Showing posts with label 267_ayvmarticle. Show all posts
Showing posts with label 267_ayvmarticle. Show all posts

Thursday, March 19, 2020

முனிபத்னிகளின் பக்தி சிறந்த எடுத்துக்காட்டு (Munipatnikalin Pakti Ciranta etuttukkattu)

மூலம்: சுப்ரமண்ய சோமயாஜி
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in) 

ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணனும், பலராமனும் இடையர் சிறுவர்களுடன் கானகம் சென்றபோது அனைவரும் பசியால் தூண்டப்பட்டு உண்பதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கண்ணனை வேண்டினார்கள். அவரும் "தூரத்தில் ஆச்ரமத்தில் முனிவர்கள் ஓர் யாகத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள். அங்கே சென்று கண்ணனும் பலராமனும் கூறினார்கள் என வேண்டி உணவு எடுத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். இடையர்களும் கண்ணனுக்காக உணவு வேண்டினார்கள். ஆயின் அம்முனிவர்களோ சொர்கத்தை அடைய (இறைவனை அடைய அல்ல) அங்கீரஸயாகத்தில் திளைத்திருந்தனர். இடையர்களுக்கு உணவும் கொடாமல் கர்வத்துடன் பதிலும் கூறாது இருந்தனர். இடையர்கள் திரும்பி வந்து நடந்ததை விவரித்தனர். கண்ணனோ "மீண்டும் அங்கே சென்று முனிபத்னிகளிடம் எனக்காக உணவை வேண்டுங்கள்" என்றார். இம்முறை இடையர்களுக்கு ஏமாற்றமில்லை. எந்நேரமும் கிருஷ்ணனின் லீலைகளை செவிமடுத்து முனிபத்னிகளின் உள்ளம் கிருஷ்ண மயமாக இருந்தது. இடையர்கள் சென்றவுடன் சுத்தமான பாத்திரங்களில் அனைத்து வித உணவுகளையும் எடுத்துக் கொண்டு கண்ணனிடம் ஓடோடி வந்தனர். 'நதிகள் கடலரசனை சேரும் ஆர்வத்துடன் ஓடோடி வருவது போன்று' என ஸ்ரீ சுகர் கூறுகிறார். அங்கே கண்ணனுக்கும் அவனுடைய தோழர்களுக்கும் மன நிறைவு ஏற்படும் வரை உணவு படைக்கின்றனர். ஆழ்ந்த உறக்கத்தில் அனைத்து விஷயங்களையும் மறப்பது போன்று கிருஷ்ணதரிசனத்தினால்  அனைத்து துன்பங்களையும் தொலைத்தனர்.

"யாகம் பூர்த்தியாக உங்கள் கணவர்களிடம் செல்லுங்கள்" என கண்ணன் அவர்களுக்கு விடையளித்தார். அச்சமயம் அவர்களின் கூற்று மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்து. "இறைவனிடம் வந்த பிறகு மீண்டும் இல்லறத்திற்கு திரும்ப செல்வது என்ன நியாயம்? உனக்காக உறவுகளை எல்லாம் விட்டு வந்துள்ளோம். அவர்களுடைய கட்டளையை மீறி உன்னிடம் வந்த எங்களை மறுபடியும் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்?" எனக்கூற கண்ணன் "அவர்கள் முன்னைவிட உங்களை அதிக கௌரவத்துடன் காண்பார்கள். உங்களுடைய கடமைகளை பூர்த்தி செய்யுங்கள். எங்கிருந்தாலும் மனதில் மட்டும் என்னையே சிந்தியுங்கள். என்னையே வந்து அடைவீர்கள்" என உறுதி கூறிய பின் அவர்கள் திரும்பிச்  சென்றனர். அங்கே முனிவர்களும் தம் அறிவின்மைக்காக வருந்தி இவர்களை கௌரவித்தனர். மேலும் "நம்முடைய கல்வி, சாஸ்திர ஞானம், சாதனை அனைத்தும் ஒழியட்டும். இறைவனே கூறியும் அதை அறியும் திறனை நம் தலை கனத்தினால் இழந்துவிட்டோம். நம் மனைவிகளே பாக்கியசாலிகள். எவ்விதமான சாஸ்திர பயிற்சியும் இல்லாவிடினும் பக்த சிரோமணிகளானதால் இறைவனை காணும் பேறு பெற்றனர்" என வருந்தினர்.

