Showing posts with label 638_ayvmarticle. Show all posts
Showing posts with label 638_ayvmarticle. Show all posts

Thursday, September 9, 2021

மூன்று பிரார்த்தனைகள் (Munro prartanaigal)

மூலம்: சுப்ரமணிய ஸோமயாஜீ
தமிழாக்கம்: ஸி.ஆர்.ஸ்ரீதர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)





'அஸதோமா ஸத்கமய, தமஸோமா  ஜோதிர்கமய, ம்ருத்யோர்மா  அம்ருதங்கமய' 
     'அஸத்யத்திலிருந்து ஸத்யத்திற்கு, இருளிலிருந்து வெளிச்சத்திற்கு, மரணத்திலிருந்து மரணமில்லாமைக்கு நம்மை அழைத்துச் செல்'  என்று இறைவனிடம் நம் பண்டைய  மகரிஷிகளின் ப்ரார்த்தனை . பாரதீயரின்  வாழ்க்கையில் இந்த ப்ரார்த்தனை அன்றாட வழக்கிலுள்ளதாகும்.  நம் பூஜை புனஸ்காரங்களிலும், விசேஷ இறை விழாக்களிலும் இத்தகைய ப்ரார்த்தனைகளை செய்வது இன்றும் ஆங்காங்கு காணப்படுகிறது. நம் பள்ளிகளிலும்  உயர்நிலை பள்ளிகளிலும் மாணவர்கள் இப்ரார்த்தனையை  முழங்குவதை காண்கிறோம்.

            உள்ளதை உள்ளது போலவே பேசினால் உண்மையை எடுத்துரைத்ததாகும். பொய் பேசலாகாது என்னும் நீதி அனைவரும் அறிந்ததே. அவ்வாறே, இருளும் நாம் அறிந்ததே. வெளிச்சமும் நாம் அறிந்த ஒன்றாகும். இருளிலிருந்து  வெளிச்சத்திற்கு நாமே செல்ல முடியும். இறுதியாக, மரணம் அனைவருக்கும் வருவது. யாரும்  சிரஞ்ஜீவிகளல்ல. இவ்வாறு உள்ள பொழுது இந்த ப்ரார்த்தனையின் சிறப்புத்தான் என்ன? அநேகமாக  தன் வாழ்நாளிலேயே, உலகில் என்றும் அழியாத காரியங்களை செய்ய வேண்டும் என்பதாக இருக்கலாம். இவை அனைத்தையும் நாம் அறிவோம் என்றால், இறைவனிடம் நாம் வேண்டுவதற்கு என்ன உள்ளது? நாமே செய்ய முடியும் என்னும் காரியத்திற்கு கடவுளுடைய உதவி எதற்கு? புத்தியை சிரமப்படுத்தாமல் இவற்றை யோசனை செய்து பார்க்க முடியும்.  ஆனால் ப்ராரத்தனை செய்தவர்கள் நம் நாட்டு மகரிஷிகள். உள் ஒளிரும் மெய்ப்பொருளை (ஸத்தியத்தை), பரமாத்மனை  தம்முள் கண்டு பிரார்த்தித்தார்கள். தேவையற்ற வார்த்தைகள் அவர்களிடமிருந்து வராது. இந்த ப்ரார்த்தனையின் சிறப்பு என்ன  என்பதை ஆராயவேண்டியுள்ளது.

      அஸதோமா ஸத்கமய
                      சங்கர பகவத்பாதர் ஸத்தியம் என்பதை மூன்று வகையாக விவரித்திருக்கின்றார்:- வ்யவஹார ஸத்தியம், ப்ராதிபாஸிக ஸத்தியம் மற்றும் பாரமார்த்திக  ஸத்தியம். நாம் மேற்கூறியவாறு உண்மை  பேசுவது முதலியவை வ்யவஹார ஸத்தியமாகும். ப்ராதிபாஸிக ஸத்தியம் என்றால் நாம் கனவில் கண்ட அனுபவங்கள், நாம் நம் ப்ரமையினால் உண்மையென்று  நினைத்த விஷயங்கள் : உதாரணமாக, கயிற்றை பாம்பு என்று நினைத்தல். ஆனால் என்றென்றும் மாறாத தானேதானாக ஒளிமயமாய், மற்றும்,   தான் இருப்பதால் அனைத்தையும் ஒளிவெள்ளமாக்கும், என்றும் அழிவே இல்லாத, இவ்வுலகம் நிலைத்திருப்பதற்கே காரணமாகிய பரமாத்மனென்னும் ஸத்தியமே (மெய்ப்பொருளே)  பாரமாரத்திக ஸத்யம். யமன் நசிகேதனனுக்கு  உபதேசிப்பதைப்போல் 'ந தத்ர  ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகம் நே மா வித்யுதோ பாந்தி குதோயமக்னி:

