மூலம்: வித்வான் நரசிம்ஹ பட்டா
தமிழாக்கம்: வனஜா
नैवाकृतिः फलति नैव कुलम् न शीलम् विध्यापि नैव न च यत्क्रुतापि सेवा ।
भाग्यानि पूर्वतपसा खलु सन्चितानि कालॆ फलंति पुरुषस्य यथैव व्यक्ताः ।।
सुभाषित-नीतिशतक- ೯೭
நைவாக்றுதி: பலதி நைவ குலம் ன ஶீலம் வித்யாபி நைவ ன ச உத்க்றுதாபி சேவா |
பாக்யானி பூர்வதபசா கலு சம்சிதானி காலே பலம்தி புருஷச்ய யதைவ வ்ய்க்தா: ||
பொழிப்புரை:
ஒரு மனிதனின் தோற்றம், வம்ச பாரம்பரியம், நற்குணங்கள், கல்வி அல்லது தன்னலமற்ற சேவை பலனளிக்காது. மரமானது தக்க பருவத்தில் கனிகளை அளிப்பது போன்று பண்டைய தவத்தின் பயனாக சேர்த்த நற்பலனும் தக்க தருணத்திலேயே பலனளிக்கும்.
விரிவுரை:
செழுமையான நிலத்தில் விதை விதைக்கிறோம். தண்ணீரும், உரமும், நன்கு வளர்வதற்கு தேவையான அனைத்தும் சரியான நேரத்தில் அளிக்கிறோம். சிறப்பான பயிறுக்கு தேவையான அனைத்தும் செய்யப்படுகிறது. இவ்வாறு செயலாற்றியும் நாம் கேட்கும்போதெல்லாம் பலன் கிட்டுவதில்லை. விதை வளர்ந்து மரம் கனி அளிப்பதற்கு இயற்கையே ஒரு காலவரையை ஏற்படுத்தியுள்ளது. மரமானது அதை மீறி நம் தேவைக்கேற்ப கனி அளிப்பதில்லை.
இவ்வாறே, ஒரு மனிதன் வலிமை, அழகு, நற்குணம் கருணை, கல்வி அனைத்திலும் இவ்வுலகில் ஒப்பற்றவனாக விளங்கலாம். எனினும் அவன் ஆற்றிய தவமும், மனித குலத்திற்கு அளித்த தன்னலமற்ற தொண்டும் மரமாக வளர்ச்சியடைந்து அதற்கேற்ற தருணத்தில் மட்டுமே பலனளிக்கும். அவன் எதிர்பார்க்கும் தருணத்தில் பலனடைய இயலாது. இதிலிருந்து அறியப்படுவது யாதெனில் நாம் அறிவுபூர்வமாக பெருந்தன்மையுடன் போராடி சேர்த்த கல்வி, குணங்களின் பலத்தால் பலனை நாம் விரும்பியபோது அனுபவிக்க இயலாது. செய்வினையை பொருத்தே பயன் கிட்டுமென்பது உறுதி. அது அதனுடையதே ஆன இயற்கை சுழற்சியிலேயே தோன்றும். எந்நே வினையின் வலிமை!
நாம் ஒரு செயலை செய்தால் (நன்மை அல்லது தீமை) அதற்குரிய பலனை அனுபவித்தே ஆக வேண்டும். இதை கருத்தில் கொண்டு விவேகியானவன் ஒரு செயலை நிறைவேற்றுமுன் நன்கு ஆராய்ந்து சரியான நல்வினைகளையே செய்யவேண்டுமென்பது இச்செய்யுளின் கருத்து.
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.