Showing posts with label 234_ayvmarticle. Show all posts
Showing posts with label 234_ayvmarticle. Show all posts

Friday, April 3, 2020

மரியாதை உடலுக்கல்ல, உள்ளே உறையும் இறைவனுக்கே (Mariyatai Utalukkalla, Ulle Uraiyum Iraivanukke)

மூலம் : சுப்பிரமணிய ஸோமயாஜி 
தமிழாக்கம் :  ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



தக்ஷ யாகத்தின் சந்தர்ப்பம். தக்ஷனின் ஆசை மகள் சதிதேவிக்கு தன் தந்தை ஓர் யாகத்திற்கு  ஏற்பாடு  செய்திருப்பது தேவர்களின் வாயிலாக அறிய வருகிறது. இங்கு தக்ஷனுக்கு சிவனிடம் பகை. அதன் காரணம்  வேடிக்கையானது.  ஒரு முறை பிரம்மா ஏற்படுத்திய யாகத்தில் தக்ஷபிரஜாபதி வருகை தருகிறான். அவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரம்மனையும் சிவனையும் தவிர அனைவரும் எழுந்து நின்றனர். தன்னுடைய மருமகனான சிவன் எழுந்து நின்று தனக்கு  மரியாதை செலுத்தவில்லை என கர்வியான தக்ஷனுக்கு மிகவும் கோபம். சிவன் தேவ தேவர்களின் தலைவன் மகாதேவன்.

அழிவற்றவன் பிறப்பற்றவன். அவனையே அனைவரும் வணங்க வேண்டும். உலக மக்களைப் போன்று சிவனும் எழுந்து நின்று தக்ஷனை வணங்குவது அவனுக்கே(தக்ஷனுக்கே) ஏற்றமன்று. மேலும் பிற்பாடு சிவனே சதிக்கு கூறியது போல் ஞானிகள் கௌரவம் செலுத்தும் விதமே மாறுபட்டது. அவர்கள் கௌரவத்தை இதயகுகையின் உள்உறையும் ஸ்ரீ வாசுதேவனுக்கே மனத்தினால் அர்பணிக்கிறார்கள். அதனால் உலகனைத்துக்கும் நன்மை உண்டு. ஆயின் தலைக்கனம் கொண்ட தக்ஷனுக்கு இது விளங்கவில்லை. தன் மூல ரூபமான சிவனையே வேறு விதமாக காண்கிறான். ஸ்ரீரங்க மஹாகுரு அவர்கள் கூறியது:- "வாழ்க்கை அடுக்கு அடுக்காக வளர்வதால் அடுத்து வருவது தனக்கு பின் உள்ளதை மறைக்கிறது.". இங்கு தக்ஷனின் உடல், அதை சார்ந்த அகங்காரம் மூலத்தில் உள்ள தன் சிவரூபத்தை மறக்கும்படி செய்தது. எனவே மகளான சதியையும் சிவனையும் யாகத்திற்கு அழைக்கவில்லை. ஆயினும் பெண்களுக்கு தாய் வீட்டு மோகம் (ஈர்ப்பு) இருப்பது இயற்கையே. இருவரையும் அழைக்காவிடினும் அங்கு செல்ல வேண்டும் எனும் ஆவல். இறைவனான மகாதேவனை பல பல விதமாக வேண்டினாள். தன் தீர்மானத்தை பலப்படுத்த 'தந்தை  மனைக்கும் யாக சாலைக்கும் அழைப்பு இல்லாமலும் செல்வது தகும்' என்கிறாள்.

அதற்கு மகாதேவன் கூறும் பதிலானது எல்லா காலங்களுக்கும் ஏற்றது. "அழைப்பு இன்றியும் செல்லலாம் என்பது சரியே. ஆனால் அவ்வுறவினர்களின் பார்வை தீய அபிமானத்தினால்  ஏற்படும்  கர்வம், சினம் , பகை முதலியவை இல்லாமல் இருந்தால் மட்டுமே அவ்வாறு செல்லலாம். வித்யை, தவம், பொருள்(ஐச்வர்யம்) கவர்ச்சிகரமான தேகம், இளம் வயது மற்றும் நற்குணம் எனும் ஆறும் சத்புருஷர்களிடம்(சான்றோர்களிடம் ) நற்பண்புகளாக விளங்குகின்றன. ஆயின் தீயவர்களிடம் அவையே தீய குணங்களாக ஆகின்றன. அவைகளினால் தீயோரின் கர்வம் மேலோங்கி சிந்திக்கும் தன்மையை  இழக்கச் செய்கிறது. அச்சமயம் சான்றோரின் மேன்மையை அறிய இயலாது. ஆகையால் யார் தன்னிடம் வருபவரை நேற்மையற்ற எண்ணத்துடன்  காண்கிறார்களோ அத்தகையோரிடம்  'நம் உறவினர்தானே' என்று செல்வது தகாது. அவர்களின் இழிவான சொற்கள் பகைவரின் கூரிய அம்புகளை விட கொடியவை. இவை அனைத்தும் தக்ஷனின் அன்றைய மனநிலையை காட்டும் கைகண்ணாடியாக விளங்கியது.

