Thursday, July 29, 2021

பொய் பேசலாமா? (Poi Peshalama?)

மூலம் : கே.எஸ்.ராஜகோபாலன்
                தமிழாக்கம் : சி.ஆர். ஸ்ரீதர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)

கௌசிகன் என்னும்  ஒரு முனிவர் காட்டில் வசித்து வந்தார். அவர் சாஸ்திரங்களை அதிகமாக படித்தவரல்ல. எப்பொழுதும் உண்மையையே பேசவேண்டும் என்னும் விரதம் பூண்டிருந்தார். ஒரு நாள் சில யாத்திரிகர்கள், திருடர்களின் பயத்தினால் கௌசிக முனிவரின் தோட்டத்தினுள் புகுந்து ஒரு மூலையில் ஒளிந்துகொண்டனர். அவர்களை தொடர்ந்து வந்த  திருடர்கள், கௌசிகரிடம் ‘இந்த வழியாக வந்த யாத்திரிகர்கள் எங்கு சென்றனர்?’ என்று வினவினர். உண்மையினின்று வழுவாத கௌசிகர், யாத்திரிகர்கள் ஒளிந்திருந்த இடத்தை காட்டிக்கொடுத்தார். திருடர்கள், யாத்திரிகர்களை கொன்று அவர்களிடமிருந்த பொக்கிஷங்களை திருடிக்கொண்டு சென்று விட்டனர். தர்மநுணுக்கங்களை அறியாத கௌசிகனின் சொற்கள் அதர்மமே  ஆயின. அவன் உயிர் பிரிந்தபின் நரகத்தில் விழவேண்டியதாயிற்று.

                இந்த உபகதை அர்ஜுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணனே கூறியது. நம் ரிஷிகள், உண்மையே பேச வேண்டும் என்னும் தர்மத்தை உபதேசித்திருப்பது போல, ஆபத்து நேரும் காலங்களில் தவிர்க்க முடியாத தர்மத்தையும் கூறியிருக்கிறார்கள். ஆபத்காலங்களில் மட்டும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் ஆபத்தர்மம்.

                    நடந்து செல்லும் ஒருவன், நடைபாதையிலேயே செல்வதுதான்  தர்மம். ஆனால் எதிரில் வரும் லாரியொன்று தன் கட்டுப்பாட்டை மீறி நடைபாதை மீதே ஏறிவிட்டால், அவன் தன் உயிரை காத்துக்கொள்வதற்காக, வாகனங்களுக்கென்று விதிக்கப்பட்ட தெருவிலேயே வேறு வழியின்றி நடக்கவேண்டியிருப்பது ஆபத்கால  தர்மம். அதே போல், ஆபத்தர்மத்திற்காக பொய் பேச வேண்டியிருக்கும். பொய் பேசுவதால் ஒரு நன்மை விளைவதாயிருந்தால், அப்பொழுது பொய்யையே  பேசலாம் என்று  மஹாபாரதம் கூறுகிறது. உதாரணத்திற்கு, உண்மை பேசுவதால் நம் உயிருக்கே ஆபத்து விளைவதானால் அல்லது நம்மிடமுள்ள அனைத்து சொத்துக்களும் பறிபோய்விடுவதாயிருந்தால், பொய் சொல்லலாம் என்று கூறுகிறது.

                  அதர்மத்தின் பக்கம் சார்ந்திருந்த த்ரோணாசார்யரை கொல்வதற்காக, அச்வத்தாமன் இறந்தான் என்னும் தோற்றத்தை விளைவிக்கும் வாக்கியத்தை, அறத்தின்  வழியிலேயே செல்லும் தர்மராஜனுடைய வாயினாலேயே  ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லவைப்பது யாவரும் அறிந்த கதை.  ஸ்ரீகிருஷ்ணனே பொய் சொல்ல வைத்த பின் நாமும் பொய் பேசலாம் என்று எண்ணக்கூடாது. ஸ்ரீகிருஷ்ணன் தர்ம நுணுக்கங்களை அறிந்தவன். பொய் பேசுவது மஹாபாபம் என்பதை அறிந்தவன்தான். ஆனால் அதர்மத்தை வேரறுக்க வேண்டுமென்னும்  ஆழ்ந்த நிச்சயமுள்வனாதலால், தக்க தருணங்களில் சாமானியர்களுக்கு அதர்மமென்று காணப்படும் சில செயல்களை செய்துள்ளான் மற்றும் செய்ய வைத்திருக்கிறான். சில சமயங்களில் ஒரு பெரிய தர்மத்தை காப்பாற்றுவதற்காக, சிறிய தர்மத்தை தியாகம் செய்ய வேண்டிவரும். அவனைப்போல நுண்ணறிவு உள்ளவர்கள்தான் அவனுடைய செயல்களை பின்பற்ற அருகதை உள்ளவர்கள்.

