கண்களால் காண்பதற்கரியது. மற்றொன்று காணக்கிடைப்பது. ஒன்று உணர்வு மற்றொன்று அதனின் வெளிப்பாடு. ஒன்று விதையைப் போன்றது, மற்றொன்று அதன் மரத்தை போன்றது. ஒன்று ஜீவனின் மூலத்தில் இருப்பதாகவும், மற்றொன்று புலன்கள், உடல் முதலியவற்றின் செயல்பாட்டிற்கு சேர்ந்தபடியாக வெளிப்படையாகவும் உள்ளது.


 இன்னும் பொருத்தமாக கூறுவதானால் விதைக்கும், மரத்திற்கும், மரத்தின் வேரிற்கும் பின்னால், அணுவாக இருக்கும் தர்மம் கலாச்சாரமாகும். அது தன்னை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்திக் கொள்ளும் போது அதுவே நாகரீகமாகிறது. எது சிறப்பாக செய்யப்பட்டுள்ளதோ அதை மஹாகுரு கலாச்சாரம் என்பதாக  அறிந்தார்.


 கலாச்சாரம்(ஸம்ஸ்க்ருதத்தில் 'ஸம்ஸ்க்ருதி') எனும் சொல்லிற்கு  'நன்றாக செய்யப்பட்டது' என்பதே பொருள்.