Sunday, August 4, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 14 (Sriranga Mahaguru - 14)

 ஸ்ரீ குருவின் கண்ணோட்டம் - 3
-------------------------------------

ஆதிகவியின் விருந்து
தமிழாக்கம்  : திருமதி வனஜா 


 நல்ல தம்பதிகள் விருந்தோம்பலின் போது இனிப்பு முதலான அறுசுவையுடன் கூடிய  உணவைதயாரிக்கின்றனர். அந்த அறுசுவைகளையும் சரியான விகிதத்தில் கலந்தால் மட்டுமே நல்ல விருந்துஎனப்படும். உணவும் பானமும் நாவிற்கு சுவை அளிப்பதுடன் உடல் மற்றும் மனநலத்திற்கும்ஏற்றதாக இருந்தால் மட்டுமே  அது சரியான விகிதத்தில் செய்த தரமான உணவாக கருதப்படும். இவ்வண்ணம் தயாரிக்கப்பட்ட உணவை விருந்தினர் உடல்நலத்துடனும் பசியுடனும் இருக்கும்போதுஅன்புடனும், ஆதரவுடனும் பரிமாறினால் அதுவே முழுமையான விருந்தாகும்.

  அறுசுவை கூடிய இவ்வுணவு  வயிற்றுக்கு விருந்தானால் மனதிற்கு நவரசங்கள் கூடின காவியமும்  அவ்விதமே விருந்தாகும்.  ஆதிகவி வால்மீகியும் சிருங்காரம், வீரம், கருணை, அற்புதம், நகைச்சுவை,பயம், அருவருப்பு, கோபம் மற்றும் சாந்தம் என்னும் நவரஸங்களும் கலந்த ராமாயணமென்னும் சுவை மிகுந்த விருந்தை ரசிகர்களுக்காக அளித்துள்ளார். இச்சுவைகளை அதனில் எந்த விகிதத்தில்சேர்த்திருக்கிறார்? எனில், எந்த விகிதத்தில் கலந்தால் ஏற்பவரின் புலன்களுக்கு இன்பமும்,மனத்திற்கு நிம்மதியும், புத்திக்கு  மகிழ்ச்சியும், ஆத்மாவிற்கு  ஆனந்தமும் அளிக்குமோ அந்த விகிதத்தில் அளித்துள்ளார்.

விருந்தினர்ஒருவர் குதிரை வண்டியில் வரும்போது அவருக்கு விருந்தளிப்பதுடன் அவருடையகுதிரைக்கும் புல், கொள்ளு மற்றும் தண்ணீர் அளிக்க வேண்டும்.  அவ்வாறே வால்மீகி தனதுவிருந்தில் ஆத்மாவிற்கு விருந்தளிக்கம் போதே அவற்றை சுமந்து  வந்திருக்கும் புலன்களென்னும் குதிரைகளுக்கும் அவற்றிற்கு தேவையான உணவை அளித்திருக்கிறார். எனவே அனைவருக்கும் மனநிறைவு என்று ஸ்ரீரங்கமஹாகுரு  விமரிசித்திருந்தார்.

இத்தகைய சுவைமிக்க விருந்தான ராமாயணம்கூட ஏன்   சிலருக்கு  சுவைப்பதில்லை? அதைகுறித்து கிண்டலாக ஏன் பேசுகிறார்கள்? ஏனெனில் அவர்களின் நாவும் மனமும் பழுதடைந்துள்ளன.  அவைகளை குணப்படுத்தும்  நல்ல அறிவுரை என்னும் மருந்தை முதலில் ஞானிகள் தர வேண்டும்.நோயுற்றவர்கள் அதனை பாரபட்சமின்றி ஏற்க வேண்டும். அதனால் சுத்தமடைந்த மனதில்  காவியத்தின் சுவை நன்கு அறியப்படும்.