Showing posts with label 408_ayvmarticle. Show all posts
Showing posts with label 408_ayvmarticle. Show all posts

Thursday, November 5, 2020

வாமனனாக வந்து த்ரிவிக்ரமனாக அருள்பாலித்தான் (Vamananaga vandu trivikramanagi arulpalittan)

மூலம்: மைதிலி ராகவன்

தமிழாக்கம்: ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பெயர்பெற்ற பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் பல புராணங்களில் இடம் பெற்றுள்ளது.


         பாகவதர்களில் சிறந்த ப்ரஹ்லாதனின் பேரனும், அசுரகுல அரசனுமான பலிசக்ரவர்த்தி என்பவன் (இந்த்ரசேன மஹாராஜன்) மகாத்மா,  பாகவதன் மற்றும் விஷ்ணு பக்தன். பரமபாகவதர்களின் பட்டியலில் இடம் பெற்றவன்.  பலி சுக்ராசாரியர் செய்வித்த யாகத்தின் பயனாக அடைந்த வரம் மற்றும்  அருளினால் இந்த்ரனையும் ஜெயித்து தேவலோகத்திலும் தன் அதிகாரத்தை செலுத்த தொடங்கினான். தேவமாதா அதிதியின் வேண்டுதலுக்கு இணங்கி ஸ்ரீ ஹரி ஆவணி(ச்ராவண) மாதம் ச்ரவண (திருவோண) நட்சத்திரம் கூடிய துவாதசியன்று  அவளுக்கு மகனாக பிறந்தான். சங்கு, சக்கர கதையுடன் அவளுக்கு காட்சி அளித்து உடனேயே குள்ளமான (வாமன) உருவம் கொண்டான். அச்சமயத்தில் பலிசக்ரவர்த்தி ஓர் யாகம் செய்து கொண்டிருந்தான். அனைவராலும் போற்றப்பட்ட அந்த வாமனப்ரஹ்மசாரி மிக்க காந்தியுடன் விளங்கி குடையை பிடித்தபடி பலியின் யாகமண்டபத்திற்கு வந்தான்.


           வாமனனை கண்ட ப்ருகு வம்ச ரிஷிகளனைவரும் பட்டென எழுந்து நின்றனர். அவனுடைய தேஜஸ்(காந்தி) அனைவரையும் எழச் செய்தது. வந்திருப்பது மகாவிஷ்ணு என அறிந்து சுக்ராச்சாரியார் அரசனை எச்சரித்தார். ஆயினும் பக்தர்களில் சிறந்த பலி "யாருக்கு தானம் வழங்க வேண்டுமாயினும் விஷ்ணுவின் ஸ்மரணையுடனே தரப்பட வேண்டும் என்றிருக்கையில் அம்மகாவிஷ்ணுவே நேரில் வந்து யாசிக்கும் போது கொடாதிருப்பது எவ்வாறு முறையாகும்?" என்றான். தானத்தில் சிறந்த பலிசக்ரவர்த்தி இன்முகத்துடன் வாமனனை வரவேற்று "தங்களுக்கு என்னால் ஆகவேண்டியது என்ன?" என வினவினான்.


                 வாமனன் தன்னுடைய கால்களினால் மூன்று அடி இடம் தர வேண்டுமென்று யாசித்ததும் பலிக்கு ஆணவம் தலைஎடுத்தது. "வேண்டுபவர்க்கு பொன், பொருள் என விலை உயர்ந்தவை அனைத்தையும் வழங்கும் என்னிடம் வந்து சிறுபிள்ளைத்தனமான இந்த வேண்டுதல் ஏன்?" என்றான். ஆனால் வாமனன் தன் விருப்பத்தையே வலியுறுத்தியதால் பலி அதற்கு ஒப்புதல் அளித்தான்.


        அவ்வாறே சங்கல்பித்து தானம் ஈன்றவுடன் அனைவரும் பார்த்திருக்க தன்னுடைய எங்கும் நிறைந்த த்ரிவிக்ரம உருவத்தை அடைந்தான் வாமனன். ஓர் அடியினால் மண்ணுலகையும் மற்றொன்றால் அந்தரிக்ஷத்தையும், வானுலகையும் அளந்து மூன்றாவது அடிக்கு இடமெங்கே என பலியை வினவினான். சத்யம் தவறாத பலி மூன்றாவது அடியை தன்தலை மேல் வைத்து அளக்கும்படி கூறினான். மகாவிஷ்ணு தன் திருவடியை அவன் முடியில் வைத்து அருள்பாலித்து சுதலலோகத்த்திற்கு அழுத்தினான்.