 தமேவ பாந்தம்  அனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ' என்பது போல் ஸூர்யசந்த்ராக்னிகள்,  மின்னல், இவை அனைத்தும் எந்த ஒளியை தாம் ஒளிர்வதற்கு ஆதாரமாக பற்றியுள்ளனவோ அத்தகைய பரமாத்ம ஜோதியே இங்கு ஸத்யம் என்று கூறப்பட்டதாகும். அது என்றென்றும் நிலைத்திருப்பதாகும். இன்று இருந்து நாளை இல்லை என்று ஆவதில்லை. அத்தகைய மெய்பொருள் நம் அறிவிற்கு வருமாறு  ஸத்யஸ்வரூபனான அவ்விறைவனே அருள் புரிய வேண்டும். நம்மால் எதை செய்ய இயலாதோ அல்லது மிகவும் கடினமோ அதைத்தானே இறைவனிடம் முறையிட வேண்டும்? அந்த மேன்மையான ஸத்தியத்தின் எதிரில் மற்றவை யாவும்  ஸத்தியத்திற்கு புறம்பானவையே.
அனைத்தும் அந்த தலையாய ஸத்தியத்தை மறைப்பனவேயாகும். 'அத்தகைய ஸத்தியத்திற்கு புறம்பானவைகளிடமிருந்து, நம்மை அந்த பரம ஸத்தியத்தை நோக்கி செலுத்துக' என்னும் ப்ரார்த்தனை ஜீவராசிகள் அனைத்தும் எக்காலத்திலும் செய்ய வேண்டிய ப்ரார்த்தனையே ஆகும்.

       தமஸோமா ஜோதிர்கமய 
         இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி. பாரத நாட்டு மக்களுக்கு இருளே தேவை இல்லையா? வெளி இருட்டானது நாம் ஓய்வு எடுப்பதற்கு கண்டிப்பாக தேவை. அது மட்டுமன்றி இருள் தானாக உண்டாகின்றது. சூரியன் உதித்த பின்  வெளிச்சமும் ஏற்படுகின்றது. அப்படியென்றால் இந்த ப்ரார்த்தனையின் சிறப்புதான் என்ன? என்றால் அந்த பாரமார்த்திக ஸத்யத்தின்(மெய்ப்பொருளின்) விஷயத்தில் நம் புத்தியை இருள் சூழ்ந்துள்ளது. நாம்  நம் அன்றாட இந்திரிய(புலன்களின்) வாழ்விலேயே பற்பல ஜென்மங்களில் நேரத்தை வீணாக்கிக்கொண்டு நமக்குள்ளேயே ஒளிரும் ஒளியை காணாதவர்களாயுள்ளோம். ஞானிகளும், துறவிகளும் கூறினாலும் அத்தகைய ஒரு ஒளி உண்டு என்று நமக்கு நம்பிக்கை ஏற்படாத அளவுக்கு மறதி உள்ளவராய் இருக்கின்றோம். அந்த உள் ஒளிரும் பேரொளியை முற்றிலுமாக மறந்திருப்பதுதான் தமோகுணம் எனப்படுவது. 'அத்தமோகுணத்தைக் கழற்றி நம்மை அந்த உள் ஒளியை நோக்கி செலுத்துக' என்று அந்த ஒளியையே ப்ரார்த்திருக்கின்றனர். அவ்வொளியானது தனக்குத்தானே  ப்ரகாசித்துக்கொண்டிருக்கின்றது. அதனுடைய தயவினால்தான் நம் அன்றாட உலகப் பற்றுள்ள வாழ்க்கைகளும்  சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால்  அதை அறிந்துகொள்ள முடியாத அளவு நம் மனதில் இருள். இந்த இருளிலிருந்து தான் நம்மை அந்த ஒளியை நோக்கி அழைத்துச்செல்ல  வேண்டியிருப்பது. அதற்காகவே தான் இறைவனிடம் ரிஷிகளின்  இப்ரார்த்தனை. அது வெளி இருட்டிலிருந்து வெளி வெளிச்சத்திற்கு அல்ல. நம் புத்தியின் இருட்டிலிருந்து  உள் ஒளிரும் பேரொளியை நோக்கி. 
 நம் ப்ரார்த்தனை எவ்வளவு உறுதியானதோ அவ்வளவு விரைவாக இறைவன்  நம் இருளை   போக்கடிக்கிறான். இந்த உணர்வு  இல்லாமல் வெறுமையாக செய்யும்  பிரார்த்தனையால்  பலன் இராது.

