ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 42
பெரும் அநியாயம்
============================== =============================
பெரும் அநியாயம்
==============================
மூலம்: வரததேசிகாசார்யர்
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : lekhana@ayvm.in
மின்னஞ்சல் : lekhana@ayvm.in
“சிற்பி கல்லில் சிலை வடித்தான். இது பாராட்டுக்குரியது. ஆனால் ஆன்மிகவாதி அத்தெய்வ சிலையை கோவிலில் வைத்தான். இது மிகவும் அநியாயம்” எனும் பொருளில் சிலர் கூவுகின்றனர். இது சரியா?”
“தவறு. மிகவும் தவறு. அழகான இறையுருவ சிலையை ஆலயத்தினுள் வைப்பது சரிதான். வேறென்ன செய்ய வேண்டி இருந்தது?”
“அனைவரும் அவ்வடிவின் அழகை கண்டு ரசிக்கும்படி எந்த கட்டுப்பாடுமற்ற திறந்த வெளியில் அழகிய இடத்தில் வைத்திருக்க வேண்டும்.”
“அவ்வாறு மறைவில்லாத இடத்தில் வைத்திருந்தால் அச்சிலை காகம், குருவி, கழுகுகளுக்கு இருப்பிடமாயிருக்கும். அவை அதன் மேல் மல ஜலம் கழித்திருக்கும். அதன் தூய்மை சிறிதும் மிஞ்ஜியிராது. காற்று, மழை,வெப்பம் இவைகளால் பாழாகி இருக்கும். கோவிலில் நிலைநிறு த்தி இருப்பதால் அச்சிலை காப்பாற்றப்பட்டுள்ளது. தூய்மையும் நிலைத்திருக்கிறது என்பது பாமரருக்கும் விளங்குமல்லவா? இதை அநியாயமென்று ஏன் கூக்குரலிடவேண்டும்?”
“கோவிலினுள் இருப்பதால் பாதுகாப்பு இருக்கலாம். ஆனால் தூய்மை எவ்வாறு மிஞ்ஜும்?”
“தவத்தில் சிறந்த ஞானிகள் அச்சிலையை வெறுமனே கோவிலினுள் வைப்பதில்லை. அதன் புனிதத்தன்மைக்கு ஏற்ற கரு வறையில் இருத்தி மந்திரங்களாலும் , உரிய சடங்குகளாலும் இறைத்தன்மையை அச்சிலையினுள் நிரப்புகின்றனர். மேலும் ஆயிரக் கணக்கான மக்கள் அச்சிலையை இறைவனென்று பக்தியுடன் வழிபடும்பொழுது அதனுள் இறைதன்மை முழுமையாக நிரம்பி மிகவும் புனிதமாகிறது.
இத்தகு புண்யமான செயலை செய்தவர்களைப்பற்றி கீழ்தரமாக விமர்சிப்பது அறிவுள்ள செயலல்ல. அதனால் அவர்களுக்கும் பயனில்லை. உலகிற்கும் நன்மையில்லை.
(அடுத்த வியாழனன்று தொடரும்)