Showing posts with label 227_ayvmarticle. Show all posts
Showing posts with label 227_ayvmarticle. Show all posts

Thursday, September 10, 2020

ஸ்ரீ நடராஜர் நம் உள்ளத்துள் நடனமாடட்டும் (Natarajar nam ullattul nadanamadattum)

மூலம்: சுப்ரமண்ய சோமயாஜி
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



ஒருமுறை சில முனிவர்கள் தாருகாவனம்  எனும் இடத்தில் ஒரு யாகம் செய்ய முடிவு செய்தனர். யாகங்கள் நடத்துவதே  இறைவனை அடையும் பொருட்டு என்பதை மறந்து  செயல்களை(கர்மங்களை) இயந்திர வகையில் செய்யத் தொடங்கினர். நம் அன்றாடச் செயல்களைப்போல் செயல்கள் புரிவதொன்றே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.  பகவான்  நடராஜர்  அவர்களுக்கு பாடம்  கற்பித்து அறிவொளியூட்ட எண்ணினார். எனவே அவர் ஒரு அழகிய இளைஞனின்  உருவில் தாருகாவனம் அடைந்தார்.  முனிவர்களின்  தூயமனமுடைய மனைவிமார்கள் இளைஞனின் அழகால் கவரப்பட்டு தன்னிலை மறந்து அவரை சுற்றி நின்றனர். அவனே இறைவனான பரமசிவன் என்பதை அறியாவிடினும்  அவருடைய இருப்பே அவர்களை  தன்னிலை இழக்க செய்தது.

தங்களுக்கு யாகத்தில் உதவ வந்த மனைவிகள் இளைஞனை சுற்றி நிற்பதைக்கண்டு  முனிவர்கள் சினம் கொண்டனர்.  தங்கள் தவத்தினின்று பெற்ற சக்தியினால் பல கொடிய விலங்குகளை உருவாக்கி அவ்விளைஞனின் பால்  ஏவினர்.  ஆயின் அனைத்தும் வீணாயின. அவன் அவைகளை அழித்து தன்னை அலங்கரிக்க பயன்படுத்திக்கொண்டான். அரவங்கள் கங்கணம், தோள்வளைகளாயின, புலித்தோல் இடையில் தரிக்கும் உடையானது. முனிவர்கள் அடங்கா கோபத்துடன் அபஸ்மாரன்  எனும் அரக்கனை  உருவாக்கி  இளைஞனுடன் போர்புரிய  அனுப்பினர். என்ன அதிசயம்? அவ்விளைஞன் அரக்கனை அழித்து தன் வலதுபாதத்தை அவன் முதுகின்மீது வைத்து நடமிட தொடங்கினான். ஆச்சரியமாக அரக்கன் தன் தலையை மேற்புறம் திருப்பி மந்திரவயப்பட்டதுபோல் மகிழ்ச்சியுடன் இறைவன் முகத்தை நோக்கலானான். குழப்பமடைந்த முனிவர்கள்  தங்கள் தவறை உணர்ந்தனர். பரம்பொருளே நடராஜனாக வந்திருப்பதை உணர்ந்த மறுகணமே தங்கள் சுயரூபத்தையும் வாழ்வின் குறிககோளையும் நினைவு கூர்ந்து அந்த நடனத்தில் தங்களை மறந்தனர்.