    ம்ருத்யோர்மா அம்ருதங்கமய 
             சரீரத்தைத் தாங்கி வந்த பிறகு, அதற்கு மரணம் நிச்சயம். ஜாதஸ்ய மரணம் த்ருவம் என்ற பிறகு மரணமின்மை எவ்வாறு வரும்? நாம் இறக்காமல் இருப்பதற்கான வரத்தை வேண்டிக்கொண்டிருக்கிறோமா? அத்தகைய வேண்டுகோள் எவ்வளவு அர்த்தமுள்ளது? அதை  இறைவன் எங்கனம் நிறைவேற்றுவான்? இவை அனைத்தும் கேள்விக்குறியாகின்றன. இங்கு அழிவற்றது, நம்முள்ளேயே  ஒளிரும் சைதன்யம். அதுதான் நம்மை உயிருடன் வைத்திருப்பது. அது நம் ஆனந்த த்தின், நிம்மதியின்  இருப்பிடம். அதனுடன் நம் மனது நிரந்தரமாக உறவு கொண்டிருந்தால் அதுதான் அழிவில்லாத வாழ்க்கை. ஒரு நதி   தான் ஓடும் எல்லையோடு கடலை அடைந்தால்தான் அந்த நதியின் வாழ்க்கை அழிவற்றதாகும். அங்கு அந்நதியை கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி என்று அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அந்நதி பெருங்கடலே ஆகி விடுகிறது. அவ்வாறே இந்த ஜீவநதியும் தன்னுடைய மூலமான அந்த மஹா சைதன்யத்தின் விருப்பப்படி அதனுடைய நினைவை ஒரு போதும் விடாமல்  வாழ்ந்து இறுதியாக, பெயர், உருவங்களோடு கூடிய சரீரத்தின் எல்லைகளைத் தாண்டி பரமாத்மா என்னும் கடலில்  சேர்வது, இதன் இயற்கையான நடைமுறை என்பது அவ்வாறு அழிவற்ற வாழ்வு வாழ்ந்த மஹரிஷிகள் தங்கள் அனுபவத்தில் கண்டு அறிந்த  உண்மை. இதுதான்  நம் வாழ்நாளில் நம் வாழ்க்கையின் வழிமுறை. 'என்றென்றும்  அழிவற்ற அப்பேரொளியின் விருப்பப்படி வாழ்ந்து இறுதியாக  நம்மை அந்த அம்ருதமயமான இறைவனுடன் ஒன்றாக்கி விடு' என்று அவனிடம் ப்ரார்த்தனை புரிவதுதான் ம்ருத்யோர்மா அம்ருதங்கமய.  இப்பொழுது நாம்  அவ்வுன்னதமான இருப்பிடத்தை  மறந்து கேவலம் மரணத்தை நோக்கி வாழ்க்கையை நடத்திக் கொண்டுள்ளோம். அவ்வாறின்றி  அழியும் இந்த சரீரத்தில் அழிவற்ற  அப்பொருளையே கண்டு இறுதியில் நாம் அந்த  அழிவற்ற தன்மையையே பெற்றுவிடுமாறு நம் மீது அருள் புரிவாயாக  என்னும் ப்ரார்த்தனைதான் இது. நதிகள் கடலாக ஆகிவிடுவதைப் போன்று.

            ஸ்ரீரங்கமஹாகுரு, 'ஸத்யம்'  என்னும் சொல்லுக்கு, 'ஸதியம்' என்று உபநிஷத்தின் விவரணத்தை  நினைவூட்டியுள்ளார். அதன்படி,  அழிவற்றதற்கும் அழிவுள்ளதற்கும் ஒரு பாலத்தை  அமைப்பது 'ஸத்யம்' என்பதாகும். நம்  வாழ்க்கை அழிவுள்ள இவ்வுடலால்  அழிவற்றவனாகிய இறைவனைக் கண்டு அவனுடன்  ஒன்றி விடும் ஆசையால்  உண்டான ப்ரார்த்தனை இது. .

              இன்று  உலகெலாம் கொரோனா என்னும் வியாதியின் பிடியில் சிக்கி தத்தளிக்கிறது. மரண பயம், வாழ்வின் நிச்சயமின்மை எனும் பீதிகளால்  நாம்  அனைவரும் பயத்தின் பிடியில் சிக்கியுள்ளோம். மேற்கூறிய மூன்று சிறப்பான ப்ரார்த்தனைகளும் இன்று மிகவும் முக்கியமானவைகளாக விளங்குகின்றன. நம் உடல் நலத்தை பேணிக்கொண்டு  ஆரோக்கியமாக வாழ நம்மாலான அனைத்து   முயற்சிகளையும் செய்வோம். மற்றவற்றை அந்த கருணை வெள்ளமான இறைவனுக்கு விடுவோம். நம் மனம், என்றென்றும் ஒளிரும் அந்த ஸத்தியத்தினிடமும், நம் புத்தி என்றும் விளங்கும் அப்பேரொளியினிடமும் செலுத்தப்பட்டால் நாம் இந்த அழிவுள்ள வாழ்வை அழிவற்ற  வாழ்வின் சைதன்யத்துடன் ஒன்றாக்கினோமானால், அனைத்து விதமான பயம், பீதிகளிலிருந்து விடுபட்டு வாழலாம். 

        இறுதியாக ஸ்ரீரங்கமஹாகுருவின் இச்சொல்  இங்கு நினைவுறத்தக்கது : 'ஞானத்தை வளர்க்கவும், ஸத்தியத்தை நிலை நாட்டவும்  எத்துணை சமூகங்கள் பாடுபட்டுள்ளன! எத்துணை  தவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன! வேதம், இதிஹாஸம், புராணம் முதலியவற்றைப் பார்த்தால், ஒவ்வொரு விஷயத்தை வெளிக்கொணர அநேக லக்ஷம் வருடங்கள்  தவம் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரிய வருகின்றது. இவ்வாறு, கேவலம் மனித முயற்சியால் அடைய முடியாத, இறைவனின் அருளால் மட்டுமே ஆக வேண்டியதையே  அவனிடம் ப்ரார்த்தித்திருக்கின்றனர். மஹரிஷிகள் தாங்கள் அஸத்யத்திலிருந்து ஸத்யத்திற்கு, இருளிலிருந்து அந்த ஒளி வெள்ளத்திற்கு, மரணத்திலிருந்து அழிவில்லாமைக்கு சென்றடைந்து, தம் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கினார்கள். எனினும், உலகினர் அனைவரும் அதே போன்ற நிம்மதியை பெறுமாறு ஆக வேண்டும் என்னும் கருணையினால் இந்த ப்ரார்த்தனையை நம்  எல்லோருக்காகவு ம்முழங்கியுள்ளார்கள். அவர்களுடைய மனதின்படி நம் வாழ்வின் வெற்றிக்காக என்றென்றும்  இப்ரார்த்தனையை  செய்வோமாக.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.