ஆயினும் தாய் வீட்டு மோகம், சிவனின் உண்மைகளடங்கிய வார்த்தைகளையும் மீறி சதிதேவி அங்கு செல்ல வழி வகுத்தது. அங்கு தக்ஷனின் உதாசீனம், சிவனைப் பற்றிய அலட்சியம், கர்வம் முதலியவை அவளை இறுதியாக தன் உடலையே தீயில் அர்பணிக்க செய்தது நாம் அனைவரும் அறிந்ததே. இக்  கதை நமக்கு அநேக பாடங்களை கற்பிக்கிறது. கர்வம் என்பது அனைத்து நற்குணங்களையும் அழிக்கக் கூடியது. தேகபற்று கூடாது. உறவினர் எனும் போது அவர்கள் எவ்வாறு இருப்பினும் சரியே எனும் மனநிலை தவறானது. மரியாதை என்பது உள்ளே உறையும் இறைவனுக்கே அன்றி உடலுக்கு அல்ல. ஞானிகளின் பரிந்துரைகளை என்றும் அலட்சியம்செய்வது தகாது. இவ்வாறான நற்குணங்களை  அந்த பரமசிவன் நமக்கு அருளட்டும் என வேண்டுவோம்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.    

Thursday, January 2, 2020

ಗೌರವ ದೇಹಕ್ಕಲ್ಲ, ಒಳಬೆಳಗುವ ಭಗವಂತನಿಗೆ. (Gourava dehakkalla. Olabelaguva bhagavanthanige)

ಲೇಖಕರು:  ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ ಸೋಮಯಾಜಿ
(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ lekhana@ayvm.in)




ದಕ್ಷಯಜ್ಞದ ಸಂದರ್ಭ. ದಕ್ಷನ ಪ್ರಿಯ ಪುತ್ರಿ ಸತೀ ದೇವಿಗೆ ತನ್ನ ತಂದೆಯು ಮಹಾಯಜ್ಞವೊಂದನ್ನು ಆಯೋಜಿಸಿದ್ದಾನೆ ಎಂದು  ದೇವತೆಗಳಿಂದ ತಿಳಿದುಬರುತ್ತದೆ. ಇತ್ತ ದಕ್ಷನಿಗೆ ಶಿವನಲ್ಲಿ  ಅಹಂಕಾರಪೂರಿತವಾದ ದ್ವೇಷ. ಅದಕ್ಕೆ ಕಾರಣ ಕ್ಷುಲ್ಲಕ. ಹಿಂದೆ ಬ್ರಹ್ಮನು ಆಯೋಜಿಸಿದ ಯಜ್ಞಕ್ಕೆ ದಕ್ಷಪ್ರಜಾಪತಿಯು ಆಗಮಿಸುತ್ತಾನೆ. ಅವನಿಗೆ ಗೌರವವಾಗಿ ಶಿವ ಮತ್ತು ಬ್ರಹ್ಮನನ್ನು ಉಳಿದು ಎಲ್ಲರೂ ಎದ್ದು ನಿಲ್ಲುತ್ತಾರೆ. ತನ್ನ ಅಳಿಯನಾಗಿ ತನಗೆ ಎದ್ದುನಿಂತು ನಮಸ್ಕಾರ ಮಾಡಲಿಲ್ಲ ಎಂಬುದು ಅಹಂಕಾರಿಯಾದ ದಕ್ಷನ ಕೋಪಕ್ಕೆ ಕಾರಣ. ಶಿವನು ದೇವರ ದೇವ ಮಹಾದೇವ.

