மூலம் (கன்னடம்): கே. எஸ். கண்ணன்
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : lekhana@ayvm.in
விற்பயிற்சி அளிக்கையில். துரோணாசாரியார் ஒரு மரத்தின் உச்சியில். அமர்ந்திருந்த கழுகை சுட்டிக்காட்டி "நான் கூறும்போது அதன் தலை துண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.
முதலில் யுதிஷ்டிரனின் முறை. துரோணர் கூறினார் "யுதிஷ்டிரா குறி பார் நான் கட்டளையிடும்போது அம்பை செலுத்து .யுதிஷ்டிரன் பறவையை வீழ்த்த தயாரானான். துரோணர் "மரத்தின் உச்சியில் பறவையை காண்கிறாயா"? என்று வினவினார்.
யுதிஷ்டிரன் பதிலளித்தார் "ஆம் குருவே காண்கிறேன்." குரு உடனே மறுபடியும் வனவினார் "நீ மரத்தையும் என்னையும் காண்கிறாயா?" யதிஷ்டிரர் பதிலளித்தார் "நான்
மரத்தையும் , உங்களையும், என் சகோதரர்களையும், கழுகையும் காண்கிறேன்." இதே கேள்வியை மறுமுறை கேட்ட போதும் அதே பதில் கிடைத்தது. துரோணர் எரிச்சலுற்று "விலகிக்கொள். உன்னால் இலக்கை வீழ்த்த இயலாது. " என்றார்.
அடுத்து துரியோதனன் மற்றும் மற்றவர்களின் முறை. "நாங்கள் அனைத்தையும் காண்கிறோம் "என்பதே அனைவரின் பதில். பீமனும் சகோதரர்களும் அவ்வாறே உரைத்தனர்.
அடுத்து அர்ஜுனனின் முறை வந்தது. அதே கேள்விக்கு அவன் பதில் "நான் கழுகை மட்டுமே பார்க்கிறேன். உங்களையோ மரத்தையோ அல்ல". துரோணரின் வினா "நீ கழுகை மட்டும் பார்க்கிறாய் அல்லவா"? அர்ஜுனன் பதிலளித்தான் "நான் பறவையின் தலையை மட்டுமே காண்கிறேன் முழுஉடலையும் அல்ல". துரோணர் பூரிப்படைந்து அம்பை செலுத்தும்படி கட்டளையிட்டார். பறவையின் துண்டித்த தலை கீழே விழுந்தது. துரோணர் மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டினார். பிற்காலத்தில் அர்ஜுனன் பெரும் சாதனைகள் புரியவில்லையா.?
ஒரு செயலை சரியாக செய்து முடிக்க மன ஒருமைப்பாடு தேவை. இலக்கை நோக்கி மனம் குவிதல் வேண்டும். மனம் அங்கும், இங்கும் அலைபாயும்போது ஒருமுகப்படுதல் எங்ஙனம்?
(தற்கால மாணவர்களுக்கும் இந்த உவமை பொருந்தும்எல்லாவற்றையும், எப்போதும் இணையதளத்தில் (internet) தேடும்போது மனம் எவ்வாறு ஒருநிலைப்படும்?) ஆன்மீகத்திற்கும் மனஒருமைப்பாடும் கவனமும் தேவை. ஒருவன் ஆத்மஸித்தி அடைய முயலும்போது எள்ளளவும் மனம் சிதறக்கூடாது என்பது உபநிடதங்களின் உபதேசமும் ஆகும்.
இறுதியாக ஒரு செய்தி. "மரத்தில்தன் போக்கில் அமர்ந்திருக்கும் ஒரு பறவையை கொல்ல வேண்டுமா?" என மனம் வருந்தாதீர்கள். அது ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட பறவைதான்.
குறிப்பு : இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.