   அவ்விடம் இந்த்ரனுடைய போகங்களையும் மீறிய சுகங்களை அனுபவித்து தன் உற்றாருடன் வாழும்படி செய்ததல்லாமல் அவனுடைய காவலுக்கு தானே கதாபாணியாக அவன் வாயிலில் நின்றான்! பலியை அசுர சக்திகள் தாக்காதவாறு சுதர்சன சக்கரத்தையும் நியமித்தான். இந்த்ரபதவியில் அவனுக்கிருந்த  விருப்பத்தால் அடுத்து வரும் சாவர்ணிக மன்வந்திரத்தில் அதை அடைந்து இறுதியில் தன்னையே வந்தடையும் படி அருள்பாலித்தான்.

 

கதையின் தத்துவம்

           இக்கதையை பற்றி ஸ்ரீரங்கமஹாகுரு அளித்த அற்புதமான விளக்கம் - இது இதிகாச கதையல்ல. தத்துவங்கள் அடங்கியதாகவும், தியானத்தில் அந்தரங்கத்தில் காணக் கிடைக்கும் அநுபவம் ஆகும். புராணங்களில் சரித்திரக்கதைகளுடன் புரியாத சில தத்துவங்களை சுலபமாக அறிவுறுத்த கதையாக  கூறுவதுண்டு. வாமனாவதாரமும் அப்பேர்பட்ட ஒன்று.


               தேவதைகள்-அசுரர்கள் இருவரும் நமக்குள்ளே உறையும் சக்திகள். நம்மை அறநெறியில் வழி நடத்த இறைவனால் நியமிக்கப்பட்ட சக்திகளே தேவதைகள். ரஜஸ் மற்றும் தமோ குணங்களுடன் கூடிய அசுரசக்தி நம்மை அதர்மத்தில் இழுத்துச் செல்லும். இயற்கையில் இவ்விரு சக்திகளுக்கும் எப்போதும் போராட்டம்  உண்டு. சில சமயங்களில் தேவதைகளுக்கும், சில சமயங்களில் அசுரர்களுக்கும் வெற்றி உண்டு. சிற்சில சமயங்களில் அவர்கள் சமாதானம் செய்து கொள்வதும் உண்டு. தேவதைகள் நம்மை மேல் நோக்கி இழுத்தால் அசுரர்கள் கீழ்நோக்கி இழுக்கின்றனர். இவ்விருவரின் நடுவில் இதயத்தில் கட்டைவிரல்கணுவளவு விளங்குபவனே வாமனன் என ச்ருதிகள் உரைக்கின்றன.


           அசுரசக்திகள் நம்மை முழுமையாக ஆக்ரமிக்கும் போது அதிலிருந்து விடுபட நாம் இதயத்தில் ஒளிவிடும் வாமனனை சரணடைந்து முழுமையாக நம்மை அவனுக்குப் அர்பணித்தால் அசுரசக்தியை பாதாளத்தில் தள்ளி தானே நம்மில் முழுமையாக வியாபித்து த்ரிவிக்ரம விஷ்ணுவாகி(விஷ்ணு என்பது வியாபித்து உள்ளவன் எனும் பொருள்) அருள்புரிகிறான். இவன் வியாபித்துள்ள உலகமென்றால் முதுகுத்தண்டில் உள்ள யோகமார்க்கம். மூலாதாரத்திலிருந்து தலையில் உள்ள ப்ரஹ்மரந்த்ரம் வரை முழுமையாக வியாபித்திருக்கும் போது பலியைப் போன்று தானாகவே தலை தாழ்ந்து வணங்கும். அப்போது தலையிலிருந்து அமுதம் போன்று  பெருகும் உள்அனுபவத்தையே "விஷ்ணு பாதத்தில் உண்டாகும் கங்கை" என ரிஷிகள் வழங்குகிறார்கள்.