Thursday, July 15, 2021

ಮೂರು ಶ್ರೇಷ್ಠ ಪ್ರಾರ್ಥನೆಗಳು (Muru Shreshta Prarthanegalu)

ಲೇಖಕರು; ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ ಸೋಮಯಾಜಿ
(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ lekhana@ayvm.in)



"ಅಸತೋಮಾ ಸದ್ಗಮಯ| ತಮಸೋಮಾ ಜ್ಯೋತಿರ್ಗಮಯ| ಮೃತ್ಯೋರ್ಮಾ ಅಮೃತಂ ಗಮಯ" ಅಸತ್ಯದಿಂದ ಸತ್ಯದೆಡೆಗೆ, ಕತ್ತಲಿನಿಂದ ಬೆಳಕಿನೆಡೆಗೆ, ಮೃತ್ಯುವಿನಿಂದ ಅಮೃತತ್ವದ ಎಡೆಗೆ ನಮ್ಮನ್ನು ಕರೆದೊಯ್ಯು ಎಂದು ಭಗವಂತನಲ್ಲಿ ನಮ್ಮ ಪ್ರಾಚೀನ ಮಹರ್ಷಿಗಳ ಪ್ರಾರ್ಥನೆ. ಭಾರತೀಯ ಜೀವನದಲ್ಲಿ ಈ ಪ್ರಾರ್ಥನೆ ಜನಜನಿತ. ನಮ್ಮ ಪೂಜೆ ಪುರಸ್ಕಾರಗಳಲ್ಲಿ, ವಿಶೇಷ ಸಮಾರಂಭಗಳಲ್ಲಿ ಈ ಬಗೆಯ ಪ್ರಾರ್ಥನೆಮಾಡುವುದನ್ನು ಇಂದಿಗೂ ಅಲ್ಲಲ್ಲಿ ಕಾಣಬಹುದಾಗಿದೆ. ನಮ್ಮ ಶಾಲಾ ಕಾಲೇಜುಗಳಲ್ಲೂ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳು ಈ ಪ್ರಾರ್ಥನೆಯನ್ನು ಮೊಳಗುವುದನ್ನು ಕಾಣುತ್ತೇವೆ. 

ನಿಜ ಹೇಳಿದರೆ ಸತ್ಯ ನುಡಿದಂತೆ . ಸುಳ್ಳು ಹೇಳಬಾರದು ಎಂಬ ನೀತಿ ಎಲ್ಲರಿಗೂ ಗೊತ್ತಿರುವುದೇ. ಹಾಗೆಯೇ ಕತ್ತಲೆ ನಮಗೆ ಗೊತ್ತು. ಬೆಳಕೂ ಸಹ ಗೊತ್ತು. ಕತ್ತಲೆಯಿಂದ ಬೆಳಕಿನೆಡೆಗೆ ನಾವೇ ಸಾಗಬಹುದು. ಕಡೆಯದು ಮೃತ್ಯು.ಎಲ್ಲರಿಗೂ ಬರುವಂತಹದು. ಯಾರೂ ಚಿರಂಜೀವಿಗಳಲ್ಲ. ಎಂದಮೇಲೆ ಈ ಪ್ರಾರ್ಥನೆಯ ಔಚಿತ್ಯವಾದರೂ ಏನು? ಪ್ರಾಯಃ ಜೀವಿತಾವಧಿಯಲ್ಲೇ ಲೋಕದಲ್ಲಿ ಎಂದೆಂದಿಗೂ ಅಳಿಯದ ಕೆಲಸಗಳನ್ನು ಮಾಡಬೇಕು ಎಂದಿರಬೇಕು. ಇವೆಲ್ಲವೂ ನಮಗೆ ಗೊತ್ತಿದೆ ಎಂದಮೇಲೆ ಭಗವಂತನಲ್ಲಿ ಪ್ರಾರ್ಥನೆ ಮಾಡುವುದೇನಿದೆ? ನಾವೇ ಮಾಡಬಹುದಾದ ಕೆಲಸಕ್ಕೆ ಅವನ ಸಹಾಯ ಏಕೆ? ಬುದ್ಧಿಗೆ ಶ್ರಮ ಕೊಡದೇ ಇಷ್ಟನ್ನು ಆಲೋಚನೆ ಮಾಡಬಹುದು. ಆದರೆ ಪ್ರಾರ್ಥನೆ ಮಾಡಿದವರು ಈ ದೇಶದ ಮಹರ್ಷಿಗಳು. ಅಂತರಂಗದ ಸತ್ಯವನ್ನು, ಪರಮಾತ್ಮನನ್ನು ತಮ್ಮಲ್ಲಿ ಕಂಡು ಪ್ರಾರ್ಥನೆ ಮಾಡಿದ್ದಾರೆ. ವ್ಯರ್ಥವಾದ ಮಾತುಗಳು ಅವರಿಂದ ಬಾರವು. ಏನೀ ಪ್ರಾರ್ಥನೆಯ ಔಚಿತ್ಯ ಎಂದು ವಿಚಾರಮಾಡಬೇಕಿದೆ.

