திரு எஸ்.வி.சாமு அவர்களின் மூலகன்னட புத்தகத்தின் ஒரு பகுதி
Part 6
Part 6
( தமிழாக்கம்: ஶ்ரீமதி ஜானகி )
மஹாகுரு பரிசோதனையின் மூலம் நிரூபித்த பேருண்மை:
ஒருமுறை அவருடைய கிராமத்திற்கு வந்த உறவினர்களை தம் தோட்டத்திற்கு அழைத்து சென்றார். மூலிகைகளின் பெருமையை உணராத ஒரு உறவினர் வழியில் மூலிகைகளை பற்றி ஏளனம் செய்து வந்தாராம். இதை கண்டு ஸ்ரீகுருவின் நெருங்கிய உறவினரானஸ்ரீதாதாசார்யார் அவருக்கு தக்க பாடம் புகட்டவேண்டுமென குருவை கேட்டுக்கொண்டார். வழியில் கண்ட ஒரு மூலிகையை சுட்டி காட்டி ஸ்ரீகுரு ’இது கிடைத்தற்கரியது நன்றாக மென்று சுவையுங்கள்’ என்று தாதாசாரையும் மற்றொறுருவரையும் தவிர அனைவருக்கும் கொடுத்தார்.மூலிகையை பழித்த அந்த நபருக்கும் கொடுத்தார். பிறகு தென்னந்தோப்பில் நுழைந்து இளநீர்காய்களை பறிக்க செய்து அனைவருக்கும்கொடுத்தார். மிகவும் இனிப்பானது என்று அனைவரும் அறிந்திருந்த அந்த இளநீர் அன்று எந்த சுவையும் இன்றி சப்பென்று இருந்ததாம்.அதை பருக முடியாமல் அனைவரும் உமிழ்ந்து விட்டனர். தாதாசார் மட்டும் மகிழ்ச்சியுடன் சுவைத்தார். மற்றொருமுறை வழங்கிய போதும்சப்பென்றிறுந்ததை அறிந்து அனைவரும் திடுக்கிட்டு தடுமாறினராம். இது அந்த மூலிகையின் மகிமையாக இருக்கலாம் என்று தாதாசார் கூறியகருத்தை அந்த நபர் மட்டும் ஒப்புக்கொள்ள தயங்கினார்.
'கும்பலோடு கோவிந்தா' என்று கூறும் இயல்புடையவராக இருந்த மூலிகையை சுவைக்காத நபர் தன்னுடைய உண்மையான அநுபவத்தை கூறபயந்து மற்றவர்கள் உமிழ்வதை கண்டு தானும் துப்பினார். ஸ்ரீகுரு நகைசுவையுடன் ’என் கணக்கு சரியாகிவிட்டதப்பா’ என்று கூறினார்.
பிறகு ஸ்ரீகுரு எல்லோரும் வீடு திரும்புமுன் மறுபடியும் இளநீரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். காலம்கடக்க நாவின் சுவை மாறி இனிப்பைஉணரும்படி செய்து எல்லோருக்கும் மகிழ்ச்சியை அருளினார். மதுவிநாசினி மூலிகை நாவின் இனிப்பை உணரும் சுவைமொட்டுக்களைதற்காலிகமாக உணர்விழக்க செய்கிறதென்பதையும் விளக்கினார்.
இந்த பரிசோதனையின் மூலம் வெளிப்படுத்திய உண்மை:
மதுவிநாசினிமூலிகையை போல் நம் மனதில் இறைவனைப் பற்றிய இனிமையான அநுபவங்களை மறைக்கும் தீயகர்மாக்களை நாம் பலபிறவிகளிலிருந்து சேமித்து வந்திருப்பதால்தான் இறையனுபவம் நமக்கு ஏற்படுவதில்லை. ஆன்றோர்கள் எடுத்துரைத்தாலும் புரிவதில்லை. இந்த மூலிகையின் பயனால் இனிப்புசுவை மறைந்தாலும் மற்ற சுவைகளையெல்லாம் நாவால் உணர இயலுவதுபோல் ஒருவன் உலகவிஷயங்கள் அனைத்தையும் அநுபவிக்கும்தன்மை பெற்றிருந்தாலும் கர்மகதியினால் இறையனுபவத்தை மட்டும் உணர இயலாதவனாகிறான்எனும்பாடத்தை உறுதிபடுத்தினார்.