இக் கதை நமக்கு பக்தியின் உன்னத நிலை அனைத்திற்கும் மேலானது என உரைக்கிறது. "இறைவனை எல்லா ஜீவிகளும் கணவனை(பதியை) மனைவி பின்பற்றுவது போன்று அனுசரிக்க வேண்டும். ஸ்ரீபதியையே பற்றி அவனுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்" எனும் ஸ்ரீரங்க மஹாகுருவின் கூற்று இங்கே நினைவில் கொள்ளத்தக்கது. யாகப்பொருட்கள், அக்னி, தேவதைகள் அனைத்தும் கிருஷ்ண மயமே. அவ்வாறான பரம்பொருளே நேரில் தோன்றி கேட்டாலும் நம் கர்வம் கண்களை மறைப்பதுண்டு. அனைத்து படிப்பறிவும்  இறைவனை அடைவதற்கே என்பதை மறக்கும் போது நமக்கும் அம்முனிகளைப் போன்றே நிகழலாம் அன்றோ? முனிபத்னிகளை போன்று அவனிடம் பக்தி கொண்டவர்களாக திகழ்வோமாக.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs  ல் காணலாம்.

Monday, February 10, 2020

ಮುನಿಪತ್ನಿಯರ ಭಕ್ತಿ - ನಮ್ಮ ಆದರ್ಶ. (Munipathniyara bhakthi - namma aadarsha)

ಲೇಖಕರು: ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ ಸೋಮಯಾಜಿ 
(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ : lekhana@ayvm.in)



ಮ್ಮೆ  ಶ್ರೀಕೃಷ್ಣಬಲರಾಮರು ಕಾಡಿನಲ್ಲಿ ಗೋಪಾಲಕರೊಡನೆ ಸಾಗಿದ್ದಾಗ ಎಲ್ಲರಿಗೂ ಹಸಿವಾಗುತ್ತದೆ. ಅವರೆಲ್ಲ ಶ್ರೀಕೃಷ್ಣನನ್ನು ಆಹಾರಕ್ಕಾಗಿ ವ್ಯವಸ್ಥೆ ಮಾಡಲು ಪ್ರಾರ್ಥಿಸುತ್ತಾರೆ. ಆಗ ಕೃಷ್ಣನು –ಅನತಿ ದೂರದಲ್ಲಿ ಮುನಿಗಳೆಲ್ಲಾ ಯಜ್ಞವೊಂದನ್ನು ಆಯೋಜಿಸಿದ್ದಾರೆ. ಅವರಲ್ಲಿ ಕೃಷ್ಣಬಲರಾಮರು ಹೇಳಿದರೆಂದು ಪ್ರಾರ್ಥಿಸಿ ಆಹಾರವನ್ನು ತೆಗೆದುಕೊಂಡು ಬನ್ನಿ ಎಂದು ಆಜ್ಞಾಪಿಸುತ್ತಾನೆ. ಗೋಪಾಲಕರು ಆ ಮುನಿಗಳನ್ನು ಕೃಷ್ಣನ ಪರವಾಗಿ ಆಹಾರಕ್ಕಾಗಿ ಪ್ರಾರ್ಥಿಸಿದರು. ಆ ಮುನಿಗಳಾದರೋ ಸ್ವರ್ಗಪ್ರಾಪ್ತಿಗಾಗಿ(ಭಗವತ್ಪ್ರಾಪ್ತಿಗಲ್ಲ!) ಅಂಗೀರಸ ಎಂಬ ಯಜ್ಞದಲ್ಲಿ ಉದ್ಯುಕ್ತರಾಗಿದ್ದರು. ಗೋಪಾಲಕರ ಮಾತಿಗೆ ಮಾರುತ್ತರವನ್ನೂ ಕೊಡದೇ ಅನ್ನವನ್ನೂ ಕೊಡದೇ ಅಹಂಕಾರದಿಂದ ವರ್ತಿಸಿದರು. ಗೋಪಾಲಕರು ನಿರಾಶರಾಗಿ ಹಿಂತಿರುಗಿ ಕೃಷ್ಣನಿಗೆ ನಡೆದುದನ್ನು ತಿಳಿಸಿದರು. ಶ್ರೀಕೃಷ್ಣನು ಅವರಿಗೆ-ಮತ್ತೆ ಹೋಗಿ ಶಾಲೆಯಲ್ಲಿರುವ ಮುನಿಪತ್ನಿಯರಲ್ಲಿ ನನ್ನ ಪರವಾಗಿ ಆಹಾರವನ್ನು ಕೇಳಿ ಎಂದು ಸಲಹೆಮಾಡಿದನು. ಈ ಬಾರಿ ಗೋಪಾಲಕರಿಗೆ ನಿರಾಸೆಯಾಗಲಿಲ್ಲ. ಸದಾ ಕೃಷ್ಣಲೀಲೆಗಳನ್ನುಕೇಳುತ್ತಾ ಮುನಿಪತ್ನಿಯರ ಪವಿತ್ರವಾದ ಮನಸ್ಸುಗಳು ಕೃಷ್ಣಮಯವಾಗಿದ್ದವು. 

