தமிழாக்கம்: ஶ்ரீமதி ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
தமிழாக்கம் : திருமதி ஜானகி
ஶ்ரீரங்கமஹாகுரு தன்னுடைய அசாதாரணமான கலைத் திறன்கள் அனைத்தையும், தான் பரிபூரண ஞான நிலையில் எந்த பரம்பொருளைக் கண்டாரோ, அதன் பெருமையை போற்றி புகழ்வதற்கே உபயோகித்தார்.
சங்கீத கலைக்கு ஆத்மானுபவத்தை வெளிப்படுத்துவதை தவிர வேறு எந்த உன்னதமான நோக்கமும் கிடையாது என்ற கருத்துடையவராக இருந்தார். ஒருபுறம் ஆத்மானுபவத்தையும், மறுபுறம் நாத வித்யையின் மூலத்தையும் அடைந்தவரான ஶ்ரீரங்கமஹாகுரு இக்கலையை நாத ப்ரஹ்மத்தின், சப்த ப்ரஹ்மத்தின் இறுதியில் அடையும் பரம்பொருளின் உபாசனைக்கே உபயோகித்தார்.
ஆதிசங்கரர் எந்த பேரொளியை கோவிந்தன் என போற்றி புகழ்ந்து அதனை பஜிக்குமாறு உலகிற்கு உரைத்தாரோ அதை தன் உள்ளத்தில் தரிசித்து சாந்தி மற்றும் ஆனந்தத்தை தன்வசம் செய்து கொண்ட மஹா யோகியாகவும், அதில் தன் மனதை செலுத்தி அதி மேன்மையான பக்தி உணர்வை அடைந்த ஒரு தலைசிறந்த பக்தனாகவும் விளங்கிய ஒப்பற்ற மகான் ஶ்ரீரங்கமஹாகுரு.
(தொடரும்)