Showing posts with label 350_ayvmarticle. Show all posts
Showing posts with label 350_ayvmarticle. Show all posts

Thursday, March 18, 2021

கற்பித்தலின் மூன்று வகைகள்(Karpittalin munru vagaigal)

மூலம்: டா.மோஹன் ராகவன்
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


தமிழாக்கம்: வனஜா ராமதாஸ் ச்ரேஷ்டி என்பவருக்கு  மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் அறிவாளிகளாயினும்  கற்றறிந்தவர்களாயினும்  பொறுப்பற்று நண்பர்களுடன் வெளியில் சுற்றி காலம் கழித்தனர். பெற்றவர்களுக்கு வயது கூடியது. பண்ணை, வயல்கள், தொழில் முதலியவற்றை நிர்வகிப்பது மென்மேலும் கடினமாயிற்று. கவலையுடன் எவ்வாறாயினும் மகன்களை நல்வழிப்படுத்த எண்ணினர்.  

ச்ரேஷ்டி ஒருமுறை தன் மகன்களை அழைத்து அரசரிடம் சென்று  கருவூலத்திற்கு செலுத்த வேண்டிய பங்கையும்  வரியையும்  அளித்து வருமாறு கூறினான். அரசனும் கப்பத்தை(காணிக்கை) பெற்றுக்கொண்டு அவர்களின் தந்தையின் நலனை குறித்து வினவி அவர்கள் செய்யும் தொழில்  குறித்தும் வினவினான். அவர்களை குடும்ப விவகாரங்களில் ஈடுபடும்படி அறிவுறுத்தி "முதுமை பருவத்தில் பெற்றோர்களை பேணுவதே உங்கள் தலையாய கடமை. அதுவே இந்நாட்டின் நீதியும் ஆகும். உடனடியாக குடும்ப   விவகாரங்களில் ஈடுபடுங்கள்" என அறிவுறை வழங்கினான்.

மூத்த மகன் அரசனின் வழிகாட்டுதலின்படி குடும்ப பொறுப்பை ஏற்க துவங்கினான். ஆயின் அவனது சகோதரர்கள் பழையபடியே வாழ்ந்தனர். ஒருமுறை மூத்தவன் அவர்களை அழைத்து கூறினான்  "உங்களுக்கு ஒன்றை வெளிபடுத்த வேண்டும். வியாபாரத்தில் ஈடுபடுவது  சலிப்பூட்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது அதனை கவர்ச்சிகரமாக உணர்கிறேன். நன்மதிப்பை பெறுகிறேன். நீங்கள் நல்லதொரு வாய்ப்பை இழக்கிறீர்கள்  இதை உங்களுக்கு மூத்தவனாக மட்டுமே அன்றி உடன் சுற்றி திரிந்த நண்பனாக கூறுகிறேன்." ஒரு சகோதரன் மறுதினமே கடையில் சுறுசுறுப்புடன் பணியாற்றினான். இளையவன் தன்னை திருத்திக்கொள்ளாமல் குடியிலும், சூதிலும் மூழ்கினான்.

இதனிடையில் பெற்றோர் இளையவனை மணக்க தக்க வரனை தேடினர். வரன் அமைந்ததும் பெண்ணை அவனுக்கு காட்டினர். அவள் அழகால் பிரமித்து மணக்க இணங்கினான். அவள் மென்மையும், அமைதியும், புத்திகூர்மையும் உள்ள பெண். எளிதாக அவனை தன்வயப்படுத்திக்கொண்டாள். அவள் அறிவுறையை தவிர்க்க இயலாமல் படிப்படியாக நல்வழிக்கு திரும்பினான். பெற்றோர் மாலை நேரங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் இறையுணர்விலும் தியானத்திலும் கழித்தனர்.

மேற்கூறிய கதை நம் பாரதத்தின் கல்வி, பள்ளிகளின் அணுகுமுறை குறித்தது. நம் பண்டைய முனிவர்கள் தவத்தின் செல்வத்தை குறித்து நன்கறிந்திருந்தனர். தங்கள் உள்ளத்துள்ளே பரந்த தங்க சுரங்கத்தையே கண்டறிந்தனர். மேலும் இயற்கை அளிக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பதுடன்  விருப்பங்களை நிறைவேற்றவும் பாதை வகுத்தனர். அவர்களின் மந்திரமாவது உள் தர்மத்தால் கிடைக்கும் இன்பத்தையும் வெளியில் கிடைக்கும் செல்வத்தையும், இன்பத்தையும் சமநிலையில் ஏற்பது.

அத்தகு வாழ்வை  சுற்றுபுரத்திலும், நாட்டிலும், சமூகத்திலும் நடைமுறைப்படுத்தி வாழ்ந்தனர். பண்டைய பாரதத்தில் இதுவே வாழ்வின் சாரமாக விளங்கியது. இத்தகைய நடைமுறையை நாடு முழுதும் செயல்படுத்த தகுந்த முறைகளும், பயிற்சியும் தேவை. அநேக விதமான எண்ணங்களும், விருப்பங்களும், தகுதிகளும் உள்ள மக்கள் மாற வேண்டும்.  உயர்ந்த ஆத்ம மார்கத்தில் வழி நடத்தப்பட வேண்டும்.

