Thursday, September 17, 2020

நட்பின் பயன்(Natpin payan)

மூலம்: கே.எஸ். ராஜகோபாலன்

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



`ஒரு மனிதன் யாருடன் பழகுகிறான் என்பதன் மூலம் அறியப்படுகிறான்' என்னும் சொல் வழக்கு கீழ்காணும் கதையில் விவரிக்கபடுகிறது. ஒரு கிளிக்கு இரண்டு குஞ்ஜுகள் இருந்தன. ஒருமுறை  ஒரு வேடன் அவற்றை பிடித்து விற்பதற்காக கொண்டு சென்றான். நற்பயனின் பலனால் ஒரு குஞ்ஜு அவனிடமிருந்து   தப்பி ஒரு பர்ணசாலையை அடைந்தது. வேடன் மற்றொரு குஞ்ஜை ஒரு கசாப்புகடைகாரனிடம் விற்றான்.  இரண்டும் தங்கள் இருப்பிடங்களில் வளர்ந்தன. ஒருமுறை ஒரு வழிபோக்கன் கசாப்பு கடைகாரனின் இல்லத்தை கடந்து செல்லும்போது அங்கிருந்த கிளி 'ஏய், நீ யார்?' என்று கேட்டு தகாத வசைசொற்களை கூறியது. அவன் அவ்வீட்டை கடந்து பர்ணசாலையை அடைந்தான். அங்கிருந்த கிளி வணக்கம் கூறி வரவேற்றது. அவன் நலன் குறித்து மென்மையான இனிய குரலில் வினவியது. இரு பறவைகளின் தாய் ஒன்றே ஆயினும் அவற்றின் சொற்களும்  அணுகுமுறையும் நேர்மாறாக இருந்தன.

குழந்தைகளின் மொழி, பழக்கவழக்கங்கள், நடத்தை முதலியவை அவை வளரும் சூழலை பொறுத்தே   அமையும் என்பதை இக்கதை அழகாக விளக்குகிறது. ஸ்ரீரங்கமஹாகுரு இவ்வாறு எச்சரிக்கிறார்:  'வளரும் குழந்தையின் மனம் கொடி  போன்றது. அது படரும் திசையில் வளரும். சில தாய்மார்கள்  வளரும் குழந்தைகளின் மனதை சரியாக வழிநடத்த இயலாதவர்களாக இருப்பது வருந்தத்தக்கது. ஒரு காலத்தில் நம் நாட்டின்  சிறந்த முனிவர்கள் இறைவனையே வாழ்க்கையின் மையமாகக்கொண்டு பண்பாட்டையும், நாகரீகத்தையும் வளர்த்தனர். இது நம் நாட்டிற்கு மட்டுமே உரியது. சமூகத்திலிருந்த  மூத்தவர்கள் முனிவர்கள் வகுத்த பாதையை பின்பற்றினர். அவ்வாறே வளரும் பருவத்தினர் சமூகத்தில் மூத்தோரை கவனித்து பின்பற்றி  தாமாகவே அப்பண்பையும், நாகரீகத்தையும் வளர்த்துக்கொண்டனர். சமீபகாலம் வரை தங்களிடம் உள்ளதைக்கொண்டு நிறைவான மனத்துடன் வாழ்ந்தவர்கள் இருந்தனர்.  இதை விளக்க என் அனுபவத்தை பகிர விரும்புகிறேன்.

வைதிக கார்யங்களுக்காக ஒரு  புரோகிதர் என் இல்லத்திற்கு வழக்கமாக வருவார். அவர் குறைந்த வருமானமுள்ள பள்ளி ஆசிரியர். சடங்குகள் முடிந்தவுடன்  எவ்வளவு சன்மானம் தர வேண்டுமென்றால் 'உங்கள் விருப்பம். இறைவன் எனக்கு த்ருப்தி அளித்துள்ளான்என்பார். அவரை போன்றோர் நம்மை சுற்றி சமூகத்தில் இருப்பின் நம்  குழந்தைகள்  அவர்களைப் பின்பற்றி உயர வாய்ப்புகள் அதிகம். வளரும் குழந்தைகளிடம் உள்ள சிறந்தவற்றை  வெளி கொணர நம் கல்வித்திட்டத்தை உடனடியாக  மாற்றியமைக்க வேண்டியது அவசியம். சிறந்த மனிதர்கள்தன்னலமற்ற மனிதர்கள்தேசபற்று மிக்கோர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கபட வேண்டும். தங்கள் குழந்தைகள் மற்றவர்களைவிட முன்னணியில் இருக்க வேண்டுமென பெற்றோர் விரும்புவது இயல்பே. எனவே பிள்ளைகள் பள்ளிவீட்டுப்பாடம்தனியார் பயிற்சி எனும் சுழலில் சிக்குகின்றன. இந்திய கலாசாரத்தையும்பண்டை காலத்தின் உயரியபெருமைகளையும் மீண்டும் அறிமுகப்படுத்த மக்கள் உலகாயத செயல்களுடன் இறைபக்தியையும் வளர்த்து கொண்டு நடு நிலையுடன் வாழ  அறிவுறுத்த வேண்டும்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.