ரங்கஸாமி கிராமத்தின் அமைதியான சுற்றுப்புற சூழலில் வளர்ந்து தன் முதற் கட்ட பள்ளி படிப்பை அருகாமையில் இருந்த ஒரு கிராமத்தில் முடித்து தேற்சி பெற்றார். சில காலம் நஞ்ஜனகூடில் படிப்பை தொடர்ந்தார். ஆனால் வீட்டில் பெரியவர்களின் உடன்பாடு இல்லாததால் சொந்த கிராமத்திற்கே திரும்பி வந்தார்.
ஆனாலும் இது எதுவும் அவருடைய மனம் மற்றும் அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கு தடையாகவில்லை. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவராக இருந்தார். பிறர் அறிய முடியாததையும் பார்த்து அறியக்கூடிய திறமைகொண்டிருந்தார். திடகாத்திரமான சரீரமுடையவராகத் திகழ்ந்தார். தென்னை மரம் ஏறுவதில் அவருடைய திறமை மிகவும் அபாரமானது. பத்து பன்னிரெண்டு வயதிலேயே வெவ்வேறு விதமாக தென்னை மரம் ஏறி பிறர் கண்டு ஆச்சரியப்படும் அளவில் சாகஸம் செய்பவராக விளங்கினார். அத்தகைய ஓர் நிகழ்ச்சி -
ஒரு நாள் உறவினரின் தென்னந்தோட்டத்திற்குள் குரங்குகளின் படை புகுந்தது. அங்கிருந்த பலரும் சேர்ந்து அவைகளை விரட்டினர். ஆனால் ஒரு சிறிய குட்டி மட்டும் உயரமான ஒரு மரத்தின் நடுவில் கல்லடிக்கு தப்பித்து அமர்ந்திருந்தது. எவ்வளவு முயன்றும் அதை விரட்ட முடியவில்லை. முடிவில் மரத்தில் ஏறி அதனை பிடிக்க நிச்சயித்து அப்பொறுப்பு ரங்கசாமியிடம் கொடுக்கப்பட்டது. அவரும் மரம் ஏறி அதை பிடிப்பதற்கு கை நீட்டியவுடன் குட்டி அருகில் இருந்த ஒரு சிறிய தென்னை மரத்திற்கு தாவியது. ரங்ஸாசாமி முன் பின் யோசியாமல் தானும் அம்மரத்திற்கு தாவி அதை பிடித்தே விட்டார்! 2 மரங்களுக்கும் இடைவெளி 20-25 அடிகள் !!
( தொடரும்)