மக்களை ச்ரேஷ்டியின் மூன்று மகன்களுடன் ஒப்பிடலாம். வேதங்களையும், உபநிஷதங்களையும் பயிற்றுவித்து தர்ம மார்கத்தில் வழி நடத்துவது ஒரு வகை. வேதங்களும், உபநிஷதங்களும் அரசரின் கட்டளையைப்போல் உள்தவத்தையும் தியானத்தையும் வலியுறுத்துகின்றன. "உண்மையே பேசு; அறத்தின் வழி நட;  (நல்வழி) சுய ஆய்விலிருந்து பிறழாதே" (ஸத்யம் வத, தர்மம் சர), கற்பிக்கையில் வழிநடத்தும் சொற்களும் உண்டு. "ஏஷ ஆதேஶ: ஏஷ உபதேஶ:" அவை அரசனின் புனிதமான கட்டளை போல் எதிரொலிக்கும். மக்களின் மனதில் அமைதியை ஏற்படுத்தி உள்மூழ்க செய்யும். எனவேதான் வேதம், உபநிஷதம், சாஸ்திரங்கள் 'ப்ரபு ஸம்மிதை'(அரசனின் கட்டளை போன்றது) என்றழைக்கப்படும். சிலர் இதனை ச்ரேஷ்டியின் மூத்த மகனை போல் பின்பற்றுகின்றனர்.

ஆனால் அனேகர் இவ்வணுகு முறையை இளைய சகோதரரகளை போல்  விரும்புவதில்லை. கிளர்ச்சி செய்கின்றனர். அத்தகையோருக்கு  நேரிடையாக கற்பித்தலை காட்டிலும் கதைகள், உவமைகள் மூலம் அறிவூட்டி நல்வழி படுத்தலாம். தவறான பாதையின் தீமைகளை உணர்த்த வேண்டும். புராணங்களும், இதிஹாஸங்களும் நண்பனைப் போல் செயல்படுவதால் அவை 'மித்ர ஸம்மிதை' (ஒரு நண்பன் நடத்தும் பாதை) எனப்படுகிறது. ஹிரண்யகசிபுவின் அதர்மம்-ப்ரஹ்லாதனின் பக்தி, கௌரவர்களின் ஆடம்பரம்_பாண்டவர்களின் நல்வழிக்கு பக்தி, நஹுஷனின் அழிவு, அஜாமிளனின் உயர்வு போன்ற அநேக சான்றுகளை காணலாம். உயர்ந்த ஆன்மீக தத்துவங்கள் இவற்றில் பின்னி பிணைந்துள்ளன. ஐந்தே வயதில் த்ருவன் ஸ்ரீமந் நாராயணனை தியானித்து அவனருளை பெற்றான். அவன் தாய் சுநீதி. தந்தை மாற்றாந்தாய் சுருசி மீது அதிக அன்பு கொண்டிருந்தான். எனவே சுநீதியின் மகனான த்ருவனுக்கு  உரிமை கிட்டவில்லை. அநியாயத்தை பொறுக்க இயலாமல் அவன் வீட்டை துறந்து நாரதர் வழிகாட்டலின்படி நாராயணனை தியானித்து அருள் பெற்றான். ஸ்ரீ ரங்கமஹாகுரு இவ்வுதாரணத்தை முனிவர்கள் அருளிய கதைகளில் மறைமுகமாக  பொதிந்துள்ள  ஆன்மீக தத்துவங்களை முன்னிலைபடுத்த பயன்படுத்தினார். நாம் நெறிமுறைகள், நல்வழிகளை காட்டிலும் புலனின்பங்களையே விரும்புகிறோம். ஒரு சர்க்கரை நோயாளி எது நன்மை தருமோ(சுநீதி) அதற்கும் மேலாக நல்ல சுவையை(சுருசி) மட்டுமே விரும்பினால் முடிவு அழிவுதான். நல்வழி புறக்கணிக்கப்படும்போது(சுநீதி) நம் உடல் அழிய தொடங்கும். மனம் ஒருநிலை  படுகையில் (த்ருவா) அமைதி கிட்டும். சரியான நெறியை(சுநீதியை) கடைபிடிக்கையில் (த்ருதி) மனஉறுதி  அடையலாம். மன தத்துவத்தை உணர்த்தும் நாரதரே வழிகாட்டி . மனமானது உறுதியாக பரமாத்மாவிடம் நிலைத்தால்  நாராயணனையும் எப்போதும் அவன் அருகாமையையும் உணரலாம். இதை சரியாக புரிந்து கொண்டு அடைய குருவின் துணையுடன் 'மித்ரஸம்மிதை'களை  கற்றல் அவசியம்.

