Showing posts with label 784_ayvmarticle. Show all posts
Showing posts with label 784_ayvmarticle. Show all posts

Tuesday, January 25, 2022

ஒப்பற்றமஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு - பாகம் - 5 (Oppatra Mahaapurushar Srirangamahaa Guru - Part - 5)

தமிழாக்கம்:  ஶ்ரீமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


யோகமஹிமை:-


      விஸ்வாமித்திரர் போன்ற பல மஹரிஷிகள் பல ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்து ஆத்ம ஞானத்தை அடைந்தார்கள் என கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் மஹா குருவானவர் சில மாதங்களிலேயே ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடைந்தார் என அறிகிறோம்.


ஒரு சந்தர்ப்பத்தில் தன் நெருங்கிய உறவினரான ஶ்ரீ தாதாசார் என்பவரிடம் பேசும் பொழுது ஸ்ரீகுரு "இறைவனுக்கு உருவம் உண்டா இல்லையா" என்று வினவினார். அவர் "இறைவனுக்கு உருவம் உண்டென்று" கூறினார். மஹாகுரு தானே இறைவனை கண்டிருப்பதாகவும், அவன் அருவமானவன் என்றும் கூறி அவரை ஸ்தம்பிக்க வைத்தார். மேலும் ஶ்ரீ தாதாசார் "இறைவன் கோடி சூர்யப்ரகாசமுள்ளவன் என்று சொல்லப்படுவது உண்மையா" என்று வினவியபோது "கோடி அல்ல; அவன் பல கோடி கோடி சூரிய ஒளியுடையவன், ஒளிக்கடலாகவே திகழ்பவன். ஆயினும் பூர்ண சந்திரனை ஒத்த குளிர்ச்சியுள்ளவன்!" என்றும் "அந்த அம்ருதத்தில் மூழ்கி ஆநந்தத்தில் திளைக்கிறோம்" என்றும்  மஹாகுரு விளக்கமளித்தார்.


           ஆத்ம ஸாதனை என்பது பல வருடங்கள் முயன்றாலும் கிடைப்பது அரிது என்பதால் பலராலும் கைவிடப் பட்ட ஒன்று. ஆனால் யோகத்தின் அனுபவங்கள் அனைத்தும் இவரை வலிய தேடி வந்தடைந்தன. இவை அனைத்தும் அவருடைய வருங்காலத்தில் ஒரு பெரும் வெள்ளமாகவே பெருகியது.


(தொடரும்)