                ‘ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்’ என்னும்  பழமொழியின் கருத்தை விவரிக்கையில்,  ஸ்ரீரங்கமஹாகுரு, ‘பொய் சொல்லியே ஒரு திருமணத்தை நடத்தி வைக்கவேண்டுமென்பது இதன் பொருள் அல்ல! சிலர் கெடுதி செய்யும் எண்ணத்தினால் பிறர் இல்லத்தில் நடக்கும் சுப காரியங்களை நிறுத்திவிடுகிறார்கள். அங்ஙனம் நற்பலனை தரக்கூடிய ஒரு திருமணம் நின்றுவிடக்கூடிய தருணம் வந்தால், பொய்யையாவது சொல்லி அந்த  சுப காரியம் நடைபெறும்படி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த பழமொழியின் பின்னுள்ள கருத்து. ஜீவிகளுக்கு  நன்மையும், யதார்த்தமுமே உண்மையாகும்’ என்று கூறியிருந்தார்.

                எப்பொழுதும் உண்மையையே  கூற வேண்டும் என்னும் தர்மத்தின் வழியை பின்பற்ற வேண்டும் என்பதுதான் சரி. ஆனால் அதனால் ஜீவிகளுக்கு(ஜீவத்திற்கு) நன்மை உண்டாகுமா என்னும் ஆய்வுத்திறன் நம்மிடம்  இருக்க வேண்டும். கௌசிகன் என்னும்  ஒரு முனிவர் காட்டில் வசித்து வந்தார். அவர் சாஸ்திரங்களை அதிகமாக படித்தவரல்ல. எப்பொழுதும் உண்மையையே பேசவேண்டும் என்னும் விரதம் பூண்டிருந்தார். ஒரு நாள் சில யாத்திரிகர்கள், திருடர்களின் பயத்தினால் கௌசிக முனிவரின் தோட்டத்தினுள் புகுந்து ஒரு மூலையில் ஒளிந்துகொண்டனர். அவர்களை தொடர்ந்து வந்த  திருடர்கள், கௌசிகரிடம் ‘இந்த வழியாக வந்த யாத்திரிகர்கள் எங்கு சென்றனர்?’ என்று வினவினர். உண்மையினின்று வழுவாத கௌசிகர், யாத்திரிகர்கள் ஒளிந்திருந்த இடத்தை காட்டிக்கொடுத்தார். திருடர்கள், யாத்திரிகர்களை கொன்று அவர்களிடமிருந்த பொக்கிஷங்களை திருடிக்கொண்டு சென்று விட்டனர். தர்மநுணுக்கங்களை அறியாத கௌசிகனின் சொற்கள் அதர்மமே  ஆயின. அவன் உயிர் பிரிந்தபின் நரகத்தில் விழவேண்டியதாயிற்று.

                இந்த உபகதை அர்ஜுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணனே கூறியது. நம் ரிஷிகள், உண்மையே பேச வேண்டும் என்னும் தர்மத்தை உபதேசித்திருப்பது போல, ஆபத்து நேரும் காலங்களில் தவிர்க்க முடியாத தர்மத்தையும் கூறியிருக்கிறார்கள். ஆபத்காலங்களில் மட்டும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் ஆபத்தர்மம்.