மூன்றாவது மகன் இவைகளுக்கு கட்டுபடவில்லை. அவன் பேராசை, கர்வம் கொண்டிருந்தான். ஒரு மதம் கொண்ட யானையை அடக்க, பழகிய யானை தேவை என ஸ்ரீரங்கமஹாகுரு கூறுவார். அத்தகைய மனிதனை அடக்க  ஒரு பெண் தன் கணவனை அடக்குவது போன்ற  உறுதி தேவை. இது குறித்து கூறும் காவியங்கள் 'காந்தா ஸம்மிதா' எனப்படும். அவை  மக்களின் மனதை அன்பு, துயரம் போன்ற உணர்ச்சிகளின் மூலம் கவர்ந்து  பின் அமைதியில் நிலை நிறத்துகின்றன. கதாபாததிரங்களின் எண்ணங்கள் நம்முள் பதியும். பழமை வாய்ந்த ஆதிகாவியமான ராமாயணம்  முன்னோடியாக கருதப்படுகிறது. ஏனெனில் அது பல வகையான உணர்வுகளை படிப்பவர் மனதில் ஏற்படத்துகிறது. ராமன்-சிதை இடையிலான அன்பு(ச்ருங்காரம்), ராமனின் வலிமை(வீரம்), கருணை யுத்தத்தின் விளைவான கோபம்(ரௌத்ரம்), பயம், அருவருப்பு முதலிய உணர்ச்சிகள் இருப்பினும் ராமனின் கம்பீரமும், அமைதியான முக தோற்றமும்(சாந்தம்), பாட்டின் பல்லவியை போல் காவியம் முழுவதிலும் பரவி உள்ளது. ராமனின் கம்பீரமும், அனைத்து உயிர்களிடமும் அவர் காட்டும் கருணையும், தர்மத்தின் விதையை நாம் அறியாமலே நம்முள் விதைக்கும். நாரதர், வால்மீகி போன்ற முனிவர்களின் தவம், சுய ஆய்வுடன் தொடங்கும் கதை அமைதியான சாந்தரஸத்தில் முடிகிறது.

முனிவர்களின் நாடான பாரதத்தில் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் எனும் நான்கு வகை புருஷார்த்தங்களே  வாழ்வின் இலக்காக(லட்சியங்களாக) இருந்தன. நம்மை அவற்றிற்கு அழைத்து செல்லும் சாலைகளே மூன்று ஸம்மிதைகள். அவை முறையே ப்ரபு-மித்ர-காந்தா ஸம்மிதைகள் எனப்படும். இவற்றை பயன்படுத்தி நம் வாழ்வில் ஒளி ஏற்றி நம் நாட்டை வளப்படுத்துவோம்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.

Tuesday, February 16, 2021

The Three Models of Training

   Kannada Article by: Dr Mohan Raghavan

English Rendering by: M R Bhashyam

Respond to (lekhana@ayvm.in)



 

Ramadas Shreshti had three sons. Though all were intelligent and educated, they used to while away their time roaming with friends without any responsibility. Age was descending on the parents. It was becoming more and more difficult for the parents to manage the affairs of farm, fields and business. Worried, they were trying to think of ways and means to bring their children to the right path.

 

Once, Shreshti called his three sons and asked them to go to the king to deliver the share to the treasury and taxes. The king received the tributes and enquired about the welfare of Shreshti and the occupation of the children. He directed them to get involved in the affairs of the family saying "It is only right for you to take care of your parents during their old age.  That is also the law of the land. Immediately get involved in the family affairs".  The oldest son, as directed by the king, immediately started shouldering the responsibility of the family. But his siblings continued in their old ways. The older brother once called his younger brothers aside and told them "I have to reveal something. I was thinking that it would be boring to be involved in business. But now, I find it very interesting. I receive a lot of respect now. You have lost a great opportunity. I am telling you this not as your elder brother but as a friend who was going around with you".  One of the brothers became active in the shop the very next day.  But the youngest, without correcting himself, began to dive more deeply into liquor and gambling.  In the meantime, the parents searched for a suitable girl to get the youngest son married.  Having found one, they showed her to him. Stunned by her beauty, he agreed to get married to her. She was a soft and serene girl and was also very smart. She took him into her fold very easily. Unable to ignore her advice, he gradually returned to the right path. The parents spent the evenings of their lives happily and peacefully through prayer and meditation.

The above is a story about approach to education and schooling in Bharata. The sages of India were well aware of the wealth of penance. They had found a vast gold mine of joy within themselves.  Besides, they had laid down norms for enjoying the happiness bestowed by Mother Nature and to fulfill desires. Their Mantra was to balance the joy awarded by the internal Dharma with the happiness accorded by the external wealth and desires. They lived and nurtured that way of life in their environs, empire and society. This is the essence of life of Bharata of the bygone eons. If this system had to be implemented across the length and breadth of the country, suitable methods, mechanisms of education and training were necessary. People with many tastes and volitions had to be transformed. They had to be guided to the highway of Aatma-dharma, the road to the soul.

The populace could be compared to the three children of the Shreshtis. Training people in dharma-maarga, by instructing in Vedas and Upanishads was one of the methods. The Vedas and Upanishads prescribe internal penance and meditation akin to the king's decree. "Speak the Truth, follow dharma – the righteous path, do not turn away from self-study" – "Satyam Vada, Dharmam Chara, Swaadhyaayaan maa-pramadah". There are undertones of teaching by directing in sayings like "esha aadeshah, esha upadeshah".  They reverberate solemnly like a king's command.  They bring silence to peoples' minds and in stunned moments the minds dwell deep down. That is why Vedas, Upanishads and Shastras are called "Prabhu Sammita" – "as per the dictum of the king for welfare".  Some follow these like the eldest son of Shreshtis.