            ஆணவம் தலை தூக்கி நிற்கும் போது இறைவனை காண இயலாது. ஆனால் அவனை சரணடைந்தால் பலியை அனுக்ரஹித்ததுபோல் நம் ஆணவத்தை போக்கி அருள் புரிகிறான். வாமனன் ஒரு சத்குருவின் வடிவத்திலும் இருக்கலாம். அப்பொழுது மனப்பூர்வமாக நம்மை குருவுக்கே அர்பணித்தால், அவன் சொற்படி நடந்தால் உன்னத நிலைக்கு உயர்த்தி காக்கிறான்.

 

 அனுக்ரஹ அவதாரம்  

இறைவன் நரசிம்ம, ராம, கிருஷ்ண அவதாரங்களில் அழிப்பதன் மூலம் அசுரர்களை காத்தான். ஆனால் வாமன அவதாரம் முழுமையாக அருள்வடிவானது. இந்த்ரனுக்கு மீண்டும் அவனுடைய பதவியை அருளினான், அதிதி தேவிக்கு அவள்வேண்டிய வரம் அளித்தான், பலிக்கு மேற்கூறிய பேரருள், பிரமனுக்கு த்ரிவிக்ரமனின் திருவடி பூஜிக்கும் அருள், கங்கை பூமியில் இறங்கி உலகனைத்துக்குமே அருள்புரிந்தான்.

                இவ்வாறு அருள்வடிவான வாமன-த்ரிவிக்ரமனை சிரம் தாழ்த்தி வணங்குவோம்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.  

Sunday, August 30, 2020

ವಾಮನನಾಗಿ ಬಂದು ತ್ರಿವಿಕ್ರಮನಾಗಿ ಅನುಗ್ರಹಿಸಿದ ! (Vamananagi Bandu Trivikramanagi Anugrahisida !)

 ಲೇಖಕರು: ಮೈಥಿಲೀ ರಾಘವನ್

(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ lekhana@ayvm.in)


  

ಶ್ರೀಮಹಾವಿಷ್ಣುವಿನ  ಪ್ರಸಿದ್ಧವಾದ  ದಶಾವತಾರಗಳಲ್ಲಿ ಒಂದಾದ ವಾಮನಾವತಾರವು ಅನೇಕ ಪುರಾಣಗಳಲ್ಲಿ  ಸ್ಥಾನವನ್ನು ಗಳಿಸಿದೆ.  

ಭಾಗವತೋತ್ತಮನಾದ ಪ್ರಹ್ಲಾದನ ಮೊಮ್ಮಗನೂ, ಅಸುರ ರಾಜನೂ ಆದ ಬಲಿಚಕ್ರವರ್ತಿಯು(ಇಂದ್ರಸೇನಮಹಾರಾಜನು) ಮಹಾತ್ಮ, ಮಹಾಭಾಗವತ, ವಿಷ್ಣುಭಕ್ತ. ಪರಮಭಾಗವತರ ಪಟ್ಟಿಯಲ್ಲಿ ಈತನೂ ಸೇರಿಸಲ್ಪಟ್ಟಿದ್ದಾನೆ.  

ಶುಕ್ರಾಚಾರ್ಯರು ಮಾಡಿಸಿದ ಯಜ್ಞಫಲವಾಗಿ ದೊರಕಿದ ವರ-ಅನುಗ್ರಹ ಬಲದಿಂದ  ಬಲಿಯು ಇಂದ್ರನನ್ನು ಪರಾಜಯಗೊಳಿಸಿ  ದೇವಲೋಕದಲ್ಲೂ ತನ್ನ ಅಧಿಕಾರವನ್ನು ಚಲಾಯಿಸತೊಡಗಿದನು. ದೇವಮಾತೆಯಾದ ಅದಿತಿದೇವಿಯ  ಪ್ರಾರ್ಥನೆಗೆ ಓಗೊಟ್ಟು ಶ್ರೀಹರಿಯು ಶ್ರಾವಣಮಾಸದ ಶ್ರವಣ ನಕ್ಷತ್ರ, ದ್ವಾದಶಿಯದಿನ ಅದಿತಿಯ ಪುತ್ರನಾಗಿ ಜನಿಸಿದ. ಶಂಖ-ಚಕ್ರ-ಗದಾಧಾರಿಯಾಗಿ  ಆಕೆಗೆ ದರ್ಶನವಿತ್ತು ಕೂಡಲೇ ವಾಮನನ(ಕಿರಿದಾದ) ರೂಪವನ್ನು ತಾಳುತ್ತಾನೆ.  ಆ ಸಮಯಕ್ಕೆ ಬಲಿಚಕ್ರವರ್ತಿಯು  ಯಜ್ಞವನ್ನಾಚರಿಸುತ್ತಿದ್ದ.  ಎಲ್ಲರಿಂದಲೂ ಸ್ತುತಿಸಲ್ಪಟ್ಟ ಆ ವಾಮನಬ್ರಹ್ಮಚಾರಿಯು ಅತ್ಯಂತ ತೇಜೋರೂಪಿಯಾಗಿ  ಛತ್ರಿಯನ್ನು ಹಿಡಿದು ಬಲಿಯ ಯಜ್ಞವಾಟಿಕೆಯ ಬಳಿ ಸಾರಿದನು.

