திரு எஸ்.வி.சாமு அவர்களின் மூலகன்னட புத்தகத்தின் ஒரு பகுதி
Part 2
( தமிழாக்கம்: ஶ்ரீமதி ஜானகி )
இளமைப் பருவம்:- 1
சிறு வயது முதலே த்யானம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதற்காக தன்னுடைய உணவு, பேச்சுவார்த்தை முதலியவைகளில்மிகுந்த கட்டுப்பாட்டை கடைபிடித்தார். அதனால் சிநேகிதர்கள் இவருக்கு ‘அந்தர்முகி’ என்று பெயர் சூட்டினர். ஒரு சமயம் த்யானத்தில் மூழ்கும்விஷயம் பற்றிய பேச்சு வார்த்தை வந்த போது ஒருவர் ‘உன்னால் த்யானத்தில் முழுகமுடியுமானால் இந்த முள் வேலியின் மேல் அமர்ந்துத்யானம் செய்து காட்டு’ என கேலியாக சொன்னார்கள். அடுத்த கணமே இவர் சிறிதும் முன்பின் யோசிக்காமல் அதன் மேல் அமர்ந்து த்யானத்தில்ஆழ்ந்தார் !!
ரங்கஸாமி கிராமத்தின் அமைதியான சுற்றுப்புற சூழலில் வளர்ந்து தன் முதற் கட்ட பள்ளி படிப்பை அருகாமையில் இருந்த ஒரு கிராமத்தில்முடித்து தேற்சி பெற்றார். சில காலம் நஞ்ஜனகூடில் படிப்பை தொடர்ந்தார். ஆனால் வீட்டில் பெரியவர்களின் உடன்பாடு இல்லாததால் சொந்தகிராமத்திற்கே திரும்பி வந்தார்.
ஆனாலும் இது எதுவும் அவருடைய மனம் மற்றும் அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கு தடையாகவில்லை. எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவராக இருந்தார். பிறர் அறிய முடியாததையும் பார்த்து அறியக்கூடிய திறமைகொண்டிருந்தார். திடகாத்திரமானசரீரமுடையவராகத் திகழ்ந்தார். தென்னை மரம் ஏறுவதில் அவருடைய திறமை மிகவும் அபாரமானது. பத்து பன்னிரெண்டு வயதிலேயேவெவ்வேறு விதமாக தென்னை மரம் ஏறி பிறர் கண்டு ஆச்சரியப்படும் அளவில் சாகஸம் செய்பவராக விளங்கினார். அத்தகைய ஓர் நிகழ்ச்சி -
ஒரு நாள் உறவினரின் தென்னந்தோட்டத்திற்குள் குரங்குகளின் படை புகுந்தது. அங்கிருந்த பலரும் சேர்ந்து அவைகளை விரட்டினர். ஆனால்ஒரு சிறிய குட்டி மட்டும் உயரமான ஒரு மரத்தின் நடுவில் கல்லடிக்கு தப்பித்து அமர்ந்திருந்தது. எவ்வளவு முயன்றும் அதை விரட்டமுடியவில்லை. முடிவில் மரத்தில் ஏறி அதனை பிடிக்க நிச்சயித்து அப்பொறுப்பு ரங்கசாமியிடம் கொடுக்கப்பட்டது. அவரும் மரம் ஏறி அதைபிடிப்பதற்கு கை நீட்டியவுடன் குட்டி அருகில் இருந்த ஒரு சிறிய தென்னை மரத்திற்கு தாவியது. ரங்ஸாசாமி முன் பின் யோசியாமல் தானும்அம்மரத்திற்கு தாவி அதை பிடித்தே விட்டார்! 2 மரங்களுக்கும் இடைவெளி 20-25 அடிகள் !!
முறையான பயிற்ச்சி இன்றியே கைவந்த கலைகள்:-
ஶ்ரீரங்க மஹாகுரு அபாரமான நீச்சல் திறமை உள்ளவராக திகழ்ந்தார். இயற்கை கற்று தரும் பாடங்கள் அனைத்தையும் கற்றுணர்ந்தார்.பறவைகள், விலங்குகளின் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்தவர். அவைகளை போலவே தானும் குரல்கொடுக்கும் திறமை கொண்டிருந்தார்.முறையாக சங்கீதம் பயில கிராமத்தில் வசதி இல்லாத போதும் அக்கலையை இயற்கையாகவே அடைந்திருந்தார். அவருடைய தாய் வழிபாட்டனார் சங்கீதத்தில் சிறந்து விளங்கினார் என்று கேள்வி பட்டிருக்கிறோம். சித்திரங்கள் வரைவதிலும் நகைச்சுவையிலும் தலை சிறந்துவிளங்கியவர். அவருடைய இக் கலைகளைப்பற்றி விரிவாக பின் வரும் இதழ்களில் காணலாம்.
சில உறவினர்கள் கூறியதின் பேரில் இவர் மைசூர் சம்ஸ்கிருத பாடசாலையில் சேர்ந்தார். அங்கும் அவர் தனக்கே உரிய முறையில்பாடங்களை கற்றார். யோகாசனங்கள் செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்ததால் அங்கு உள்ள யோகசாலையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.