ಗೋಪಾಲಕರು ಹೇಳಿದೊಡನೆಯೇ ಶುದ್ಧವಾದ ಪಾತ್ರೆಗಳಲ್ಲಿ ಎಲ್ಲ ಬಗೆಯ ಆಹಾರಗಳನ್ನು ತುಂಬಿಕೊಂಡು ಸಂಭ್ರಮದಿಂದ ಕೃಷ್ಣನಿದ್ದೆಡೆಗೆ ಧಾವಿಸಿದರು. ನದಿಗಳು ಸಾಗರವನ್ನು ಸೇರುವ ಸಂಭ್ರಮದಿಂದ ಸಾಗುವಂತೆ ಎಂದು ಶುಕರು ವರ್ಣಿಸುತ್ತಾರೆ. ಅಲ್ಲಿ ಕೃಷ್ಣನಿಗೆ, ಪರಿವಾರಕ್ಕೆಲ್ಲ ತೃಪ್ತಿಯಾಗುವಂತೆ ಬಡಿಸುತ್ತಾರೆ. ಗಾಢನಿದ್ರೆಯಲ್ಲಿ ಎಲ್ಲ ವಿಷಯಗಳೂ ಮರೆಯುವಂತೆ ಕೃಷ್ಣದರ್ಶನದಿಂದ ಅವರು ಜೀವನದ ಕ್ಲೇಶಗಳನ್ನೆಲ್ಲ ಕಳೆದುಕೊಂಡರು. ಕೃಷ್ಣನು ಅವರಿಗೆ ಕೃತಜ್ಞತೆಯನ್ನು ಸಲ್ಲಿಸಿ ಬೀಳ್ಕೊಡುತ್ತಾ ಯಜ್ಞಪೂರ್ತಿಗಾಗಿ ನಿಮ್ಮ ಪತಿಗಳಿದ್ದಲ್ಲಿಗೆ ಹಿಂತಿರುಗಿ ಎನ್ನುತ್ತಾನೆ. ಆಗ ಅವರು ಹೇಳುವ ಮಾತುಗಳು ಬಹಳ ಅರ್ಥಪೂರ್ಣ. ಭಗವಂತನಲ್ಲಿಗೆ ಬಂದಮೇಲೆ ಮತ್ತೆ ಸಂಸಾರಕ್ಕೆ ಹಿಂತಿರುಗಿ ಎಂದು ಹೇಳುವುದು ಯಾವ ನ್ಯಾಯ? ನಿನಗಾಗಿ ಜ್ಞಾತಿಗಳೆಲ್ಲರನ್ನೂ ಬಿಟ್ಟುಬಂದಿದ್ದೇವೆ, ಅವರ ಆಜ್ಞೆಯನ್ನು ಮೀರಿ ನಿನ್ನಲ್ಲಿಗೆ ಬಂದಿರುವಾಗ ಅವರು ಮತ್ತೆ ನಮ್ಮನ್ನು ಹೇಗೆ ಒಪ್ಪಿಕೊಳ್ಳುತ್ತಾರೆ ಎನ್ನಲು, ಕೃಷ್ಣನು - ಅವರು ನಿಮ್ಮನ್ನು ಮೊದಲಿಗಿಂತ ಗೌರವದಿಂದ ನೋಡುತ್ತಾರೆ. ನಿಮ್ಮ ಕರ್ತವ್ಯವನ್ನು ಪೂರ್ಣಗೊಳಿಸಿ. ಎಲ್ಲಿದ್ದರೂ ಮನದಲ್ಲಿ ಮಾತ್ರ ನನ್ನನ್ನೇ ಚಿಂತಿಸುತ್ತಿರಿ, ನನ್ನಲ್ಲೇ ಬಂದು ಸೇರುತ್ತೀರಿ ಎಂದು ಭರವಸೆ ಕೊಟ್ಟ ಮೇಲೆ ಅವರು ಹಿಂತಿರುಗುತ್ತಾರೆ. ಇತ್ತ ಆ ಮುನಿಗಳು ತಮ್ಮ ಅಜ್ಞಾನಕ್ಕಾಗಿ ಪಶ್ಚಾತ್ತಾಪ ಪಟ್ಟು ಇವರನ್ನು ಗೌರವಿಸುತ್ತಾರೆ. ಮಾತ್ರವಲ್ಲ ತಮ್ಮ ಅಧ್ಯಯನ, ಶಾಸ್ತ್ರಜ್ಞಾನ, ಸಾಧನೆ ಎಲ್ಲದಕ್ಕೂ ಧಿಕ್ಕಾರವಿರಲಿ, ಭಗವಂತನೇ ಹೇಳಿದರೂ ಗುರುತಿಸುವ ಸಾಮರ್ಥ್ಯವನ್ನು ನಮ್ಮ ಅಹಂಕಾರದಿಂದ ಕಳೆದುಕೊಂಡೆವು. ನಮ್ಮ ಪತ್ನಿಯರೇ ಧನ್ಯರು. ಯಾವ ಶಾಸ್ತ್ರಾಧ್ಯಯನ ಇಲ್ಲದಿದ್ದರೂ ಭಕ್ತಶಿರೋಮಣಿಗಳಾದ್ದರಿಂದ ಭಗವಂತನನ್ನು ನೋಡುವಂತಾಯಿತು ಎಂದು ಕೊರಗುತ್ತಾರೆ.