But many do not like this approach like those younger siblings. They rebel. Instead of teaching directly they have to be enlightened in the righteous path through stories and parables. They have to be made aware of the perils of the wrong path. Since itihasas and puraanas perform this like a friend, they are Mitra Sammitas, the route followed by a friend. We find many examples like the adharma of Hiranyakashipu - Prahlaada's devotion, the vanity of kauravaas- the devotion of paandavaas to the righteous path, Nahusha's downfall – Ajaamila's upliftment and many more. Profound spiritual principles have been woven into these stories., When just five years old, Dhruva meditates on Lord Naaraayana and earns His grace.  His mother was Suneeti. His father loved his step mother Suruchi much more. Hence, Dhruva, son of Suneeti was not getting his due. Unable to bear the injustice, he leaves home and meditates on Lord Naaraayana as per the direction and instructions of sage Naarada and acquires His grace. Shri ShriRanga Mahaaguru used this as an example to highlight the spiritual principles woven indirectly into the story by the sages.  We like sensual pleasures better than the ethical principles and righteous path. If a diabetic favors Suruchi (good taste), more than the constraints of what is right (Suneeti), then the result is perilous. The abandonment of the right path (Suneeti), creates havoc in our body. Peace is attained if the intellect is anchored (Dhruva). The dhruti – firmness of mind- is attained if we have the right ethics – Suneeti. Sage Naarada, representing the principle of the mind is the guide. If the mind is firmly stationed in the Soul of souls, then Lord Naaraayana and eternal proximity to Him are realized.  In order that this may be properly understood and achieved, Mitra Sammitas are needed to be studied under the guidance of a guru.

The third son does not bend for any of these. He is under the influence of greed, attachment and ego. "If a rogue elephant needs to be tamed, a trained elephant is necessary" ShriRanga Mahaguru used to say. One needs to bring that kind of a person under control with resolve, like the way a woman takes control of her husband. The kaavyas – Literatures- which employ this technique are called Kaanthaa – Sammitaas.   They attract the minds of people with sentiments – rasas - like love, grief etc and finally position them in serenity. The characteristics and thoughts of heroes and heroines seep into us. Shrimad Raamaayana, the kaavya of antiquity – Aadikaavya- is positioned as the ideal and consummate Kaavya because it evokes many rasaas in the reader.  The love between Raama and Seetha - Shrungaara, Raama's valor -  Veera, the grief it evokes due to separation , the horror- Bhayanaka and the disgust – Bheebhatsa of the war, the fury – Roudra of Raama, and His serene and solemn  countenance, Shaantha, throughout influences and enchants us like the thematic line of music, the pallavi. Raama's modesty and compassion towards all beings sow the seed of dharma- righteousness – in us without our being aware. The story which begins with the penance, self study and the study of the self of Sages Naarada and Vaalmiki ends in the rasa of serenity – Shaantha.

In the country of Bharata of the sages, dharma- artha- kaama- moksha were the four fold purushaarthas – goals of life.  The roads that lead us on to these are the three types of Sammitaas namely Prabhu- Mitra and Kaantha. Let us enlighten our lives using these and enrich them in our land.

Note: The Kannada version of this article can be viewed at AYVM blogs.

Friday, June 26, 2020

ಮೂರು ಶಿಕ್ಷಣ ಪದ್ಧತಿಗಳು (Muru Sikshana Paddhatigalu )

ಲೇಖಕರು: ಡಾ ।। ಮೋಹನ ರಾಘವನ್ 
(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ lekhana@ayvm.in)