ಆತನನ್ನು ಕಂಡೊಡನೆಯೇ  ವಯಸ್ಸಿನಲ್ಲಿ ಹಿರಿಯರಾದ ಭೃಗುವಂಶದ  ಋಷಿಗಳೆಲ್ಲರೂ ತಟ್ಟನೆ ಎದ್ದುನಿಂತರು. ಅವನ ತೇಜಸ್ಸು ಅವರನ್ನು ಎಬ್ಬಿಸಿ ನಿಲ್ಲಿಸುತ್ತದೆ. ಬಂದಿರುವ ಬ್ರಹ್ಮಚಾರಿಯು ಸಾಕ್ಷಾತ್ ಮಹಾವಿಷ್ಣು ಎಂಬುದನ್ನು ಅರಿತ ಶುಕ್ರಾಚಾರ್ಯರು ರಾಜನನ್ನು ಎಚ್ಚರಿಸಿದರು. ಆದರೆ ಭಕ್ತಷ್ರೇಷ್ಠನಾದ ಬಲಿಯು "ಯಾರಿಗೆ ದಾನಕೊಡುವುದಾದರೂ ವಿಷ್ಣುವನ್ನೇ ಸ್ಮರಿಸಿಕೊಡಬೇಕೆಂದಿರುವಾಗ ಸಾಕ್ಷಾತ್ ವಿಷ್ಣುವೇ ಯಾಚಿಸಿದಾಗ ಕೊಡದಿರುವುದು ಹೇಗೆ?" ಎಂದು ಹೇಳಿದನು. ದಾನಕೊಡುವುದರಲ್ಲಿ ಎತ್ತಿದ ಕೈಯಾಗಿದ್ದ ಬಲಿಚಕ್ರವರ್ತಿ ಆತನನ್ನು ಸಂತೋಷದಿಂದ ಸ್ವಾಗತಿಸಿ "ಏನು ಅಪ್ಪಣೆ?" ಎಂದ.

ವಾಮನನು ತನ್ನ ಕಾಲಿನಳತೆಯಲ್ಲಿ ಮೂರಡಿ ಜಾಗವನ್ನು ಕೊಡಬೇಕೆಂದು ಯಾಚಿಸಿದಾಗ ಬಲಿಚಕ್ರವರ್ತಿಯ ಅಹಂಕಾರವು ಮತ್ತೆ ತಲೆಯೆತ್ತಿತು. "ಎಷ್ಟೋ ಜನರಿಗೆ ಆಶ್ರಯವನ್ನು ನೀಡಿರುವ ನನ್ನ ಬಳಿ ಧನ-ಕನಕವೇ ಮುಂತಾದ ಅಮೂಲ್ಯವಾದ ವಸ್ತುಗಳನ್ನು ಬಿಟ್ಟು ಬಾಲಿಶಬುದ್ಧಿಯಿಂದ ಇಂಥಹ ಸಣ್ಣ ಬೇಡಿಕೆಯೇಕೆ?" ಎಂದನು. ಆದರೆ ವಾಮನನು ತಾನು ಬಯಸಿದ್ದನ್ನೇ ಕೊಡಬೇಕೆಂದು ಒತ್ತಾಯ ಮಾಡಿದಾಗ ಬಲಿಯು ಒಪ್ಪಲೇಬೇಕಾಯಿತು.