ಈ ಕಥೆ ನಮಗೆ ಭಕ್ತಿಯ ಪರಾಕಾಷ್ಠೆ ಎಲ್ಲಕ್ಕಿಂತ ದೊಡ್ಡದು ಎಂಬುದನ್ನು ತಿಳಿಸುತ್ತಿದೆ. "ಪರಮಾತ್ಮನನ್ನು ಎಲ್ಲಾ ಜೀವಗಳೂ ಪತ್ನಿಯು ಪತಿಯನ್ನು ಆಶ್ರಯಿಸುವಂತೆ ಆಶ್ರಯಿಸಬೇಕು. ಶ್ರೀಪತಿಯನ್ನೇ ಅವಲಂಬಿಸಿ ಅವನಿಗೋಸ್ಕರ ಜೀವನವನ್ನು ಮುಡುಪಾಗಿಡಬೇಕು" ಎಂಬ ಶ್ರೀರಂಗ ಮಹಾಗುರುಗಳ ಮಾತು ಇಲ್ಲಿ ಸ್ಮರಣೀಯ. ಯಜ್ಞದ್ರವ್ಯಗಳು, ಯಜ್ಞಾಗ್ನಿ, ದೇವತೆಗಳು, ಧರ್ಮ ಎಲ್ಲವೂ ಕೃಷ್ಣಮಯವೇ. ಅಂತಹ ಪರಬ್ರಹ್ಮನೇ ಸಾಕ್ಷಾತ್ತಾಗಿ ಬಂದು ಕೇಳಿದರೂ ನಮ್ಮ ಅಹಂಕಾರದ ಅಡ್ಡಗೋಡೆ ಗೊತ್ತಾಗದಂತೆ ಮಾಡುವುದಿದೆ. ಸಮಸ್ತ ವಿದ್ಯೆಗಳೆಲ್ಲವೂ ಭಗವಂತನನ್ನು ಪಡೆಯುವುದಕ್ಕಾಗಿ ಎಂಬುದರ ವಿಸ್ಮರಣೆಯಾದಾಗ ನಮಗೂ ಆ ಮುನಿಗಳಿಗೆ ಆದಂತೆ ಆಗಬಹುದಲ್ಲವೇ? ಮುನಿಪತ್ನಿಯರಂತೆ ಅವನಲ್ಲಿ ಭಕ್ತಿ ಇಡುವವರಾಗೋಣ. 

ಸೂಚನೆ: 10/02/2020 ರಂದು ಈಲೇಖನ ವಿಜಯವಾಣಿಯ ಮನೋಲ್ಲಾಸ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