Thursday, April 29, 2021

அறம் எனப்படுவது யாது?(Aram enappaduvadu yadu?)

மூலம்: வித்வான் நரஸிம்ஹ பட்டா

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




தர்மாத் அர்த: ப்ரபவதே தர்மாத்ப்ரபவதே சுகம் |

தர்மேண லபதே ஸர்வம் தர்மஸாரமிதம் ஜகத் || ராமாயணம்

 

பொழிப்புரை:

அறத்திலிருந்து  திடப்பொருள்          தோன்றுகிறது.  இன்பம் அறத்தினின்று தோன்றுகிறது. அனைத்தும் அறத்தினின்று கிடைக்கப்பெறும்.  இவ்வுலகே அறத்தின் சாரம்.

           

 

விரிவுரை:

உலகின் சாரமாக கருதப்படுவதால்  அறம் முக்கியத்துவம் பெறுகிறது. தர்மம்(அறம்)  எனும் சொல் வடமொழியின் 'த்ரிங் தாரண-போஷணயோ:' (dhring dhaarana poshanayoh) என்பதிலிருந்து  பிறந்துள்ளது. அதாவது எது அனைத்தையும்  தாங்கிகாக்கிறதோ அதுவே தர்மம் எனப்படும். இவ்வுலகம் தர்மத்தால் பராமரிக்கப்பட்டுநிலைநிறுத்தப்படுவதால் அனைத்தும் தர்மத்தை குறித்தே அறியப்படும். எனவே தான் ஸ்ரீரங்கமஹாகுரு தர்மத்தின் உண்மையானசிறப்பான பொருள் பரம்பொருளே என்றார். தர்மத்தின் உண்மையான பொருளை அறிந்தால் மட்டுமே இதனை ஒட்டியுள்ள மற்ற அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்ள இயலும்.


            இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட இவ்வுலகம் அவனாலேயே பராமரிக்கபடுகிறது. இதனை கருத்தில் கொண்டு அவனையே பாதுகாவலனாக மதிப்பது  அவனது மேன்மைக்கு மேலும் மெருகூட்டுகிறது. இங்கு 'அர்த்தம்' என்பது திடப்பொருளை குறிக்கிறது. இந்நிலையில் "தர்மத்திலிருந்து திடவஸ்து  உண்டானது" எனும் சொற்றொடரின் பொருள் உலகம் எனும் வஸ்து  இறைவனால் படைக்கப்பட்டது என்பதேயாம். . மேலும் இறைவனே அனைத்தும் என உணர தலைப்பட்டால் வாழ்க்கையின் குறிக்கோளை அறிய முடியும். இதன் பின்னணியில் தர்மம் எனறால் நன்னடத்தைஇறைவனுடன் இணைவதற்கான வழி எனும்  இதர பொருட்களும் கூறப்படும். தர்மம் என்றால் இறைவன் என்று பொருள்கொண்டால் மட்டுமே மேற்கண்ட செய்யுளை புரிந்து கொள்ள இயலும்.


               மேற்கண்ட விவேகமுள்ள சொற்றொடரின் உட்கருத்து பின்வருமாறு:


          "திட வஸ்து இறைவனிடமிருந்து உருவாகிறது. இன்பம் பிறப்பது இறைவனிடமிருந்தே. அனைத்தும்  இறைவனிடமிருந்தே பெறப்படும். இவ்வுலகம் இறைவனின் சாம்"


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.