Showing posts with label 141_ayvmarticle. Show all posts
Showing posts with label 141_ayvmarticle. Show all posts

Thursday, April 23, 2020

இந்திரனுக்கும் விளங்காத புதிர் (Intiranukkum Vilankata Putir)

மூலம்: Dr. கே.எஸ். கண்ணன்த
மிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)

நம் புராணங்களிலும், உபநிடதங்களிலும் நிரம்பியுள்ளது அமரர்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையேயான போரின் கதைதான்.
ஒருமுறை போரில் அரக்கர்கள் தோல்வியுற்றனர். அமரர்கள் வென்றனர். உண்மை என்னவெனில் அமரர்காக  பரப்ரம்மமே வென்றது என கேனோபநிஷத்து கூறுகிறது..

அக்கதை பின்வருமாறு : ரகசியமான  விஷயங்கள்  எளிதில் விளங்காது.அமரர்க்கும் இவ்வாறே. அவர்கள் இது தங்களின் வெற்றியே (நாமே வெற்றியடைந்தோம்) என்று எண்ணினர். ப்ரம்மம் இதை அறியாதா?  ஆயின் இதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமன்றோ! எனவே அவர்களின்முன் தோன்றியது. ஆயின் தன் சுய உருவம் தெளிவாக அறியும்படி அல்ல. வினோதமான உருவில். (உபநிடதத்தின் கூற்றுப்படி ஒரு யக்ஷனைப்போல்) அப்போது அமரர்கள் 'இது என்னவென்று அறிந்துவ' என்று அக்னி தேவனை அனுப்பினர். அவன் சென்ற போது "நீ யாரென்று" யக்ஷன் வினவ "நான் அக்னிதேவன்.  இப்பூவுலகிலுள்ள அனைத்தையும் எரிக்க வல்லேன்" என்றான். "இதனை சுட்டெறி" என ஒரு புல்லை  முன்னி்ட்டான் யக்ஷன். தன் முழு வலிமையுடன் முயன்றும் அப்புல்லை சுட்டெறிக்க இயலவில்லை.

தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பின அக்னிதேவன் "யாரந்த யக்ஷனென்று. அறிய இயலவில்லை" என்று அமரர்களிடம் கூறினான். எல்லாவற்றையும் கவர்ந்து விடுவேனென்ற வாயு(காற்று)விற்கும் தோல்வியே கிட்டியது. பின்னர் இந்திரனே செல்ல வேண்டியதாயிற்று அப்பொழுதுஅந்த யக்ஷனே மறைந்து விட்டது. ஆயின் அதே வானத்தில் மிக்க ஒளியுடன் தேவி உமாஹைமவதி தோன்றினாள். அவளையே இந்திரன் வினவினான் யாரந்த யக்ஷன் என்று. "அதுவே ப்ரம்மம். ப்ரம்மத்தின் வெற்றியாலேயே நீங்கள்  பெருமை அடைந்தீர்களென்று" உரைத்தாள். இதன்பிறகே  இந்திரனுக்கு மெய்யறிவுண்டாயிற்று. அப்போதே அதனை ப்ரம்மமென்று அறிந்து கொண்டான்.
"மின்னல் வெட்டியது" போன்ற என்னும் உவமையை உபநிடதம் கூறுகின்றது. ஸ்ரீ ஸ்ரீ ரங்கப்ரியஸ்வாமிகள் "வித்யுல்லேகேவ பாஸ்வரா" என்னும் மறைபொருளை இக்கட்டத்தை விவரிக்கையில் நினைவு கூர்ந்தார்.

தேவர்களே ஆயினும் அகங்காரம் இருப்பின்  வெற்றி இல்லை. அகங்காரமற்ற பரிசுத்த மனம் மட்டுமே இறைவனை உணர வல்லது என்ற அடிப்படை கருத்தை தேவதைகளுக்கு உணர்த்தியது பரப்பிரம்மம். 

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம். 