ರಾ
ಮದಾಸ-ಶ್ರೇಷ್ಠಿಗೆ ಮೂವರು ಗಂಡು ಮಕ್ಕಳು. ಮೂವರೂ ಚುರುಕು ಬುದ್ಧಿಯುಳ್ಳವರೂ, ವಿದ್ಯಾವಂತರಾದರೂ ಸ್ನೇಹಿತರೊಡನೆ ಅಡ್ಡಾಡುತ್ತಾ ಬೇಜವಾಬ್ದಾರಿಯಿಂದ ಕಾಲ ಕಳೆಯುತ್ತಿದ್ದರು. ತಂದೆ-ತಾಯಿಯರನ್ನು ವಯೋಧರ್ಮ ಬಾಧಿಸುತ್ತಿತ್ತು. ಅಂಗಡಿ ವ್ಯಾಪಾರ, ಹೊಲ ಗದ್ದೆಗಳನ್ನು ನಿಭಾಯಿಸುವುದು ಕಷ್ಟವಾಗುತ್ತಾ ಬಂತು. ಚಿಂತಾಕ್ರಾಂತರಾಗಿ, ಮಕ್ಕಳನ್ನು ಸದ್ಧರ್ಮದೆಡೆಗೆ ಕರೆತರುವ ಬಗೆಯ ಹುಡುಕ ತೊಡಗಿದರು. ಒಮ್ಮೆ ಶ್ರೇಷ್ಠಿಗಳು ಮೂವರನ್ನೂ ಕರೆದು, ವರ್ಷದ ಕರ-ಮತ್ತಿತರ ಕಾಣಿಕೆಗಳನ್ನು ರಾಜನಿಗೆ ತಲುಪಿಸಿ ಬರಲು ನೇಮಿಸಿದರು. ಕಪ್ಪಕಾಣಿಕೆಗಳನ್ನು ಸ್ವೀಕರಿಸಿ, ರಾಜನು ಪ್ರಸಿದ್ಧವಾದ ಶ್ರೇಷ್ಠಿಗಳ ಕುಶಲ ಸಮಾಚಾರ, ಅಂತೆಯೇ ಮಕ್ಕಳ ಆಗುಹೋಗುಗಳನ್ನು ವಿಚಾರಿಸಿಕೊಂಡ. 'ವಾರ್ಧಕ್ಯದಲ್ಲಿ ತಂದೆತಾಯಿಯರನ್ನು ಸಲಹುವುದು ಧರ್ಮ. ನಮ್ಮ ರಾಜ್ಯದ ನಿಯಮ ಕೂಡ. ಕೂಡಲೇ  ವೃತ್ತಿಜೀವನದಲ್ಲಿ ಉದ್ಯುಕ್ತರಾಗಿ !' ಎಂಬಆದೇಶವನ್ನಿತ್ತ. ಹಿರಿಯ ಮಗ ರಾಜಾಜ್ಞೆಗೆ ಬಾಗಿ ಮರುದಿನದಿಂದಲೇ ಮನೆಯ ಜವಾಬ್ದಾರಿಗಳಲ್ಲಿ ಪಾಲ್ಗೊಂಡನು. ಆದರೆ ತಮ್ಮಂದಿರಿಬ್ಬರು ಬೇಜವಾಬ್ದಾರಿಯನ್ನು ಮುಂದುವರೆಸಿದರು. ಅಣ್ಣನು ತಮ್ಮಂದಿರನ್ನು ಪ್ರತ್ಯೇಕವಾಗಿ ಕರೆದು "ಅಂತೂ ಒಂದು ವಿಷಯ ಹೇಳಬೇಕು ಕಣ್ರಪ್ಪಾ. ! ವ್ಯಾಪಾರ ನಡೆಸುವುದು ಏನೋ ಬೇಜಾರು ಕೆಲಸ ಅಂದುಕೊಂಡುಬಿಟ್ಟಿದ್ದೆ. ಆದರೆ ತುಂಬಾ ಸ್ವಾರಸ್ಯ ಇದು! ಈಗ ನನಗೆ ಸಿಗುವ ಮರ್ಯಾದೆ ಅಪಾರ  ! ನೀವುಗಳು ಒಳ್ಳೆಯ ಅವಕಾಶ ಕಳೆದುಕೊಂಡ್ರಿ. ನಾನು ಅಣ್ಣನಾಗಿ ಅಲ್ಲ, ನಿಮ್ಮೊಡನೆ ಅಡ್ಡಾಡುತ್ತಿದ್ದ ಮಿತ್ರನಾಗಿ ಹೇಳುತ್ತೇನೆ".ಎಂದನು. ಮರುದಿನವೇ ತಮ್ಮನೊಬ್ಬನು ಅಂಗಡಿಯಲ್ಲಿ ಸಕ್ರಿಯವಾಗಿ ಕಾಣಿಸಿಕೊಂಡ. ಆದರೆ ಕೊನೆಯ ತಮ್ಮ ತಿದ್ದುಕೊಳ್ಳದೇ,  ಜೂಜು, ಮದ್ದು ಮುಂತಾದ ಚಟಗಳಲ್ಲಿ ಇನ್ನೂ ಆಳಕ್ಕೆ ಮುಳುಗಿದ. ತಾಯಿಯು ಅವನಿಗೆ  ಒಂದು ಹುಡುಗಿಯನ್ನು ತೋರಿಸಿ ಮದುವೆಯಾಗುವೆಯಾ? ಎಂದು ಕೇಳಿದರು. ಆಕೆಯ ಸೌಂದರ್ಯಕ್ಕೆ ಬೆರಗಾಗಿ ಒಪ್ಪಿಕೊಂಡ. ಹೆಂಡತಿ ಮೃದು-ಸೌಮ್ಯ ಸ್ವಭಾವದವಳು, ಬಹಳ ಚತುರೆ ಕೂಡ. ಸುಲಭವಾಗಿ ಗಂಡನನ್ನ ವಶಕ್ಕೆ ತೆಗೆದುಕೊಂಡಳು. ಆಕೆಯ ಮಾತು ತಳ್ಳಿಹಾಕಲಾರದೆ ಕ್ರಮೇಣ ನೇರ ದಾರಿಯನ್ನ ಹಿಡಿದ. ತಂದೆ-ತಾಯಿಯರು ನೆಮ್ಮದಿಯಿಂದ ಕೊನೆಯ ಕಾಲವನ್ನು ತೃಪ್ತಿ-ಸಂತೋಷದಿಂದ ಜಪ-ತಪಾದಿಯಲ್ಲಿ ಕಳೆದರು.