ಅಸತೋಮಾ ಸದ್ಗಮಯ

ಶಂಕರಭಗವತ್ಪಾದರು ಸತ್ಯವನ್ನು ಮೂರು ಬಗೆಯಲ್ಲಿ ವಿವರಿಸಿದ್ದಾರೆ- ವ್ಯಾವಹಾರಿಕ ಸತ್ಯ,ಪ್ರಾತಿಭಾಸಿಕ ಸತ್ಯ,ಮತ್ತು ಪಾರಮಾರ್ಥಿಕ ಸತ್ಯ ಎಂಬುದಾಗಿ. ನಾವು ಮೇಲೆ ಹೇಳಿದಂತೆ ನಿಜ ಹೇಳುವುದು ಇತ್ಯಾದಿ ವ್ಯಾವಹಾರಿಕ ಸತ್ಯವಾಗುತ್ತದೆ. ಪ್ರಾತಿಭಾಸಿಕ ಸತ್ಯವೆಂದರೆ ಕನಸಿನಲ್ಲಿ ಕಂಡ ಅನುಭವಗಳು, ನಾವು ನಮ್ಮ ಭ್ರಮೆಯಿಂದ ಸತ್ಯವೆಂದು ತಿಳಿದುಕೊಂಡ ಸತ್ಯಗಳು-ಉದಾಹರಣೆಗೆ ಹಗ್ಗವನ್ನು ಹಾವೆಂದು ಭಾವಿಸಿದಂತೆ. ಆದರೆ ಎಂದೆಂದಿಗೂ ಬದಲಾಗದ, ತಾನೇ ತಾನಾಗಿ ಬೆಳಗುತ್ತಿರುವ ಮತ್ತು ಎಲ್ಲವನ್ನೂ ತನ್ನ ಇರುವಿಕೆಯಿಂದ ಬೆಳಗುವಂತೆ ಮಾಡುವ, ನಿತ್ಯ ಶಾಶ್ವತವಾದ, ಜಗತ್ತಿನ ಇರುವಿಕೆಗೇ ಕಾರಣವಾದ ಪರಮಾತ್ಮ ಸತ್ಯವೇ ಪಾರಮಾರ್ಥಿಕ ಸತ್ಯ. ನಚಿಕೇತನಿಗೆ ಯಮನು ಉಪದೇಶಿಸುವಂತೆ " ನ ತತ್ರ ಸೂರ್ಯೋ ಭಾತಿ ನ ಚಂದ್ರತಾರಕಂ, ನೇಮಾ ವಿದ್ಯುತೋ ಭಾಂತಿ ಕುತೋಯಮಗ್ನಿ: ತಮೇವ ಭಾನ್ತಮ್ ಅನುಭಾತಿ ಸರ್ವಂ ತಸ್ಯ ಭಾಸಾ ಸರ್ವಮಿದಂ ವಿಭಾತಿ- ಎಂಬಂತೆ ಸೂರ್ಯಚಂದ್ರಾಗ್ನಿಗಳು ವಿದ್ಯುತ್ತು ಎಲ್ಲವೂ ಯಾವ ಬೆಳಕನ್ನು ತಮ್ಮಬೆಳಗುವಿಕೆಗಾಗಿ ಅವಲಂಬಿಸಿವೆಯೋ ಅಂತಹ ಪರಮಾತ್ಮಜ್ಯೋತಿಯನ್ನೇ ಇಲ್ಲಿ ಸತ್ಯ ಎಂದಿರುವುದು. ಅದು ಎಂದೆಂದಿಗೂ ಇರುವಂತಹದ್ದು. ಇವತ್ತಿದ್ದು ನಾಳೆ ಇಲ್ಲವಾಗುವುದಲ್ಲ. ಅಂತಹ ಸತ್ಯವು ನಮ್ಮ ಅರಿವಿಗೆ ಬರುವಂತೆ ಸತ್ಯಸ್ವರೂಪನಾದ ಅವನೇ ಮಾಡಬೇಕು. ನಮ್ಮ ಕೈಯಲ್ಲಿ ಯಾವುದನ್ನು ಮಾಡಲು ಸಾಧ್ಯವಾಗದೋ ಅಥವಾ ಅತ್ಯಂತ ಕಷ್ಟಸಾಧ್ಯವೋ ಅದನ್ನು ತಾನೇ ಭಗವಂತನನ್ನು ಕೇಳಬೇಕು? ಆ ಪರಮ ಸತ್ಯದ ನೇರದಲ್ಲಿ ಅದಲ್ಲದೇ ಉಳಿದುದೆಲ್ಲವೂ ಅಸತ್ಯವೇ. ಎಲ್ಲವೂ ಆ ಪರಮಸತ್ಯವನ್ನು ಮರೆ ಮಾಡುವಂತಹದ್ದೇ. ಅಂತಹ ಅಸತ್ಯಗಳಿಂದ ನಮ್ಮನ್ನು ಪರಮ ಸತ್ಯದೆಡೆಗೆ ಕೊಂಡೊಯ್ಯು ಎಂಬ ಪ್ರಾರ್ಥನೆ ಜೀವಲೋಕವೆಲ್ಲವೂ ಅನವರತವೂ ಮಾಡಬೇಕಾದ ಪ್ರಾರ್ಥನೆಯೇ ಆಗುತ್ತದೆ.