ஸ்ரீரங்க மஹாகுருவின் கண்ணோட்டத்தில் இது முழுதும் ஆன்மீக தத்துவங்கள் அடங்கிய கதையாகும்.  வரையறுக்கப்பட்ட  அனைத்து செயல்களும் ஞானத்தை அடவதற்கே. இறைவனை அனுபவித்து உணர்தலே ஞானம். இக்குறிக்கோளின்றி பழக்கத்தில் வந்ததென்று கடமையாற்றுவது வீண். நடராஜர் இவ்வுண்மையை(கொள்கையை) முனிவர்களுக்கு நினைவூட்டவே புவியில் தோன்றினார். ஆயின் அவர்களின் அகந்தை இறைவனை அறிய இயலாமல் மறைத்தது. எனினும் தூய, குற்றமற்ற மனமுடைய மனைவிமார்கள் இயற்கையாகவே அவரால் கவரப்பட்டனர். எத்தகைய அரக்க சக்தியும் அவ்வுயர்ந்த சக்தியின் முன் பயனற்று போகும். எனவே அவை அனைத்தும் அழிந்தன. முன்னரே கூறியவண்ணம் அவ்வரக்கனின் பெயர்(அபஸ்மாரன்)  நினைவை இழந்தவன் என்று பொருள். அத்தூய பெருஒளியை மறந்தவர் அனைவரும் நினைவிழந்தவர், மறதி எனும் நோய்கண்டவர். நமது முதுகுத்தண்டு பகுதியில் அடியிலிருந்து தொண்டைவரை (மூலாதாரத்திலிருந்து விசுத்தி சக்ரம் வரை) இயற்கையின் (ப்ரக்ருதியின்)  ஆதிக்கத்திற்குட்பட்ட செயல்கள் நடைபெறும் பகுதியாகும். ,அது  ஒருவரை தன் உண்மைநிலையை மறக்க செய்கிறது. எப்போது இத்தகு இயற்கை இறைவனால்  அடக்கப்படுகிறதோ அப்போது உண்மைநிலை நினைவுறுத்தப்பட்டு தன்னை வெளிப்படுத்துகிறது. தன் உண்மை நிலையை  நினைவு கூர்ந்ததால் அபஸ்மாரன் மகிழ்ச்சியுடன் நடராஜன் திருமுகம் நோக்குகிறது.

இது நம் அனைவரின் கதையே. நாமும் அந்த அரக்கனைப்போல் நம் ஒளிமயமான தூய உண்மைதன்மையை மறந்திருக்கிறோம். தாருகாவனத்து முனிவர்களை போலவே நாமும் வாழ்வில் எவ்வித குறிக்கோளுமின்றி பயனற்ற உயிரற்ற செயல்களை செய்து வருகிறோம். நம் மறதியை நீக்கி
அவன் நினைவில் நிலைத்திருக்க அருளும்படி அன்பும், கருணையுமே வடிவான இறைவன் நடராஜனிடம் வேண்டுவோம்.  

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.   

Thursday, September 3, 2020

புண்ணியம் – பாவம் (Punniyam – Pavam)

மூலம்: மைதிலி ராகவன்

தமிழாக்கம்: ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)  


  


புண்ணியம், பாவம் என்பவை virtue & sin எனும் பதங்களுக்கு ஒத்த பதங்களாக கருதப்பட்டு வருகின்றன.  இப் பதங்கள் நீதி மற்றும் அநீதியான நடவடிக்கையை குறிக்கின்றன. கூன்று நோக்கினால் புண்ணியம் என்பதற்கு ஒத்த வார்த்தையே ஆங்கில மொழியில் இல்லை!

 

        பாரத நாட்டில் இவ் வார்த்தைகளை சிறுவயது முதலே அறிமுகப்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. "தவறு செய்யாதே பாவம் வரும்", "நற்செயலை புரி புண்ணியம் வரும்" என்று சிறுவயதில் எச்சரிப்பது உண்டு.   சென்ற தலைமுறையினர் இவ்வாறான எண்ணங்களை கௌரவித்தது போன்று இத்தலை முறையில் இதை ஏற்றுக் கொள்ள சம்மதிப்பார்கள் என உறுதியாக கூற முடியாது. பாவம் புண்ணியம் என்றால் என்ன எனும் கேள்வியே முதலில் எழுகிறது. தகுந்த பதில் கிடைக்காத போது இவையனைத்தும் மூட நம்பிக்கையாக கருதப்படுகின்றன. ஆகையால் இப் பதங்கள் எதை குறிக்கின்றன எனும் உறுதியான அறிவு  அவசியம். இது பரந்த விஷயமாக உள்ள போதும் இங்கு சிலவற்றை மட்டுமே எழுதியுள்ளது.

 