ಇದು ಭಾರತೀಯ ಶಿಕ್ಷಣ ಪದ್ಧತಿಯ ಒಂದು ಕಥೆಯಾಗಿದೆ. ಭಾರತದ ಮಹರ್ಷಿಗಳು ತಪೋಧನರು. ಅಪಾರವಾದ ಸಂತೋಷದ ಗಣಿಯನ್ನು ತಮ್ಮೊಳಗೇ ಕಂಡುಕೊಂಡಿದ್ದರು. ಜೊತೆಯಲ್ಲಿ ವಸುಧೆಯು ಕೊಡಲು ಬಯಸುವ ಸಂಪತ್ತನ್ನು ಅನುಭವಿಸುವ ವಿಧಾನವನ್ನೂ, ಕಾಮನೆಗಳನ್ನು ಈಡೇರಿಸಿಕೋಳ್ಳುವ ವಿಧಾನಗಳನ್ನೂ ಹಾಕಿಕೊಟ್ಟಿದ್ದರು. ಒಳಧರ್ಮ ಮತ್ತು ಅರ್ಥ-ಕಾಮದ ಸೌಖ್ಯ ಎರಡನ್ನೂ ತೂಗಿಸಿಕೊಂಡು ಹೋಗುವುದೇ ಅವರ ಮಂತ್ರ. ಅಂತಹ ಜೀವನಶೈಲಿ ತಾವೂ ನಡೆಸಿ, ಜೀವನ-ಸಮಾಜ-ರಾಷ್ಟ್ರದಲ್ಲೂ ಬೆಳಸಿದರು. ಇದೇ ಸನಾತನ ಭಾರತದ ಸಾರ. ಇಂತಹ ವ್ಯವಸ್ಥೆಯನ್ನು ದೇಶದ ಉದ್ದ-ಅಗಲಕ್ಕೂ ಜಾರಿಗೊಳಿಸಬೇಕಾದರೆ ಸೂಕ್ತ ಶಿಕ್ಷಣಪದ್ಧತಿ ಬೇಕು. ನಾನಾ ಅಭಿರುಚಿಗಳಿಂದ ಕೂಡಿದ ಜನರನ್ನೂ, ಅವರ ಮನಸ್ಸನ್ನೂ ಪರಿವರ್ತಿಸಬೇಕು. ಆತ್ಮಧರ್ಮದ ಮಾರ್ಗಕ್ಕೆ ತರಬೇಕು.

ಈ ಜನಸಮೂಹವು ಶ್ರೇಷ್ಠಿಯ ಮೂರು ಮಕ್ಕಳಂತೆ. ಅವರಿಗೆ ವೇದ, ಉಪನಿಷತ್ತು, ಶಾಸ್ತ್ರಗಳ ಮೂಲಕ ಧರ್ಮಶಿಕ್ಷಣ ನೀಡುತ್ತಿದ್ದರು. ಉಪನಿಷದ್ವಾಣಿಯು ಧೀರಗಂಭೀರವಾಗಿ, ರಾಜಾಜ್ಞೆಯಂತೆ ಒಳತಪೋಭೂಮಿಯ ಸಮಾಚಾರವನ್ನು ಸಾರುತ್ತದೆ. "ಸತ್ಯಂ ವದ ! ಧರ್ಮಮ್ ಚರ ! ಸ್ವಾಧ್ಯಾಯಾನ್ಮಾಪ್ರಮದ:" ಸತ್ಯವನ್ನೇ ನುಡಿ, ಧರ್ಮಮಾರ್ಗದಲ್ಲಿ ಚರಿಸು ಎಂದು ಅಪ್ಪಣೆ ಮಾಡುತ್ತದೆ. ಸ್ವಾಧ್ಯಾಯದ ಮಾರ್ಗದಿಂದ ವಿಮುಖವಾಗಬೇಡ ಎಂಬ ಎಚ್ಚರಿಕೆ ಇಲ್ಲಿದೆ. "ಏಷ ಆದೇಶ: ಏಷ ಉಪದೇಶ:" ಆದೇಶ, ಉಪದೇಶದ ಧ್ವನಿ ಇಲ್ಲಿದೆ. ಇದು ರಾಜನ ಆಜ್ಞೆಯಂತೆ ಗಂಭೀರವಾಗಿ ಮೊಳಗುತ್ತದೆ. ಜನರ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಸ್ಥಬ್ಧತೆಯನ್ನುಂಟುಮಾಡುತ್ತದೆ. ವಿಸ್ಮಯದ ಒಂದು ರಸನಿಮಿಷದಲ್ಲಿ ಜನರ ಮನಗಳನ್ನು ಸೆಳೆದೊಯ್ಯುತ್ತದೆ. ಆದರಿಂದಲೇ ವೇದೋಪನಿಷತ್ತು ಮತ್ತು ಶಾಸ್ತ್ರಗಳನ್ನು ಪ್ರಭುಸಮ್ಮಿತ ಎಂದು ಕರೆಯುತ್ತಾರೆ. ಹಿರೇಮಗನಂತೆ ರಾಜಾಜ್ಞೆಯನ್ನು ಪಾಲಿಸುವರು ಕೆಲವರು.

