தமிழாக்கம்: ஶ்ரீமதி ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
ஶ்ரீரங்க மஹாகுரு அபாரமான நீச்சல் திறமை உள்ளவராக திகழ்ந்தார். இயற்கை கற்று தரும் பாடங்கள் அனைத்தையும் கற்றுணர்ந்தார். பறவைகள், விலங்குகளின் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்தவர். அவைகளை போலவே தானும் குரல்கொடுக்கும் திறமை கொண்டிருந்தார். முறையாக சங்கீதம் பயில கிராமத்தில் வசதி இல்லாத போதும் அக்கலையை இயற்கையாகவே அடைந்திருந்தார். அவருடைய தாய் வழி பாட்டனார் சங்கீதத்தில் சிறந்து விளங்கினார் என்று கேள்வி பட்டிருக்கிறோம். சித்திரங்கள் வரைவதிலும் நகைச்சுவையிலும் தலை சிறந்து விளங்கியவர். அவருடைய இக் கலைகளைப்பற்றி விரிவாக பின் வரும் இதழ்களில் காணலாம்.
சில உறவினர்கள் கூறியதின் பேரில் இவர் மைசூர் சம்ஸ்கிருத பாடசாலையில் சேர்ந்தார். அங்கும் அவர் தனக்கே உரிய முறையில் பாடங்களை கற்றார். யோகாசனங்கள் செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்ததால் அங்கு உள்ள யோகசாலையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
ப்ரஹ்மசர்யம் எனும் சொல் ஆத்ம ஞானம் அடைவதை குறிப்பதாகும்.அவ்வாறு ப்ரஹ்மசர்ய விரதத்தை முறையாக நடத்தி ஆத்மஶ்ரீயை தனக்கு உரியவளாக செய்து கொண்டார் ஶ்ரீரங்க மஹா குரு. விரைவிலேயே அந்த ஆத்ம ஶ்ரீயே உலகில் உருவெடுத்து வந்ததோ என்பது போல தானும் ஆத்ம யோகத்தை பரிபூர்ணமாக சாதிப்பதற்கு தேவயான தெய்வீக தன்மை கொண்ட விஜயலக்ஷ்மி எனும் ஒரு கன்னிகையை 1933ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி மணம் புரிந்து கொண்டார்.
(தொடரும்)