          புண்ணியம் எனும் சொல் ஏற்றத்தை குறிக்கிறது என கூறலாம். இதற்கு நேர்மாறான பாவம் எனும் சொல் வீழ்ச்சி என்பதற்கு ஒத்த வார்த்தை. வீழ்ச்சி- விழுவது என்றால் விழுவது எது? எங்கிருந்து எங்கே விழுகிறது ? பாவம் வருகிறது என்பதற்கு என்ன பொருள்? முதலிய கேள்விகள் எழுகின்றன. உணவு மற்றும் பழக்கங்கள் தவறான முறையில் இருத்தல், அளவுக்கு அதிகமான உணவு உட்கொள்ளல், குளிர்காற்று அல்லது கடும் வெப்பம் முதலியவை ஆரோக்கியத்திற்கு கேடு. இதையே 'முறையான ஆரோக்யத்திலிருந்து வழுவுகிறோம், வீழ்கிறோம" என்று கூறலாம். உடலைப் போன்றே மனமும் தன்னுடைய  இடத்திலிருந்து நழுவும் போது அதை வீழ்ச்சி என்று கூறலாம். மனிதனின் வாழ்க்கையில் மனம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. மனம் நற்குணங்களுடன்  கூடி உள்ள போது நியாயமான முறையில் வாழ்க்கை நடத்தி அனைவரின் அன்பிற்கும் மதிப்பிற்கும் பாத்திரமாகி உலகில் புகழுடன் திகழ்கிறான். மனம் கெடும்போது  ஏற்படும் அநீதியான நடவடிக்கைகளால் சமூகத்தை சீர்குலையும் படி செய்வதால் அது கண்டிக்கப்பட வேண்டியது என்பது அனைத்து நாடுகளிலும் ஒப்புக் கொள்ள படுகிறது. மனம் தன்னுடைய நல்ல நிலையிலிருந்து நழுவும் படி செய்யும்  தீய செயல்களே பாவம் என்று பெயரிடப்பட்டுள்ளன. பாவம் வரும் என்பது அதன் விளைவாக ஏற்படும் துன்பங்களையே குறிக்கும். அவ்வாறே அதற்கு நேர்மாறாக மனதின் உன்னதமான  நிலைக்கு உதவும் செயல்கள் புண்ணிய செயல்கள் என்றும்   அவற்றின் பயனான சுகம், இன்பங்களே புண்ணியம் என்றும் வழங்கப்படுகிறது.

    

           இஹ ஜீவனம் மட்டும் அல்லாது இறையுலகையும் அறிந்த பாரத மகரிஷிகள் இவ் விஷயத்தில் கண்ட சிறப்பு அம்சங்களை ஸ்ரீ ரங்க மஹாகுரு அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். பரிசுத்தமான இதயத்தில் மலரும் நற்குணங்கள் ஆத்ம குணங்களாக மாறுபடும் போது மனம் தன்னுள்ளே ஒளி வீசும் பரம் பொருளை காட்டும் திறமை உடையதாகிறது. இங்கனம் மனதை அதன் உன்னதமான நிலையில் காக்க உதவும் விதிமுறைகளை அவர்கள் புண்ணிய -பாவம் எனும் சொற்களாலும் வழங்கியதுண்டு. ஆகையால் இஹ வாழ்க்கைக்காக  மட்டுமன்றி  ஆன்மீகவாழ்கையின் மேன்மைக்காகவும்  பாவங்களிலிருந்து நம்மை விலக்கி புண்ணிய செயல்களில் ஈடுபட வேண்டும் என்பது உறுதியாகிறது.

 

ஞானிகள் பாவத்தை விடுவது மட்டும் அன்றி புண்ணியங்களையும் விட வேண்டும் என கூறுகின்றனர்! ஸ்ரீ சங்கர பகவத் பாதர் "ரத்யாகர்பட விரசித கந்த: புண்யாபுண்ய விவர்சித பந்த:"  யோகியானவன் புண்ணிய-பாவம் இரண்டிலிருந்தும் விலகி யோக மார்க்கத்தில் பயணித்து தன்னுள்ளே சுடர்விடும் ஒளியில் (ஜோதியில்) திளைத்து ஆனந்திக்கிறான் என்று பாடியுள்ளார். பாவச் செயல்களை தவிர்த்து நற்செயல்களை மட்டுமே புரியவேண்டும். நாளடைவில் புண்ணிய கர்மங்களையும்‌ இறைவனுக்கு அர்ப்பணித்து அதன்மூலம் புண்ணிய பலனிலிருந்தும் விடுபட வேண்டும். அப்போது யோக மார்க்கம் சுலபமாகி ‌ பின்பு இன்பத்தில் திளைப்பதும் நிச்சயம். இதையே கன்னட மொழியில் 'முராரி நின்னதே மூரனே தாரி'(முராரி!  மூன்றாவதானதே  உன்னடைய  வழி) என்று கொண்டாடியுள்ளனர். அந்த மூன்றாவது வழியில் நடக்க முயற்சிப்பது  புத்திசாலித்தனமன்றோ.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம். 