ತಮಸೋಮಾ ಜ್ಯೋತಿರ್ಗಮಯ

ಕತ್ತಲೆಯಿಂದ ಬೆಳಕಿನೆಡೆಗೆ. ಭಾರತೀಯರಿಗೆ ಕತ್ತಲೆಯೇ ಬೇಕಿಲ್ಲವೇ? ಹೊರಗಿನ ಕತ್ತಲೆ ನಾವು ವಿಶ್ರಾಂತಿ ತೆಗೆದುಕೊಳ್ಳಲು ಅವಶ್ಯವಾಗಿ ಬೇಕು. ಅಲ್ಲದೇ ತಾನಾಗಿ ಕತ್ತಲಾಗುತ್ತದೆ, ಸೂರ್ಯ ಉದಿಸಿದ ನಂತರ ಬೆಳಕೂ ಆಗುತ್ತದೆ. ಮತ್ತೆ ಈ ಪ್ರಾರ್ಥನೆಯ ಔಚಿತ್ಯವಾದರೂ ಏನು? ಎಂದರೆ ಆ ಪಾರಮಾರ್ಥಿಕ ಸತ್ಯದ ವಿಷಯದಲ್ಲಿ ನಮ್ಮ ಬುದ್ಧಿಗೆ ಕತ್ತಲು ಕವಿದಿದೆ.ನಾವು ನಮ್ಮ ವ್ಯಾವಹಾರಿಕ, ಇಂದ್ರಿಯಜೀವನದಲ್ಲೇ ಜನ್ಮ ಜನ್ಮಾಂತರಗಳಿಂದ ಕಾಲ ಕಳೆಯುತ್ತಾ ನಮ್ಮೊಳಗೇ ಬೆಳಗುತ್ತಿರುವ ಬೆಳಕನ್ನು ಕಾಣಲಾರದವರಾಗಿದ್ದೇವೆ. ಜ್ಞಾನಿಗಳು, ಸಂತರು ಹೇಳಿದರೂ ಅಂತಹ ಬೆಳಕೊಂದು ಉಂಟು ಎಂದು ನಮಗೆ ನಂಬಿಕೆ ಬಾರದಷ್ಟು ವಿಸ್ಮೃತರಾಗಿದ್ದೇವೆ. ಆ ಅಂತರ್ಜ್ಯೋತಿಯನ್ನು ಸಂಪೂರ್ಣವಾಗಿ ಮರೆತಿರುವುದೇ ತಮಸ್ಸು. ಅದನ್ನು ಕಳಚಿ ನಮ್ಮನ್ನು ಆ ಒಳ ಬೆಳಕಿನ ಕಡೆಗೆ ನಡೆಸು ಎಂದು ಬೆಳಕನ್ನೇ ಪ್ರಾರ್ಥಿಸಿದ್ದಾರೆ. ಆ ಬೆಳಕು ತಾನೇ ತಾನಾಗಿ ಬೆಳಗುತ್ತಿದೆ. ಅದರ ಭಿಕ್ಷೆಯಿಂದಲೇ ನಮ್ಮ ಲೌಕಿಕ ಜೀವನಗಳೂ ನಡೆಯುತ್ತಿವೆ. ಆದರೆ ನಮ್ಮ ಮನಸ್ಸುಗಳಲ್ಲಿ ಅದನ್ನು ಅರಿಯದ ಕತ್ತಲು. ಈ ಕತ್ತಲೆಯಿಂದಲೇ ನಮ್ಮನ್ನು ಆ ಬೆಳಕಿನೆಡೆಗೆ ಕರೆದೊಯ್ಯಬೇಕಿರುವುದು. ಅದಕ್ಕಾಗಿಯೇ ಋಷಿಗಳು ಭಗವಂತನಲ್ಲಿ ಪ್ರಾರ್ಥಿಸುತ್ತಿರುವುದು. ಅದು ಹೊರಗಿನ ಕತ್ತಲೆಯಿಂದ ಹೊರಗಿನ ಬೆಳಕಿನೆಡೆ ಅಲ್ಲ. ನಮ್ಮಬುದ್ಧಿಯಲ್ಲಿನ ಕತ್ತಲೆಯಿಂದ ಒಳಬೆಳಕಿನೆಡೆಗೆ. ನಮ್ಮ ಪ್ರಾರ್ಥನೆ ಎಷ್ಟು ಬಲವತ್ತರವೋ ಅಷ್ಟು ಬೇಗ ಅವನು ನಮ್ಮಕತ್ತಲೆಯನ್ನು ಹೋಗಲಾಡಿಸುತ್ತಾನೆ. ಈ ಭಾವವಿಲ್ಲದೇ ಶುಷ್ಕವಾಗಿ ಮಾಡುವ ಪ್ರಾರ್ಥನೆಯಿಂದ ಪ್ರಯೋಜನವಿರದು.