ಆದರೆ ಕಿರಿಯ ಇಬ್ಬರು ಮಕ್ಕಳಂತೆ ಅನೇಕರಿಗೆ ಇದು ರುಚಿಸುವುದಿಲ್ಲ. ಅವರು ಬಂಡಾಯ ಏಳುತ್ತಾರೆ. ನೇರವಾಗಿ ಉಪದೇಶ ಮಾಡದೆ, ಪರೋಕ್ಷವಾಗಿ ಕಥೆ-ಉಪಾಖ್ಯಾನಗಳ ಮಾಧ್ಯಮದಿಂದ ಧರ್ಮಮಾರ್ಗದ ಸೌಖ್ಯವನ್ನು ಹೇಳಬೇಕು. ಅಧರ್ಮದ ದುಷ್ಪರಿಣಾಮವನ್ನು ತಿಳಿಸಬೇಕು. ಮಿತ್ರನಂತೆ ಉಪಾಯವಾಗಿ ಈ ಕೆಲಸವನ್ನು ಮಾಡುವುದರಿಂದ ಪುರಾಣ-ಇತಿಹಾಸಗಳನ್ನು ಮಿತ್ರಸಮ್ಮಿತವೆಂದು ಕರೆಯುತ್ತಾರೆ. ಹಿರಣ್ಯಕಶಿಪುವಿನ ಅಧರ್ಮ - ಪ್ರಹ್ಲಾದನ ಭಕ್ತಿ; ಕೌರವರ ದುರಹಂಕಾರ - ಪಾಂಡವರ ಧರ್ಮನಿಷ್ಠೆ; ನಹುಷನ ಪತನ - ಅಜಾಮಿಳನ ಉದ್ಧಾರ; ಅನೇಕ ಉದಾಹರಣೆಗಳು ಕಂಡುಬರುತ್ತವೆ. ಅನೇಕ ಕಥೆಗಳಲ್ಲಿ ಗುಪ್ತವಾಗಿ ತತ್ತ್ವಾರ್ಥಗಳನ್ನು ಹೆಣೆದಿರುತ್ತಾರೆ. ಧ್ರುವ ಐದು ವರ್ಷದ ಹುಡುಗನಾಗಿ ಘೋರ ತಪಸ್ಯೆ ಮಾಡಿ ನಾರಾಯಣನನ್ನು ಒಲಿಸಿಕೊಂಡ. ಅವನ ತಾಯೀ ಸುನೀತಿ. ಆದರೆ ಅವನತಂದೆಗೆ ಸುರುಚಿ ಎಂಬ ರಾಣಿಯಲ್ಲಿ ಹೆಚ್ಚು ಒಲವು. ಆದರಿಂದ ಸುನೀತಿಯ ಮಗನಾದ ಧ್ರುವನಿಗೆ ಅನ್ಯಾಯವಾಗುತ್ತಿತು. ಅನ್ಯಾಯವನ್ನು ಸಹಿಸದೆ ಮನೆ ಬಿಟ್ಟು ನಾರದ ಮಹರ್ಷಿಗಳಿಂದ ಉಪದೇಶ ಪಡೆದು ತಪಸ್ಯೆ ಕೈಗೊಳ್ಳುತ್ತಾನೆ. ನಾರಾಯಣನ ಅನುಗ್ರಹ ಪಡೆಯುತ್ತಾನೆ. ಶ್ರೀರಂಗಮಹಾಗುರುಗಳು ಈ ಕಥೆಯ ಮೂಲಕ ಮಹರ್ಷಿಗಳ ಪರೋಕ್ಷವಾದ ತತ್ತ್ವಸಂಯೋಜನೆಯ ನಿದರ್ಶನ ನೀಡುತ್ತಿದ್ದರು. ನಮಗೆ ಒಳ್ಳೆಯ ನೀತಿ - ಧರ್ಮಕ್ಕಿಂತ, ರುಚಿಯೇ ಹೆಚ್ಚು ಪ್ರಿಯ. ಸಕ್ಕರೆ ಖಾಯಿಲೆ ಇದ್ದವನಿಗೆ, ಸಂಯಮದ ಸುನೀತಿಗಿಂತ, ರುಚಿಯೇ ದೊಡ್ಡದಾದರೆ ಅನಾಹುತವೇ ಫಲ. ಸುನೀತಿಯನ್ನು ತೊರೆದ ರುಚಿ  ನಮ್ಮ ಮನೆಯಾದ ಶರೀರದಲ್ಲಿ ಅಲ್ಲೋಲಕಲ್ಲೋಲ ತರುತ್ತದೆ. ನೆಮ್ಮದಿ ಧ್ರುವ - ನಿಶ್ಚಲ ಮನಸ್ಸಿನಿಂದಬರುತ್ತೆ. ಧೃತಿ ಸುನೀತಿ- ಸದ್ಬುದ್ಧಿಯಿಂದಲೇ ಬರುತ್ತೆ. ಮನಸ್ತತ್ತ್ವ ಪ್ರತೀಕವಾದ ನಾರದರೇ ಮಾರ್ಗದರ್ಶಕರು. ಚಿತ್ತವು ಧ್ರುವವಾಗಿ ಪರಮಪುರುಷನಲ್ಲಿ ನೆಲೆಸಿದರೆ, ನಾರಾಯಣನ ದರ್ಶನ, ಶಾಶ್ವತವಾಗಿ ಅವನ ಸಾನ್ನಿಧ್ಯ. ಇದರ ಫಲ ದೊರೆಯಬೇಕಾದರೆ ಗುರುಮುಖೇನ ಮಿತ್ರಸಮ್ಮಿತಗಳ ಅಧ್ಯಯನ ಅವಶ್ಯಕ.