ಅದರಂತೆಯೇ ಸಂಕಲ್ಪಮಾಡಿ ಆತನಿಗೆ ದಾನವನ್ನು ಕೊಟ್ಟ. ಕೂಡಲೇ ವಾಮನನು ಎಲ್ಲರೂ ನೋಡುತ್ತಿದ್ದಂತೆಯೇ ತನ್ನ ಸರ್ವವ್ಯಾಪಿಯಾದ  ತ್ರಿವಿಕ್ರಮರೂಪವನ್ನು  ತಾಳಿದ. ಒಂದಡಿಯಿಂದ ಬ್ರಹ್ಮಾಂಡವೆಲ್ಲವನ್ನೂ ಆಕ್ರಮಿಸಿದ. ಎರಡನೆಯ ಹೆಜ್ಜೆಯಿಂದ ಅಂತರಿಕ್ಷ, ದ್ಯುಲೋಕಗಳನ್ನಳೆದ. ಮೂರನೆಯ ಹೆಜ್ಜೆಗೆ ಜಾಗವೆಲ್ಲಿ ಎಂದು ಬಲಿಯನ್ನು ಕೇಳಿದ. ಸತ್ಯನಿಷ್ಠನಾದ ಬಲಿಯು ಮೂರನೆಯ ಹೆಜ್ಜೆಯನ್ನು ತನ್ನ ತಲೆಯಮೇಲಿಟ್ಟು ಅಳೆಯುವಂತೆ ಪ್ರಾರ್ಥಿಸಿದ. ಭಗವಂತನು ತನ್ನ ಅನುಗ್ರಹಪಾದವನ್ನು ಆತನ ಶಿರಸ್ಸಿನಲ್ಲಿಟ್ಟು ಅನುಗ್ರಹಿಸಿ ಅವನನ್ನು ಸುತಲಲೋಕಕ್ಕೆ ಅದುಮಿದ.

ಸುತಲಲೋಕದಲ್ಲಿ ಇಂದ್ರಲೋಕವನ್ನೂ ಮೀರಿಸುವ ಸುಖಭೋಗಗಳಿಂದಕೂಡಿ ತನ್ನ ಪರಿವಾರದೊಡನೆ ವಾಸಿಸುವಂತೆ ಮಾಡಿದನು. ಅಷ್ಟೇ ಅಲ್ಲ, ಆತನ ರಕ್ಷಣೆಗೆ ತಾನೇ ಗದಾಪಾಣಿಯಾಗಿ ದ್ವಾರದಲ್ಲಿ ನಿಂತ! ಬಲಿಯನ್ನು ಆಸುರೀಶಕ್ತಿಗಳು ಮೆಟ್ಟದಂತೆ  ಸುದರ್ಶನಚಕ್ರವನ್ನೂ ನೇಮಿಸಿದ! ಇಂದ್ರಪದವಿಯ ಇಚ್ಚೆ ಅವನಲ್ಲಿದ್ದುದರಿಂದ ಭಗವಂತನು ಮುಂದೆ ಸಾವರ್ಣಿಕ ಮನ್ವಂತರದಲ್ಲಿ  ಇಂದ್ರಪದವಿಯನ್ನು ಗಳಿಸಿ ಕೊನೆಗೆ ತನ್ನ ಬಳಿಗೇ ಬಂದು ಸೇರುವಂತೆ ಅನುಗ್ರಹಿಸಿದನು.

ಕಥೆಯ ತತ್ತ್ವಾರ್ಥ

ಈ ಕಥೆಯ ಬಗೆಗೆ ಶ್ರೀರಂಗಮಹಾಗುರುಗಳು ನೀಡಿದ ಪರಮಾದ್ಭುತವಾದ ವಿವರಣೆಯನ್ನು ಸ್ಮರಿಸುವುದಾದರೆ ಇದು ಐತಿಹಾಸಿಕವಾಗಿ ನಡೆದ ಕಥೆಯಲ್ಲ. ಪರಿಪೂರ್ಣವಾಗಿ ತತ್ತ್ವಾರ್ಥಗರ್ಭಿತವೂ, ಧ್ಯಾನದಲ್ಲಿ ವೊಳರಂಗದಲ್ಲಿ ದರ್ಶನಕ್ಕೆ ವಿಷಯ ಆದ ಕಥೆಯಾಗಿದೆ. ಪುರಾಣಗಳಲ್ಲಿ ಐತಿಹಾಸಿಕ ಘಟನೆಗಳ ಜೊತೆಗೆ ಜಟಿಲವಾದ ತತ್ತ್ವಗಳನ್ನು ಸುಲಭವಾಗಿ ಮನವರಿಕೆಮಾಡಲು ರೂಪಕಗಳಾಗಿ ಕಲ್ಪಿಸಿಕೊಟ್ಟಿರುವುದುಂಟು. ವಾಮನಾವತಾರವೂ ಅಂತಹದೊಂದು ರೂಪಕವೇ ಆಗಿದೆ.