ಮೃತ್ಯೋರ್ಮಾ ಅಮೃತಂ ಗಮಯ
ಶರೀರವನ್ನು ತಳೆದು ಬಂದಮೇಲೆ ಇದಕ್ಕೆ ಮೃತ್ಯು ನಿಶ್ಚಿತ. ಜಾತಸ್ಯ ಮರಣಂ ಧ್ರುವಂ. ಎಂದಮೇಲೆ ಅಮರತ್ವಎಲ್ಲಿಂದ ಬರಬೇಕು? ನಾವು ಸಾಯದಂತೆ ವರವನ್ನು ಬೇಡುತ್ತಿದ್ದೆವೆಯೇ? ಅಂತಹ ಬೇಡಿಕೆ ಎಷ್ಟು ಅರ್ಥಪೂರ್ಣ? ಅದನ್ನುಭಗವಂತನು ಹೇಗೆ ಈಡೇರಿಸಿಯಾನು? ಎಲ್ಲವೂ ಪ್ರಶ್ನೆಯಾಗುತ್ತದೆ. ಇಲ್ಲಿ ಅಮರವಾದುದು ನಮ್ಮೊಳಗೇ ಬೆಳಗುತ್ತಿರುವ ಚೈತನ್ಯ. ಅದೇ ನಮ್ಮನ್ನು ಜೀವಂತವಾಗಿಟ್ಟಿರುವುದು. ಅದು ನಮ್ಮ ಆನಂದದ, ನೆಮ್ಮದಿಯ ನಿಜವಾದ ತಾಣ. ಅದರೊಡನೆ ನಮ್ಮ ಮನಸ್ಸು ನಿರಂತರವಾಗಿ ಸಂಪರ್ಕವನ್ನಿಟ್ಟುಕೊಂಡರೆ ಅದೇ ಅಮರ ಜೀವನ. ನದಿಯೊಂದು ತಾನು ಹರಿಯುತ್ತಿರುವ ಎಲ್ಲೆಕಟ್ಟುಗಳೊಂದಿಗೆ ಸಮುದ್ರವನ್ನು ಸೇರಿದಾಗಲೇ ಆ ನದಿಯ ಜೀವನ ಅಮರ. ಅಲ್ಲಿ ಅದನ್ನು ಗಂಗೆ,ಯಮುನೆ, ಗೋದಾವರಿ,ಕಾವೇರಿ ಎಂದು ಗುರುತಿಸಲಾಗದು. ಅದು ಮಹಾ ಸಮುದ್ರವೇ ಆಗಿಬಿಡುತ್ತೆ. ಹಾಗೆ ಈ ಜೀವನದಿಯೂ ತನ್ನ ಮೂಲವಾದ ಆ ಮಹಾ ಚೈತನ್ಯದ ಆಶಯದಂತೆ ಅದರ ನೆನಪನ್ನು ಒಂದಿನಿತೂ ಬಿಡದೇ ಬಾಳುತ್ತಾ ಕಡೆಯಲ್ಲಿ ನಾಮ-ರೂಪಗಳಿಂದ ಆರೋಪಿತವಾದ ಶರೀರದ ಎಲ್ಲೆಕಟ್ಟುಗಳನ್ನು ಮೀರಿ ಪರಮಾತ್ಮ ಸಮುದ್ರದಲ್ಲಿ ಸೇರುವಂತಾಗುವುದು ಇದರ ಸಹಜವಾದ ನಡೆ ಎಂಬುದನ್ನು ಹಾಗೆ ಅಮರಜೀವನವನ್ನು ಮಾಡಿದ ಮಹರ್ಷಿಗಳ ಆನುಭವಿಕ ಸತ್ಯ. ಎಂದೇ ನಮ್ಮ ಜೀವಿತಕಾಲದಲ್ಲಿ ನಮ್ಮ ಜೀವನದ ಸ್ರೋತಸ್ಸಾದ, ಎಂದೆಂದಿಗೂ ಇರುವ ಆ ಅಮರವಾದ ಬೆಳಕಿನ ಆಶಯದಂತೆ ಬದುಕಿ ಕಡೆಯಲ್ಲಿ ಆ ಅಮೃತನಾದ ದೇವನಲ್ಲಿ ಒಂದಾಗುವಂತೆ ಮಾಡೆಂದು ಭಗವಂತನಲ್ಲಿ ಪ್ರಾರ್ಥನೆ-ಮೃತ್ಯೋರ್ಮಾ ಅಮೃತಂ ಗಮಯ. ಈಗ ನಾವು ಆ ಸ್ರೋತಸ್ಸನ್ನು ಮರೆತು ಕೇವಲ ಮೃತ್ಯುಮುಖರಾಗಿ ಜೀವನ ನಡೆಸುತ್ತಿದ್ದೇವೆ. ಹಾಗಿಲ್ಲದೇ ಮೃತವಾಗುವ ಈ ಶರೀರದಿಂದ ಅಮೃತವಾದ ವಸ್ತುವನ್ನೇ ಕಾಣುತ್ತಾ ಕಡೆಯಲ್ಲಿ ಆ ಅಮೃತವೇ ಆಗಿಬಿಡುವಂತೆ ನಮ್ಮನ್ನು ಅನುಗ್ರಹಿಸು ಎಂಬ ಪ್ರಾರ್ಥನೆ. ನದಿಗಳು ಸಮುದ್ರವಾದಂತೆ. ಶ್ರೀರಂಗಮಹಾಗುರುಗಳು ಸತ್ಯ ಎನ್ನುವ ಪದಕ್ಕೆ "ಸತಿಯಂ" ಎಂಬ ಉಪನಿಷತ್ತಿನ ವ್ಯಾಖ್ಯೆಯನ್ನು ನೆನಪಿಸಿದ್ದರು. ಅದರಂತೆ ಅಮರವಾದದ್ದಕ್ಕೂ ಮರವಾದದ್ದಕ್ಕೂ ಸೇತುವೆಯನ್ನು ಹಾಕುವುದು ಸತ್ಯವೆಂದಾಗುತ್ತದೆ. ನಮ್ಮ ಬಾಳು ಮರವಾದ ಈ ದೇಹದಿಂದ ಅಮರವಾದ ಭಗವಂತನನ್ನು ಕಂಡು ಅವನಲ್ಲಿ ಒಂದಾಗುವ ಅಪೇಕ್ಷೆಯಿಂದ ಬಂದ ಪ್ರಾರ್ಥನೆ ಇದು.

