தமிழாக்கம்: ஶ்ரீமதி ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
இஶைஞானி ஶ்ரீரங்கமஹாகுரு : -
அநேக வித்வான்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் பாத்திரமாகி அவர்களால் பல்வேறு விதமாக அடையப்பட்ட சங்கீத கலையை ஶ்ரீரங்கமஹாகுரு தன் அந்தரங்க கம்பீரத்திற்கு ஏற்ற வகையில் அடைந்த கலாபுருஷனாக திகழ்ந்தார். அவர் சங்கீதத்தின் வெவ்வேறு பாகங்களில் உள்ள சிறப்பு அம்சங்கள் அனைத்தையும் முழுமையாக அறிந்து, அற்புதமான முறையில் இக்கலையை தன்வயப்படுத்தி கலா தேவியை ஆராதித்து சந்தோஷிக்கச் செய்த மஹா காந்தர்வ புருஷனாக விளங்கினார்.
இசைக்கலையின் நுணுக்கங்கள் :-
எந்த ஒரு பாடலையும் பாடுவதற்கு முன் அதன் முழுமையான பொருளை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சொல்லும் அதனதன் முழு உருவோடு தோன்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் கேட்பவர்க்கு அதன் உள்ளுணர்வு(பாவம்) புரிவது கடினம் என்பது அவரது கருத்து.
பரந்த கண்ணோட்டம், எல்லாவற்றிலும் கூர்மையான அறிவு மற்றும் ஆழ்ந்த அனுபவ திறமை கொண்டிருந்த மஹா குரு தான் அனுபவித்த ஆன்மிக உணர்வுகளனைத்தையும் ராகத்துடன் கூடிய இசை மொழியில் வெளிப்படுத்தி பிறரும் அதே உணர்வுகளை ரசிக்கும்படி செய்யும் திறமையுடன் திகழ்ந்தார்.
நமது உடலில் யோகமார்கத்தில் உள்ள சில குறிப்பிட்ட இடங்களை நம் மனம் ஸ்பர்சிக்கும் பொழுதுதான் மனதில் (ஆன்மீக முன்னேற்றத்திற்கு துணைபுரியும்) நவரசங்கள் உற்பத்தியாகின்றன; இந்த உண்மையை உணர்ந்த இவர் அவைகளின் உற்பத்தி ஸ்தானங்களை கண்டறிந்து அந்த அனுபவங்களை தான் உணர்ந்த பிறகு அதை அவ்வாறே வெளிக் கொணரும் திறமை கொண்டிருந்தார். உலகெலாம் நாத மயமானது எனும் ரகசியத்தை அறிந்த அவர் ஒரு பெரும் நாத விஞ்ஞானியாகத் திகழ்ந்தார் .
(தொடரும்)