ದೇವತೆಗಳು-ಅಸುರರು ಇಬ್ಬರೂ ನಮ್ಮೊಳಗೇ ಇರುವ ಶಕ್ತಿಗಳು. ನಮ್ಮನ್ನು ಧರ್ಮಮಾರ್ಗದಲ್ಲಿ ನಡೆಸಲು ಪರಮಾತ್ಮನಿಂದ ನೇಮಿಸಲ್ಪಟ್ಟ ಶಕ್ತಿಗಳೇ ದೇವತೆಗಳು. ರಜಸ್ತಮೋಗುಣಗಳಿಂದ ತುಂಬಿದ  ಆಸುರೀಶಕ್ತಿಗಳು ಅಧರ್ಮದೆಡೆಗೆ ನಮ್ಮನ್ನು ಸೆಳೆಯುವ ಶಕ್ತಿಗಳು. ಸೃಷ್ಟಿಯಲ್ಲಿ ಈ ಎರಡೂ ಶಕ್ತಿಗಳಿಗೂ ನಿರಂತರ ಯುದ್ಧವಾಗುತ್ತಲೇ ಇರುವುದು. ಕೆಲವೊಮ್ಮೆ ದೇವತೆಗಳಿಗೆ ಜಯ, ಕೆಲವೊಮ್ಮೆ ಅಸುರರಿಗೆ ಜಯ. ಒಮ್ಮೊಮ್ಮೆ ಇಬ್ಬರೂ ಸಂಧಿ ಮಾಡಿಕೊಳ್ಳುವುದೂ ಉಂಟು. ದೇವತೆಗಳು ನಮ್ಮನ್ನು ಮೇಲಕ್ಕೆಳೆದರೆ ಆಸುರರು ಕೆಳಕ್ಕೆಳೆಯುತ್ತಾರೆ. ಇಬ್ಬರ ಮಧ್ಯದಲ್ಲಿ ಹೃದಯಸ್ಥಾನದಲ್ಲಿ ಅಂಗುಷ್ಠಪರ್ವಮಾತ್ರ ಪುರುಷನಾಗಿ ಬೆಳಗುವವನೇ ವಾಮನ ಎಂಬುದಾಗಿ ಶ್ರುತಿಯು ಸಾರುತ್ತದೆ.

ಆಸುರೀಶಕ್ತಿಗೆ ಜಯವಾಗಿ ನಮ್ಮನ್ನು ಪೂರ್ಣವಾಗಿ ಆಕ್ರಮಿಸಿಕೊಂಡಾಗ ಅವರಿಂದ ಬಿಡುಗಡೆಯನ್ನು ಹೊಂದಲು ನಾವೇನಾದರೂ ಹೃದಿಸ್ಥನಾದ ವಾಮನನನ್ನು ಶರಣುಹೊಂದಿದರೆ, ನಮ್ಮನ್ನು ಪೂರ್‍ಣವಾಗಿ ಆತನಿಗೆ ಅರ್ಪಿಸಿಕೊಂಡರೆ ಆತನು ಆಸುರೀ ಶಕ್ತಿಯನ್ನು ಪಾತಾಳಕ್ಕೆ ಮೆಟ್ಟಿ ತಾನೇ ನಮ್ಮಲ್ಲಿ ಪೂರ್ತಿಯಾಗಿ ವ್ಯಾಪಿಸಿಕೊಂಡು ತ್ರಿವಿಕ್ರಮ ವಿಷ್ಣುವಾಗಿ ('ವಿಷ್ಣು' ಎಂದರೆ ವ್ಯಾಪಕನಾಗಿರುವವನು ಎಂದರ್ಥ) ಅನುಗ್ರಹಿಸುತ್ತಾನೆ. ಈತನು ವ್ಯಾಪಿಸುವ ಲೋಕಗಳೆಂದರೆ ಬೆನ್ನು ಹುರಿಯೊಳಗಿನ ಯೋಗಮಾರ್ಗ. ಮೂಲಾಧಾರದಿಂದ ಶಿರದ ಬ್ರಹ್ಮರನ್ಧದವರೆಗೂ ವ್ಯಾಪಿಸುವ ಒಳಬ್ರಹ್ಮಾಂಡವನ್ನು ಭಗವಂತನು ತುಂಬಿಕೊಂಡಾಗ, ಬಲಿಯಂತೆ ತಲೆಬಾಗುವುದು ಸಹಜವೇ. ಆಗ ಶಿರಸ್ಥಾನದಲ್ಲಿನ ಅಮೃತವು ಧಾರಾಕಾರವಾಗಿ ಗಂಗೆಯಂತೆ ಹರಿಯುವ ಒಳ ಅನುಭವವನ್ನೇ ಕಥಾರೂಪದಲ್ಲಿ 'ವಿಷ್ಣುಪಾದೋದ್ಭವಾ ಗಂಗಾ' ಎಂದು ಋಷಿಗಳು ಹೇಳುತ್ತಾರೆ.