ಇಂದು ಲೋಕವೆಲ್ಲವೂ ಕರೋನಾ ರೋಗದ ತೆಕ್ಕೆಯಲ್ಲಿ ನಲುಗಿ ಹೋಗಿದೆ. ಮೃತ್ಯುಭಯ, ಜೀವನದ ಅನಿಶ್ಚಿತತೆ ಇತ್ಯಾದಿ ಆತಂಕಗಳಿಂದ ನಾವೆಲ್ಲಾ ಭಯಗ್ರಸ್ತರಾಗಿದ್ದೇವೆ. ಈ ಶ್ರೇಷ್ಠ ಪ್ರಾರ್ಥನೆಗಳು ಇಂದು ಅತ್ಯಂತ ಪ್ರಸ್ತುತವಾಗಿವೆ. ನಮ್ಮ ಆರೋಗ್ಯವನ್ನು ರಕ್ಷಿಸಿಕೊಂಡು ಬದುಕುವ ಸರ್ವ ಪುರುಷಪ್ರಯತ್ನವನ್ನೂ ಮೆರೆಯೋಣ. ಉಳಿದುದನ್ನುಆ ಕರುಣಾಮಯನಿಗೆ ಬಿಡೋಣ. ನಮ್ಮ ಮನಸ್ಸುಗಳು ಎಂದೆಂದಿಗೂ ಬೆಳಗುವ ಸತ್ಯದಕಡೆಗೆ , ಬುದ್ಧಿಯು ಸದಾ ಬೆಳಗುವ ಬೆಳಕಿನೆಡೆಗೆ ಒಯ್ಯಲ್ಪಟ್ಟರೆ, ನಾವು ಈ ಮರವಾದ ಬದುಕನ್ನು ಅಮರವಾದ ಜೀವನದ ಚೈತನ್ಯದ ಜೊತೆಗೆ ಜೋಡಿಸಿಕೊಂಡೆವಾದರೆ ಎಲ್ಲಾ ಬಗೆಯ ಭಯ,ಆತಂಕಗಳಿಂದ ಮುಕ್ತರಾಗಿ ಜೀವನ ಮಾಡಬಹುದಾಗಿದೆ. 

ಕಡೆಯಲ್ಲಿ ಶ್ರೀರಂಗಮಹಾಗುರುಗಳ ಈ ಮಾತು ಇಲ್ಲಿ ಸ್ಮರಣೀಯ-"ಜ್ಞಾನವನ್ನು ಬೆಳೆಸಲು,ಸತ್ಯವನ್ನು ಮೆರೆಸಲು ಎಷ್ಟು ಸಮಾಜಗಳು ದುಡಿದಿವೆ! ಎಷ್ಟು ತಪಸ್ಯೆಗಳು ನಡೆದಿವೆ! ವೇದ-ಇತಿಹಾಸ-ಪುರಾಣಗಳನ್ನು ನೋಡಿದರೆ ಒಂದೊಂದು ವಿಷಯ ತರಲು ಲಕ್ಷಾಂತರ ವರ್ಷಗಳ ತಪಸ್ಯೆ ನಡೆದಿದೆ ಎಂಬುದು ತಿಳಿಯುತ್ತದೆ"

ಹೀಗೆ ಕೇವಲ ಪುರುಷಪ್ರಯತ್ನದಿಂದ ಸಾಧ್ಯವಾಗದ, ಅವನ ಅನುಗ್ರಹದಿಂದಲೇ ಆಗಬೇಕಾದದ್ದನ್ನೇ ಅವನಲ್ಲಿ ಪ್ರಾರ್ಥಿಸಿದ್ದಾರೆ. ಮಹರ್ಷಿಗಳು ತಾವು ಅಸತ್ಯದಿಂದ ಸತ್ಯದೆಡೆಗೆ,ತಮಸ್ಸಿನಿಂದ ಆಜ್ಯೋತಿರ್ಧಾಮದೆಡೆಗೆ, ಮೃತ್ಯುವಿನಿಂದ ಅಮೃತತ್ವದ ಎಡೆಗೆ ಸಾಗಿ ಜೀವನದ ಸಾರ್ಥಕತೆಯನ್ನು ಪಡೆದವರಾಗಿದ್ದರೂ ಜೀವಲೋಕವೆಲ್ಲವೂ ಅಂತಹ ನೆಮ್ಮದಿಯನ್ನು ಹೊಂದುವಂತಾಗಲಿ ಎಂಬ ಕರುಣೆಯಿಂದ ಈ ಪ್ರಾರ್ಥನೆಯನ್ನು ನಮ್ಮೆಲ್ಲರಿಗಾಗಿ ಮೊಳಗಿದ್ದಾರೆ. ಅವರ ಮನಸ್ಸಿನಂತೆ ನಮ್ಮ ಜೀವನದ ಯಶಸ್ಸಿಗಾಗಿ  ಅನವರತವೂ ಈ ಪ್ರಾರ್ಥನೆಯನ್ನು ಮಾಡೋಣ.

ಸೂಚನೆ: 15/07/2021 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಜಯವಾಣಿಯ ಸಂಸ್ಕೃತಿ ದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.