ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 35
இறைவனுக்குஅவமதிப்பு
============================== =============================
இறைவனுக்குஅவமதிப்பு
==============================
மூலம்: வரததேசிகாசார்யார்
தமிழாக்கம்: வனஜா
“இறைவன் எங்கும் நிறைந்தவன். அணு, புல் பூண்டு எங்கும் நிறைந்தவனென்று மறையோர்கள் கூறுகின்றனர். இவ்வாறிருக்கையில் ஒரு கல் அல்லது உலோகத்தில் செய்த சிலையில் உள்ளதாக கருதி அவனை பூஜிப்பது அவமதிப்பல்லவோ?”
“இதில் இறைவனுக்கு என்ன அவமதிப்பு?”
“எங்கும் நிறைந்த பரம்பொருளை நம்போன்று கால-தேசங்களுக்க்கு உட்படுத்தினால் அது அவரை அவமதிப்பதல்லவா?”
“இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று கூறினீர்கள். எங்கெங்கும் உள்ளவன் கல்லிலும் உலோக விக்ரகங்களிலும் மட்டும் இல்லையா?”
“இருக்கிறான். அங்கும் உள்ளான்.”
“விக்ரகங்களை மட்டும் பூஜிப்பதில்லை. அவற்றினுள் இறை சக்தியை ப்ரதிஷ்டித்து அவற்றின் மூலம் இறைவனை பூஜிப்பதை கண்டதில்லையா?”
“கவனித்திருக்கிறேன். இறை சக்தியை சேர்ப்பதால் என்ன பலன்?”
“மந்திர-தந்திரங்களால், நம்பிக்கயுடன் அங்கு இறை சக்தியை நன்றாக நிலைநாட்டினால் அங்கு இறைவனின் சிறப்பான சன்னிதி நிலைக்கிறது. அத்தகைய இடத்தில் பூஜை செய்வது சாதாரண பக்தருக்கும் எளிதாகிறது.”
“அங்கு இறைவனின் சக்தி நிறைந்துள்ளதை நம்பாதவர் என்ன செய்ய வேண்டும்?”
அவர்கள் இறை வழிபாட்டிற்கு என்று வேறு வழிகளை நாடலாம். மந்திரம், ஜபம், வேண்டுதல் மற்றும் தியானம் போன்றவற்றை பின்பற்றலாம். அவர்கள் தம் தகுதிக்கேற்ப நம்பிக்கைக்குகந்த வேறு எந்த பயன்தரும் வழிபாட்டையாயினும் மேற்கொள்ளலாம். ஆனால்உருவ வழிபாடு செய்பவன் முட்டாள் என்று கூறுவது முட்டாள்தனம். இறைவனை அவமதிப்பதாகும்.
(அடுத்த வியாழனன்று தொடரும்)