Thursday, August 12, 2021

நம்பிக்கையுடன் வாழ்வோம் (Nambikkaiyudan vazhvom)

மூலம்: கே.எஸ். ராஜகோபாலன்

தமிழாக்கம்: ஸி.ஆர். ஶ்ரீதர்

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in) 



        மகாபாரதத்தைப் பற்றி ஒரு பேச்சு வழக்கில் உள்ளது. ‘ இதில் என்ன உள்ளதோ அதுவே தான் மற்ற இடங்களிலும் இருக்கும். இதில் என்ன இல்லையோ அது வேறெங்கும் இருக்காது’ என்று. ஆம். ஒரு  லக்ஷம் ச்லோலகங்களோடு கூடிய மகாபாரதத்தில் உள்ள நிகழ்ச்சிகள், உபகதைகள் மற்றும் தத்துவ உபதேசங்கள், இவற்றைப் பார்த்த எவருக்கும் இந்த பேச்சு உண்மையல்ல என்றிறாது. ஆகையால் வாழ்ககையில் நமக்கு கஷ்டம் என்பது வந்தபொழுதாவது ஒரு முறை மகாபாரதத்தைப் படித்தேயாகவேண்டும். அதில் ஏதோ ஒரு இடத்தில் நமக்கு தேவையான தேறுதல் வார்த்தையும், நற்பணிக்குத் தேவையான  தைரியம்  என்னும் ஊன்றுகோலும் கிடைக்கப் பெறும்

        பாண்டவர்கள் சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழந்தது புகழ் பெற்ற
கதை. பாண்டவர்கள் தர்மத்தின் வழி நடப்பவர்கள் ஆனாலும் சூதாட்டத்தில்
இறங்கி வாழ்க்கை முழுதும் கஷ்டத்தில் உழன்றார்கள். நம்  வாழ்விலும்
இவ்வாறு நாம் செய்யும்  ஏதோ ஒரு தவறு, கஷ்டங்களை சரமாரியாக தரலாம்.
தர்மத்திற்கு கட்டுப்பட்டு  காட்டிற்கு  சென்றாலும் பாண்டவர்களுக்கும்
தோன்றியது- தங்களைப் போல யாரும் கஷ்டப்பட்டதில்லை-என்று.
அப்பொழுது காட்டில் இருந்த ரிஷிகள்  இவர்களை பல  விதமாக 
ஸமாதானப்படுத்தினார்கள். நள மஹாராஜனின் கதை, ஸாவித்ரியின்
வரலாறு முதலியவற்றை கூறினார்கள். அப்பொழுது பாண்டவர்கள்
அறிவுற்றார்கள் - தங்களை விட கஷ்டப்பட்டவர்கள் கூட எத்தனையோ பேர்
உள்ளனர் -  என்று. அவர்கள் காட்டில் உள்ள போது இருந்த  நிலையை
யோசித்தால் அவர்களுடைய எதிர்காலம் தெளிவற்றதாகவே இருந்தது. ஒரு
வேளை அக்ஞாதவாஸத்தில்  அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால்
அவர்களுடைய வாழ்க்கை மறுபடியும் தாங்கவொண்ணாத கஷ்டத்திற்கு
உள்ளாகி இருக்கும். ஆயினும் அவர்கள் தைரியத்தை
வரவழைத்துக்கெண்டதாலேயே பெரிய சேனையை ஒன்றுகூட்டி 
கௌரவர்கள் அனைவரையும் அழித்து தர்மமுள்ள  அரசை நிலைநாட்ட முடிந்தது. இறைவன் தனதேயான ஒரு கணக்கின்படி  க்ருஷ்ணனின்
உருவத்தில் தன்னுடைய உதவிக் கரத்தை அவர்களுக்கு அளித்தார்.
இயற்கையாக வீர க்ஷத்ரியர்களுக்கு உள்ள  உடல் பலம், மனோ
பலங்களல்லாது க்ருஷ்ணனிடம்  அவர்களுக்கு இருந்த நம்பிக்கை,
பாண்டவர்களை, அவர்களின் மன அழுத்தத்திலிருந்து மேலெழுமாறு
செய்தது.

        கடவுளை நம்பியவன், தான் எண்ணியவாறு அவர்
காப்பாற்றவில்லையாயினும், பின்னால் வரும் ஏதோ நல்லதற்காகவே தன்
கஷ்டங்கள் இன்னும்  ஓயவில்லை என்று நம்புகிறான். கடவுளின் மீது
பாரத்தை இறக்கியவனின் மனது, முதலில் லேசாகின்றது. அப்பொழுது எந்த
ஒரு காரியத்தை முடிப்பதற்கும்  அவனால் மேலும் முயற்ச்சி செய்ய
முடிகின்றது. கடவுளை நம்பி நம் சுய முயற்ச்சியை கைவிட வேண்டுமென்று  
நம் பண்டைய வரலாற்றில்  எங்கும் கூறப்படவில்லை. கவலைக்கிடமானவன்
பீமனைப் போன்ற சக்தி படைத்தவனாக இருப்பினும் மனமுடைந்து 
விடுவான். ஆகையால் கஷ்டத்திலிருப்பவனின் சுற்ற  தாரும் நண்பர்களும்
அவனிடம்,  இறைவன் மீது  நம்பிக்கை வைக்குமாறு  அறிவுறுத்த வேண்டும்.
கஷ்ட காலத்தில் நாங்கள் உதவிக்கு இருக்கிறோம் என்னும் தைரியத்தை
அவனுக்கு அளிக்க வேண்டும்.

       போர்க்களத்தில் உள்ள ஒரு போர்வீரனின் மன நிலையிலிருந்து  நாம் பாடம்
கற்கலாம். மரணத்திற்கு அஞ்சாமல் இருப்பதால்தான் அவனால் தேசத்திற்காக
போரிட  முடிகின்றது. நோயாளிக்கு மரணம் நெருங்கிவிட்டது என்று  அறிந்தும்
ஒரு  நல்ல வைத்தியன் நோயாளியின் கடைசி மூச்சு உள்ள வரை வைத்தியம்
செய்துகொண்டே இருப்பான். அவ்வாறே ஒரு காரியத்தில் கடைசி நிமிடம்
வரை நமக்கு தெரிந்த அளவுக்கு முயற்சி செய்ய வேண்டும். கவலை
இருப்பவன் ஒவ்வொரு கணமும் இறந்துகொண்டிருப்பான். தைரியமிருப்பவன்
ஒரு முறை மாத்திரம்  இறப்பான். இறப்பு தவிர்க்க  முடியாத ஒன்று என 
அறிந்தும்  கடைசி நிமிடம் வரை தம் சுற்றிலும் உள்ளவர்களை ஸந்தோஷமாக
வைத்துக் கொண்டிருந்தவர்கள் உள்ளனர். தம் திட மனத்தினால்  மரணத்தை
வருஷக்கணக்கில் தாமதிக்கச் செய்தவர்கள் உள்ளார்கள். இத்தகைய
மனோதிடம் நமக்கு வரட்டும் என்று இறைவனை வேண்டுவோம். ‘வந்தது
வரட்டும், கோவிந்தனின் தயவு நிலைக்கட்டும்’ என்னும் தைரியம், நம்பிக்கை
நம்முடையதாகட்டும்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.