Showing posts with label 240_ayvmarticle. Show all posts
Showing posts with label 240_ayvmarticle. Show all posts

Monday, January 13, 2020

ஶ்ரீரங்கமஹாகுரு - 52 (Sriranga Mahaguru - 52)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 41

இரு கைகளிலும்  லட்டுக்கள்
===========================================================


மூலம்: வரததேசிகாசார்யர் 
தமிழாக்கம்: வனஜா



இறைவன் இருக்கின்றான் என்பதை வாதத்தால் நிலைநாட்டலாம். அவ்வாறே இறைவன் இல்லை என்றும் வாதிட்டு நிரூபிக்கலாம். முதலாவது ஆத்திக வாதம் இரண்டாவது நாத்திக வாதம். இவ்விரண்டில் எதனை பற்றினால் நன்மை எனும் கேள்வி ஆராய்ச்சியாளருக்கு ஏற்படலாம். 
      இவ்விரண்டு பாதைகளில் முதலாவதை பற்றுவதே சிறந்தது. அதில் எந்த  ஆபத்துமில்லை என்று நம் நாட்டின் பழமை வாய்ந்த வாதத்தில் சிறந்த அறிஞர்கள் நிரூபித்துள்ளனர். அவர்களின் வாதம் பின்வருமாறு: 
          ஆத்திகன் எந்த இறைவன் உண்டு என்று வாதிக்கின்றானோ அத்தகு இறைவன் இல்லாவிடினும் அவனுக்கு நஷ்டமேதும் இல்லை. இருப்பானாயின் அவனை  ப்ரார்தித்தால் நன்மையே ஏற்படும். ஆனால் நாத்திகனுக்கு அவன் கூற்றுபடி இறைவன் இல்லாவிடில் எந்த பயனுமில்லை. ஆயின் இறைவன் இருப்பின் அந்த நாத்திகனுக்கு கொடிய தீங்கு நேரும் என்பது உறுதி.   "அஸ்திசேத் நாஸ்திகோ ஹத:"
       மனம் ஒன்றிய ஆத்திகனுக்கு  எவ்வகையிலும் தீதில்லை. அவன் இரு கைகளிலும் லட்டுக்கள். நாத்திகனுக்கோ இரு கைகளிலும் வெறுமையே.
        ஆயின் இறைவன் இருப்பதை  இத்தகு வாதங்களின் மூலம் மட்டும் நிர்ணயித்தல் கூடாது. புலன்கள, மனம், புத்தி இவற்றின் தூய்மையுடன் அகக்கண்ணால் அவனை உணர்ந்து மகிழ வேண்டுமென  சான்றோர் கூறுகின்றனர்.