Thursday, June 25, 2020

நான் சிங்கம், நரியல்ல (Nan Cinkam, Nariyalla}

மூலம் : தரோடி சுரேஷ் 

தமிழாக்கம்: ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




சிங்கம் ஒன்று உணவுக்காக அலைந்து திரிந்தது. அவ்வாறு திரியும்  போது  ஒரு ஆச்சரியமான  காட்சியை  கண்டது. சிறிது  தூரத்தில்  நரிகளின் கூட்டம் சுற்றம்‌புடை சூழ சென்று கொண்டிருந்தது. கூட்டத்தின்  தலைவன், தலைவி மற்றும்  மக்களுடன் உல்லாசமாக ஆடிக்கொண்டு  சென்றது. இவ்வளவே ஆயின் ஆச்சரியம் ஏதும்  இல்லை. ஆனால்  இக் கூட்டத்தில்   ஒரு சிங்ககுட்டியும் சேர்ந்திருந்தது. அதுவும்  கூட்டத்துடன் கலந்து  நரிகளைப் போன்றே நடந்து கொண்டது. நரிகளப்போன்றே ஆடி குதித்து  கூவிக் கொண்டிருந்தது. அவைகளின் உணவையே உண்டு இன்புற்றது. நரிகளின்  தாய்  தந்தையையே தன்  பெற்றோர்  என கொண்டது.


சிங்கம்  ஒரு முறை  கர்ஜித்தது. நரிகள் ஓடி ஒளிந்தன. சிங்கக்குட்டியும் ஓடத்தொடங்கியது. அப்போது  சிங்கம்  நீ ஏன்  ஓடுகிறாய்? நீ என் வம்சத்தை  சேர்ந்தவன்  என உணர்த்த முயற்சி  செய்தது. ஆயினும் குட்டி சிங்கத்திற்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அது  பயந்து  தன்னை விட்டு  விடும்படி கண்ணீர்  பெருக்கியது. அப்போது சிங்கம் யோசித்து ஓர் உபாயம் செய்தது. அந்த  சிங்கக்  குட்டியை வலுக்கட்டாயமாக பக்கத்தில் உள்ள ஒரு  ஏரிக்கு  அழைத்து சென்றது. தண்ணீரில் முதலில்  தன்னுடைய  ப்ரதிபலிப்பை காட்டியது. பின்  குட்டிக்கு  அதனுடைய ப்ரதிபலிப்பை காட்டியது.  சிங்ககுட்டியும் மிகவும்  ஆச்சரியத்துடன் கவனித்தது. அடுத்த கணம் கானகமெங்கும் எதிரொலிக்குமாறு கர்ஜித்தது "அஹம் சிம்ஹோஸ்மி " - நான் சிங்கம், நரியல்ல.


இக்கதையின் நீதி  என்ன?ayvm


மனிதன்  தன்னுடைய  மேன்மையை மறந்துவிட்டான்.  தான் மற்ற  உயிரினங்களைப் போன்றவனல்ல என்பதை அவனுக்கு  உணர்த்த  வேண்டும். மனித உடலில் இரண்டு வித வாழ்க்கை (புலன் சார்ந்த மற்றும் புலன்களுக்கு அப்பாற்பட்ட) வாழ்வதற்கும் வழி உண்டு எனும் பகுத்தறிவை உணர்த்த வேண்டியுள்ளது. மனித உடலில் பரம்பொருளை அடையும் அமைப்பு உண்டு என ஸ்ரீரங்க மஹாகுரு உரைத்துள்ளார். அவ்வாறான நினைவுடன் சாதனை புரிந்தால் அவனுக்கு ஏற்படும் நன்மை என்ன? முதன் முதலில்  உலகுக்கே தந்தையான தேவ தேவனின் தரிசனம். அந்த தரிசனத்தினால் உண்டாகும் பேறின்பம். அவ்வாறில்லை எனில் மனித  உடல் எனும் கிடைத்தற்கரிய சாதனம் வீணாகும். அடுத்து வரும் பிறவிகளில் மனித பிறவி உள்ளதோ இல்லையோ?


அவ்வாறே நம் மூல ரூபமான இறைவனை மறந்தது போன்று சிங்ககக்குட்டியும் தான் சிங்கம் என்பதையே மறந்திருந்தது. காரணம் எந்நேரமும் நரிகளின் நட்பு. எப்போது பெரிய சிங்கம் நினைவூட்டியதோ அப்போது "ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா" எனும் தன்னுடைய நிஜரூபத்தின் அறிவு உண்டாயிற்று. நம் வாழ்கையிலும் நம் மூல ரூபம் இறைவன் என்பதை மறந்து விட்டோம். அவதார புருஷர்கள், ஞானிகளின் வழி நடத்தலுக்கு உட்படும்போது அமரத்துவத்தை அடைந்து உய்ய முடியும். "அஹம் ப்ரஹ்மாஸ்மி" எனும் கோஷம் நம்மிடமிருந்தும் வெளிப்படும். இஹ-பர வாழ்க்கை எனும் இரு வழிமுறைகளையும் உணர்ந்த மகான்களின் ஈர்புக்கு தலை வணங்கி நடந்தால் வாழ்க்கை பயனுள்ளதாகும்.



குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் 
AYVM blogs ல் காணலாம்.