ನಿತ್ಯನು,ಹುಟ್ಟಿಲ್ಲದವನು. ಅವನಿಗೇ ಎಲ್ಲರೂ ನಮಸ್ಕರಿಸಬೇಕು. ಲೋಕದ ಜನರಂತೆ ಅವನು ಎದ್ದು ನಿಂತು ದೆಹಾಭಿಮಾನಿಯಾದ ದಕ್ಷನಿಗೆ ನಮಸ್ಕರಿಸುವುದು ದಕ್ಷನಿಗೇ ಶ್ರೆಯಸ್ಕರವಾಗದು. ಅಷ್ಟಲ್ಲದೇ ಮುಂದೆ ಸತಿಗೆ ಶಿವನೇ ತಿಳಿಸುವಂತೆ, ಜ್ಞಾನಿಗಳಾದವರು ಗೌರವವನ್ನು ತೋರಿಸುವ ರೀತಿಯೇ ಬೇರೆಯಾಗಿರುತ್ತದೆ. ಅವರು ನಮಸ್ಕಾರಾದಿಗಳನ್ನು ಅಂತರ್ಯಾಮಿಯಾಗಿ ಹೃದಯ ಗುಹೆಯಲ್ಲಿರುವ ಶ್ರೀ ವಾಸುದೇವನಿಗೇ ಮನಸ್ಸಿನಿಂದ ಸಮರ್ಪಿಸುತ್ತಾರೆ. ಅದರಿಂದ ಲೋಕಕ್ಕೆಲ್ಲ ಮಂಗಳವಾಗುತ್ತದೆ.
ಆದರೆ  ಅಹಂಕಾರಿ ದಕ್ಷನಿಗೆ ಈ ನಿಜದ ಅರಿವಾಗಲಿಲ್ಲ. ತನ್ನ ಸ್ವಸ್ವರೂಪವಾದ ಶಿವನನ್ನೇ ಅನ್ಯಥಾ ಭಾವಿಸಿದನು. ಶ್ರೀರಂಗ ಮಹಾಗುರುಗಳು ತಿಳಿಸಿದಂತೆ-“ಜೀವನ ಪದರ ಪದರವಾಗಿ ಬೆಳೆಯುತ್ತಿರುವುದರಿಂದ ಮುಂದು ಮುಂದಣ ಪದರ ತನ್ನ ಹಿಂದಿನದನ್ನು ಮುಚ್ಚಿಹಾಕಿದೆ.” ಇಲ್ಲಿ ದಕ್ಷನ ದೇಹ, ಅದಕ್ಕಂಟಿಕೊಂಡ ಅಹಂಕಾರ ತನ್ನ ಹಿಂದಿನ ಶಿವ ಸ್ವರೂಪವನ್ನು ಮರೆಯುವಂತೆ ಮಾಡಿತು. ಎಂದೇ ದುರುದ್ದೇಶದಿಂದಲೇ ಶಿವ-ಸತಿಯರನ್ನು ಯಜ್ಞಕ್ಕೆ ಆಹ್ವಾನಿಸಲಿಲ್ಲ. ಆದರೂ ಹೆಣ್ಣಿಗೆ ತವರುಮನೆಯ ಸೆಳೆತವಿರುವುದು ಸ್ವಾಭಾವಿಕವಲ್ಲವೇ? ತಮ್ಮಿಬ್ಬರನ್ನೂ ಯಜ್ಞಕ್ಕೆ ಆಮಂತ್ರಿಸದಿದ್ದರೂ ಹೋಗಲೇ ಬೇಕೆಂಬ ಹಂಬಲ.ಭಗವಂತನಾದ ಮಹಾದೇವನನ್ನು ದಕ್ಷಯಜ್ಞಕ್ಕೆ ಹೋಗುವ ಬಗ್ಗೆ ಬಗೆ ಬಗೆಯಾಗಿ ಪ್ರಾರ್ಥಿಸುತ್ತಾಳೆ. ತನ್ನ ನಿರ್ಧಾರವನ್ನು ಪುಷ್ಟೀಕರಿಸಲು ಒಂದು ಮಾತನ್ನು ಹೇಳುತ್ತಾಳೆ- “ಅನಾಹುತಾ ಅಪ್ಯಭಿಯಂತಿ ಸೌಹೃದಂ”- ಬಂಧುಗಳ ಮನೆಗೆ ಆಹ್ವಾನವಿಲ್ಲದಿದ್ದರೂ ಹೋಗಬಹುದು ಎಂಬುದಾಗಿ.