                    நடந்து செல்லும் ஒருவன், நடைபாதையிலேயே செல்வதுதான்  தர்மம். ஆனால் எதிரில் வரும் லாரியொன்று தன் கட்டுப்பாட்டை மீறி நடைபாதை மீதே ஏறிவிட்டால், அவன் தன் உயிரை காத்துக்கொள்வதற்காக, வாகனங்களுக்கென்று விதிக்கப்பட்ட தெருவிலேயே வேறு வழியின்றி நடக்கவேண்டியிருப்பது ஆபத்கால  தர்மம். அதே போல், ஆபத்தர்மத்திற்காக பொய் பேச வேண்டியிருக்கும். பொய் பேசுவதால் ஒரு நன்மை விளைவதாயிருந்தால், அப்பொழுது பொய்யையே  பேசலாம் என்று  மஹாபாரதம் கூறுகிறது. உதாரணத்திற்கு, உண்மை பேசுவதால் நம் உயிருக்கே ஆபத்து விளைவதானால் அல்லது நம்மிடமுள்ள அனைத்து சொத்துக்களும் பறிபோய்விடுவதாயிருந்தால், பொய் சொல்லலாம் என்று கூறுகிறது.

                  அதர்மத்தின் பக்கம் சார்ந்திருந்த த்ரோணாசார்யரை கொல்வதற்காக, அச்வத்தாமன் இறந்தான் என்னும் தோற்றத்தை விளைவிக்கும் வாக்கியத்தை, அறத்தின்  வழியிலேயே செல்லும் தர்மராஜனுடைய வாயினாலேயே  ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லவைப்பது யாவரும் அறிந்த கதை.  ஸ்ரீகிருஷ்ணனே பொய் சொல்ல வைத்த பின் நாமும் பொய் பேசலாம் என்று எண்ணக்கூடாது. ஸ்ரீகிருஷ்ணன் தர்ம நுணுக்கங்களை அறிந்தவன். பொய் பேசுவது மஹாபாபம் என்பதை அறிந்தவன்தான். ஆனால் அதர்மத்தை வேரறுக்க வேண்டுமென்னும்  ஆழ்ந்த நிச்சயமுள்வனாதலால், தக்க தருணங்களில் சாமானியர்களுக்கு அதர்மமென்று காணப்படும் சில செயல்களை செய்துள்ளான் மற்றும் செய்ய வைத்திருக்கிறான். சில சமயங்களில் ஒரு பெரிய தர்மத்தை காப்பாற்றுவதற்காக, சிறிய தர்மத்தை தியாகம் செய்ய வேண்டிவரும். அவனைப்போல நுண்ணறிவு உள்ளவர்கள்தான் அவனுடைய செயல்களை பின்பற்ற அருகதை உள்ளவர்கள்.

                ‘ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்’ என்னும்  பழமொழியின் கருத்தை விவரிக்கையில்,  ஸ்ரீரங்கமஹாகுரு, ‘பொய் சொல்லியே ஒரு திருமணத்தை நடத்தி வைக்கவேண்டுமென்பது இதன் பொருள் அல்ல! சிலர் கெடுதி செய்யும் எண்ணத்தினால் பிறர் இல்லத்தில் நடக்கும் சுப காரியங்களை நிறுத்திவிடுகிறார்கள். அங்ஙனம் நற்பலனை தரக்கூடிய ஒரு திருமணம் நின்றுவிடக்கூடிய தருணம் வந்தால், பொய்யையாவது சொல்லி அந்த  சுப காரியம் நடைபெறும்படி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த பழமொழியின் பின்னுள்ள கருத்து. ஜீவிகளுக்கு  நன்மையும், யதார்த்தமுமே உண்மையாகும்’ என்று கூறியிருந்தார்.

                எப்பொழுதும் உண்மையையே  கூற வேண்டும் என்னும் தர்மத்தின் வழியை பின்பற்ற வேண்டும் என்பதுதான் சரி. ஆனால் அதனால் ஜீவிகளுக்கு(ஜீவத்திற்கு) நன்மை உண்டாகுமா என்னும் ஆய்வுத்திறன் நம்மிடம்  இருக்க வேண்டும்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.