Sunday, December 22, 2019

ಪುಣ್ಯ - ಪಾಪ (Punya-paapa)

ಲೇಖಕರು:  ಶ್ರೀಮತಿ ಮೈಥಿಲೀ ರಾಘವನ್ 
   ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ lekhana@ayvm.in


ಪುಣ್ಯ-ಪಾಪಗಳು virtue and Sin ಎಂಬುದರ ಪರ್ಯಾಯವಾಗಿ ಪರಿಗಣಿಸಲ್ಪಡುತ್ತಿದೆ. ಈ ಪದಗಳು ನೈತಿಕವಾದ ಹಾಗೂ ಅನೈತಿಕವಾದ ವರ್ತನೆಯನ್ನು ಸೂಚಿಸುತ್ತವೆ. ವಾಸ್ತವಿಕವಾಗಿ ಪುಣ್ಯ ಎಂಬುದಕ್ಕೆ ಪರ್ಯಾಯವಾದ ಪದವೇ ಆಂಗ್ಲ ಭಾಷೆಯಲ್ಲಿಲ್ಲ!

ಭಾರತದೇಶದಲ್ಲಿ ಈ ಪದಗಳನ್ನು ಬಾಲ್ಯದಿಂದಲೇ ಪರಿಚಯಮಾಡಿಸುವ ರೂಡಿ ಬೆಳೆದುಬಂದಿದೆ. “ತಪ್ಪು ಮಾಡಬೇಡ, ಪಾಪ ಬರುತ್ತೆ”, “ಒಳ್ಳೆಯ ಕಾರ್ಯಮಾಡು ಪುಣ್ಯ ಬರುತ್ತೆ” ಎಂದು ಸಣ್ಣಮಕ್ಕಳನ್ನು ಎಚ್ಚರಿಸುವುದುಂಟು. ಹಿಂದಿನ ಪೀಳಿಗೆಯವರು ಈ ಮಾತುಗಳನ್ನು ಗೌರವಿಸುತ್ತಿದ್ದಂತೆ ಇಂದಿನವರು ಒಪ್ಪುವರೆಂಬ ನಿಶ್ಚಯವಿಲ್ಲ. ಪಾಪ-ಪುಣ್ಯ ಎಂದರೆ ಏನು ಎಂಬ ಪ್ರಶ್ನೆಯೇ ಮೊದಲು ಎದ್ದು ನಿಲ್ಲುತ್ತದೆ. ಸರಿಯಾದ ಉತ್ತರವು ಸಿಗದಿದ್ದಾಗ ಇವೆಲ್ಲವೂ ಮೂಢನಂಬಿಕೆಯ ಕಂತೆಗಳಾಗಿ ಉಳಿಯುತ್ತವೆ. ಆದ್ದರಿಂದ ಈ ಪದಗಳು ಏನನ್ನು ಸೂಚಿಸುತ್ತಿವೆ ಎಂಬುದರ ನಿರ್ದಿಷ್ಟವಾದ ಅರಿವು ಅಗತ್ಯ. ಇದು ವಿಸ್ತಾರವಾದ ವಿಶ್ಲೇಷಣೆಗೆ ವಿಷಯವಾಗಿದ್ದರೂ ಇಲ್ಲಿ ಕೆಲವು ಅಂಶಗಳನ್ನು ಮಾತ್ರವೇ ಬರೆಯಲಾಗಿದೆ.