Saturday, August 3, 2019

ಇಂದ್ರನಿಗೂ ಬಗೆಹರಿಯದ ಒಗಟು (Indranigu bagehariyada ogatu)

ಲೇಖಕರು: ಡಾ|| ಕೆ.ಎಸ್. ಕಣ್ಣನ್


ನಮ್ಮ ಪುರಾಣಗಳಲ್ಲೆಲ್ಲ ತುಂಬಿರುವ ಕಥೆಯೆಂದರೆ ದೇವಾಸುರ ಯುದ್ಧದ ಕಥೆಯೇ. ವೇದೋಪನಿಷತ್ತುಗಳಲ್ಲೂ ಇದಿರುವುದೇ.

ಒಮ್ಮೆ ಯುದ್ಧವಾದಾಗ, ಅಸುರರು ಸೋತರು. ದೇವತೆಗಳು ಗೆದ್ದರು. ವಾಸ್ತವವಾಗಿ ಆದದ್ದೆಂದರೆ, “ದೇವತೆಗಳಿಗಾಗಿ ಬ್ರಹ್ಮವು ಗೆದ್ದಿತು”. ಹಾಗೆಂದೇ ಕೇನೋಪನಿಷತ್ತು ಹೇಳಿದೆ. ಆ ಕಥೆಯೇ ಇಲ್ಲಿಯದು.

ಗೂಢವಾದ ಕಾರ್ಯವು ಸುಲಭಕ್ಕೆ ಗೋಚರವಾಗದು – ದೇವತೆಗಳಿಗೂ! ಹೀಗಾಗಿ ಅವರು “ಇದು ತಮ್ಮದೇ ವಿಜಯ” (ಎಂದರೆ “ತಾವೇ ಗೆಲುವನ್ನು ಸಾಧಿಸಿದ್ದು”) – ಎಂದು ಭಾವಿಸಿಕೊಂಡರು!

ಬ್ರಹ್ಮಕ್ಕೆ ಇದೇನು ಗೋಚರವಾಗದೆ? ಆದರೆ ಅವರಿಗೆ ತಿಳಿವಳಿಕೆ ಕೊಡಬೇಕಲ್ಲ! ಅದಕ್ಕಾಗಿ ಇವರ ಮುಂದೆ ತೋರಿಕೊಂಡಿತು, ಬ್ರಹ್ಮ. ಆದರೆ ತನ್ನ ಸ್ವರೂಪವು ನಿಚ್ಚಳವಾಗಿ ಗೋಚರವಾಗುವಂತೆ ಅಲ್ಲ. ಯಾವುದೋ ಆಶ್ಚರ್ಯಕರವಸ್ತುವಿನಂತೆ – ಅಂದರೆ, ಉಪನಿಷತ್ತಿನ ಭಾಷೆಯಲ್ಲೇ ಹೇಳುವುದಾದರೆ, “ಯಾವುದೋ ಯಕ್ಷದಂತೆ”!

 ಆಗ ದೇವತೆಗಳು, “ಇದೇನಿದೆಂದು ತಿಳಿದು ಬಾ” ಎಂಬುದಾಗಿ ಅಗ್ನಿಗೆ ಹೇಳಿದರು. ಆ ಯಕ್ಷದ ಬಳಿ ಅಗ್ನಿ ಧಾವಿಸಿದ. “ನೀ ಯಾರು?” ಎಂದು ಯಕ್ಷವು ಆತನನ್ನು ಕೇಳಿತು. “ನಾನು ಅಗ್ನಿ, ಈ ಭೂಮಿಯ ಮೇಲಿರುವುದನ್ನೆಲ್ಲ ಸುಡಬಲ್ಲೆ!” ಎಂದ. “ಇದನ್ನು ಸುಡು” ಎಂದು ಹುಲ್ಲಿನ ಕಡ್ಡಿಯೊಂದನ್ನು ಅದಿಟ್ಟಿತು. ತನ್ನೆಲ್ಲ ವೇಗದಿಂದ ಅದರತ್ತ ಧಾವಿಸಿದರೂ ಆ ಕಡ್ಡಿಯನ್ನು ಸುಡಲಾಗಲಿಲ್ಲ. ಸೋಲೊಪ್ಪಿ ಹಿಂದಿರುಗಿ, “ಯಾವುದೀ ಯಕ್ಷವೆಂದು ನಾನರಿಯಲಾಗಲಿಲ್ಲ” ಎಂದು ದೇವತೆಗಳಲ್ಲಿ ಹೇಳಿಕೊಂಡ ಅಗ್ನಿದೇವ!

