Saturday, November 16, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 44 (Sriranga Mahaguru - 44)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 33

நூறாண்டு நிறைந்த வாழ்க்கை

===========================================================

மூலம்: வரததேசிகாசார்யார் தமிழாக்கம்: ஜானகி


  “நூறாண்டு காலம் நிறைந்த பெறுவாழ்வு பெற்றவர் தாங்கள். மனமார்ந்த வணக்கங்கள்” என வயது 

முதிர்ந்தவர்க்கு புகழாரம் சூட்டுவதுண்டு. இதைக் கேட்டு அவர்கள் மகிழ்வதுமுண்டு.

 ஆனால் நூறு ஆண்டு உயிர் வாழ்வதால் மட்டுமே அது நிறைவான வாழ்கை 

ஆகாது. ஓக் எனும் மரம் ஆயிரம் ஆண்டுகள் 

வாழ்கிறது. ஆனால் இறுதியில் வெறும் 

மரத்துண்டுகளாக விழுவதே அதன் கதி. லில்லி 

எனப்படும்  மலரானது ஒருநாள் மட்டுமே 

வாழ்ந்தாலும் அது தன்னுடைய நறுமணத்தை 

எங்கெங்கும் பரப்பி எவ்விடத்தும் மகிழ்ச்சயை 

நிரப்புகிறது. ஆகையினால் அதனுடைய 

வாழ்க்கையே அர்த்தமுள்ளது என  ஓர் கவி 

கூறுகிறார்.

 ஸ்ரீஆதிசங்கரர், சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்கள் 40 வயதிற்கும் 

உட்பட்டுமட்டுமே இப்பூவுலகை அலங்கரித்தனர்.

ஆயினும்அவர்களதுவாழ்கை  நிறைந்த வாழ்கை 

என்று ஞானிகள் நிரூபிக்கிறார்கள். இதற்கு 

காரணம் என்ன?

   எவ்விடத்தும் நிறைந்து இருப்பவன் பரம்பொருள், 

பரமாத்மா. “ஓம் பூர்ணமத: பூர்ணம்” .அவன் ஒருவனே நிறைவானவன். அவனிடத்து ஒன்றுப்பட்ட 

வாழ்க்கை ஒருநாளே ஆயினும் அது முழுமையானது(பூர்ணஜீவனம்). முழுமையை அடையும் 

குறிக்கோளுடன் கூடி அதனை அடைந்த 

முழுமையான வாழ்க்கை அது. மேற்கூறிய 

மகான்கள் இவ்வகையான முழுமையான 

வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். முழுமையை 

அனுபவித்து இன்னும் பலஆண்டுகள் வாழ்ந்த 

மகான்களுமுண்டு. இவர்களும் முழுமையாக 

வாழ்ந்தவர்களே.360டிகிரிகோணத்துடன் 

கூடியிருப்பது ஒரு வட்டத்தின் அமைப்பு. அந்த 

அமைப்பு இருந்தால் அது பெரியதாயினும் 

சிறியதாயினும் வட்டமே.

        தர்மம், அர்த்தம், காமம் ,மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) எனும் நான்கும் வாழ்க்கையில் 

அடையப்பட வேண்டிய உயர்ந்த லட்சியங்கள்.

இவை அனைத்தையும் இணக்கமாகவும் 

முழுமையாகவும் அனுபவித்தவர்கள்  இல்லற வாழ்க்கையை கடைபிடித்தவர்களே ஆயினும் 

முழுமையான வாழ்க்கை வாழ்ந்தவர்களே. 

உதாரணத்திற்கு ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன், ஜனக மகாராஜா, தர்மராஜா முதலியவர்கள். “வாழ்வில் ஒளியை(ஜோதி) கண்டு உலகிற்கும் ஒளி பரப்பியவர்களின் வாழ்க்கையே பூரணமானது” என ஸ்ரீரங்கமஹாகுரு விளக்கம் அளித்துள்ளார்.