தமிழாக்கம்: ஶ்ரீமதி ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
தமிழாக்கம் : திருமதி ஜானகி
ஶ்ரீரங்கமஹாகுருவின் குரல் மென்மையாகவும், இனிமையாகவும், பிறர் மனதை கவர்ந்திழுக்கும் திறமையுடனும் மற்றும் எவ்விதமாயினும் மாறும் தன்மையும் கொண்டிருந்தது.
ஒவ்வொரு பாடல் வரியின் பொருள் மற்றும் பாவத்தை அனுசரித்து இயற்கையே அதற்கு ஒரு ராகத்தை வழங்கியிருக்கிறது என்பதை அறிந்து கூறினார். ஒரு பாடகன் அதை தன் கூர்மையான புத்தியினால் பரிசோதித்து அறிந்த பிறகே பாடலுக்கான ராகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஶ்ரீரங்கமஹாகுரு பாடல்கள், ராகங்கள், தாளங்கள் உள்ளன என்று தோன்றியவாறெல்லாம் ராகங்களை தேர்வு செய்யாமல் அவை எவ்விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன எனும் விஞ்ஞானத்தை குறித்து ஆழ்ந்த பரிசோதனைக்கு பின்னரே ராக நிர்ணயம் செய்தார்.
250க்கும் அதிகமான பாடல்களுக்கு மேற்கூறியவாறு ராகங்களை தேர்வு செய்து அவைகளின் மூலம் தன்னுடைய ஆழ்ந்த அனுபவம், பரந்த கண்ணோட்டம், ஞானம், விஞ்ஞானம், கலை முதலியவற்றை வெளிப்படுத்தினார். இவர் ராக நிர்ணயம் செய்த பாடல்களில் அவர் மிகவும் போற்றி புகழ்ந்த ஆதிசங்கரரின் பஜகோவிந்த ஸ்தோத்திரம், நாராயணஸ்துதி, பகவந்மானஸ பூஜை முதலியவை மற்றும் வால்மீகி ராமாயணம், துளசி ராமாயணம், கம்ப ராமாயணம், திராவிட திவ்ய ப்ரபந்தம், பாகவதம், பகவத்கீதை முதலிய நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் இடம் பெற்றன.
(தொடரும்)