ಅದಕ್ಕೆ ಮಹಾದೇವನ ಸಮಾಧಾನ ಸಾರ್ವಕಾಲಿಕ ಸತ್ಯವಾಗಿದೆ.- “ಬಂಧುಗಳ ಮನೆಗೆ ಆಹ್ವಾನವಿಲ್ಲದಿದ್ದರೂ ಹೋಗಬಹುದು ಎಂಬ ಮಾತು ಸರಿಯಾಗಿಯೇ ಇದೆ. ಆದರೆ ಆ ಬಂಧುಗಳ ದೃಷ್ಟಿಯು ದುರಭಿಮಾನದಿಂದ ಉಂಟಾದ ಮದ, ಕ್ರೋಧ, ದ್ವೇಷಗಳೆಂಬ ದೋಷಗಳಿಂದ ಕೂಡಿರದಿದ್ದರೆ ಮಾತ್ರ ಹಾಗೆ ಮಾಡಬೇಕು. ವಿದ್ಯೆ, ತಪಸ್ಸು, ಸಂಪತ್ತು, ಆಕರ್ಷಕವಾದ ದೇಹ, ಯೌವನದ ವಯಸ್ಸು ಮತ್ತು ಉಚ್ಚವಾದ ಕುಲ-ಈ ಆರೂ ಸತ್ಪುರುಷರಲ್ಲಿ ಗುಣಗಳಾಗಿ ಶೋಭಿಸುತ್ತದೆ. ಆದರೆ ದುಷ್ಟನಲ್ಲಿ ಇವು ಅವಗುಣಗಳಾಗಿಬಿಡುತ್ತವೆ. ಅವುಗಳಿಂದ ದುಷ್ಟನ ಗರ್ವವು ಹೆಚ್ಚುವುದು, ವಿವೇಕಶಕ್ತಿಯು ನಷ್ಟವಾಗುವುದು, ಆಗ ಮಹಾಪುರುಷರ ಪ್ರಭಾವವನ್ನು ನೋಡಲು ಅವನು ಅಸಮರ್ಥನಾಗುತ್ತಾನೆ. ಅದರಿಂದ ಯಾರು ತಮ್ಮ ಬಳಿಗೆ ಬರುವವರನ್ನು ಕುಟಿಲಬುದ್ಧಿಯಿಂದಲೇ ನೋಡುತ್ತಾರೆಯೋ ಅಂತಹ ಅವ್ಯವಸ್ಥಿತಚಿತ್ತರಾದ ಜನರ ಮನೆಗೆ “ ಎಷ್ಟಾದರೂ ನಮ್ಮ ಬಂಧುಗಳಲ್ಲವೇ” ಎಂಬ ಕಾರಣದಿಂದ ಎಂದಿಗೂ ಹೋಗಕೂಡದು. ಅಂತಹ ಬಂಧುಗಳು ಆಡುವ ಚುಚ್ಚುಮಾತುಗಳು ಶತ್ರುಗಳ ಬಾಣಗಳಿಗಿಂತ ಹೆಚ್ಚು ದುಷ್ಪರಿಣಾಮಕಾರಿ”. ಇಷ್ಟೂ ಮಾತುಗಳು ದಕ್ಷನ ಅಂದಿನ ಮಾನಸಿಕತೆಗೆ ಹಿಡಿದ ಕೈಗನ್ನಡಿಯಾಗಿತ್ತು.

ಆದರೆ ತವರಿನ ವ್ಯಾಮೋಹ ಶಿವನ ಸತ್ಯಾರ್ಥದ ಮಾತುಗಳನ್ನೂ ಮೀರಿ ಅವಳನ್ನು ಅಲ್ಲಿಗೆ ಹೋಗುವಂತೆ ಮಾಡಿತು.ಅಲ್ಲಿ ತಂದೆಯ ಉಪೇಕ್ಷೆ, ಶಿವನ ಬಗೆಗಿನ ಅವನ ತಿರಸ್ಕಾರ, ದುರಹಂಕಾರ ಇತ್ಯಾದಿಗಳನ್ನು ಸಹಿಸಲಾರದೇ ಆತ್ಮಸಮರ್ಪಣೆ ಮಾಡುವುದರಲ್ಲಿ ಪರ್ಯವಸಾನವಾದುದು ನಮಗೆಲ್ಲರಿಗೂ ಗೊತ್ತೇ ಇದೆ. ಈ ಕಥೆಯು ನಮಗೆ ಅನೇಕ ಪಾಠಗಳನ್ನು ಕಲಿಸುತ್ತದೆ. ಅಹಂಕಾರ ಎಲ್ಲ ಗುಣಗಳನ್ನೂ ಮೆಟ್ಟಿ ಮೆರೆಯುತ್ತದೆ. ನಮ್ಮ ನಮ್ಮ ದೇಹದ ಬಗ್ಗೆ ನಮಗೆ ದುರಭಿಮಾನ ಇರಬಾರದು. ಬಂಧುಗಳು ಎಂದಾಗ ಅವರು ಹೇಗಿದ್ದರೂ ಸರಿ ಎಂಬ ಮನೋಭಾವ ಸಲ್ಲದು. ಗೌರವ ಒಳಗೆ ಬೆಳಗುವ ಪರಮಾತ್ಮನಿಗೇ ಹೊರತು ದೇಹಕ್ಕಲ್ಲ. ಜ್ಞಾನೀ ಜನರ ಸಲಹೆಯನ್ನು ಎಂದಿಗೂ ತಿರಸ್ಕರಿಸಬಾರದು. ಇಂತಹ ಸದ್ಗುಣಗಳನ್ನು  ಆ ಪರಶಿವನು ಕರುಣಿಸಲಿ ಎಂದು ಪ್ರಾರ್ಥಿಸೋಣ.

ಸೂಚನೆ: 02/01/2019 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಶ್ವ ವಾಣಿಯ ಗುರು ಪುರವಾಣಿ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.