ಅಹಂಕಾರ ಆವರಿಸಿಕೊಂಡಾಗ ಭಗವಂತನನ್ನು ಕಾಣುವುದು ಅಸಾಧ್ಯ. ಆದರೆ ಅವನನ್ನು ಶರಣು ಹೊಂದಿದರೆ ಬಲಿಯನ್ನು ಅನುಗ್ರಹಿಸಿದಂತೆ ನಮ್ಮ ಅಹಂಕಾರವನ್ನು ತೊಲಗಿಸಿ ನಮ್ಮಲ್ಲಿ ಬ್ರಹ್ಮಭಾವವನ್ನು ತುಂಬುತ್ತಾನೆ. ವಾಮನನು ಒಬ್ಬ ಸದ್ಗುರುವಿನ   ರೂಪವನ್ನೂ ತಾಳಿ ಬರಬಹುದು. ಆಗ ಗುರುವಿಗೇ ನಮ್ಮನ್ನು ಸಮರ್ಪಿಸಿಕೊಂಡಾಗ ನಿಷ್ಠೆ-ಪ್ರಾಮಾಣಿಕತೆಗಳಿಂದ ಅವನ ಆದೇಶವನ್ನು ಪಾಲಿಸಿದರೆ ಬ್ರಹ್ಮಭಾವಕ್ಕೇರಿಸಿ ನಮ್ಮನ್ನು ಉದ್ಧರಿಸುತ್ತಾನೆ.

ಅನುಗ್ರಹ ಅವತಾರ

ಭಗವಂತನು ನೃಸಿಂಹ, ರಾಮ, ಕೃಷ್ಣನಾಗಿ ಬಂದಾಗ ದೈತ್ಯರ ನಿಗ್ರಹದಿಂದ ಅವರ ಏಳಿಗೆಗೆ ಕಾರಣನಾದನು. ಆದರೆ  ವಾಮನಾವತಾರವು ಪೂರ್ಣಾನುಗ್ರಹ ಅವತಾರವೆನಿಸಿಕೊಳ್ಳುತ್ತದೆ. ಇಲ್ಲಿ ಇಂದ್ರನಿಗೆ ಪುನಃ ರಾಜ್ಯಪ್ರಾಪ್ತಿಯ ಅನುಗ್ರಹ, ಅದಿತಿದೇವಿಗೆ ಇಷ್ಟಾರ್ಥಸಿದ್ಧಿಯ ಅನುಗ್ರಹ, ಬಲಿಗೆ ಮೇಲೆ ಹೇಳಿದಂತೆ ಪರಮಾನುಗ್ರಹ. ಬ್ರಹ್ಮನಿಗೆ ತ್ರಿವಿಕ್ರಮನ ಪಾದತೊಳೆಯುವ ಅನುಗ್ರಹ. ಗಂಗೆಯು ಭುವಿಗಿಳಿದು ಲೋಕಕ್ಕೆಲ್ಲಾ ಅನುಗ್ರಹ.

ಇಂತಹ ಅನುಗ್ರಹಮೂರ್ತಿ ವಾಮನ-ತ್ರಿವಿಕ್ರಮನಿಗೆ ನಮ್ಮ ಅನಂತಾನಂತ ನಮನಗಳು.

ಸೂಚನೆ: 29/08/2020 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಜಯ ಕರ್ನಾಟಕ ಪತ್ರಿಕೆಯ ಬೋಧಿವೃಕ್ಷ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.