ಪುಣ್ಯ ಎಂಬ ಪದವು ಏರುವಿಕೆಯನ್ನು ಸೂಚಿಸುವುದೆನ್ನಬಹುದು. ಪುಣ್ಯಕ್ಕೆ ವಿರುದ್ಧವಾದ ಪಾಪ ಎಂಬ ಪದವು ’ಪತನ’ವೆಂಬುದರ ಪರ್ಯಾಯವಾಗಿದೆ. ಪತನ- ಬೀಳುವುದು, ಎಂದಾಗ ಬೀಳುವುದು ಯಾವುದು? ಎಲ್ಲಿಂದ ಎಲ್ಲಿಗೆ ಬೀಳುತ್ತದೆ? ಪಾಪ ಬರುವುದೆಂದರೆ ಏನರ್ಥ? ಇತ್ಯಾದಿ ಪ್ರಶ್ನೆಗಳು ಏಳುತ್ತವೆ. ಆಹಾರ-ವಿಹಾರಗಳಲ್ಲಿ ಎಚ್ಚರಿಕೆ ತಪ್ಪಿ ವರ್ತಿಸಿದರೆ, ಮಿತಿಮೀರಿದ ಆಹಾರಸೇವನೆಯಾದರೆ, ಛಳಿಗಾಳಿ ಅಥವಾ ತೀವ್ರ ಬಿಸಿಲಿಗೆ ಮೈಯೊಡ್ಡಿದರೆ ಅದು ಆರೋಗ್ಯಕ್ಕೆ ಹಾನಿಕರ. ಇದನ್ನೇ ಆದರ್ಶವಾದ ಆರೋಗ್ಯಸ್ಥಿತಿಯಿಂದ ’ಜಾರುತ್ತೇವೆ,
ಬೀಳುತ್ತೇವೆ’ ಎಂದೂ ಹೇಳಬಹುದು. ಶರೀರದಂತೆಯೇ ಮನಸ್ಸು ತನ್ನ ಸುಸ್ಥಿತಿಯಿಂದ ಜಾರಿದಾಗ ಅದನ್ನೂ ಪತನ ಎಂದು ಕರೆಯಬಹುದು. ಮನುಷ್ಯನ ಜೀವನದಲ್ಲಿ ಮನಸ್ಸೆಂಬುದು ಅತಿಮುಖ್ಯಪಾತ್ರವನ್ನು ವಹಿಸುತ್ತದೆ. ಮನಸ್ಸು ಸದ್ಗುಣಗಳಿಂದ ಕೂಡಿದ್ದರೆ ನೈತಿಕವಾದ ಜೀವನವನ್ನು ನಡೆಸಿ ಎಲ್ಲರ ಪ್ರೀತಿ-ಆದರ-ಗೌರವಗಳನ್ನು ಗಳಿಸಿ ಲೋಕದಲ್ಲಿ ಪ್ರಶಂಸನೀಯನಾಗಿ ಬೆಳಗುತ್ತಾನೆ. ಮನಸ್ಸು ಕೆಟ್ಟಾಗ ಏರ್ಪಡುವ ಅನೈತಿಕವಾದ ನಡೆ ಸಮಾಜದ ಶಿಸ್ತನ್ನು ಕೆಡಿಸಿ ಸಮಾಜವನ್ನೇ ಹಾಳುಮಾಡುವುದರಿಂದ ಅದು ಖಂಡನೀಯವೆಂಬುದನ್ನು ಎಲ್ಲ ದೇಶದವರೂ ಒಪ್ಪುತ್ತಾರೆ. ಮನಸ್ಸನ್ನು ಶುದ್ಧವಾದ ಸ್ಥಿತಿಯಿಂದ ಪತನಗೊಳಿಸುವ ದುಷ್ಕೃತ್ಯಗಳನ್ನೇ ಪಾಪವೆಂದು ಹೆಸರಿಸಿದ್ದಾರೆ. ’ಪಾಪ ಬರುತ್ತೆ’ ಎನ್ನುವ ಮಾತು ಅದರ ಫಲವಾಗಿ ಒದಗಿಬರುವ ಕಷ್ಟಗಳನ್ನೇ ಸೂಚಿಸುತ್ತದೆ. ತದ್ವಿರುದ್ಧವಾಗಿ, ಮನಸ್ಸಿನ ಶುದ್ಧಸ್ಥಿತಿಗೆ ಪೋಷಕವಾದ ಕಾರ್ಯಗಳು ಪುಣ್ಯಕಾರ್ಯಗಳಾಗುತ್ತವೆ ಮತ್ತು ಅವುಗಳ ಫಲವಾದ ಸುಖ- ಸಂತೋಷಗಳೇ ಪುಣ್ಯವೆಂದೂ ವ್ಯವಹರಿಸಲ್ಪಡುತ್ತವೆ.

