Thursday, October 29, 2020

ஆத்திகன் – நாத்திகன்)

மூலம்: தாரோடி  சுரேஶ்

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
'அது உண்டுஎன்று கூறுவோர் ஆத்திகர்கள்(நம்புபவர்கள்). 'அது இல்லைஎன மறுப்பவர்கள் நாத்திகர்கள்(நம்பாதோர்). இத்தகு சொற்கள்   சாதாரணமாக புழக்கத்தில் உள்ளவை. மக்கள் 'நான் நம்புகிறேன்' அல்லது 'நம்பவில்லைஎன்கையில்  எதை குறிப்பிடுகின்றனர்உண்மையில்  நம்புவோர் 'அது உண்டுஎன கூறுகையில் இறைவன் இருக்கின்றான் என நம்புவதாக பொருள். அல்லது 'அது இல்லைஎன வாதிடும் போது அவர்கள் இறைவன் உண்டு என்பதை நம்பவில்லை எனபொருள். யாருடைய கூற்று உண்மைஇறைவன் உண்மையில் இருக்கின்றானா அல்லது மாயத்தோற்றமாஇத்தகைய வினாக்கள் எழுவது இயற்கையே. நம்புபவர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதால் மக்களாட்சி முறையை பின்பற்றி, "பெரும்பான்மையான மக்களின் கூற்று 'இறைவன் இருக்கின்றான்என்பதனால் அவன் உள்ளான் என தீர்மானிக்கலாம். அவன் பற்பல பெயர்களால் அழைக்கப்படலாம்.  அது முக்கியமல்ல.  அவன் இருக்கிறான் என்பதே சிறப்பு" என்று கூறுவதா?.

பின் அவன் இருப்பை தீர்மானிப்பது எங்ஙனம்? புலன்களின் மூலம் அறிய இயலாததை புலன்களுக்கு அப்பாலுள்ள  சாம்ராஜ்யத்திற்கு செல்வதன் மூலமே உணரவேண்டும். அத்தகைய தகுதி பெற்றவர்கள் அதனை புலன்களுக்கு அப்பாற்பட்ட 'யோகத்ருஷ்டி(பார்வை)'  என விவரிக்கின்றனர்.  இத்தகு பார்வையை கடுந்தவத்தால் அல்லது குருவின் அருளால் மட்டுமே பெற இயலும். புற கண்களால் காண இயலாததை நுண்ணோக்கியின்(பூதக்கண்ணாடி) மூலம் காணலாம் என்பது உண்மையன்றோஅக்ஞேயவாதிகள்(அஞ்ஞானிகள்)  'அது அவரின் மாய தோற்றம்மடமை' எ வாதிடலாம். 'உளது' எனில் புலன்களால் உணர இயல வேண்டும் என வாதிடுவர். 'இல்லாத ஒன்றை தேடுவது வீணானது. நம் வாழ்நாள் முழுதும் தேடி  இறுதியில் அது இல்லை என்று கண்டறிந்தால் நம் வாழ்க்கை வீணாகுமன்றோஎன்று நம்பாதவர்கள் புலம்புவர். இன்றைய விஞ்ஞானமும் இவ்வாதத்தை ஒப்புக்கொள்வதில்லை. ஆராய்ச்சியே வீணானதென்றால் இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சியே இயலாது அல்லவா?.

ஸ்ரீ ஸ்ரீரங்கமஹாகுரு மக்களை நான்கு வகையாக பிரித்துக்கூறியுள்ளார். "ஆத்திக—ஆத்திகர்", "ஆத்திக--நாத்திகர்", "நாத்திக--நாத்திகர்" மற்றும் "நாத்திக—ஆத்திகர்."

முதல் பிரிவினர் இறைவன் இருப்பதை ஒப்புக் கொள்வதுடன் அவரை தம் இக-பர வாழ்விலும்  ஒருங்கிணைத்துக்கொள்வர். அவர்  அதன் இருப்பை அனுபவத்தில் உணர்ந்து அறிந்து கொண்டவர்.

இரண்டாம் பிரிவினர் இறைவன் இருப்பதை உள்ளத்தில் உணர்ந்தாலும் வெளியே இல்லை என்று கூறுவர். ஒற்றை கண்பார்வையுடையவர்களின்  அரசாட்சியில் தன்  பாதுகாப்பிற்காக ஒரே கண்பார்வை உள்ளபடி நடிக்க வேண்டும். ஒரு கண்ணில் பார்வையுள்ள அரசன் தன் குடி மக்களும் அவ்வாறே இருக்க வேண்டுமென விரும்புவதில் வியப்பேதுமில்லையே. அவ்வாறு பாதுகாப்பிற்காக 'இல்லை' என்று கூறுவர்.

"நாத்திக--நாத்திகர்"  எனும் பிரிவினர் இறைவன் இருப்பதை ஒப்புக்கொள்வதில்லை. வெளி உலக வாழ்க்கையையும் வீணாகவே  கழிக்கின்றனர். ஆனால் இவர்கள் சொல்வதைப்போன்றே  நடந்து கொள்ளும்  நாணயமானவர்களாதலால் அவர்களுக்கு என்றாவது ஒரு நாள் உண்மையை புரிய வைப்பது இயலும்.  

ஆனால் மிகவும் அபாயகரமானவர்கள்  "நாத்திக—ஆத்திகர்'' என்ற பிரிவினர். மனதளவில் இறைவன் இருப்பதை ஒப்புக்கொள்ளாவிடினும் வெளிஉலகிற்காக நம்புவதுபோல்  நடிக்கின்றனர். நம்பிக்கை உள்ளவன் போல் காட்டிக்கொள்கின்றனர். அவர்கள் இறைஅனுபவத்தின் சுவையும், புலன்களுக்கு அப்பாற்பட்ட அனுபவமும்  இல்லாதவர்கள். அவர்களுக்கு தேவை "ஆத்திகன் " என்ற பட்டம் மட்டுமே. அவரிடம்  அறிவு சார்ந்த நேர்மையோ, உண்மையை அறிவதற்காக பாடுபடும் ஆர்வமோ இல்லை. நம்பிக்கை உள்ளவன் என்ற முகமூடி அணிபவர்கள். பல நேரங்களில் அந்த நடிப்பு வயிற்று பாட்டிற்காகவே  அமைந்திருக்கும். அறிந்தோ  அறியாமலோ  இத்தகைய மக்கள், சமூகத்தை வஞ்சித்து தவறான பாதையில்  வழிநடத்துகின்றனர்.
நாம் எப்போதும் இப்பிரிவினரிடம் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.

நேர்மையானவர்கள் தம் சொற்போன்றே  வாழ்க்கையில் நடந்து கொள்வர். அவர்களின் சொற்பொழிவு ஒருவரை உண்மையை நோக்கி கொண்டு செல்லும். ஆகையினால் நாம் 'ஆத்திக—ஆத்திகர்', 'ஆத்திகநாத்திகர்', 'நாத்திகநாத்திகர்' என்ற மூன்று நேர்மையான பிரிவினரையும் அவசியம்  வணங்க வேண்டும்.  

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.