Wednesday, July 3, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 22 (Srirangamahaguru - 22)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 11
(மூலம்: திரு. வரததேசிகாசார்யார் தமிழாக்கம் : திருமதி ஜானகி)



தீயை பூஜிப்பதா?

"எங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஓர் ஆசிரியர் மிகவும் சிறந்த பண்டிதர், விவேகி, நற்குணமுள்ளவர். அவரை அனைவரும் கௌரவிக்கின்றனர். எனக்கும் அவரிடம் மிக்க கௌரவமுள்ளது . ஆனால் அவரது இல்லத்தில் ஓர் மூடவழக்கம் உள்ளது."

                 "என்ன வழக்கம்?"

             'அவர் தீயை வணங்கி பூஜிக்கிறார். நெய், அன்னம் முதலியவற்றை அதில் சொரிந்து அதன் சாம்பலையும்  நெற்றியில் அணிகிறார்"
           "அவ்வாறு பண்டிதரும் விவேகியுமானவரே இதுபோன்று செய்கிறார் என்றால் ஏதாவது முக்கிய காரணம் இருக்க வேண்டுமல்லவா?"
           "வேறென்ன காரணம் இருக்க முடியும்? தொன்மையான  மூடநம்பிக்கை அவ்வளவே "   

        "பழங்காலத்திலாயினும் எவ்வாறு இப்பழக்கம் வந்திருக்கலாம்?"
                  "எங்கள் சரித்திர புத்தகத்தில் இதன் காரணத்தை எழுதியுள்ளார்கள். ஆதிமனிதன்  தீ, காற்று, மழை முதலிய இயற்கை செயல்களை கண்டு ஆச்சரியமடைந்து அவற்றையே உபாசிக்க தொடங்கினான்."

                  "அவற்றில் தீயை ஏன் பூஜித்தான்?"

           "காரணம் நன்றாக அறிந்ததே. தீயின்றி உணவு பொருட்கள் வேகாது. குளிர் காய்வதற்கும் தீ தேவை. சுட்டெரிக்கும் குணமும் தீக்கு உண்டு. ஆதலால் ஊக்கமும், பயமும் கொண்டு அதை பூஜிக்க தொடங்கினான். நம் பாரத நாட்டின் மக்கள் இன்னமும் அதையே பின்பற்றி வருகின்றனர்.'

                "தீ என்பது ஓர் ஜடப்பொருள். நாம் பூஜிக்காவிடினும் பொருட்களை வேகவைக்கும், கதகதப்பை அளிக்கும், சுட்டெரிக்கும். பின் அதை ஏன் ஆராதிக்க வேண்டும்? "

அதுசரி  அவர் அப்பூஜையை பற்றி என்ன கூறுகிறார்?  ’நெருப்பு பூஜை ஆயிற்று’   என்கிறார்களா?"

                  "இல்லை.  ’யக்ஞதேவனின் ஆராதனை,   அக்னி தேவனின் பூஜை, ஔபாசனம் ஆயிற்று’ என்கிரார்."
         ஆதலால் அவர்கள் ஆராதிப்பது தீயை அல்ல. யக்ஞேச்வரனை,  இறைவனைதான்.”

                  “தீயின் ஆராதனையை தானே காண்கிறோம்?”.

“கண்ணால் காண்பதை எல்லாம் ஆராய்ந்து அறியாமல் நம்புவது மூட நம்பிக்கை. ஆராயாமல் அவர்களின் பழக்க வழக்கங்களை ஏளனம் செய்யக்கூடாது. தீயின் பூஜை ஆயிற்றென்று அவர்கள் கூறுவதே இல்லை. அவர்கள் ஆராதிப்பது பூஜைக்குரிய இறைவனையே. அப்பூஜைக்கு தீ ஓர் சாதனம்.