ಲೌಕಿಕಜೀವನ ಮಾತ್ರವಲ್ಲದೆ ಪಾರಮಾರ್ಥಿಕವನ್ನೂ ಅರಿತಿದ್ದ ಭಾರತೀಯ ಮಹರ್ಷಿಗಳು ಈ ವಿಚಾರದಲ್ಲಿ ಕಂಡ ವಿಶೇಷಾಂಶವನ್ನು ಶ್ರೀರಂಗಮಹಾಗುರುಗಳು ಎತ್ತಿತೋರಿಸಿದ್ದಾರೆ. ಶುದ್ಧವಾದ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಅರಳುವ ಸದ್ಗುಣಗಳು ಆತ್ಮಗುಣಗಳಾಗಿ ಪರಿಣಮಿಸಿದಾಗ ಮನಸ್ಸು ತನ್ನೊಳಗೆ ಬೆಳಗುವ ಪರಮಾತ್ಮನನ್ನೇ ತೋರಿಸಲು ಸಮರ್ಥವಾಗುವುದು. ಆ ರೀತಿಯಲ್ಲಿ ಮನಸ್ಸಿನ ಸುಸ್ಥಿತಿಯನ್ನು ಕಾಪಿಡಲು ತಂದ ವಿಧಿ-ನಿಷೇಧಗಳನ್ನು ಅವರು ಪುಣ್ಯ-ಪಾಪಗಳ ಹೆಸರಿನಲ್ಲಿಯೂ ಇಟ್ಟಿರುವುದುಂಟು. ಆದ್ದರಿಂದ ಲೌಕಿಕವಾದ ಏಳಿಗೆಗೆ ಮಾತ್ರವಲ್ಲದೆ, ಪಾರಮಾರ್ಥಿಕವಾದ ಶ್ರೇಯಸ್ಸಿಗಾಗಿಯೂ ಸಹ ಪಾಪಗಳಿಂದ ನಮ್ಮನ್ನು ದೂರಮಾಡಿ ಪುಣ್ಯಕೃತ್ಯಗಳನ್ನು ಕೈಗೊಳ್ಳಬೇಕೆನ್ನುವುದು ಸಿದ್ಧವಾಗುತ್ತದೆ. ಜ್ಞಾನಿಗಳು ಮತ್ತೊಂದು ಹೆಜ್ಜೆ ಮುಂದೆ ಸಾಗಿ ಪಾಪಗಳನ್ನು ವರ್ಜಿಸುವುದು ಮಾತ್ರವಲ್ಲದೆ ಪುಣ್ಯಗಳನ್ನೂ ತ್ಯಜಿಸ ಬೇಕೆನ್ನುತ್ತಾರೆ!
ಶಂಕರಭಗವತ್ಪಾದರು ರಥ್ಯಾಕರ್ಪಟ ವಿರಚಿತ ಕಂತಃ ಪುಣ್ಯಾಪುಣ್ಯ ವಿವರ್ಜಿತ ಪಂಥಃ.. ಯೋಗಿಯಾದವನು ಪುಣ್ಯ-ಪಾಪಗಳೆರಡರಿಂದಲೂ ದೂರನಾಗಿ ಯೋಗಮಾರ್ಗದಲ್ಲಿ ಸಾಗಿ ತನ್ನೊಳಗೆ ಬೆಳಗುವ ಜ್ಯೋತಿಯಲ್ಲಿ ರಮಿಸಿ ಆನಂದಿಸುತ್ತಾನೆ ಎಂದು ಹಾಡಿದ್ದಾರೆ. ಪಾಪಗಳನ್ನು ಬಿಟ್ಟು ಪುಣ್ಯಕರ್ಮಗಳನ್ನು ಮಾತ್ರವೇ ಆಚರಿಸಬೇಕು. ಕ್ರಮೇಣ ಪುಣ್ಯಕರ್ಮಗಳನ್ನೂ ಭಗವತ್ಪ್ರೀತ್ಯರ್ಥವಾಗಿ ಮಾತ್ರವೇ ಆಚರಿಸಿ ತನ್ಮೂಲಕ ಪುಣ್ಯಫಲದ ಅಂಟಿನಿಂದಲೂ ವಿಮುಕ್ತರಾಗಬೇಕು. ಆಗ ಯೋಗಮಾರ್ಗದ ಹಾದಿ ಸುಗಮ, ತದನಂತರ ಆನಂದದಿಂದ ನಲಿಯುವುದೂ ಸುನಿಶ್ಚಿತ. ಇದನ್ನೇ ’ಮುರಾರಿ ನಿನ್ನದೇ ಮೂರನೆ ದಾರಿ’ ಎಂಬುದಾಗಿ ಕೊಂಡಾಡಿದ್ದಾರೆ. ಅಂತಹ ಮೂರನೇ ದಾರಿಯನ್ನು ಹಿಡಿಯಲು ಪ್ರಯತ್ನಿಸುವುದು ಜಾಣತನವಲ್ಲವೇ.

ಸೂಚನೆ:  19/12/2019 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಶ್ವ ವಾಣಿಯ ಗುರು ಪುರವಾಣಿ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.