ಹಾಗೆಯೇ “ಎಲ್ಲವನ್ನೂ ಸೆಳೆದುಕೊಳ್ಳಬಲ್ಲೆ”ನೆಂದ ವಾಯುವಿಗೂ ಪರಾಭವವಾಯಿತು.

ಆಮೇಲೆ ಇಂದ್ರನೇ ಹೋಗಬೇಕಾಯಿತು. ಹೋದರೆ, ಆ ಯಕ್ಷವೇ ಅಗೋಚರ: ಮಾಯವಾಗಿ ಹೋಯಿತು! ಆದರೆ ಅದೇ ಆಕಾಶದಲ್ಲಿ “ಬಹುವಾಗಿ ಶೋಭಿಸುವ ಉಮಾಹೈಮವತಿಯು” ತೋರಿದಳು. ಅವಳನ್ನೇ ಇಂದ್ರ ಕೇಳಿದ. “ಯಾವುದಾ ಯಕ್ಷ?” ಎಂದು. “ಅದು ಬ್ರಹ್ಮ” ಎಂದು ಉಮೆಯು ಹೇಳಿದಳು. “ಬ್ರಹ್ಮದ ವಿಜಯದಿಂದಾಗಿ ನೀವು ಮಹಿಮಸಂಪನ್ನರಾಗಿದ್ದೀರಿ” ಎಂದೂ ಹೇಳಿದಳು. ಇದಾದ ಬಳಿಕವೇ ಇಂದ್ರನಿಗೆ ಜ್ಞಾನೋದಯವಾದದ್ದು. ಆಗಲೇ ಅದನ್ನು ಬ್ರಹ್ಮವೆಂದು ಆತನು ಅರಿತುಕೊಂಡದ್ದು.

ಬ್ರಹ್ಮಸ್ಫುರಣವು ಮಿಂಚು ಹೊಳೆದಂತೆ - ಎಂಬ ಉಪಮೆಯನ್ನು ಈ ಉಪನಿಷತ್ತು ಕೊಡುತ್ತದೆ. ಪೂಜ್ಯ ರಂಗಪ್ರಿಯಸ್ವಾಮಿಗಳು “ವಿದ್ಯುಲ್ಲೇಖೇವ ಭಾಸ್ವರಾ” ಎಂಬ ಸಂವಾದಿಯಾದ ವೇದೋಕ್ತಿಯನ್ನು ಇದರ ವಿವರಣೆಯ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಸ್ಮರಿಸಿದ್ದರು.

“ಹಿಮವತ್ ಪ್ರದೇಶವೆಲ್ಲಾ ಭಗವಂತನ ತಪೋಭೂಮಿಯಪ್ಪಾ” ಎಂಬ ಶ್ರೀರಂಗಮಹಾಗುರುಗಳ ವಚನವು ಈ ಹೈಮವತೀ ಎಂಬ ತಪೋಗಮ್ಯವಾದ ಪರತತ್ತ್ವದ ದರ್ಶನವನ್ನೂ ಮಾಡಿಸುತ್ತದೆ.

ಸೂಚನೆ: 03/08/2019 ರಂದು ಈ ಲೇಖನ ಪ್ರಜಾ ವಾಣಿ ಪತ್ರಿಕೆಯಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.