Wednesday, April 17, 2019

ஒப்பற்ற மஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு (oppattra mahapurusar Srirangamahaguru Part-3)

திரு எஸ்.வி.சாமு அவர்களின்  மூலகன்னட புத்தகத்தின் ஒரு பகுதி     

               
                                                                      Part 3


( தமிழாக்கம்:  ஶ்ரீமதி ஜானகி )


திருமணம்:- ப்ரஹ்மசர்யம் எனும் சொல் ஆத்ம ஞானம் அடைவதை குறிப்பதாகும்.அவ்வாறு ப்ரஹ்மசர்ய விரதத்தை முறையாக நடத்தி ஆத்மஶ்ரீயைதனக்கு உரியவளாக செய்து கொண்டார் ஶ்ரீரங்க மஹா குரு. விரைவிலேயே அந்த ஆத்ம ஶ்ரீயே உலகில் உருவெடுத்து வந்ததோ என்பது போலதானும் ஆத்ம யோகத்தை பரிபூர்ணமாக சாதிப்பதற்கு தேவையான தெய்வீக தன்மை கொண்ட விஜயலக்ஷ்மி எனும் ஒரு கன்னிகையை 1933ம்ஆண்டு மே மாதம் 26ம் தேதி மணம் புரிந்து கொண்டார். யோகமஹிமை:- விஸ்வாமித்திரர் போன்ற பல மஹரிஷிகள் பல ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்து ஆத்ம ஞானத்தை அடைந்தார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மஹா குருவானவர் சில மாதங்களிலேயே ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடைந்தார் என அறிகிறோம். ஒரு சந்தர்ப்பத்தில் தன் நெருங்கிய உறவினரான ஶ்ரீ தாதாசார் என்பவரிடம் பேசும் பொழுது ஸ்ரீகுரு “இறைவனுக்கு உருவம் உண்டா இல்லையா”என்று வினவினார். அவர் “இறைவனுக்கு உருவம் உண்டென்று” கூறினார். மஹாகுரு தானே இறைவனை கண்டிருப்பதாகவும், அவன்அருவமானவன் என்றும் கூறி அவரை ஸ்தம்பிக்க வைத்தார்! மேலும் ஶ்ரீ தாதாசார் “இறைவன் கோடி சூர்யப்ரகாசமுள்ளவன் என்றுசொல்லப்படுவது உண்மையா” என்று வினவியபோது “கோடி அல்ல; அவன் பல கோடி கோடி சூரிய ஒளியுடையவன், ஒளிக்கடலாகவேதிகழ்பவன். ஆயினும் பூர்ண சந்திரனை ஒத்த குளிர்ச்சியுள்ளவன்!” என்றும் “அந்த அம்ருதத்தில் மூழ்கி ஆநந்தத்தில் திளைக்கிறோம்” என்றும் மஹாகுரு விளக்கமளித்தார்.


ஞானதானம் வழங்கிய மஹாகுரு :- ஆத்ம ஸாதனை என்பது பல வருடங்கள் முயன்றாலும் கிடைப்பது அரிது என்பதால் பலராலும் கைவிடப் பட்ட ஒன்று. ஆனால் யோகத்தின்அனுபவங்கள் அனைத்தும் இவரை வலிய தேடி வந்தடைந்தன. இவை அனைத்தும் அவருடைய வருங்காலத்தில் ஒரு பெரும் வெள்ளமாகவேபெருகியது. யோகத்தை பற்றிய சில அனுபவங்களை ஒருவர் தனக்குள் அனுபவித்து விடலாம். அதுபற்றி சாஸ்திரங்களை கொண்டு உதாரணமும் காட்டிவிடலாம். ஆனால் பிறரும் அடையும்படி அதை பயன்படுத்துவது கடினமானது. ஶ்ரீரங்க மஹாகுருவோ அத்திறமையை முழுதும் பெற்று முதன்முதலில் தன் மனைவியிடம் அதை பயன்படுத்தினார். அவரும் மிகவும் குறுகிய காலத்திலேயே அத்புதமான யோக அனுபவங்களை அடைந்தார்.மற்றவரும் இன்றும் கூட அதன் பயனை அடைய முடியும் என்ற நிர்ணயம் கொண்டு தன் பிற்காலத்தில் நூற்றுக்கணக்கானோர்க்கு ஞானதானம்வழங்கிய மஹா புருஷர் ஶ்ரீரங்க மஹாகுரு ஆவார். இறைஉந்துதலால் மட்டுமே அளித்த தீக்ஷை:- ஶ்ரீரங்கமஹாகுரு தான் பூரண ஸமாதி நிலையை அடைந்திருந்தாலும் பிறருக்கு தீக்ஷை அளிப்பதை தன் உள்ளுணர்வின் உந்துதலைவைத்துதான் செய்தருளினார். யோகத்திற்கு முதலும் முடிவுமான இலக்காகி எது பிரபஞ்சத்தை வழி நடத்துகிறதோ அந்த உன்னதமானசக்தியுடன் இரண்டற கலந்து அதன் உந்துதலால் தீக்ஷை அளித்தார். தியானயோகத்தின் உச்ச நிலையை அடைந்து இணையில்லாத ஜோதியில்கலந்து ஆத்ம ஒளியும் கருணையும் அமிர்தமும் அவர் கண்களின் வழி சொரிய தீக்ஷை அளித்து வந்தார். உந்துதல் (பகவத்ஸங்கல்பம்)இல்லாவிடில் எவ்வளவுதான் பாசமும் உறவும் இருந்தாலும் எவருக்கும் தீக்ஷை அருள முயற்சிக்கவில்லை. அக்கருணைக்கு ஆளானவர்களில் ஆண், பெண், வயதானவர், சிறியவர், சில நேரங்களில் சிறு குழந்தைகளும் கூட இருந்தனர். இயன்றவர்,இயலாதவர், ஆரோக்கியமானவர், ஆரோக்கியமற்றவர் அனைவரும் உண்டு. அவர்களின் தகுதியையோ மற்றவைகளை பற்றியோகவலைகொள்ளவில்லை. மாறாக அவர்களின் ஜீவத்தின் நிலையை மட்டுமே கண்டறிந்து ஞானம் அடைய வேண்டும் என விரும்பி தீக்ஷைஅளித்தார். அவர்களுக்கு யோகமார்கத்திற்கான பாதையை திறந்தருளினார். அவர்களுக்குள் அடைபட்டிருந்த ஆத்ம மார்க்கத்தை திறந்துவைத்தார். பிறப்பு இறப்பற்ற நிலைக்கு செல்லும் பாதைக்கு வழி காட்டினார்.