ಮೂರನೆಯ ಮಗ ಯಾವುದಕ್ಕೂ ಬಗ್ಗುವುದಿಲ್ಲ. ಲೋಭ, ಮೋಹ ಮದಗಳಿಗೆ ವಶನಾಗಿದ್ದಾನೆ. ಮದಿಸಿದ ಆನೆಯನ್ನು ಹಿಡಿಯಲು ಪಳಗಿದ ಆನೆ ಒಂದು ಬೇಕು ಎಂದು ಶ್ರೀರಂಗಮಹಾಗುರುಗಳು ಹೇಳುತ್ತಿದ್ದರು. ಅಂಥವನನ್ನು ಛಲದಿಂದ ವಶಿಸಬೇಕು. ಸ್ತ್ರೀ ಪುರುಷನನ್ನು ವಶದಲ್ಲಿ ಮಾಡಿಕೊಳ್ಳುವ ಹಾಗೆ. ಈ ಉಪಾಯವನ್ನು ಬಳಸುವ ಕಾವ್ಯಗಳು ಕಾಂತಾಸಮ್ಮಿತೆಯೆಂದು ಪ್ರಸಿದ್ಧವಾಗಿವೆ. ಆದರೆ ಶೃಂಗಾರಾದಿ ರಸಗಳಿಂದ ಜನರ ಮನಗಳನ್ನು ಆಕರ್ಷಿಸಿ ಶಾಂತರಸದಲ್ಲೇ ನಿಲ್ಲಿಸುತ್ತವೆ. ನಾಯಕ-ನಾಯಕಿಯರ ಗುಣ-ಭಾವಗಳು ನಮ್ಮಲ್ಲಿ ಸಂಕ್ರಮಿಸುತ್ತವೆ. ಶ್ರೀಮದ್ರಾಮಾಯಣ ಆದಿಕಾವ್ಯವ ಆದರ್ಶಕಾವ್ಯವೆಂದೂ ಪ್ರಸಿದ್ಧ. ಸೀತಾರಾಮರ ಶೃಂಗಾರ, ರಾಮನ ವೀರ, ಅಗಲಿಕೆಯ ಕರುಣಾ ರಸ, ಯುದ್ಧದ ಭಯಾನಕ, ಬೀಭತ್ಸ, ರೌದ್ರ ರಸಗಳಿದ್ದರೂ, ಶ್ರೀರಾಮನ ಗಂಭೀರವೂ ಧೀರ-ಶಾಂತ ವ್ಯಕ್ತಿತ್ವವೂ ಪಲ್ಲವಿಯಂತೆ ಕಾವ್ಯದುದ್ದಕ್ಕೂ ಪ್ರಭಾವ ಬೀರುತ್ತದೆ. ರಾಮನ ವಿನಯ, ಭೂತದಯೆ, ನಮಗೇ ತಿಳಿಯದ೦ತೆ ನಮ್ಮಂತರಂಗದಲ್ಲಿ ಸದ್ಧರ್ಮದ ಬೀಜವನ್ನು ಬಿತ್ತರಿಸುತ್ತದೆ. ನಾರದ-ವಾಲ್ಮೀಕಿಗಳ ತಪಸ್ಸ್ವಾಧ್ಯಾಯದಲ್ಲಿ ಪ್ರಾರಂಭವಾದ ಕಾವ್ಯವು ಶಾಂತರಸದಲ್ಲೇ ಮಂಗಲಗೊಳ್ಳುತ್ತದೆ.

ಮಹರ್ಷಿಭಾರತದಲ್ಲಿ  ಧರ್ಮ-ಅರ್ಥ-ಕಾಮ-ಮೋಕ್ಷರೂಪವಾದ ಪುರುಷಾರ್ಥಗಳೇ ಜೀವನದ ಗುರಿ. ಅತ್ತ ಸಾಗಲಿಕ್ಕೆ ಮಾರ್ಗ ಮೂರು: ಪ್ರಭು-ಮಿತ್ರ-ಕಾಂತಾ ಸಮ್ಮಿತಗಳು. ಭಾರತ ಶಿಕ್ಷಣ ಪದ್ಧತಿಯ ಈ ಅನರ್ಘ್ಯರತ್ನಗಳನ್ನು ಬಳಸಿ ಬೆಳೆಸಿ ಬಾಳನ್ನು ಬೆಳಗಿಸಿಕೊಳ್ಳೋಣ.  

ಸೂಚನೆ: 25/06/2020 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಶ್ವ ವಾಣಿ ಯಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.